Saturday, 8 August 2015
Wednesday, 5 August 2015
ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா !
வாழ்க்கை ஒரு நீண்ட முடிவில்லாப் பயணம் என்கிறார்கள் , அதில ஏகப்பட்ட விசியங்கள் குழப்பமாக இருக்கும் . முக்கியமாக என்னைப்போல குழப்பமான ஆட்களுக்கு நிட்சயமாகவே குழப்பமாக இருக்கும், அதில என்னவெல்லாம் பெற்றுக்கொண்டேன் என்பதில் சொல்லும்படியான சாதனைகள் இல்லவே இல்லை. அனுபவங்கள் நிறையவே இருக்கு. ஒரு கற்பனைப் புனைகதை போலவே அதன் ஒரு பக்கம் ஜதார்தமாய் இருக்கலாம். மற்றப் பக்கம் முசுப்பாத்தியாக இருக்கலாம் , இல்லையா,
பல வருடங்களின் முன் ஸ்வீடனில் வசித்த போது சில வருடங்கள் , வாழ்கை வெறுத்து தனிமையில் இருந்த காலத்தில் , சந்தோசத்தை வெளியே அன்றாட உலகத்தின் இயல்பில்த் தேடிப்பிடித்துப் போகாமல், குறுக்கு வழியில்த் தேட முயற்சித்து, மூடிகளைத் திறந்த மதுப்போத்தல்கள் முடியும் வரை இருந்த சின்ன சந்தோசம் அவ்வப்போது இருந்தது உண்மை , மிகப்பெரிய உண்மையாக என் தோல்வி முகத்துக்கு முன்னுக்கு நின்றது .
அந்த மதுப் போத்தல்களைத் தூர வீசி எறிந்த போது அவைகளுடன் காற்றில் மிதந்த இன்பங்கள் போன அவலத்தில் , மாதன முத்தாவின் மண் பானை ஆட்டிண்ட தலைக்க போன மாதிரி மது கடைசியில் கழுத்தில கயிறு போட்டு அலங்கோலப்படுத்த , இன்பத்தின் முடிவில் துன்பமாக , ஒரு வருடம் ," அல்ஹோலிக்ஸ் " என்ற திருந்த முடியாத மடாக்குடியரை திருத்தும் "புனர்வாழ்வு சமூக" அமைப்பில் கவுரவ நோயாளியா /உறுபினரா ,அவர்களுக்கும் , முடிந்தவரை அவர்கள் தந்த புணர்வாழ்வுகும் சவாலாக இருந்தேன்!

அந்த கவுன்சிலிங்/ குரூப் திரபி என்ற சிக்கிசை கொடுக்க எனக்கு நியமிக்கப்பட்டவள் கத்தரீனா என்ற ஸ்வீடிஷ் 40 கிலோ தாஜ்மகால் ! அவளை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாலே ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தாறு மாறா எகிறும் . அவள் அசையாமல் நிண்டாலே அபிராமிப் பட்டர் " இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்துவடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு.. " என்ற அந்தாதியை அவளை நினைச்சு எழுதின மாதிரி இருப்பாள்.
அவள் நடந்து திரிந்தால் அதே அபிராமிப்பட்டர் அவளுக்கு பின்னுக்கும் முன்னுக்கும் திரிந்து " நடங்கொண்ட கொள்கை நலங் கொண்ட நாயகி , நல் அரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே......." எண்டு எழுதி முடிச்ச மாதிரி அம்சமா இருப்பாள் . கவனக்குறைவாக எதையும் சொல்லவில்லை , கவனச் சிதறிடிப்புகள் நிறைய இருந்த அந்த இடத்தில குவிமையம் போல இருந்தாள் கத்தரீனா .

அதை விட அவளே எங்களைப் போல திருந்த முடியாத மடாக்குடிய நிலையில் இருந்து மீண்டு வந்து "புனர்வாழ்வு சைகொலோயி " மாஸ்டர் டிகிரி படித்தவள் ! அதலா அந்த சமூக நிறுவனத்தில் வேலை செய்தாள்.அவளை முதல் முதல் சந்தித்தபோது, நான் இந்திய, இலங்கை ரெண்டும் கெட்டான் உருளைக்கிளங்கு நிறத்தில் இருந்ததால் அவள் கொஞ்சம் அதிர்ந்து
" ஓ , இண்டேறேச்டிங் , உன்னை சந்திப்பது, நீ இந்தியாவைச் சேர்ந்தவனா ,
" இல்லைப்பா,,,நான் இந்தியன் இல்லை "
" என்னோட வாழ்கையை மாற்றிய குருநாதர் சுவாமி பிரபுபாதாவும் இந்தியர் ,"
" அய்யோ ராமா,,நான் இந்தியன் இல்லை கத்தரீனா "
" அவர் தொடக்கிய ....ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.... அமைப்புதான் என்னை வழி நடத்தி இப்ப இப்படி இருக்கிறேன் "

என்றாள் ,அப்படி அவள் அதிர்ந்து சொன்னதுக்குக் காரணம் , அவள் "ஹரே ராம, ஹரே கிருஷ்ணா " அமைப்பில் இருந்து, அந்த அமைப்பின் இணைப்புதான் அவளை "மடாக்குடிய நிலையில்" இருந்து மீண்டவர உதவியதக சொன்னாள்!
" நான் இலங்கையைச் சேர்தவன், சுவிடனில் அரசியல் அகதியா வாழுறேன்,குடியுரிமை கிடைத்த நாளில் இருந்து ,அறம்புறமா குடிக்க உரிமை கிடைத்தால் குடிக்க ஆரம்பித்தேன் ,"
" அப்படியா,,நீங்க இலங்கை இந்தியர் எல்லாரும் ஒரே கலரில் இருப்பதால் குழப்பமாக இருக்கே "
" அய்யோ ராமா,,நான் இந்தியன் இல்லை கத்தரீனா "
" சுவுடிஷ் குடி உரிமையை கொஞ்சம் அதிகமா பாவித்து இப்ப அல்ககோல் மிஸ்யூஸ் டிஸ்ஓடர் என்ற மெடிக்கல் கொண்டிசன் நிலையில் இருக்கிறேன் ,"
" அது உன் முகத்திலையே நல்லா தெரியுதே, கண் ரெண்டும் உள்ளுக்க இழுத்து ,கையும் நடுங்குதே , பை போலர் சின்றோம் போல தலையை வேற தவரவிடுகிறாய் "
" சில நேரம் உனக்கு குழப்பமாக இருக்கும் இலங்கையை ஸ்ரீலங்கா என்றுதான் ஆங்கிலத்தில் சொல்லுறார்கள் "
" சரி வேற என்ன பிரசினை உனக்கு "
" கிளினிக்கல் டிபிரசன் "
" ஒ அது வேறையா..கொஞ்சம் தண்ணி தெளிச்ச கேஸ் போல இருக்கே நிலைமை ,,கிளினிகல் டிபிரசன் எதுக்கு வந்தது "
" செரோடொனின்,,டோப்பமின் என் சிஸ்டத்தில் குறைவு என்று சைக்கற்றிஸ் டாக்கடர் சொன்னார் "
" ஹஹஹா,,அஹஹஹா ,,பார்த்தியா உன்னோட தோல்விக்கு நீயே ஒரு நல்ல மெடிக்கல் விளக்கம் கைவசம் வைச்சு எடுத்து விடுறாய்,,நீ சொன்னது எல்லாம் கிளினிக்கல் டிபிரசனுக்கு முழுவதும் காரணம் இல்லை "
" வேற என்னதான் காரணம் சொல்லுப்பா "
" குடி,,,குடியை விட முடியவில்லை,,அதுதான் காரணம்,,அதை முதலில் ஒத்துக்கொள்ளு அப்பத்தான் நான் உதவி செய்ய முடியும் "
" ஓம்,,உண்மைதான் கத்தரீனா ,,அதுதான் உண்மை "
என்று விருப்பம் இல்லாமல் விழுங்கி விழுங்கிச் சொன்னேன் . அதுக்கு அவள்
" அப்படியா,,நீங்க இலங்கை இந்தியர் எல்லாரும் ஒரே கலரில் இருப்பதால் குழப்பமாக இருக்கே "
" அய்யோ ராமா,,நான் இந்தியன் இல்லை கத்தரீனா "
" சரி,,உன் கதையை சொல்லு,,என்ன நடந்தது "
" சுவுடிஷ் குடி உரிமையை கொஞ்சம் அதிகமா பாவித்து இப்ப அல்ககோல் மிஸ்யூஸ் டிஸ்ஓடர் என்ற மெடிக்கல் கொண்டிசன் நிலையில் இருக்கிறேன் ,"
" அது உன் முகத்திலையே நல்லா தெரியுதே, கண் ரெண்டும் உள்ளுக்க இழுத்து ,கையும் நடுங்குதே , பை போலர் சின்றோம் போல தலையை வேற தவரவிடுகிறாய் "
" சில நேரம் உனக்கு குழப்பமாக இருக்கும் இலங்கையை ஸ்ரீலங்கா என்றுதான் ஆங்கிலத்தில் சொல்லுறார்கள் "
" சரி வேற என்ன பிரசினை உனக்கு "
" கிளினிக்கல் டிபிரசன் "
" ஒ அது வேறையா..கொஞ்சம் தண்ணி தெளிச்ச கேஸ் போல இருக்கே நிலைமை ,,கிளினிகல் டிபிரசன் எதுக்கு வந்தது "
" செரோடொனின்,,டோப்பமின் என் சிஸ்டத்தில் குறைவு என்று சைக்கற்றிஸ் டாக்கடர் சொன்னார் "
" ஹஹஹா,,அஹஹஹா ,,பார்த்தியா உன்னோட தோல்விக்கு நீயே ஒரு நல்ல மெடிக்கல் விளக்கம் கைவசம் வைச்சு எடுத்து விடுறாய்,,நீ சொன்னது எல்லாம் கிளினிக்கல் டிபிரசனுக்கு முழுவதும் காரணம் இல்லை "
" வேற என்னதான் காரணம் சொல்லுப்பா "
" குடி,,,குடியை விட முடியவில்லை,,அதுதான் காரணம்,,அதை முதலில் ஒத்துக்கொள்ளு அப்பத்தான் நான் உதவி செய்ய முடியும் "
" ஓம்,,உண்மைதான் கத்தரீனா ,,அதுதான் உண்மை "
என்று விருப்பம் இல்லாமல் விழுங்கி விழுங்கிச் சொன்னேன் . அதுக்கு அவள்
" ஸ்ரீலங்கா,,,இலங்கை ,,,என்கிறாய் அந்த நாடு எங்க இருக்கு என்று கேள்வியேபட்டதிலேயே " என்றாள்,
அதுக்கு நான்
" இலங்கை தான் ஸ்ரீலங்கா, இந்தியாவின் தென் கோடியில் மாம்பழம் போலத் தொங்கிக்கொண்டு இருக்கும்,நாலு பக்கம் கடலால் சூழப்பட்ட , தமிழர் என்ற ஒரு சிறுபான்மை இனத்துக்கு நிம்மதி இல்லாத குட்டி தீவு தான் என் தாய்த்திருநாடு " எண்டு சொன்னேன் .
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பு பற்றி படித்து முன்னமே இருக்கிறேன். உங்களுக்கு உண்மையைச் சொன்னாலென்ன சின்னவயசில், சைவசமய முறைப்படி மூன்று தீட்சை சைவாசாரிய குருவிடம் பெற்றேன், ஆனால் வளர்ந்தபின் ஒரு நாளும் அதுகள் செய்ததில்லை, ஆனாலும் ஆன்மிக விசியங்கள் கொஞ்சம் தெரியும். என்னிடம் ஆரம்ப விசாரணை முடித்தபின் ,
" உனக்கு PTSD , கிளினிகல் டிபிரசன் இருக்கே, அதை விட சொல்லபட்ட அன்டபுஸ் , மருந்தே உதவி செய்யவில்லை போல இருக்கே ! கொஞ்சம் முத்தின கேஸ் போல இருக்குறியே " எண்டு ஜோசிதுப்போட்டு, அமைதியாக
" எங்கள் ஆசிரமத்தில ,போய் சில வாரம் தங்கி இருந்து ...தியம்பகம் ஜெயாமகே சுகந்திம் புஸ்திவச்தனம் உருவாகுக விசி அமுதாத் தயே..... என்ற மந்திரம் சொல்லி மனதை கட்டுப்படுத்த பல வழிகள் இருக்கு "
" யப்பா சாமி இந்த நாசமாப்போன மந்திரம் எல்லாம் எங்கே நீ படிச்சாய்,,இதெல்லாம் எங்க நாட்டில் பூசை செய்யும் பிராமண ஐயர்மார்தான் சொல்லுவார்கள் "
" தியானம்,சத்சங்கம்,பஜன் ,இவைகளை கற்றுக்கொள்,உனக்கு மனதளவில், பொசிடிவ்வாக எண்ணங்கள் உருவாகும்,நான் இப்படி இப்ப இருப்பதுக்கு அதுதான் உதவி செய்தது"

