Sunday 5 April 2015

மூன்று கணவன்மார்கள்..



" குட் ஆப்டர்நூன் , என்ன செய்யுரிங்க ,எப்படி சுகம், இன்றைக்கு யாரைக் கவுக்கிற பிளான்   "
     
" முன்மாலை வணக்கமுங்கோ, ஏதோ உங்க புண்ணியத்தில்  இருக்கேன்பா, கழுவிக் கவுக்க இங்க குசினியில அண்டா குண்டா சட்டி பானைதான் இருக்கு    "

" நீங்க ஏன்  ஒஸ்லோவில் தமிழ் பெண் இல்லாமல் தவித்துக் கொண்டு  இருக்குறிங்க போல இருக்கே , பார்க்கப் பாவமா இருக்கு உங்களை "

" அதெல்லாம் லண்டனில இருக்கிற உங்களுக்கு எப்படி தெரியும், வெத்திலையில் மை போட்டுப் பார்த்திங்களா அல்லது சொந்தமா உளவுத்துறை ஏதும் வைச்சு இருக்குரின்களா "

" ஹஹஹா இல்லை ,,நீங்க எழுதுற கவிதைகளில் பெண் துணை தேடும்  அந்தத் தனிமை எப்பவும் ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டு இருக்குமே "

" ஏன்பா நான் தலையிடி இல்லாமல் நின்மதியா இருக்கிறது பிடிக்கவில்லையா உங்களுக்கு, 

" பிறகேன் கவிதை எழுதுறிங்க ,அதுவும் பதடிக் லோன்லினஷ் ஆக "

" கவிதைதான் இப்ப யாருமே எழுதலாமே அதால நானும்  சும்மா பொழுதுபோக எழுதுவேன்  "

"வேற உள் நோக்கம் ஒன்றும் அதில இல்லையா  "

"அதில வெளிப்படையாகவே ஒரு மண்ணும் இல்லை  "

" இல்லை, ஏன் அப்படி நினைக்குரிங்க, "

"வேற  எப்படி நினைக்கச் சொல்லுரிங்க  "

" என்னைப்போல நல்ல குடும்பப்பாங்கான லட்சணமான  தமிழ் பெண்களும் இருக்கிறார்கள் தானே "

" நல்ல பெண்கள் இருப்பார்கள் ,ஆனால் அவர்கள் எல்லாரும் அடக்க ஒடுக்கமா  இப்ப கலியாணம் கட்டி குடும்பமா எல்லா இருப்பார்கள் "

" ஏன் நானும்தான் இப்ப என்னோட மூன்றாவது புருசனையும் டைவேர்ஸ் செய்து போட்டு தனியாத் தானே இருக்கிறேன். ஏன் என்னக்கும் இன்னுமொரு  ஒரு சான்ஸ் வரலாம்  தானே "

" எங்களுக்கு பொருத்தம் இல்லைப்பா, கெருட புராணத்தில் மாங்கல்யம் பொருந்த ராசி,நட்சத்திரம் மட்டுமில்லை அங்கலட்சணமும் பொருந்த வேண்டும் என்று சொல்லுறார்கள் "

" அதென்ன பொருத்தம், கெமிஸ்ட்ரி வேர்க் அவுட் ஆக வேண்டும் என்டுவார்களே அதுவா.

ஓம்  ஓம்  அதுதான்

அதுக்குதான் என்னவாவது ஒரு அசிட் எடுத்து உடம்பில பூசினா கெமிஸ்ட்ரி ஓட்டோமாட்டிக்கா வேலை செய்யுமே "

" உண்மைதான்  எங்களுக்குள்ள ஜோடிப்  பொருத்தம் இல்லைப்பா சாத்திரத்தில் அது முக்கியம் பா "

" இதுக்கு என்ன அர்த்தம் ஓஓஓஓ  என்ன சொல்றிங்க Clear ஆகக் கதைங்க pls,, ஏன் நான் வடிவில்லையா "

" அதுவும் ஒரு முக்கிய பொருத்தம் , அப்படிதான் சொல்லுறார்கள் "

