யாழ்பாணத்தில " பஸ் ஸ்டாண்டில " 80களில் " நியூ விக்டேர்ஸ் " என்று ஒரு " மூயுசிக் ரோகொரடிங் பார் " இருந்தது, அதன் வெளியே பல இங்கிலிஸ் பாலடகள் பதிந்து வந்த, தோசைக்கல்லு சைசில இருந்த பிளாஸ்டிக் தட்டில பல இசைதட்டுகளை வெளியே எல்லாருக்கும் தெரியிற மாதிரி வைத்திருந்தார்கள் !
அதில ஒரு LP அல்பத்தின் கவரை " ஷோ கேசில் " வைத்திருக்க ,அதில இரண்டு வெள்ளைகார ஆண்களும்,இரண்டு வெள்ளைகார பெண்களும் அருகருகே ஒட்டிக்கொண்டு , கைகளைக் கட்டிக்கொண்டு நிண்டு, சிரித்துக்கொண்டு, ஒரு "ஒளி வெள்ளம் பாயும் " வட்டத்தில் நின்று போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
அந்த இரு ஆண்களும் ஸ்டார் வார் படத்தில வார "வேற்றுகிரக வாசிகள் " போல இறுக்கமாக உடை அணிந்துகொண்டு இருக்க, அந்த இரு பெண்களும் அதைவிட இறுக்கமாக உடைஅணிந்து, மார்புப் பகுதிய வஞ்சகம் இல்லாமல் தாராளமாக காட்டிக்கொண்டு இருக்க, அந்த இரு பெண்களும் அணிந்திருந்த குட்டைப் பாவாடை அவர்கள் குனிந்தால் எல்லாம் தெரியும்போல இருக்க, சொக்கநாதரே சொக்கிப்பிவிடுவார்போல இருக்க , அவர்களை சும்மா விரலால சுண்டினாலே சரி கம ப த நி ச நாதம் பேசும்போல அவர்களின் உடலமைப்பு வில்லா வளைஞ்சு நிக்க , இசை மீது இருந்த தீராத தாகத்தால் , அவர்களே பாடினால் எப்படி இருக்கும் என்பதை அறிய அந்த" ரோகொரடிங் பார் " இக்குள்ள துணிந்து போய் ,
"இந்த அல்பத்தின் கவரில் இருபவர்கள் யார்? "
எண்டு அங்கே தலையில "ஹெட் போனை" கொழுவி வேலை செய்தவரிடம் கேட்டேன் " அவர் இவர்கள்தான் உலகப் புகழ் பெற்ற ABBA என்ற இசைக் கோஸ்டி " என்றார். அவரிடம்
" இசை என்றால் எனக்கு உசிர், இந்த அல்பத்தை கொஞ்சம் கிட்டத்தில பார்க்க தரமுடியுமா?"
என்றேன், அவர் எடுத்து தந்தார்,தெரிந்த தற்குறி இங்கிலீசை வைச்சு நோண்ட அதில் அவர்கள் ஸ்வீடன் என்ற நாடில இருக்குறார்கள் எண்டு எழுதிக்கிடந்தது
," ஸ்வீடன் என்ற நாடு எங்க இருக்குது ?"
என்று அவரிடம் அவரிடம் கேட்டேன் , அவர் "ஹெட் போனை" கழட்டி,தலையை சொரறிஞ்சு போட்டு,
" ஆபிரிகாவில இருக்குது , அதுக்கு முதல் உமக்கு இப்ப என்ன வேணும்?"
எண்டு கோபமாகாக் கேட்டார் , நான் கோவிக்கவில்லை , நானே பிட்காலதில ஒரு புகழ் பெற்ற கிடாரிச்ச்டா வருவேன் எண்டு எனக்கே அப்போது தெரியாது , பிறகு அவர்க்கு எப்படி என்னோட அருமை தெரியப்போகுது எண்டு போட்டு !
" இவர்களின் பாடல்கள் கேசட் வடிவில் உள்ளதா?" எண்டு கேட்டேன் ?
அவர் ,அதுக்கு
" இல்லை , LP வடிவிலதான் உள்ளது"
என்றார் , இதுக்குமேல கேட்டால் மூன்சியில அறை விழும் என்பதுபோல என்னை சுவாரசியம் இல்லாமல் பார்க்க , நான் படு சுவாரசியமகா அந்த இரு பெண்களையும் பார்த்துகொண்டு, இனி அவரிடம் என்னத்தை கேட்கிறது எண்டுபோட்டு,
"இதை கேசட்டில ரெகார்ட் பண்ணி தருவீர்களா ?" என்றேன், அவர்
" பேந்தும்பார் , இந்தப் பெடி முசுப்பாத்திவிடுறதை , ரேகொர்ட் பண்ணதானே ரேகொர்டிங் பார் வசிருக்கிரம்,வேற என்னதுக்கு தலைமயிர் வெட்டுரதுக்கே இதை வசிருக்கிரம் "
என்றார், அவரை பார்த்து நட்பாக சிரிச்சுப்போட்டு , அந்த அல்பத்தை கடைசியா கொஞ்சம் முகத்துக்கு கிட்ட வைச்சுப் பார்த்தன்.