என்று ,அவளோட நண்பிகள் ஆசிரமத்தில் ,பருத்தி சேலை கட்டி, நெற்றியில் நாமம் போட்டு, கோகுலத்து கோபியர் போல ஆடிப்பாடும் குரூப் போட்டோ காடினாள் ! அவர்களுக்கு நடுவில சில வெள்ளை ஆண்களும் மேளம் போல ஒன்றைத் தோளில கொழுவிக்கொண்டு,குடுமி வைச்சு,பஞ்சகச்சம் போல வேட்டியை ஐயங்கார் ஸ்டைலில் கட்டிக்கொண்டு ஆனந்தத்தில் கோபியரே கோபியரே கோவிந்தன் பெயரைச்சொல்லி ,,,எண்டு ஆடிக் கொண்டு இருந்தார்கள் .
வெள்ளைக்கார ஸ்வீடிஷ் பெண்களுக்கு சேலை கட்டினால் முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும் இருக்கும் , அவர்கள் எப்பவுமே ஒல்லியா வெள்ளையும் சொள்ளையுமா இருப்பது சேலைக்கு நல்லா எடுபடும் , அங்கங்கே பார்காட்டியும் பார்க்காமலே பத்த வைக்கும் அவர்களின் வசீகரம் ஒரு வித ஆன்மிகதை அறிய ஆரம்பிக்கிறவனுக்கு வைக்கும் முதல் சோதனை போல இருந்தது .அது பார்க்க அழகா மட்டுமில்லை, நிறய ஆர்வ கோளாறையும் கற்பனைகளையும் கிளப்பிவிடும் ! அதால
" இதில உள்ள மாதிரியா,உங்கள் ஆசிரமதிள்ள உள்ள பெண்கள் எல்லாரும் இருப்பார்கள் எண்டு ?"
கேட்க ,அவள்
"இதில உள்ள மாதிரியா, எண்டு எண்ணத்தைப் பார்த்து சொல்லுறாய்?"
எண்டு ,சந்தேகமா என்னோட கண்னுக்குள்ள நேராப் பார்த்துக் கேட்டாள், நான் , சாமாளித்து
"படத்தில அவர்கள் முகத்தில ,தெரியுற மாதிரி ,ஆன்மீக களையுடனையா ,இருப்பார்கள் ?"
,எண்டு கேட்க, சைகொலோயி " மாஸ்டர் டிகிரி" படித்த அவள் சிரிச்சுப்போட்டு,
" முதலில்,ஆசிரமம் போ, முதலில் கெட்ட சிந்தனைகள் அறவே வராது !"
எண்டு அழுத்தம் கொடுத்து என்னோட மனசாட்சிக்கு சொன்னதுபோல சொன்னாள் !
நான் அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் நான் என்னமோ ஆன்மிகம் பற்றி தீவிரமா ஜோசிகுரன் எண்டு நினைச்சு
" நீ எப்பவாது தியானம் செய்ய முயற்சி செய்து இருக்கிறாயா, தியானம் எவளவு முக்கியமான விடயம் எண்டு இந்தியர்கள் தான் ஆயிரம் வருடம் முன்னமே கண்டு பிடித்துள்ளார்கள்,..."
என்று சொன்னாள், நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு,
" முழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என இந்திய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய் த்யான நிர்விஷ்யம் மனஹ என்கிறார்கள்,
"கிழிஞ்சுது ரம்பாவின் லுங்கி, ,,நீ சொல்லுறதைக் கேட்க மண்டை விறைக்குது இதுக்கு என்ன அர்த்தம் தாயே "
" அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும். என்று எங்கள் குரு நாதர் பிரபுபாதா சுவாமிகள் மெடிடேசன் வேய் ஒப் லைப் புத்தகத்தில் எழுதியுள்ளார் " என்றாள்

நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு அவளைப் பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு,
" சரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம்? சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய சாதனா எனப்படும் யந்திர,தந்திர,மந்திர சாஸ்த்திரங்களில் சொல்லி இருக்கிறார்கள் "
" இவளவு தானா இல்லை இன்னும் இருக்கா "
" ஏன் உனக்கு இப்ப என்ன "
"இல்லை,,இப்பவே எனக்கு அரைவாசி உயிர் போயிடும் போல இருக்கு கத்தரீனா "
" கொஞ்சம் பொறுமையாகக் கேள்,,நான் சொல்லவேண்டியதை சொல்லிமுடிக்க விடு "
" சரி சொல்லிமுடி ..எல்லாம் என்னோட காலக்கொடுமை,,நீ ஒரு முடிவோடுதான் நிக்குறாய் "
" இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது நான் சைகொலோயி மாஸ்டர் டிகிரி படிக்க ஒரு புத்தகம் ரிசர்ச் பண்ணிப் படித்த போது அதில இருந்தது ஒரு ஆச்சரியமான விசியம், இதுக்கு மேல சொன்னால் உனக்கு அறுவையா இருக்கும் என்றால் சொல்லவில்லை " என்றாள்

நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு இன்னும் கொஞ்சம் சொல்லுவாள் எண்டு நினைக்க அவள்,
" கொஞ்சம் பொறு,சில பேப்பர் வேலை இருக்கு,அதெல்லாம் முடிக்க வேண்டும்,நீ கையெழுத்து போட வேண்டும் "
எண்டு சொலிப்போட்டு கொஞ்சம் பேப்பர்களில் குனிந்து எழுத , நான் கோபியப் பெண்கள் போல இருந்த அந்த சேலை கட்டிய ஸ்வீடிஷ் பெண்களின் " குருப் " படத்தை ஆன்மீகம் பித்தம் தலைக்கு ஏற்றப் பார்த்துக்கொண்டு இருந்தேன் .சொன்ன மாதிரியே ரெண்டு கிழமை என்னை அங்கே அவளோட காரிலேயே கொண்டுபோய் விட்டாள் கத்தரீனா, நான்
" அந்தப் பெண்கள் எங்கே ஒருவரையும் காணவில்லையே "
எண்டு கேள்வி கேட்க தொடங்க முதலே அவள் ,
எண்டு கேள்வி கேட்க தொடங்க முதலே அவள் ,
" இதுதான் உனக்கு கடைசி சான்ஸ் ,இதையும் குழப்பினாய் எண்டால் அந்த கிருஷ்ண பரமாத்மாவே நேர்ல வந்தாலும் உனக்கு விடிவு இல்லை"
எண்டு போட்டுப்போயிட்டாள் !
எண்டு போட்டுப்போயிட்டாள் !
அந்த ஆசிரமம் கொஞ்சம் இந்திய முறைப்படி கட்டியது போல இருக்க ,வெளியே ஒரு கிருஷ்ணர் சிலை கோபியப் பெண்களுக்கு நடுவே ஆடுவதுபோல இருக்க , கோகுலத்து மாடுகள் கிருஷ்ணர் வாசிக்கும் புல்லான் குழகுக்கு மயங்க்கி பார்த்துக்கொண்டு இருக்க ,,ஆரம்பமே கொஞ்சம் அடகாசமா இருக்கும் போல இருந்திச்சு .ஆனால் நான் நினைத்த மணிரத்தினம் படத்தில வாற மங்கலான கனவு ஸீனில கதாநாயகி மிதந்து நடந்து வருவது போல போல அங்க ஒண்டுமே உற்சாகம் தருவதுபோல இருக்கவில்லை.
அந்தக் ஆசிரமத்தில " கோகுலம்" என்ற பெயர் உடைய மாடுப்பப்பன்னையில் நிறைய கறவை மாடுகள் ,கன்றுக்குட்டிகளுடன் நிண்டது, அதுக்கு பொறுப்பான ஸ்வீடிஷ்காரர் நான் மாடுப்பப்பன்னையில் ஒவ்வுருநாளும் என்னவெல்லாம் செய்யவேண்டும் எண்டு பொறுப்பாக சொன்னார், நான் பொறுப்பில்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தேன்!