" Ok,   நீங்க நரிக்குறவர் போல கையைப்பிடிச்சு ரேகை பார்த்து அறுவத்தெட்டு  பொருத்த சாத்திரம் எல்லாம் பார்ப்பின்களா "

" இல்லை,அதெல்லாம் தெரியாது ,ஆனால் இராசிப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம் ,,நவாம்ச நிலைப் பொருத்தம் எல்லாம் கலியாணத்துக்கு முக்கியம் என்று சொல்லுவாங்க "

" என்ன இப்ப சொல்ல  வாரிங்க, டச்சுப் பொருத்தத்துக்கு ஹொலண்டுக்கு போகவேண்டுமா  "

" இல்லைப்பா, அந்த  டச்சு இல்லை , இது  ரச்சுப் பொருத்தம் ,உங்களுக்கு நான் சரி வரமாட்டேன் பா, நான் ஏற்கனவே ஒரு அரைப் பயித்தியம் பா  "

" உன்னால எனக்குதான்  முழுப் பைத்தியம் பிடிக்கப்போகுது "

" ஹஹஹா,,அப்ப இன்னும்  பிடிக்கவே தொடங்கவில்லையா "

" இப்ப அதுக்கு என்ன செய்வம், நல்ல  அல்டநேடிவ்  ஐடியா சொல்லன்   "

" நீங்களே சொல்லுங்க பார்ப்பம் பேசாம  சோமாலியாவுக்கு ஓடிப் போவமா "

" No problem உங்கள கட்டாயம் நான் சந்திக்கவேண்டும் எங்களுக்குள்ள உறவை ஏற்படுத்த விரும்புறிங்களா? Yes or no ரெண்டில் ஒரு முடிவு சொல்லுங்க "

" எனக்கு இப்ப எதுவுமே சொல்ல முடியவில்லை  , சரி ஒரு கேள்விக்கு கேட்கிறேன் என்னை சந்திச்சா என்ன செய்விங்க "

 " முதல்ல  ஓரு அறை தருவேன்  மடையா "

" என்னது  தங்க ஹோட்டலில் அறை எடுத்து தருவிங்களா ,,,சூப்பர் ஐடியா பா "

" முகத்தில் அறை தருவேன் என்று சொன்னேன் மோட்டுக் கழுதை , இதுக்குள்ள ஆசையைப் பார்,  pls விளையாடாதிங்க Serious கதைங்கபா "

" நீங்க வடிவா இருந்த நேரம்  ஏன்பா என்னை காணலை,,இப்ப எனக்கு நாய் குணம் வாற நாற்பத்தி அஞ்சு வயசு ஆகிவிட்டதே "

" அதுதான் வள் வள் என்று  என்னில பாயுரின்களா அதெல்லாம் ஆம்பிளைகளுகுதான், ஏன்  இப்ப நான் வடிவில்லையா என்னை பிடிக்கலயா "

" இல்லை நீங்க நல்லா வடிவாத்தான் இருகுரிங்க காஞ்சிபுரம் சீலையில சிறீதேவி  போலவும், பஞ்சாவி சுடிதாரில் நயன்தாரா போலவும், டைட் டெனிம் ஜீன்ஸில் அமலா போலவும் இருகுரின்களே "

" ஹஹஹஹஹா,, மவனே ஒழுங்கா உண்மையதான் சொல்லுறியா இல்லை,,ஐஸ் கட்டிய தலையில வைக்குரியா, "

" இல்லை,,உண்மையாதான் சொல்லுறேன் "

" இந்த உடுப்பு போட்டு ஒருபடமும் நான் உனக்கு அனுப்பவில்லையே, வெறும் ப்ரோபில் படத்தில உள்ள முகத்தை வைச்சு எப்படி சொல்லுறாய். "

" ஆமா,,அந்த முகத்தைத்தான் லோங் சொட்டில  இந்த உடுப்பு எல்லாம் போட்டு நினைச்சு பார்த்தேன் "