இனி பொய் சொல்லி என்ன வரப்போகுது ,எல்லாத்தையும் இழுத்து மூடிக்கொண்டு இருக்கிற யாழ்ப்பாணக் கலாசார சூழலில் இருந்ததால் , கிட்டத்தில பார்க்க அந்த இரு பெண்களும் சொக்க தங்கம் போல இருக்க, அவர்களின்கண்களில் ஒருவித வசியம் இருந்தது, அப்பவே மனதளவில் சபதம் எடுத்தேன்,
வளர்ந்து கலியாணம் கட்டினால் ,இப்படி ஒரு வெள்ளைக் கார பஞ்சகல்யானியதான் கட்டவேண்டும் எண்டு, சொல்லி வைச்ச மாதிரி விதி ஆரைத்தான் விட்டு வைக்குது, நாசாமாப் போன அந்த சபதம் என்னோட வாழ்கையில் நடந்தது,அதுவும் ஸ்வீடனில் நடந்தது!... அந்த கதை பிறகு சொல்லுறன்!
அவர் அப்படி ரேகொட் பண்ணிதந்த அந்த கேசட்டை வீட்டில இருந்த ஒரு லொட்டு லொடக்கு "டேப் ரெகார்டரில் " போட்டுக் அடிக்கடி கேட்பேன், என்னோட அம்மாவே வியந்து பார்த்து ," இங்கபாரடா இவனை, இங்கிலிஸ் பாடத்துக்கு 26 மார்க்ஸ் இக்கு மேல ஒருநாளும் போகாத இவன், இங்கிலீசு பாட்டுக் கேட்கிறதை" எண்டு கிண்டல் அடிச்சா !
அவர்கள் பாடிய அந்த ஆங்கிலப் பாடல்களின் கருத்து விளங்கவில்லை,, ஆனால் அவர்கக்ளின் அந்த இசை அந்த இரு பெண்களைப் போலக் கவர்சியாதான் இருந்தது !அதில இருந்த "DANCING QUEEN" பாடல் , அது தான் ABBA இன் முதல் பாடலாம் , இதை அவர்கள் ஐரோப்பா அளவில் நடக்கும் EURO SONG பாட்டுப்போடியில் பாட, அது முதலாவதா வர, இதுதான் அவர்களை உலகம் அறியச் செய்தது,
உலகை கலக்கிய ABBAஇன் பாடல்கள் டெக்னிகலா MUSICALLY GENIOUS வகையில் இல்லை,வெறும் POWER CHORDS ஐ வைத்து "மைல்ட் பொப் " மெலடிகள்,அவர்களின் பெரும்பாலனா "Lyrics "பாடல்வரிகளும் " உன்னை நினைத்தன்,காதல் வந்தது,கவிதை எழுதினன்,அதை பாட்டப்படிச்சன்" டைபில வெறும் மேம்போகானவை,ஆனால் அவர்களின் இசை அந்த வரிகளுக்கு உலகளவு உயிர் கொடுத்தது உண்மை!
ABBA வின், நான் ஜொள்ளுவிட்ட அந்த இரு பெண்களும், இரு ஆண்களும் ," Take A Chance On Me " எண்டு மனம் விரும்பி , அவர்களுக்குள்ளையே " Gimme! Gimme! Gimme! " என்று பாடி, "DANCING QUEEN " என்று ஆடி ," Honey Honey" என்று கட்டிப் பிடிசுக் காதலர்கள் போல வாழ்ந்து , " I Do, I Do, I Do, I Do, I Do " எண்டு அடுத்தடுத்துப் பிள்ளைகள் பெற்று , கொஞ்சம் அலுத்துப் போக " Knowing Me Knowing You " என்று சொலிப் பின்னர் பிரிந்தார்கள்,
பிரிந்து அந்த காதலையும், காதலின் பிரிவையும் " " The Winner Takes It All " என்று உருக்கமாக , ஆளை ஆள் மாறி மாறிப் பளியப்போட்டு ,ஆற்றாமையில் " The Day Before You Came " எண்டு பாடலாக பாடினார்கள்! அப்படி வேற எந்த ஒரு இசைக்குழுவும் செய்யவில்லை!
அவர்களின் பாடல்களே அவர்களின் வாழ்க்கை,,,சில பாடல்கள் கேட்கும்போது மனஅழுத்தம் எங்களுக்கே வரும் , அந்த ஜோடிகளில் பெனிஅன்டர்சன்..அவர் காதலி பிரிடாவை ஏமாற்றினார்,,,பிஜோர்ன் ,அவர் காதலி ,அக்னிதாவை ஏமாற்றினார்.. தனிபட்ட மன உடைவு இந்த இசைக்குழுவை உடைத்துவிட்டது ,,என்னதான் அந்த ரெண்டு ஆண்களான பென்னி அண்டர்சனும், பியோர்ன் உள்ளுவாலும் பின்னாட்களில் தனி அல்பங்களில் இசை அமைத்தாலும், ABBA வின் இளமை உயிர் அதில இருக்கவில்லை இல்லை .
மிகவும் அடக்கமான , பப்ளிசிட்டி விரும்பாத " I Have A Dream " எண்டு தன்கள் இசை வாழ்வை அடக்கமாகத் தொடங்கிய அவர்கள் ,அவர்களின் இசைவாழ்வு முடிந்தபின், "thanks you for the music" எண்டு பாடிப்போட்டு, பொது மேடைகளில தோன்றுவதை பெரும்பாலும் தவித்தார்கள் ! இன்றைவரை ஸ்வீடன் எண்ட நாட்டை உலகஅளவில் பெரபலம் ஆக்கிய பெருமை எனக்கும் ...கொஞ்சம் ABBA என்ற இசை குழுவுக்கு இருக்கிறது!
.