உங்களுக்கு உண்மையை சொன்னா என்ன, " அல்ஹோலிக்ஸ் "வியாதியால் அவஸ்தைப் பட்டதால் நான் ஒண்டுமே அங்கே திட்டமிட்டபடி செய்யவில்லை , 24 மணித்தியாலமும் ஓடி ,ஆடி வேலை செய்யும் அதுக்கு பொறுப்பான சாமியார் போல இருந்த ஸ்வீடிஷ்காரர் என்னிடம் வந்து
" மன்னித்துக்கொள்,ஆரம்பமே என்னோட பிழை ,"
" ம் "
" நீ வந்தவுடனே இதைக் கேட்டிருக்க வேண்டும் , "
" ம் "
" பார்க்கும் போது நீ நல்ல திடகாத்திரமாய் இருந்ததால் நானும் உன்னை எல்லார் போலவும் நினைத்து பல வேலைகள் செய்யச் சொல்லி உன்னைக் கேட்டேன், "
" ம் "
" உண்மையில் உனக்கு ஏதாவது உருப்படியான வேலை செய்யத் தெரியுமா அதைச் சொல்லுப்பா ? "
" ம் "
" குறை நினைக்காமல் அதை மட்டும் எனக்கு சொல்லுவியா "

எண்டு ஒரு நோயாளியை டாக்டர் கேட்பதுபோல் அன்பாகக் கேட்டார்,நான்
"சமையல்காரனாகதான் வேலை செய்தேன் , நான் அதுக்காக தான் பயிறுவிக்கப்பட்டு, அதில் தான் பலவருடம் அண்டா,குண்டா சட்டி பானைகளுடன் மல்லுக்கட்டி வேலை செய்தேன் !"
"சமையல்காரனாகதான் வேலை செய்தேன் , நான் அதுக்காக தான் பயிறுவிக்கப்பட்டு, அதில் தான் பலவருடம் அண்டா,குண்டா சட்டி பானைகளுடன் மல்லுக்கட்டி வேலை செய்தேன் !"
என்றேன்,அவர் ,நாடிய தடவிக்கொண்டு
"அப்ப நீ ,ஸ்டோக்கொலமில் உள்ள எங்களின் கோவிந்தா ரேச்டோறேண்டில் போய் மிகுதி நாட்களைஅவர்களின் சமையல் வேலையிலும். அங்கே உள்ள கோவிலில் பயனை பாடி அவர்களுக்கு உன்னால் முடிந்தளவு உதவி செய்வியா ,
" ஓம்..மரக்கறி சமையலும் நல்லா தெரியும் "
" சரி அங்கே எங்கள் பிருந்தாவனம் கோயிலும் அதோடு உள்ளது,,உனக்கு நிறைய மன அமைதி கிடைக்கும் பயனை பாடும்போது "
என்றார் " நான் அது எப்படி இருக்கும் " என்டுகேட்டேன், இப்படி இருக்கும் எண்டு ஒரு DVD செருகி படம் போட்டுக் காட்டினார்!

சும்மா சொல்லவிலை, மாடுப்பன்னையை விட நிறைய இண்டேறேச்டிங் விசியன்கள் கலர் கலரா தெரிந்ததால், " ஆதிசங்கரர் போல " கோவிந்தா கோ " எண்டு அந்த இடைத்தை முதலில் விழுந்து கும்பிடுடு , வலது காலை எடுத்து வைத்து உள்ளுக்குப் போய் " ஆன்மிகம் பாடல்கள் கிடாரில் நல்லா வாசிப்பேன் " எண்டு பொய் சொல்லி அங்கே ஒரு கிழமை இருந்தேன், அங்கேதான் M .S .V யின் "கிருஷ்ணா காஹனம் "LP ஐ முழுமையாகக் கேட்க சந்தர்பம் கிடைத்தது !
அதோட முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும் இருந்த ஸ்வீடிஷ் பெண்களிடம் இருந்து எப்படி " கோவேறு வளஞ்சேர் கோவிந்தா " எண்டு வாற ஆழ்வார் பாடலுக்கு என்ன உண்மையான அர்த்தம் என்பதையும் கண்டு பிடித்தேன் . அந்த அழகான இளம் சுவிடிஷ் பெண்கள் காலையில் சேலை கட்டிக்கொண்டு ஹரே கிரிசுனா ஹரே கிருசுனா ஹரே ராமோ ஹரே ராமோ என்று பஜன் பாடுவார்கள் ,நான் அவர்களுக்கு நெருக்கமாக இருந்து ஜால்ரா போடுவேன்.
அழகான பெண்களுக்கு ஜால்ரா போடுறது இந்த உலகத்தின் அலாதியான இன்பம், அந்த அனுபவம் எனக்கு நிறைய இருந்ததால் நல்லா ஜால்ரா போட்டேன். ஆனால் அந்தப் பெண்கள் படு பனங்காட்டு நரிப் புத்திசாலிகள் .நான் ஒரு உதவாக்காரை என்று ரெண்டாவது நாளே கண்டுபிடித்துவிட்டார்கள். நானும்தான் முன்னம் பின்னம் ஜோசிக்காம ஒரு குளறுபடியை செய்துபோட்டேன்.

நீட்டி முழக்கி கதை எழுதிப் போட்டு உங்களை அறுக்க விருப்பமில்லாததால் ,மிகுதிக் கதையை இரண்டாம் பகுதியாக எழுதுறன், சரிங்களா?.
.
.
பேரிச்சம்பழக் குற்றவுணர்வு....
புலம்பெயர் வாழ்க்கை என்பதே இன்னொரு கலாச்சரம் நம்மை விழுங்கக் காத்திருக்கும்போது அதன் நெளிவு சுளிவுகளில் சுழி ஓடுவது போல இருக்கும். அதன் நல்ல பக்கத்தில் நல்ல விசியங்களும் துன்பமான பக்கங்களில் விடைபெற்றுப் போன பல வேற்றின நண்பர்களின் நினைவுகள் பலமுறை வாழ்தல் என்பதே இருத்தலின் இன்னொரு பரிமாணம் என்று பதிவுசெய்துவீட்டுப் போயுள்ளது .
ஒஸ்லோவில் சில வருடமாக சிவைன் எரிக் எண்டு ஒரு வயதான, மென்மையான, அதிகம் அதிர்ந்து பேசாத,தனிமையாக வாழ்ந்த நோர்வேயிய நண்பர் உண்மையாகவே எப்பவும் நண்பராக இருந்தார். அடிக்கடி ஒரு குறிப்பிட்ட பியர் குடிக்கும் பப்பில், குறிப்பிட்ட சில நாட்களில்,வேறு சில குறிப்பிட்ட நோர்வேயிய நண்பர்களுடன் அவரைச் சந்திப்பேன்.
என்னைப் போன்ற வந்தேறுகுடிப் பல்லினக் கலாச்சார மக்களை அவர் எப்பவும் நேசிப்பார். நெறய கீளைதேய சமய நம்பிக்கை, தத்துவ விசியம் அவருக்கு எங்களை விட நல்லா தெரியும். இர்க்கு வேதத்தில் வரும் கபோடோநிதசம் எல்லாம் விளக்கமாத் தெரியும். ப்றேடிறிச் நிட்சேயின் யாரதுஸ்டிரா தத்துவ புத்தகத்தை சப்பித் துப்புவார்.

முக்கியமா அவரைச் சந்திப்பது, புத்தகங்கள் வாசிக்க சோம்போறியான என்னோட மூளையில், பல புத்தககங்கள் வாசித்த அவருடன் பேசிப் பல விசியங்களை அறிந்து, முடிந்த வரை அதை என்னோட மூளையில் ஏற்றுவதுக்கு. இந்தக் கதை சிவைன் எரிக் வன்விக் என்ற அந்த மனிதரின் அறிவு வீச்சு பற்றியதல்ல, அவரின் முடிவு பற்றியது...
சிவைன் பென்சன் எடுக்கிற வயதில் தான் சென்ற வருடம் இருந்தார், நோர்வேயில், சுவாரசியமே இல்லாத புள்ளிவிபர திணைக்களத்தில் ,புள்ளி விபரம் எடுத்து அதை அறிக்கையாக தயாரித்து திட்டமிடும் குழுக்களுக்கு அனுப்ப,அந்தக் குழுக்கள் அவர் அறிக்கையின் படி, நிதி வழங்குவதில், எதில் வெட்ட வேண்டும்,எதில் இன்னும் அதிக உதவி கொடுக்க வேண்டும்,எதை நிரந்தரமா நிற்பாட்டி வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எண்டு முடிவு எடுபார்கள் எண்டு அவரே சுவாரசியமாகச் சொன்னார் தன்னோட வேலையை.
சிவைன் சுவாரசியமே இல்லாத புள்ளி விபர திணைக்களத்தில் வேலை செய்தாலும் அவர் மாஸ்டர் டிகிரி படித்தது கிரேக்க தத்துவம்,சோகிரடிஸ்,அறிச்டோடல்,பிளேடோ , மார்க்ஸ் அரேளியசின் மேடிடேசன் புத்தகத்துக்கு நோர்வே மொழியில் விளக்கம் எல்லாம் அருமையா சொல்லுவார், எல்லாம் அத்துப்படி அந்த மனுஷனுக்கு. நான் அவரிடம் இருந்து நிறைய குழப்பம் உள்ள விசியங்கள் கேட்பேன்,அவர் குழம்பாமல் மிகத் தெளிவாகப் பதில் சொல்லுவார்.
ஒரு முறை
"சிவைன் நீங்க இவளவு தெரிந்தும் ஏன் ஒரு ஆசிரியரா இருக்காமல் எப்படி அலட்டிக் கொள்லாமல் புள்ளி விபரம் எடுகிற வேலை செய்யுரிங்க,அதைவிட என்னைப்போல அரை அவியல்களுடன் இயல்பாக பேசுறிங்க ,எப்படி முடிகிறது " எண்டு கேட்டேன்,
அவர் அதுக்கு பதில் தெரியாத மாதிரி இருந்தார், கொஞ்ச நேரத்தில் கிரிக் மொழியில் ,
"Pensa como pensam os sábios, mas fala como falam as pessoas simples"
எண்டு மென்மையாக பதில் சொல்லி போட்டு இருந்தார். இதுக்கு என்ன அர்த்தம் எண்டு கேட்டேன், ஜோசிச்சுப் போட்டு அதன் அர்த்தத்தை நோர்வேயிய மொழியில் சொன்னார்,எனக்கு அந்தளவு தத்துவ நோர்க்ஸ் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் சொல்ல சொன்னேன்,அவர் இப்படி சொன்னார்,
"Think how they think the wise, but talk like simple people talk" இதை யார் சொன்னது எண்டு கேட்டேன், அறிச்டோடல் சொன்னார் என்றார், சிவைன்ஸ் இப்படிதான்,கேள்வி கேட்டால் வள வள எண்டு பதில் சொல்ல மாட்டார்,ஆனால் குடைஞ்சு குடைஞ்சு கேட்டால் ஒரு பல்கலைக்கழக பேராசியர் அளவுக்கு விளக்கமா சொல்லுவார்.
சிவைனிடம் ஒரு முறை
" ஏன் வருசத்தில் ஒரே ஒரு முறை குளிக்கும் சோக்கிரடிசுடன் ஒரு அழகான திராட்சைப்பழம் போன்ற இளம் பெண் விரும்பி வந்து வாழ்ந்தா, அதை விட தன்னோட வாழ்நாள் முழுவதும் பெண்களைக் கிண்டல் பண்ணிய சோக்கிரடிஸ்,அவரோட அழகான, மண்டரின் ஒரேஞ் கலர் இளம் மனைவியைக் கலியாணம் கட்டியவுடன் பல்டி அடிச்சு ஏன் பல முரணான கருத்துக்களைச் சொன்னார் " எண்டு கேட்டேன்,
சிவைன் அதுக்கு வாயைத் திறக்காமல் சிரித்தார். இதுக்கும் கிரீக் பாசையில் ஏதாவது சொல்லுவாரோ எண்டு நினைக்க, நோர்வே பாசையில்
" நேரம் வரும் போது சொல்கிறேன்,,சொல்லுக்கும் செய்யலுக்கும் நடுவில் எப்பவுமே காலம் பதுங்கி இருக்கும் "
எண்டு சொன்னார்,சிவைன் ஒரு நாள் கட்டாயம் சொல்லுவார் என்று தெரியும். ஆனால் அந்த நாள் எந்த நாள் எண்டு அவருக்கு மட்டுமே தெரியும். அதுதான் நான் அவரை அந்த பப்பில சந்தித்த கடைசி நாள் எண்டு இப்ப நினைக்கிறன்.
ஏனென்றால் இடைப்பட்ட அந்தக் காலத்தில் ஒருநாள் சிவைனிடம் நான் காசு கொஞ்சம் கடன் வேண்டினேன். அவரே மனமுவந்து வந்து அதை தந்தார். உன்னிடம் காசு வரும்போது தா இல்லாட்டி அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாதே என்று வேற சொன்னாரா,,அதை வைச்சு நான் சில மாதங்கள் கடனை இழுத்துக்கொண்டு இருந்தேன் . அதை அவர் மற்ற நோர்வ்ய்யிய நண்பர்களுக்கும் சொல்லவில்லை ,ஆனால் மார்டின் எப்பவும் சிவைன் உன்னைத் தேடுறார் எண்டு சொல்லுவார் டெலிபோனில்
எந்த விதத்திலும் சமாளிக்க முடியாமல் மண்டை வெடிப்பது போல உள்ள நேரங்களில் நாங்கள் கடன் யாரிடமாவது வேண்டுறோம், வேண்டி அந்த நேர அந்தப் பிரசினையை முடிக்கிறோம்,ஆனால் அந்தக் கடன்காசு எப்பவுமே காற்றில் கரைந்து போன ஒரு வெற்றிடம் போல இருக்கும் திருப்பிக் கொடுக்கும்போது. என்னமோ சொத்துப் பத்து எல்லாத்தையும் விருப்பம் இல்லாத பொண்டாட்டி பேர்ல எழுதி வைப்பது போல இருக்கும் .
நான் அவர் எனக்குத் தந்த கடன் காசை திருப்பி வேண்டத்தான் தேடுறார் எண்டு நினைச்சுக்கொண்டு அவரை சந்திப்பதைப் எப்பவுமே தவிர்த்துக்கொண்டு இருந்தேன். ஆனால் சிவைன் என்னை தேடியதே அவர் எனக்காக பல ஆங்கிலப் புத்தககங்கள் வேண்டிவைச்சு இருக்கிறார் என்றும் அவைகளை என்னிடம் கொடுப்பதுக்கே தேடுறார் என்றும் அறிந்தபோது காலம் கொஞ்சம் வேகமாகவே ஓடி விட்டது