" அப்படியா, ஒரு காலத்தில் , யூனிவெர்சிட்டி காலத்தில் நண்பர்கள், நண்பிகள் , கேள்வி கேட்க யாருமில்லை, பதில் சொல்லவேண்டிய தேவை யாருக்குமில்லை   "

" அட அட அள்ளிக்கொட்டி இருகிறிங்க போல  இருக்கே "

"ஹ்ம்ம்,, இங்கிலாந்தின்  வசந்தகால வாழ்கைபோல இனி எங்க வரப்போகுது " "

"அப்படியா , போன பஸ்ஸில ஏற நினைப்பதில்தான் திறில்  இருக்குது "

" And both that morning equally lays ,In leaves no step had trodden black.Oh, I kept the first for another day! Yet knowing how way leads on to way,I doubted if I should ever come back....."


" இதென்ன புரியாத மொழியில என்னவோ சொல்லுரிங்க "


" டேய்,,மடையா,,இது இங்கிலிஸ் டா ,,நான் எப்பவும் நினைக்கும் கவிதை ,,யார் எழுதினது தெரியுமா "


" நீங்களா "


" அய்யோ,கடவுளே உன்னோட மண்டைக்குள்ள என்னடா அரைச்ச மிளகாய்த்தூளா அடைஞ்சு வைச்சு இருகிறாய் "

" அட,,எனக்கு தமிழே ஒழுங்கா தெரியாது "


" இது ராபர்ட்ஸ் பிரெட்ஸ் எழுதின கவிதை டா "

" அப்ப நல்லா வேண்டிய மாதிரிக் கூத்து அடிச்சுப் போட்டு இப்ப வந்து, அழுகுரின்களே ,கோவம் கோவமா வருகுது ,

" எதுக்கு  உனக்குக் கோபம் வருகுது ,சொல்லு "

" உங்க இளமைக் கொண்டாடத்தை  நினைச்சால் பொறாமையா இருக்கு  "

" ஓம் நல்ல fun life pa நிறைய boy friends எல்லோரும் சுத்தி சுத்தி வந்தாங்க ஓரே attention மகாராணி போல Free coffee ,free lunch ,

" ஒ ,,ஓசியில வாழ்கையை  வைச்சு  உல்லாசமா ஒட்டி இருகிறிங்க போல இருக்கே "

" ஹ்ம்ம்,  இரவுகளில் பார்ட்டி,,பிறகு ஒக்ஸ்போர்ட் சிட்டி முழுவதும் ஓசிக் காரில் சுற்றுவது "

" யப்பா சாமி என்ன கொடுமைடா இது,  ஒ வேற என்ன பிறியா கிடைச்சுது,  ,,,,,,,,,,,  அதுவுமா "

" அடி செருப்பால,  நான் நெருப்பு போல யாரும் தொட முடியாது என்னை , தொட்டவன் எரிவான்,

" தண்ணிய அள்ளி ஊத்திப் போட்டு   தொட்டு இருப்பாங்களே நம்ம ஆட்கள் "

" ஆனாலும்  நான் college க்கு வருவதப் பார்க்கவே ஓரு கூட்டம் wait பண்ணிக்கொண்டு வாசலில நிற்கும்,ஹ்ம்ம் முதுக்குக்கு பின்னால  Attention யாருக்குதான் பிடிக்காது "

" மகாராணி போல, என்டுரிங்க ,,,ஹஹஹஹ்ஹா,ஒரு வயசில பன்டிக் குட்டியும் அழகா இருக்கும்,  ஏன்பா உங்களைச் சுற்றின அவங்களுக்கு ஒழுங்கா கண்பார்வை இல்லையா "

" ஆமாட மடையா,,என்னோட ஸ்டைல் உனக்கு எங்க தெரியப் போகுது , ஹை ஹில்ஸ் போட்டு கொண்டு போற ஒரே பெண் நான் தான் அந்த பொலிடிகல் சயன்ஸ்  மாஸ்டர் டிகிரி பட்சில் "

" ஒ ஏன் நீங்க அவளவு கட்டையா "

 " அடப் பரதேசி.எது சொன்னாலும் எனக்கு எதிராகவே அதைத் திருப்பி கவுக்குறியே ,நானே அஞ்சடி ஒம்பது அங்குலம் உயரம் "

