Thursday 2 April 2015

இரவைப் பகலாக்கி....



மெழுகுவர்த்தி
விசும்பும்
கொஞ்சவே
இருட்டான மூலை......
கையால 
எடுத்துக் கடிக்க
ரெண்டாக
இழுபடும்
பிட்ஸாத் துண்டு....
வெள்ளைக்
கோப்பையில்
சீனி போடாத
கறுப்புக் கோப்பி.....
நீட்டி
நிமிர்ந்திருக்க
முதுகு வளைந்த
மரக் கதிரை......
காலால்
சுரண்டி
கெஞ்சிக் கேட்டு
வேண்டுமென்றே
தோளில்
இடிச்சுக் கொண்டு
பேசுவதுக்கும்
சிரிப்பதுக்கும்
இடைவெளியில்லாமல்
இரவைப்
பகலாக்கி
ஒட்டிக்கொண்டு
நீ
முதல்
சந்திப்பிலேயே
உவமான உவமை
கவிதை மொழி
படிமம் அலங்காரம்
அழகியல் ஒட்டுகள்
எதுவுமேயில்லாமல்
காப்பியம்
எழுத முடியுமென
நிரூபித்தவள்
நீயடி .
.
.
ஏகொன் ஸ்டூரோ சென்டர்
ஒஸ்லோ