கொஞ்ச நாள் லீவு கிடைக்காததால் சிவைனயும் ,அவர் நண்பர்களையும் சந்திக்கவில்லை,ஒருநாள் சிவைன் இன் நண்பர் மார்டின் போன் பண்ணி
" சிவைன் உள்ளிவாள் சிக்குஸ் என்ற ஆசுபத்திரியில் இந்தா அந்தா எண்டு படுத்து கிடகுறார் " எண்டு சொன்னார்.
நான் அடுத்தநாள் அவரைப் பார்க்கப் போனேன், ஒரு அறையில் கட்டிலில் படுத்து கிடந்தார்,சில வயர்கள் முகம் முழுவதும் கொழுவிக் கிடந்தது, என்னைக் கண்டவுடன் வாயில செருகி இருந்த வயரை இழுத்து எறிஞ்சு போட்டு, அவரை நான் நலம் விசாரிக்க முதல் என்னை நலம் விசாரித்தார்,
" எப்படி நான் வாசலில் நிக்குறது தெரியும் " எண்டு கேட்டார்,
" எந்த வாசல் " எண்டு கேட்டேன் ,சிரித்தார்.
" சிவைன் நான் உங்களுக்கு கடன் காசு தரவேணும் அது நினைவு இருக்கா ,,கையில காசு இல்லை அதால கொஞ்சம் பயந்து பயந்து பதுங்கிக்கொண்டு திரிஞ்சேன் "
" ஹஹஹஹஹா "
" உண்மையாவே உங்களை சந்தித்தால் இப்ப வையடா கடன் காசை என்று கேட்பின்களோ என்ற பயத்தில பம்மிக்கொண்டு திரிஞ்சேன் சிவைன் "
" ஹ ஹ ஹ ஹா "
" ஏன் சிவைன் இப்பிடி சிரிகுரிங்க "
" ஆனால் நான் உன்னைத் தேடியாது உனக்கு வாசிக்க என்று தேடி தேடி புத்தகங்கள் வேண்டி வைச்சு இருந்தேன் அதை உன்னிடம் கொடுப்பதுக்கு "
" ஆனாலும் நான் கடன்காரன் தானே,,காசு உங்களுக்கு தரவேண்டும் தானே ,,அந்தப் பயத்தில ஒளிச்சு திரிஞ்சேன் சிவைன் "
" காசு ,,ஹ்ம்ம்,,அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா "
" அது ,,சரியா தெரியவில்ல,,காசு உள்ளவனை நாலு பேர் நிமிர்ந்து பார்க்கிறார்கள் ,,காசு இல்லாதவன் நாலு பேரை நிமிர்ந்து பார்க்கிறான் "
" ஹ்ம்ம்,,,,அது உண்மைதான் ,,காசு இருந்தாலும் பிரசினை இல்லாட்டியும் பிரசினை அது உனக்கு தெரியுமா "