" அட ,,ஹேமா மாலினி போல  இருந்து இருப்பிங்க போல இருக்கே "

" ஹ்ம்ம், ஸ்கூல் நெட் போல் டீமில் ஸ்ட்ரைக் பண்ணுற லீடரா  இருந்து இருக்கிறேன், அதுவும் செட் அப் ரவுண்ட்ஸ் கேமில தெரியுமா ,சும்மா நெட்டுக்கு மேலால தலை நிக்கும்   "

" இல்லைப்பா,,உங்க உயரம் எனக்கு தெரியாது அதனால கேட்டேன், "

" கொண்டையை வகிடு பிரிச்சு உர்சுலா அண்ட்ரிஸ் போல உயர்த்திப் போடடுக் கொண்டு போனால் என்னோட கதைக்க அடிப்படுவான்க என் கண் பார்வைக்கு ஏங்கி இருப்பாங்க "

" உங்களோட கதைச்சா அவங்களுக்கு விசர் எல்லோ வரும், என்னப்பா சொல்லுரிங்க, சரி அது யார்  உர்சுலா அண்ட்ரிஸ் உங்க சொந்தக்கார அன்ரியா  "

" ஆனா நான் அவங்கள் ஓருவரையும் திரும்பி பார்க்க மாட்டேன், அடே லூசூ மடையா உர்சுலா அண்ட்ரிஸ் ஜேம்ஸ் பொன்ட் படதில  வாற கனவுக் கன்னியடா  "

" ஏன் ஓருவரையும் திரும்பி பார்க்க மாட்டிங்க ,உங்களுக்கு கழுத்து சுளுக்கா "

" போடா மடையா , Onky 5 11 inch hright இருந்தாதான் , அவங்களத் தான் பார்ப்பேன் , Very choose நான் .அது ஓரு வயசில அப்படி எடுப்பா இருந்தேன்  "

" ஒ நானும் அந்தக் காலத்தில் விக்ரமாதித்தன் போல அழகா இருந்தேன் பா "

" அது யார் விக்ரமாதித்தன் , நான் கேள்விப்பட்டதே இல்லையே, இப்ப படம் நடிக்குரானே விக்ரம் அவனை போலவா  "

" இல்லைப்பா , அந்த மன்னன் தான் முருங்கை மரத்தில ஏறி வேதாளத்தை இழுத்து தோளில போட்டு கொண்டு போக,வேதாளம் ஒரு கதை சொல்லி அந்தக் கதை முடிவில் ஒரு குழப்பக் கேள்வி கேட்கும் "

" அப்படியா,, நீயும் ஒரு வேதாளம் , எங்க சொல்லு பிறகு என்ன நடக்கும் "

" மன்னன் பதிலில் குழம்ப அந்த இடைவெளியில் வேதாளம் மறுபடியும் தப்பிப் போய் முருங்கை மரம் ஏறும், "

" அட, நல்லா  இருக்கே , பிறகு "

" முருங்கை மரத்தோடும் வேதாளத்தோடும் தான் விக்கிரமாதித்தன்  வாழ்க்கை சீரழியும் பா "

" ஒ இதுவா சங்க இலக்கியம் எண்டுறது , சங்க இலக்கியக் கதைலயா இது வருகுது  "

" கிழிஞ்சுது.... இது அம்புலிமாமா கதை, அதுதான் எனக்கு விளங்கும் ,விரும்பி படிப்பேன் "

" ஒ ,,அப்படியா,உன் அறிவுக்கு ஏற்றது தானே உன் மண்டைக்கு விளங்கும், சரி என்னோட மிச்சக் கதையைக் கேளேன் "

" சரி சொல்லுங்கோ, கதை  முடிவில வேதாளம் போலக் கேள்வி ஒண்டும் கேட்க மாட்டிங்க தானே  "

" ஹஹஹா , அந்த நேரம்  லெக்சர் ஹோலுக்கு  நடந்து போக்கேயே என்னை பார்த்து ஜொள்ளு விட்டு லைட்  post ல் அடிபாடுவாங்கள் போய்ஸ் எல்லாம் தெரியுமா  "

