Sunday 25 October 2015

மானம்பூ

.
உனக்கு 
மானம்பூத் திருவிழா 
வாழை வெட்டில் 
வீர ஆவேசமாக 
யாதுமாகி நின்றாய் காளி 
எங்கட
சனங்களுக்கோ
கொலு வைச்சுக் காத்திருந்த
சீருடைகள்
ஆயுத பூசையில்
சப்பாத்துக் கால்கள்
கல்வியா
செல்வமா
வீரமா
எண்டு ஆராய்ந்த
புலனாய்வுப் பார்வைகளின்
நவ ராத்திரிகளிருந்து
தப்பிக்க
ஓரமாக ஒதுங்கி நின்ற
நேரமே
மானம் போய்விட்டது !
.

Vasanthathil Orr Naal Acoustic Guitar Cover



ஞாயிறு விடுமுறை நாள் இசை விருந்து. இசைக்கருவியில் வாசிக்கக் கடினமானஇந்தப் பாடலை அகோஸ்டிக் கிட்டாரில் என்னோட ஸ்டைலில் வாசித்துள்ளேன்.சும்மா பொழுதுபோக்காக வாசித்துள்ளேன் , பிழைகள் இருந்தால் மன்னித் துக்கொள்ளுங்க. வசந்தகாலக் குயிலோசை பி. சுசிலா அம்மாவின் இளமைக்குரலில் " வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாள் " மறைந்தும் மறையாத மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் மறக்க முடியாத மெட்டு. எப்போதுமே உத்தரவாதமாக ஏக்கமான உணர்ச்சியை அடிச்சுப் பிழிந்து தரும் தர்பாரி கானடா இராகத்தில் கர்நாடக ஸ்டைலில் வேகமான ஸ்வரக் கோவையில் வரும் பிருகாக்கள் அதிகம் உள்ள பாடலின் இரண்டு இண்டர்லூட் இடைஇசையிலும் கல்யான உணர்வு கொடுக்கும் நாதஸ்வரம் தவில் இசையுடன் வெஸ்டர்ன் ரிதம் டெம்போவும் கலந்து பொன் வண்ணமாலை வைத்திருக்கும் ஸ்ரீராமனுக்காகக் காத்திருக்கும் வைதேகியின் திருமணம் அந்தப் படத்தில் வரும் மூன்று தெய்வங்களும் வாழ்த்த உள்ளம் கொள்ளை கொள்ளும்பாடல்