என்று அவரின் கட்டிலுக்கு அருகில் இருந்த ஜன்னலைக் காட்டி ,எட்டிப் பார்க்க சொன்னார்,எனக்கு கொஞ்சம் பயம் வந்திடுது. இந்தாள் ஜென்னலால பாஞ்சு தற்கொலை செய்யப்போகுது போல இருக்கே எண்டு ஜோசித்தாலும் சிவைன் சாவுக்கு அர்த்தம் விளங்கிய மனுசன் அப்படி எல்லாம் கோழையாக முடிவு எடுக்க மாட்டார் எண்டு நினைத்து கொண்டு எட்டிப் பார்த்தேன்,
ஜன்னலுக்கு மிக அருகில் பழைய சவுக்காலை இருந்தது, உள்ளிவாள் சிக்குஸ் என்ற ஆசுபத்திரி நோர்வேயின் ,ஒஸ்லோவில் மிகப் பழைய ஆசுபத்திரி, ஒரு காலத்தில் அங்கே சிகிச்சை பெற வநதவர்கள்,மறு படி வீடு திரும்பி போக உத்தரவாதம் இல்லாததால் ஒரு வேளை அருகிலேயே சவுக்காலை வைத்து அடக்கம் செய்து இருந்து இருக்கலாம் போல,இப்ப அப்படி இல்லை ஒரு சிலரைத் தவிர் பலர் நல்லபடியா வீட்டுக்கு போவதை நவீன அறிவியல் சாத்தியம் ஆக்கி இருக்கு. நான் சவுக்காலையைப் பார்த்து கொண்டு ஒண்டுமே பேசமால் நின்றேன்,
சிவைன் ," நான் பிறந்த தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன் சான்ட் சின்னக் கிராமத்தை விட ,உங்களைப்போன்ற வெளிநாட்டு மக்களுடன் வாழுந்த ஒஸ்லோவில் தான் நான் இறந்தால் என்னோட சில உறவினர்கள் அருகில் இந்த சவக்காலையில் புதைக்கும் படி சொல்லி இருக்றேன், " எண்டு சொல்லி கொஞ்சநேரம் மவுனமா இருந்தார்.
" சவுகாலையில் கிடங்கு வேன்டினவன் பொம்பிளைப் பேயைக் கலியாணம் கட்டின ஜோக் தெரியுமா "
எண்டு சாதரணமா கேட்டார். ஆச்சரியமாகி தெரியாது என்றேன் , மூச்சு மேலயும் கீழயும் வாங்க மெல்ல மெல்லச் சொன்னார்.
சவுக்காலையில் இறந்த ஒரு பிரேதத்தை தாக்க இரண்டு பேர் அந்த நாளில் கிடங்கு வெட்டிக் கொண்டு இருந்தாங்களாம் ,ஒருவன் கிடங்குக்கு உள்ளுக்க நிண்டு வெட்ட, மற்றவன் வெளிய மேல நிண்டு மண்ணை வேண்டி எடுத்துக் கொட்டிக் கொண்டு நிண்ட நேரம்,ஒரு அழகனா இளம் பெண் அந்த யாருமற்ற சவச்சாலையில் வெள்ளை உடுப்போட மிதந்து நடந்துவர ,மேல நிண்டவன் கீழ நின்டவனுக்கு
" ....... " என்றானாம்,,,,கீழ நிண்டவன் அதைக் கேட்டு மேல நின்டவனுக்கு
" ............." என்றானாம், இதைக் கொஞ்சம் நிண்டு கேட்ட அந்த இளம் பெண்,,,மேல நின்டவனிடம்
" ......... " எண்டு கேட்டாளாம்,,,அதுக் மேல நிண்டவன்,
" பொறு வாறன் என்னோட நண்பனைக் கேட்டு சொல்லுறேன் " எண்டு கீழ நின்டவனிடம்
" ..... " எண்டு கேட்க...கீழ நிண்டவன் " பொறு வாறன் " எண்டு மேல ஏறி வரமுதல்,மேல நிண்டவன்,,,,,போக வெளிக்கிட ,,இதுக்கு மேல சொல்ல முடியாது, அவளவு கொசப்பு ஜோக் அது...கடைசில சிவைன் அந்த ஜோக்கை முடித்த விதத்தில் நான் கெக்கே பிக்கே எண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்,சிவைன் சிரிக்கவே இல்லை முகத்தை இறுக்கி வைச்சுக்கொண்டு நான் சிரிப்பதை சின்னக் குழந்தைகள் போல ரசித்துக்கொண்டு இருந்தார் .
ஒரு வெள்ளை நேர்ஸ் வந்து எட்டிப் பார்த்து
" இது ஆசுப்பத்திரி இங்கே உங்கள் வீடு போல நினைச்சு கெக்கே பிக்கே எண்டு விழுந்து விழுந்து சிரிக்கக் கூடாது "
எண்டு சிரிக்காமல் சொன்னாள், அவள் சொன்னதை சிவைன் கேட்டார்,அவள் போன வுடன கதவை இறுக்கி சாத்தச் சொன்னார், சாத்தினவுடன் சிவைன், வயர் எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு,
" இது ஆசுப்பத்திரியாம், இங்கே கெக்கே பிக்கே எண்டு சிரிக்கக் கூடாதாம், இது ஆசுப்பத்திரியாம், இங்கே கெக்கே பிக்கே எண்டு சிரிக்கக் கூடாதாம்"
எண்டு உயிர் உள்ளவரை கடைசியா சிரிக்கிற மாதிரி விழுந்து விழுந்து சிரிச்சார். அவர் சிரிக்க சிரிக்க வாயாலும், மூக்காலும் ரத்தம் வந்தது,நான் திசு பேப்பர் எடுத்து துடைக்கப் போனேன், " துடைக்க வேண்டாம் " எண்டு சைகை காட்டினார், நான் நேர்சைக் போய்க் கூடிக்கொண்டு வந்தேன்,கொஞ்ச நேரத்தில் அவள் சிவைன் முகம்,ரத்தம் எல்லாம் துடைத்து வயர் எல்லாம் கொழுவி முடிய,
" சிவைன் நான் போகப் போறேன்,உங்களுக்கு ஒண்டும் வராது,நான் சில நாளில் மறுபடி வாரன்,உங்கலோடு பேச டெலிபோன் நம்பர் இங்கே வேண்டிக்கொண்டு போறேன் " என்றேன்,
" வரும் போது பேரீச்சம்பழம் வேண்டிக்கொண்டு வருவியா " எண்டு கேட்டார்,
நான் கட்டாயம் வேண்டிக்கொண்டு வாறன் எண்டு சொல்லிப்போட்டு வெளிய வந்து நேர்சிடம்
" சிவைனுக்கு என்ன வருத்தம் " எண்டு கேட்டேன் லுக்கேமியா என்ற ரத்தப் புற்றுநோய் எண்டு சொன்னாள், நான் வீட்டை உடைந்து போய் வந்திட்டேன்.
பின்னேரம் அன்று வேலையில் நிறையக் குழப்பமா வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் எண்ணங்கள் ஓடியது, வாயாலும் மூக்காலும் ரத்தம் வாறது கொஞ்சம் கை விட்ட கேஸ் எண்டு கேள்விப்பட்டு இருக்றேன். சிவைன் லுக்கேமியாவால் பல வருடம் அவதிப்படுவதை எனக்கு சொல்லவே இல்லை. அவர் தனி மனிதர் எந்தப் பெண்ணையும் கலியாணம் கட்டாமல் வாழ்ந்தவர்,அதுக்கு காரணம் அவர் சொல்லி இருக்குறார்,தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன் சான்ட் இல பிறந்த சிவைன் ,சின்ன வயசில் தன்னோட அம்மாவை அவரின் அப்பா எப்பவும் அடிச்சு நொறுக்குவது எண்டும், அதால இளவயதில் ஒஸ்லோ வந்து தனிய இருந்து படிச்சு, அதில இருந்து அவர் திருமணத்தில் ஆர்வம் அற்று,வேறு சில காரணங்களாலும் தனியா வாழ்ந்தார்.
தான் இறந்தால் தன்னுடைய வீட்டை தன் சகோதரிக்கும் ,சொத்துகளை தன் சகோதரியின் பிள்ளைகளுக்கும் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தார், தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன்சான்ட் இல வசிக்கும் அவரின் ஒரே ஒரு சகோதரி தன்னை கடந்த இருவத்தைந்து வருடமா ஒஸ்லோவுக்கு பார்க்க வரவில்லை எண்டும்,தன்னையும் ஒரு நாளும் அங்கே அழைத்தது இல்லை எண்டும் ஆசுபத்திரியில் வைத்து சொன்னார். எப்படியோ,நானும் வேலை பிசியில் வேலை,வெட்டி,சோலி,சுரட்டு அதிகமாக் கொஞ்ச நாள் சிவைனை மறந்திட்டேன்.
ஒருநாள்....
முஸ்தபாவின் துருக்கி கடையில் ஆட்டு இறைச்சி வேண்டப் போன நேரம், அவனின் மேசையில் அரபு நாட்டுப் பேரிச்சம் பழம் பெட்டியில் அடைச்சு வந்து இருந்த சின்னப் பெட்டிகளை அழகாக அடுக்கி காட்சிக்கு வைச்சு இருந்தான். அதைப் பார்க்க சிவைன் நினைவு வர, சடார் எண்டு போனை எடுத்து அவர் தொடர்பு கொள்ள சொன்ன இலக்கத்தைக் குத்தினேன்,மறு முனையில் ஒரு நடுத்தர வயதுள்ள பெண் குரல் தெற்கு நோர்வே நாட்டவர் பேசும் நோர்ஸ்க் உச்சரிப்பில்க் கேட்டது,
நான் " சிவைனின் ப்ரென்ட் கதைகுறேன் ,சிவைனுடன் பேச முடியுமா " எண்டு கேட்டேன், கொஞ்ச நேரம் அந்த லைன் மவுனமாகி, மீண்டும் உயிர் பெற்று,
" அப்படியா,நீங்க சிவைனின் ப்ரென்ட் எண்டு சொல்லுரிங்க, சிவைன் மேல போய்ச் சேர்ந்து ஒரு கிழமைக்கு மேல ஆகி விட்டதே,
" அடக் கடவுளே ,,இது எனக்கு இப்பதான் தெரியும் "
" ஒரு நண்பன் இறந்தது தெரியாமல், நண்பன் எண்டு அவரைச் சொல்லுறிங்களே,நீங்க என்ன விதமான நண்பன் எண்டு எனக்கு விளங்கவில்ல "
" உண்மைதான் நான் அக்கறை இல்லாமல் அலைந்துகொண்டு இருந்தேன் "
" ஹ்ம்ம்,,,ஆனாலும் இது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கு "
" சிவைன் எனக்காக சில புத்தகங்கள் வேண்டி வைச்சு இருப்பதாய் ஆசுப்பத்திரியில் இருந்த நேரம் நேரம் சொன்னார் "
"! அதென்ன புத்தகங்கள் "
" அதுதான் எனக்கும் தெரியவில்லை "
"இங்கே அவர் வீடு முழுவதும் புத்தகங்கள் தானே நிரம்பிக்கிடக்கிறது இதுக்குள்ளே நான் எதை தேடுறது "
" சரி அப்ப விடுங்க ,,பிரசினை இல்லை "
"ஹ்ம்ம்,,உனக்காக அவர் வேண்டி வைச்ச புத்தகங்களை நீயே அந்த நேரம் வந்து வேண்டி இருக்கலாமே,,எனக்கு ஒரு காரணமும் புரியவில்லை ஏன் நீ அவரை சந்தித்து அவர் உயிரோடு இருந்த நேரம் வேண்டவில்லை "