" ஏன்பா அவளவு வெறியா அவங்களுக்கு "

" இல்ல என் கண் பார்த்து மயங்கி எங்க நடக்கிறது என்று தெரியாம லைட் போஸ்ட்டில மோதுவாங்க ,ஆனால்  இப்பவும்  நீங்க பார்க்க ராஐகுமாரன் போலதான் இருகுரிங்க, ஆனால் ஒரு லூசூ போல கதைகுரின்களே,அதுதான் பயமா இருக்கு "

" ஏன்பா கண் பார்த்து மயங்கி எங்க நடக்கிறது என்று தெரியாம லைட் போஸ்ட்டில மோத அவங்கள் இதுக்கு முதல் பொம்பிளையையே பார்க்கலையா "

" ஹ ஹ ஹ அதுதான் எனக்கும் புரியலைப்பா, நீயும் தான் அந்த வயசில் நல்லா  லுக்கு விட்டு இருப்பாய் ஆம்பிளைகளுக்கு புத்தி அப்படிதான் குறுக்க போகும்  "

" என்ன புரியலை,, நீங்க  மேக்கப் போடாமல் போயிருந்தா இவளவு அவலம் அவங்களுக்கு நடந்து இருக்குமா,"

" டேய் வாயை மூடடா , வந்து நேர்ல என்னட்டை மாட்டினால் வாயில போடுவேன் , இப்ப என்ன செய்துகொண்டு இருக்குறாய், ஏன் ரிப்ளே லேட் ஆக வருகுது வேற பெண்டுகளோட குஜாலா போடுறியா  எருமை மாடு ."

" ஹ்ம்ம்,,சும்மா  கொட்டாவி விட்டுக்கொண்டு  இருக்கிறேன் "

" அட,,அட  இதை நான்  நம்பவா,,சரி  நீ  ஏன் இப்ப  கதை எழுதுறதில்லை "

" எழுதுவேனே "

" இப்ப என்ன எழுதிக்கொண்டு இருகிறாய் "

" மூன்று  கணவன்மார்கள்.."

" என்னது ,,"

" ஆமாப்பா,,மூன்று  கணவன்மார்கள்..என்று ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன் "

" ஒ,,ஆனால் இந்த தலைப்பே தண்ணி தெளிக்குதே,,தமிழ் கலாசாரத்தில் இப்படி  இல்லையே " 

" யார் சொன்னது ,கதை தானே "

" கதைதான்,,எனக்கு விளங்குது ஆனால் ,,எதிர்ப்பு கிளம்புமே ,,இப்படி  எழுதினால்,,அதென்ன சொல்லுவாங்க தமிழ் கலாச்சாரதில் , இப்படி இல்லையே பா , அதென்ன  குடும்ப விளக்குமாறுகள்   ,,அதுதானே,,அவங்கதானே   பொது அடையாளம் "

" அது  குடும்பக் குத்துவிளக்குகள்  பா "

" ஒ,,அப்படியா,,என்னவோ  எழுது,,ஆனால்  கற்பனை என்று போடாதை "

" இல்லைப்பா இப்படி  எல்லாம் எழுதினால் கட்டாயம் யாவும் கற்பனை என்று போடவேண்டும் ,,இல்லாட்டி பிரசினை வரும் "

" ஹஹஹஹா ,,அய்யோ,,அய்யோ,,கோதண்ட ராமா "

" எதுக்கு இப்ப சிரிச்சிங்க "

" டேய், ஏமாந்த சோணகிரி ,,உனக்கு ஒன்று தெரியுமா,,,கற்பனைக் கதைகளில் வாற கற்பனையை விட  நிஜ வாழ்கையில் கேவலம்கெட்ட அசிங்கமான ஆண்கள் நிறையப்பேர் வெள்ளையும் சொள்ளையுமா உலாவுறாங்க "

" ஹ்ம்ம்  அது  உண்மைதான் "