எண்டு என்னோட மனசாட்சிக்கு சொல்லுற மாதிரி சொன்னாள், அவள் பேசிய உச்சரிப்பு கொஞ்சம் கஷ்டமா இருந்தது விளங்கிக்கொள்ள ,என்றாலும் நான் சுருக்கமா சொன்னேன் நான் யார் எண்டும் , சிவைனை எப்படி எனக்கு தெரியும் எண்டும்.
அவள் மவுனமாக இருந்த சின்ன காலமற்ற இடைவெளியில், கொஞ்சம் ஜோசிதேன்,சிவைன் வயதானவர்,அவர் வியாதிக்கு மருந்தும் இல்லை, அவரே சாவை தனிப் பாடல் திரட்டில் சொன்ன மாதிரி "..நரை கோட்டிளங்கன்று நல்வளநாடு நயந்தளிப்பான் விரையூட்டு தார்ப்புயன்வெற் பீழமன்னனெ தேவிரும்பி " என்று பயப்பிடாமல் எதிர் கொள்ளும் மன நிலையில் இருந்தார் ,
வயதான காலத்தில் வாழ்ந்து முடித்து அவரோட நேரத்தில் அவர் விடை பெறுவது ஒண்டும் கவலையான விசியம் இல்லை போல இருந்தாலும் சிவனைப் பார்க்க பேரிச்சம்பழத்தோடு வாறன் எண்டு சொல்லிப்போட்டு போகாமல் விட்டது குற்றவுணர்வு போல தொண்டைக்குளியில் வந்து குந்தி இருந்தது மனதுக்கு நெருடலாக இருந்தது .
அந்தப் பெண் தொடர்ந்து தான் சிவைனின் சகோதரி எண்டும்,சிவைன் இறந்த நாலாம் நாள் அவரை அடக்கம் செய்து,தான் இப்ப ஒஸ்லோவில் அவரின் வீட்டில் நிற்பதாகவும் சொன்னாள்.என்னோட நோர்க்ஸ் உச்சரிப்பை வைத்து என்னை ஒரு வெளிநாட்டு வந்தேறு குடி எண்டு கண்டு பிடித்து,
" சிவைனுக்கு நிறைய வேற்று இன மக்கள் நண்பர்களாக இருந்து இருக்குறார்கள்,பலர் போன் பண்ணினார்கள், அவர் அவர்களுடன் சந்தோசமா இருந்து இருக்குறார், அவர் இந்த வீட்டை என்னோட பெயரில் எழுதி வைச்சு,அவரின் வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் என்னோட இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளின் பெயரில் பகிர்ந்து எழுதி இருக்குறார், நான் அவரின் ஒரே ஒரு சகோதரி பல வருடமா அவருடன் அன்பாக ஒரு வார்த்தை பேசவில்லை என்பதை நினைக்க கவலையாக இருக்கு "
என்று அழுதாள், கடைசியாக
" அவருடன் ஆசுபத்திரியில் இருந்த போது சில நிமிடங்கள் டெலிபோனில் பேசினேன், ஒரு ஸ்ரீ லங்கா தமிழர் ஒருவர் மட்டுமே தன்னை ஆசுபத்திரியில் வந்து பார்த்ததாகவும்,அதை தான் மிகவும் பெரிய ஒரு விசியமாக நினைபதாகவும் சொல்லி இருந்தார்,அது யார் எண்டு உனக்கு தெரியுமா,அவரை நான் சந்திக்க முடியுமா " எண்டு கேட்டாள்.
நான் அதுக்கு பதில் சொல்லவில்லை,
" சிவைனின் ஆத்மா சாந்தி அடையப் பிராதிக்குறேன் " எண்டு சொல்லிப்போட்டு வைச்சிட்டேன்,
முஸ்தப்பா வந்து
" என்னப்பா பேரிச்சம்பழப் பெட்டியப் பார்த்துக் கொண்டு டெலிபோனில யாரோட வைச்சு அறுக்கிறாய், காசில்லாட்டியும் பரவாயில்லை ரெண்டு பெட்டிய கொண்டு போ பிறகு காசைத் தா, இன்று இரவு பொப் மார்லியின் பாடல்களை இசைக்கும் இசை நிகழ்ச்சி பிஸ்லெட் அரினாவில நடக்குது வாவன் பியர் நாலஞ்சை உள்ளுக்க விட்டுப்போட்டு கும்மாளம் போடலாம்,இளம் பெட்டையள் மயக்கத்தில நிப்பாளுகள்,மடக்கலாம் வாரியா, " என்றான்,
நான் " பேரிச்சம்பழம் இனிக் கொண்டு போய்ப் பிரிஜோசனம் இல்லை " எண்டு சொல்லிப்போட்டு ,
பேரிச்சம்பழப் பெட்டிய உற்றுப் பார்த்தேன் ,அந்த சின்னப் பெட்டிகளின் மேலே ஒரு படம் போட்டு இருந்தது , ஒரு பேரிச்ச மரத்தை சுற்றி சில ஒட்டகங்கள் நிக்க, அதுக்கு அருகில் யாழ்பாணத்தில செத்த வீட்டில ஆட்கள் குந்தி இருக்கிற மாதிரி சில அரபுக்கள் குந்தி இருந்தார்கள். அவர்களோடு என்னோட குற்ற உணர்வும் சேர்ந்தே குந்தி இருந்தது.....
.
.
05.08.14
Sunday, 2 August 2015
Annaik Kili Unnaith Theduthe ,,Guitar Cover
ஞாயிறு பொழுதுபோக்கு இசைவிருந்து...இசைஞானி இளையராஜாவின் முதல்ப் படத்தில வந்து நதியோரம் பிறந்து கொடி போல வளர்ந்து பட்டி தொட்டி எல்லாம் "வெயிலோடும் மழையோடும் மனம்போல் நடந்து "பட்டையக் கிளப்பிய ஒரு தலை முறையைக் கிறங்க வைத்த பாடல்.இந்தப் பாடல் வரிகளை அன்னக்கிளி படத்தைத் தாயரித்த பஞ்சு அருணாசலம் எழுதி இருந்தார். இசை எவளவு அருமையோ அவளவு அளவு பாடல் வரிகள், " நதி என்றால் அதுக்குக் கரை ஒன்று காவல் கொடி என்றால் அதைக் காக்க மரமே காவல் புள்ளிபோட்டு ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுக்கப் போகையில் இந்தக் கன்னிக்கு யார் காவல் " என்று ஒரு கிராமத்துப்பெண் பற்றி அழகா " கனவோடு சில நாள் நினைவோடு சிலநாள் உறவில்லைப் பிரிவில்லை தனிமை பலநாள் " என்று ஏங்கும் எல்லோரினதும் இதயத்தை தொட்டு " உறங்காத கண்களுக்கு ஒலை கொண்டு மை எழுதி " இருக்கிறார் பஞ்சு அருணாசலம்.
Monday, 27 July 2015
ஆகாயக்கடல்வெளி இளையநிலா..
தொன்நூறுகளின் ஆரம்பத்தில் யாழ் குடாநாடு குண்டு மழைக்கு மத்தியில் அதிர்ந்து கொண்டு இருந்த நேரம், கோவில்களின் கடைசி பூங்காவன திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாக இசைமழை பொழிந்த நேரம், என்னோட இளவயதில் ஒரு இசைக் குழுவில் கிட்டார் வாசித்தேன். அந்த இசைக்குழு என்னோட கடைசித் தம்பியின் நண்பர்கள் நடத்தினார்கள்.
நாங்க யாழ்ப்பாணம் டவுனில இருந்தாலும், நிகழ்சிகள் செய்யும் அழைப்புகள் அதிகம் கிராமக் கோவில்களில் இருந்து வரும்,அந்தப் பையன்கள் என் கடைசித் தம்பியை விட சின்னதாக இருந்தது நினைவு இருக்கு.இசைக் குழுவில் அதிகம் ஏலேற்றோனிக் கருவிகள் இருக்கவில்லை, அதனால இசை கொஞ்சம் இரைச்சல் இல்லாமல் இயல்பாக கிராமத்து ஆவாரம்பூப் போல அழகா எப்பவும் மயங்க வைக்கும் .
அந்த இசைக்குழு பெயர் இப்ப நினைவில் இல்லை,அதுபோலவே அதில நான் எப்படிக் கிட்டார் வாசித்தேன் எண்டும் அறவே நினைவு இல்லை.பயணங்கள் முடிவதில்லை படத்தில வந்த இளையநிலாப் பொழிகிறது.. என்ற பாடலை தொடக்கம் முதல் இறுதிவரை கிடாரில் பொழிந்து வாசிக்கும் திறமை என்னிடம் இருந்ததால் என்னை அந்தப் பையன்கள் ஆஸ்தான கிடாரிஸ்ட் ஆக அந்த இசைக் குழுவில் வைத்து இருந்தார்கள்.
இந்தக்கதை இளையநிலா பாடலோ,அதில் வரும் கிட்டார் அதிசயங்களோ, அல்லது பிஞ்சு போன அந்த இசைக்குழு பற்றியதோ இல்லை, இளமை நெஞ்சமெல்லாம் வயதுக்கோளாறு ஹோர்மோன்கள் கொலுவிருந்த நாட்களில்இ ளைய நிலாவை விட இளமையான ஒரு பெண்ணை அந்த இசைக்குழு நடத்திய ஒரு நிகழ்சியில் முன்னப் பின்ன தெரியாத ஒரு ஊரில சந்தித்து பற்றியது..

வடமராட்சியில் சமரபாகுதேவன்குறுச்சி என்ற இடத்தில ஒரு பிள்ளையார் கோவிலில் அந்த இசை நிகழ்ச்சி நடந்த இரவு, எல்லா இரவும் போல இருட்டா இருந்தது, எல்லா கிராமத்துப் பிள்ளையார் கோவில் போல இருந்த அந்த சின்னக் கோவிலில் பிள்ளையாரும் சின்னதா இருந்தார்,கோவிலும் சின்னதா இருந்தது . கோவிலுக்கு முன்னால ஒரு ஆலமரத்திற்குப் பக்கத்தில, மேடை போட்டு,எளிமையா நடந்த அந்த நிகழ்சியில் அந்த இசைக் குழுவின் பிராதான அறிவிபாளார் அன்று வரவில்லை,பையன்கள் கேட்டாங்கள்
" அண்ணே நீங்க பாடல் தொடங்குமுன்,ஒரு சின்ன அறிமுக அறிவுப்பு கொடுக்க முடியுமா " எண்டு,
எனக்கு எனவுன்சர் என்ற அறிவிப்பாளர் போல எப்படிப் பேசுவது எண்டு தெரிந்தாலும், என்ன பேசுவது எண்டு தெரியவில்லை,நான் அவங்களிடம் அதை சொன்னேன்,அவங்கள்
" அண்ணே அது பரவாய் இல்லை,உங்களுக்கு பிடித்த மாதிரி சொல்லுங்க அண்ணே ,எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை " எண்டு உற்சாகம் கொடுக்க,
நான் மைக்கைப் பிடித்து,ஒரு கையால வேட்டியை இறுக்கிப்பிடித்து கொண்டு , என்னோட பாணியில் ஜோக் அடித்து தொடங்கினேன்,அது கொஞ்சம் வித்தியாசமா இருந்ததாலோ என்னவோ சனங்கள் ரசித்தார்கள், அப்பத்தான் மேடையின் கீழே ஒரு இளம் பெண் கொஞ்சம் அளவுக்கு அதிகமா விழுந்து விழுந்து சிரிக்கிறதை,சில நேரம் நான் மைக்கை கையில எடுக்கவே அந்தப் பெண் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்க ஆச்சரியமா இருந்தது.
உங்களுக்கு உண்மையை சொன்னா என்ன நிகழ்சியில் நான் என்னோட கிடாரை விட அவளை அதிகமாக ஓரக்கண்ணால் கவனித்தேன்.....
உங்களுக்கு உண்மையை சொன்னா என்ன நிகழ்சியில் நான் என்னோட கிடாரை விட அவளை அதிகமாக ஓரக்கண்ணால் கவனித்தேன்.....
கோவில்களின் கடைசி பூங்காவன திருவிழா ஒரு வருடத்தில் நடக்கும் ஒரு நினைவு நிகழ்வு, சனங்கள் அது எப்படி குளறுபடி இசை நிகழ்வாக இருந்தாலும் ரசிப்பார்கள். இரவின் அமைதியில் விடிய விடிய நடந்த அந்த நிகழ்வின் நடுவில அந்தக் கோவில் ஐயருக்கு பொன்னாடை போர்க்கும் நிகழ்ச்சி நடக்கப் போறதா சொல்லி ,எங்களை மேடையில் இருந்து இறக்கி, அந்த திருவிழா உபயகாரர் வீட்டில சாப்பாடு ரெடியா இருக்கு, எல்லாரும் போய் சாபிட்டு போட்டு வந்து தொடர்ந்து இசை நிகழ்சி செய்யச் சொல்ல, ஒரு வயதான ஐயா வந்து
" பொடியள் உங்களுக்கு, இடம் வலம் இந்தப் புது ஊரில தெரியாது ,நான் விதானையார் வீடு காட்டுறன் எனக்குப் பின்னால வாங்கோட"
எண்டு சொல்ல ,நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன், அவள் நேரத்தோட எழும்பி , ஆலமரப் பக்கம் நிண்டு எனக்கு என்னவோ சொல்லுரது போல கையால சைகை செய்ய எனக்கு இருட்டில சரியா விளங்கவில்லை ,அவளவுதான் அவள் மின்னல் சொப்பன சுந்தரி நளினத்தில் மறைந்து போயிட்டாள்,நான் கவனித்து போல அவளும் என்னைக் கவனித்து இருக்கிறாள் எண்டு விளங்கினாலும் எதுக்கு எனக்கு அப்படி சிக்னல் காட்டினாள் எண்டு விளங்கவில்லை.
அந்த ஐயா கல்லு ஒழுங்கை பனைவடலி வீதியால எங்களை இழுத்துக்கொண்டு போக,நாங்க பின்னால இழுபட்டுப்போக, பாதத்தியில் ஓட்டிக் கொள்ளும் செம்மண் துகள்கள் நிரம்பிய வீதியில்,கோவில் லவுட் சபிகர் சத்தத்தை நோக்கி தொடர்ந்து குரைக்கும் நாய்கள் எங்களைப் பார்த்து இன்னும் அதிகமா குரைக்க தொடங்க ,
ஆரவாரமற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி அமளி துமளி குறைந்து குறைந்து அமைதியாக ஒழுங்கை முடிவில் சத்தம் சில்வண்டு இரைச்சல் அளவுக்கு நிசப்தமாக அடங்க, நான் வேட்டிய மடிச்சு முழங்கால் வரை கட்டிக்கொண்டு போக,ஒரு மரத்தில அரிக்கன் லாம்பு விளக்கு தொங்க, அந்த வீட்டுக்குள்ள அந்த ஐயா போக முதல்

" ராசாத்தி பிள்ளையள் வாறாங்கள், அம்மாட்ட டக் எண்டு பந்தி விரிச்சு சாப்பாடு போட சொல்லனை "
எண்டு சொல்ல,அந்தப்பெண் அந்த மரத்துக்கு பக்கத்தில், படலையில் ஓரமா நிண்டாள், பெடியங்கள் எல்லாரும் பசியில அடிச்சுப் பிடிச்சு உள்ளுக்கு உள்ளிட, நான் அவளைப் பார்த்தேன், சடார் எண்டு வேட்டிய முழங்காலில இருந்து அவிடுக் கீழ விட்டேன், அவள் எனக்கு என்னவோ சொல்ல,அல்லது கதைக்கக் காத்து இருப்பதுபோல பார்த்தாள்.
அவள் நின்ற அந்த படலையின் அருகில் இருந்த மரத்தில இருந்து ஒரு முன்னம் பின்னம் அறியாத வாசம்வர
" இது என்ன மரம் "
எண்டு மரங்கள் பற்றி என்னவோ தாவரவியல் ஆராய்ச்சி செய்யுற மாதிரி நூல் விட்டு அவளிடம் கேட்டேன், அவள் முகமெல்லாம் சந்தோசமாகி,
" இது ஆமணக்கமரம், நீங்க நல்லா கிட்டார் அடிக்குரிங்க " எண்டாள் ,
நான் கொஞ்சம் ஜோசித்து " இது உங்களின் வீடா " எண்டேன்,
அவள்," ஓம் ஓம் ,நீங்க நல்ல முசுபாத்தியா எனவுன்ஸ் செய்யுரிங்க, சிரிப்பு வருகுது " என்றாள் ,
நான், " இவங்கள் எல்லாம் என்னோட தம்பியின் பிரென்ஸ், கிட்டார் வாசிக்க தெரியுமா நீங்க மூயுசிக் படிகுரின்களா" எண்டேன்,
அவள்," நீங்க இளையநிலா பொழிகிறது பாடல் நிகழ்சியில் பாடுவின்களா " எண்டாள் ,
நான் " அப்பிடிதான் நினைக்கிறன், உங்களுக்கு அது விருப்பமா,இன்று உங்களின் திருவிழாவா எண்டு கேட்க" ,
" நிலாகாயும் நேரம் சரணம்.... பாடலுக்கு முதல் நீங்க சொன்ன விளக்கம் வித்தியாசமா இருந்தது " எண்டாள்,
" நான் என்ன விளக்கம் சொன்னேன் ,,எனக்கே நினைவு இல்லை "
" காதலனும் காதலியும் கையைப்பிடித்து நடப்பது போல அந்த பாடலின் தாளகதி இருக்கு எண்டு சொன்னிங்க "
" அப்படியா "
" ஹ்ம்ம் என்னமோ ஒரு இங்கிலிஷ் சொன்னிங்க வாத்து அப்படி நடக்கும் என்று "
" வாடலிங் அதுவா ,,,வாத்து அப்படிதான் நடக்கும் "
" ஹ்ம்ம் அதுதான்,,நல்லா இருந்திச்சு ,,அப்படி ரசித்து சொன்னது "
" அப்படியா,,அது இங்கிலிஸ் சொல்லு "
" என்ன அப்படியா என்டுரிங்க,எவளவு ஆசையா இருந்திச்சு தெரியுமா அதைக் கேட்க "
" இந்த இசைக்குழுவில் உள்ள எனவுன்சர் இண்டைக்கு வரவில்லை அதால நான் சும்மா அறிவிப்பாளர் போல என்வுன்ஸ் செய்தேன் "
" அவர் இனி வரத் தேவை இல்லை,,நீங்களே மைக்கைப் பிடிச்சு எனவுன்ஸ் செய்யுங்கோ "
" அட அட ,,எனக்கு அது எல்லாம் தெரியாது "
" வேற என்ன தெரியும்,,,சொல்லுங்கோ "
" உண்மையைச்சொன்னால் எனக்கு கிட்டார் வாசிகிறத தவிர வேற ஒன்றுமே தெரியாது "
" உண்மையாவா சொல்லுரிங்க,,கிட்டார் எப்படி வாசிக்கிறது "
" ஹ்ம்ம் .அது எல்லாரும் வாசிக்கலாம் ."
" என்ன ஹ்ம்ம்,,வேற சொல்ல மாட்டிங்களா "
" வேற சொல்ல ஒன்றுமில்லை ..."
" என்ன ஒன்றுமில்லை,,ஹ்ம்ம், கோபம் கோபமா வருது "
" எதுக்குக் கோபம் வருகுது "
" அதுதான் தெரியவில்லை ..."

நான் " நீங்களும் சினிமாப் பாட்டு எல்லாம் பாடுவின்களா " எண்டு கேட்க,
அவள், " நீங்க இனியும் உடுப்பிட்டிக்கு வருவிங்களா " எண்டு கேட்டாள்,
நான் தலையைச் சொறிஞ்சு " உடுப்பிட்டி எங்க இருக்கு " எண்டேன்
அவள் " இது தான் உடுப்பிட்டி " எண்டு சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்,
அவள் சிரிக்கிறதைக் கேட்டு,எங்களைக் கூ டிக்கொண்டு வந்த ஐயா,
" அது ஆர் பிள்ளை ராசாத்தி படலைக்க நிக்குறது "
எண்டு கேட்க நான் கதையை நோர்மல் ஆக்கி விடுப்பு கேட்கிற மாதிரி,
" ஏன் அரிக்கன் லாம்பை சுற்றி பூச்சி பறக்குது, இது என்ன பூச்சி " எண்டு கேட்டேன் .
" இது விட்டில் பூச்சி. இன்று இரவு மழை சிலநேரம் வரலாம் போலக் கிடக்கு ,கவலையா இருக்கு மழை வந்தா நீங்க எல்லாரும் இடையில இசை நிகழ்ச்சி செய்யாமல் போயிடுவின்களே , இந்த விட்டில் பூச்சிகள் சிம்மினியில் மோதி மோதி செத்துப்போகும்,அதன் வாழ்கை ஒரு இரவுதான் "
எண்டு மெதுவாக சொன்னாள்.
" அவங்கள் இடையில போனானாலும் ,நான் மழையில நனைத்து கொண்டு ,மைக்கைப் பிடிச்சு எனவுன்ஸ் பண்ணிக்கொண்டு இருப்பேனே "
எண்டு சொன்னேன்,வாய் விட்டு சிரித்தாள், சல்லி முட்டி உண்டியலை உடைச்சு சில்லறைக் காசு வெள்ளித் தாம்பாளத் தட்டில கொட்டின மாதிரி இருந்தது.
அதுக்குப் பிறகு ,என்னோட ஊரைக் கேட்டாள்,சொன்னேன், அவள் வட இந்துவில் படிகிறதா சொல்லிக்கொண்டு இருக்கும் போது, வீடுக்க உள்ள இருந்து
" கோகிலா,கோகிலா ,இருட்டில எங்க ராசாத்தி சிலமன் தெரியேல்லையே பிள்ளை, பெட்ரோல் மக்ஸுக்கு மண்எண்ணை குறையுது, எண்ணைக் கானை எங்க பிள்ளை வைச்சனி "
எண்டு கேட்டு ஒரு குரல் அந்த வயதான அய்யாவின் குரல் போல வர, அவர் யார் என்று கேட்டேன், தன்னோட பெரியய்யா என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் அவள் சத்தம் இல்லாமல்
" அம்மா கூப்பிடுறா , நீங்க பசியோட இருபிங்க உள்ள வந்து முதலில் சாப்பிடுங்க " எண்டாள்,
" அம்மா கூப்பிடுறா , நீங்க பசியோட இருபிங்க உள்ள வந்து முதலில் சாப்பிடுங்க " எண்டாள்,
படலைக்கு உள்ள போகும் போது தலையை திருப்பி பார்த்தாள் , தேவதை போல சிரிச்சு மின்னல் போல மின்னிப் போட்டு உள்ளுக்குப் போயிடாள்,
எனக்கு விளங்கிட்டுது இந்தக் கதை இதோட முடியாது போல இருக்கு எண்டு எண்டாலும் ஆரம்பம் விளங்காத ஒரு விசியம் எப்படி இனித்தொடரும் எண்டு குழம்பிக்கொண்டு, நான் கொஞ்சம் பிந்தி சாப்பிட வர சாபிட்டுக்கொண்டு இருந்த பெடியங்கள் என்னை சந்தேகமாப் பார்த்தாங்கள்,
" அண்ணே இடியப்பம் முடியப் போகுதண்னே "
எண்டாங்கள்,நான் ஒண்டும் சொல்லவில்லை. சின்னப்பொடியன்களை முதல் சாப்பிட விட்டுப்போட்டு பிறகு அண்ணே கடைசியா சாப்பிட வாரார் ஆக்கும் எண்டு ஜோசித்திருப்பான்கள் போல. நான் சாப்பிட ஒரு மூலையில இருக்க, அவள் கதவுக்கு மறைச்சு அரை வாசியா என்னைப் பார்க்க, அவளோட முகம் அஷ்டமி சந்திரன் போல பாதியாக , இமைகள் மட்டும் மூன்றாம் பிறை போல இருட்டில தெரிந்து,
அவளின் அம்மா
" எங்கட ஊர் இடியப்பம் சொதி, உங்களைப் போல டவுனில வளரும் பிறத்தி ஆட்களுக்கு நல்லாப் பிடிக்கும் போல "
எண்டு சொல்ல, நான் அவளைப் பார்த்தேன், அவளே கடுகு தாளிச்சுப்போட்ட தேங்காய்ப் பால் சொதிபோல தான் இருந்தாள், சிரிப்பு வந்தது.
அவள் என்னைப் பார்த்துக்கொண்டே
" எணை அம்மா, பச்சை மிளகாய் வெள்ளச் சம்பலும் இவயளுக்குக் பிடிகுமாமம், அங்கே போடணை "
எண்டு என்னோட இலையை அவளின் அம்மாவுக்கு காட்டினாள்.
நான் பச்சை மிளகாய் வெள்ளைச் சாம்பலைப் ரசித்துப் பார்க்கிற மாதிரி ஒரு கோணத்தில்,தலையை அதிகம் நிமிர்த்தாமல் அவளைப் பார்த்தேன்.
கோகிலா இளமையா என்னோட வயசு போல இல்லை ,கொஞ்சம் குறைவு போல சின்னதாக இருந்தாள். இருட்டிலையும் அவள் தலை மயிர் நல்ல வள வள எண்டு வழுக்கி வழுக்கி அலைபாய , காதில போட்டு இருத்த பெரிய வளையத் தோட்டுக்க கொஞ்ச தலைமுடியை வேண்டும் எண்டே வளைச்சு விட்ட மாதிரி இருக்க,முகம் சின்ன சிட்டுக்குருவி போல அப்பாவியா இருந்தது, முழங்காலுக்கு கீழ வரை வரும் ஒரு நீண்ட பாவாடை அணிந்து, ஒரு சில்க் துணியில தைச்ச பிளவுஸ் மேல போட்டு, கையில நிறைய வளையல்கள் அணிந்து இருக்க, அவளின் உருவம் கன்னியாகுமரி அம்மன் சிலைபோல கலர் புல்லா இருக்க கையில ஒரு கிளி வைச்சிருந்தா மதுரை மீனாட்ட்சி அம்மன் போல இருப்பாள் போல இருந்தது.
அந்த வடலிப் பாதையில இருந்த பனை மரங்களின் காவோலையில் காத்து மோதி சர சர சர எண்டு சருகுகளுக்குள்ளாள சாரப்பாம்பு போற மாதிரி சத்தம் வந்தது அவள் சத்தம் இல்லாமல் இருந்த சில நிமிடங்கள். தலையைப் பக்கவாட்டில் சரிச்சு, ஒரு கையால தலை மயிரை அள்ளி எறிஞ்சு பின்னுக்கு விழுத்தி, சின்னக் குழந்தைகளின் உலகம் தெரியாத பூரிப்பில் சந்தோஷமா சிரிக்கும் போதெல்லாம்....