" ஒரு கதையில ஒரு பெண் ஐந்து சகோதர்களை கலியாணம் கட்டி வாழுவாவே ,,அதென்ன கதை ,,சின்ன வயசில படிச்ச கதை "

" அது கதை அல்ல,,காப்பியம் ,,மஹாபாரதம் ,,திரவ்பதி பஞ்ச பாண்டவ சகோதர்களைக் கலியாணம் கட்டுறா "

" ஓம்.ஓம் அதுதான் அதுவும் கதை தானே ,,பிறகென்னத்துக்கு சும்மா நடிக்கினம் "

" ஹ்ம்ம்,,,அதை வேதவியாசர் என்ற முனிவர் எழுதினார்,,,இதை நான் எழுதுறேன் ,,அதுதான்  பயமா இருக்கு "

" பயப்பிடாதை,,நீ எழுதடா,,நான் சப்போட் தாரேன், சரி இப்ப என்ன செய்யுறாய்  "

" ஒரு கையால எழுதிக் கொழுவிக் கொண்டு , மற்றக் கையால சைனிஸ் டிராகன் நூடில்ஸ் முள்ளுக் கரண்டியில் கொழுவி  சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்  "

" அடப்பாவி, அதெப்படி சாப்பிடுக்கொண்டு என்னோட சட் பன்னுறாய் , மவனே நீ கட்டாயம் வேற பெண்டுகளோடு சொட்டு நீலம் போடுறாய் போல இருக்கு , எனக்கு பதில் போடடா , டேய் ஒரு நேரத்தில் ஒன்றையாவது ஒழுங்கா செய்யடா "

" ஹஹஹஹா , ஓகே ,,எனக்கு இப்ப சாப்பாடுதான் முக்கியமா இருக்கு,,இன்னொருநாள் கதைகுறேன்,

" சரி கதை "

" நீங்க ஏன் உங்க மூன்று முன்னாள் கணவன்மார்களையும் டைவேர்ஸ் செய்திங்க என்று, சொல்ல விரும்பினால்  சொல்ல முடியுமா  "

" ஹஹஹஹஹா,,"

" இதுக்கும் சிரிப்பா "

" ஒரு பெண்ணை  பெண்ணாக நடத்தத் தெரியாத , அந்த  ஒண்டுக்கும் உதவாத படிச்சுக் கிழிச்ச கனவன்களைப்  பற்றிக் கதைப்பதே டைம் வேஸ்ட், "

 " அப்படியா, மூன்றுபேரும் நல்லாப் படித்தவர்களா  "

"ஹ்ம்ம்,மூன்று பேரும் அக்கடமிக் லெவலில் படிச்ச ஆட்கள், அதோட  நல்ல ஹான்ட்சம் , அதிலயும்  முதல் ஹஸ்பன்ட்  ஜாக்கி ஷரிப் போல  "

"அது யாரு ,,ஜக்கி வாசுதேவ் என்கிறாங்க  அந்த சாமியார் போலவா  " 

"அறைஞ்சன் எண்டா காதில, ஜாக்கி ஷரிப் ஹிந்தி நடிகர் டா ,, " 

" ஓ,,,அப்ப கட்டாயம்  ,,பெண்கள் பின்னால சுத்தி இருப்பார்களே " 

" ஹ்ம்ம்,,,அதுதான் நடந்தது , நான் அதில  இருந்து உஷார்  ஆகி இருக்க வேணும் ,,,சரி விடு  ,,வேற  கதை  சொல்லு "

" உங்க அளவுக்கு என்னிடம் சுவாரசியமா ஒன்றும்  இல்லையே  "

" சரி ,,வேற ஏதும் சுவாரசியமா பிறகு இன்னொருநாள் கதைப்பம் ஓகேயா வாலில்லாத குரங்கு "

" ஓகே Bye,ஆனால்  உங்க  கணவர்மார்  கதை  சொல்லுவிங்கதானே  "

" ஓகே,சொல்லுறேன் , கழுதைப் பிடிச்சு நெரிகாதை. ஓகே தானே , Bye Bye "

.....தொடரும் ....
.    


.