நான் கடைசியா சாபிட்டு,வெளிய வர பொடியன்கள் எண்ணப் பார்த்துக்கொண்டு வடலிப் பாதையில் நிண்டாங்கள்,நான் ஆமணக்கம் மரத்தையும் அரிக்கன் லாம்பையும் பார்க்க கோகிலா மறுபடியும் அதில நிண்டாள், ஆனால் கொஞ்சம் பதட்டமா நின்றால் என்பதை இருட்டு வெளிகாட்ட, இருட்டில வேற சில உள் ஊர் இளஞ்சர்கள் கொஞ்சம் தள்ளி அந்த வடலிப் பாதையில் நிக்குறது எனக்கும் தெரிய, நான் கொஞ்சம் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ,
" உங்களின் அரிசிமா இடியப்பம்,தேங்காய் சொதி, பச்சை மிளகாய் வெள்ளைச் சம்பல்,சும்மா நாதம் பேசியது, அதுக்கு நன்றி. உங்க விருப்பமா சாப்பாட்டுக்கு நன்றியாக இளையநிலா பொழிகிறது பாடல்.. எப்படியும் இன்று பாடுவம் ,அதுக்கு நான் தான் இன்ற்றடக்சன், இண்டர்லுத், பினிசிங் எல்லாம் கிடாரில் வைச்சு தட்டப் போறேன் "
எண்டு கொஞ்சம் விபரமா சொல்லிப் போட்டு ,அவள் பதில் என்ன சொல்லப்போறாள் எண்டு ஜோசிதுக்கொண்டு நின்றேன்,
அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆமணக்க மரத்தில தொங்கின அரிக்கன் லாம்பை எடுத்துக்கொண்டு படலையை மெள்ள சாத்திப்போட்டு, வீட்டுக்க போயிட்டாள்.
பெடியங்கள் வந்து
" அண்ணே அந்த அக்கா யார் " எண்டு கேட்டாங்க,
நானும் " அது தான் எனக்கும் பிரச்சினை ,அந்த அக்கா யார் எண்டு எனக்கும் தெரியாது " எண்டு சொன்னேன்,
அவங்கள்
" அண்ணே இந்த ஊர் எங்களுக்கு தெரியாது ,வீண் சோலி வரும் அண்ணே, நீங்க வாங்க நாங்க மேடையில ஏறப்போரம் "
எண்டு சொல்ல, நானும் அவங்களோட வந்து மிச்ச நிகழ்ச்சி முழுவதும் கிட்டார் வாசித்தேன், இளையநிலா பாடல் பாடி வாசிக்க இளையநிலா இருந்த இடம் வெறுமையா இருந்தது. அவள் வரவே இல்லை, அந்த வெறும் இடத்தைப் பார்த்து பார்த்து கொண்டு இருந்தேன், கடைசியா " நாளை நமதே எந்த நாளும் நமதே...." பாடல் வாசித்து நிகழ்ச்சி முடிய,எல்லா வாத்தியமும்,ஒலி பெருக்கி சாதனங்களும் வானில ஏற்றி முடியவும் அந்த இடம் வெறுமையா இருந்தது .
திருவிழா முடிய எல்லாசனமும் வீடுகளுக்குப் போக, அந்த கோயில் நிர்வாக வயதான மனிதர்கள் கோவிலுக்கு வெளிய நிற்க ,நாங்களும் எல்லா மூசிக் சாமான்களும் வானில ஏற்றி முடிய நான் வேட்டிய மடிச்சு முழங்கால் வரை கட்டிக்கொண்டு வெளிக்கிட, நாலு சங்குமார்க் சரம் கட்டின வாட்ட சாட்டமான இளைஞர்கள் எங்களின் வானுக்கு கிட்ட வந்து,என்னோட மட்டும் கதைக்க வேண்டும் எண்டு சொன்னார்கள்,பெடியங்கள் என்னை ஏதோ வில்லங்கத்தில மாட்டுற மாதிரி பார்த்தாங்கள்,நான் சாமாளிப்பேன் எண்டு அவங்களுக்கு சொல்லிப் போட்டு தனியப் போனேன்,
அவங்களில் ஒருவன் ,
" வதனியை முதலே தெரியுமா " எண்டு மரியாதையைக் கேட்டான்,
விலங்கமான நேரத்தில ஓவரா மரியாதை வெளிய வருவது நல்லதில்லை எண்டு தெரிந்தாலும் ,
நான் " யார் வதனி ,அப்படி யாரையும் தெரியாதே " எண்டு கேட்டேன்,
" அவ தான் விதானையின்ற மகள்,நீங்க இருட்டில நிண்டு என்னவோ குசு குசுதின்களே அவளோட " என்றான்
" ஒ, அவங்களுக்கு வதனியா பெயர் "
" ஏன்,,வேற பெயர் சொன்னாளா "
" இல்லை,,நான் கேட்கவுமில்லை,,சொல்லவுமில்லை ,கோகிலா என்று அவர்கள் வீட்டில ஒரு அம்மா கூப்பிட்டா "
" ஓம்,,அதுதான் வீட்டில பெயர் , என்ன கதைத்தாள் "
" ஒன்றும் விசேஷமாக கதைக்கவில்லை,,இசைக்குழுவில் என்ன பாட்டு வாசிப்பிங்க என்று கதைத்தாள் "
" அப்படியா ,,அவளவுதானா "
" அவளவுதான்,,"

நான் நடந்ததை சொன்னேன், அந்த நாலு பேரில் ஒருவன் நான் எதிர் பார்த்த கேள்வியை அவனே சொல்லி அதுக்கு கச்சிதமா பொருந்தும் பதிலையும் அவனே சொன்னான், இதெல்லாம் உலகம் முழுக்க கிராமம்,நகரம் வித்தியாசம் இல்லாமல் நடக்கிற விசியம் எனபதால் நான் ஒண்டுமே சொல்லவில்லை ,நான் என்ன சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்பம் ,முதல் அவன் சொன்னது அவனுக்கு மட்டும் உள்ள ஆதங்கமா எண்டும் எனக்கு தெரியாது,அவங்களில் கொஞ்சம் சண்டியன் போல இருந்த ஒருவன், கொஞ்சம் வெருட்டுற மாதிரி சில விசியம் சொன்னான், அது எனக்கு இன்னும் குழப்பாமா இருந்தது ,,,
அந்த நிகழ்சியின் பின் அந்த இசைக்குழு பிரிந்து என்னோட தம்பி ஒரு முன்னணி இசைக்குழுவில் தபேலா கலைஞ்சனா முன்னணி மேடைகளில் ஏறப் போக , என்னைப்போன்ற மற்ற சில்லறைகள் எல்லாரும் பிரிந்து எல்லாரும் கொஞ்ச நாளில் காணாமல் போக ,ஒரு கட்டத்தில் அதுக்குப் பிறகு நான் எல்லாத்தையும் மறந்து விட்டேன்,கோகிலாவின் முகத்தை மட்டும் மறக்கவே இல்லை,அது பார்க்கிற இடம் எல்லாம் முன்னுக்கு வந்து மறைக்கிற மாதிரி இருந்தது,
ஆனாலும் அஞ்சு நிமிடம் பேசியதை வைத்துக்கொண்டு ஒரு இளம் பெண்ணில் காதல் கோட்டை கட்ட அத்திவாரம் போட முடியாது எண்டு நல்லா தெரிந்தாலும், அந்த இளம் பெண் நிறைய விசியம் என்னோட பேச விரும்பி இருக்கலாம், சந்தர்ப்பம் கிடைக்காத போது தான் பேசாத விசியங்கள் இதயம் முழுவதும் இறுக்கிக்கொண்டு பாரமாக இருக்கும்.எப்படியோ அந்த நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமா அழியத் தொடங்க ...
....சில வருடங்களின் பின் அந்த முகத்தை வேற ஒரு இடத்தில,ஆணையிறவு ஆகாயக் கடல் வெளிச் சண்டையில வீரச்சாவடைந்த போராளிகள் .விபரம்,ஈழ முரசு இல வந்த நேரம் பார்த்தேன். சண்முக சுந்த..... .. கோகிலவதனி , மேயர் இளையநிலா எண்டு படம் போட்டு அதில அவள் என்னையே பார்ப்பது போல இருந்தது, இளையநிலா அப்ப வரிப் புலியில் வீரமாக இருந்தாள்,,பாவம் உசிரோட இல்லை!
யுத்தகாலத்திலிருந்து அந்த நேரம் வாழ்ந்த எல்லாரையும் போல இழப்புக்கள் பற்றி அலைந்துகொண்டு இருந்த எல்லா இடங்களிலும் பதில்கள் இல்லாத கேள்விகளுடன் வெயிலோடும் மழையோடும் தனிமையிலும் ஏராளமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஜதார்த்த வாழ்க்கை என்பது எப்போதும் உண்மையோடு என்னிடம் ஏராளமானவற்றைப் பகிர்ந்துகொண்டிருக்கிறது.
இதில மறைக்கவோ திரிபுபடுத்தவோ ஒன்றுமேயில்லை அப்படி நினைத்து நல்லா உத்துப்பார்த்த போது முகத்தில அஷ்டமி சந்திரன் ,இமைகள் மூன்றாம் பிறை.பின்னணியில் ஆமணக்க மரம்,அதில அரிக்கன் லாம்பு, பாதத்தில் ஓட்டிக் கொள்ளும் செம்மண் துகள்கள் நிரம்பிய கல்லு ஒழுங்கை , தொடர்ந்து குரைக்கும் நாய்கள். இரவு நேர இசை நிகழ்ச்சி, ஆகாயக் கடல் வெளியில் இளையநிலா !

Subscribe to:
Posts
(
Atom
)