Sunday 1 March 2015

வார்த்தைகள் தேடிய சருகுகள்...

தொடங்க வேண்டிய
சரியான
தருணத்திற்கு
எல்லாமே
காத்துக்
கொண்டிருக்கிறது
மரணித்த மரத்தின்
அருகிலே
அழுதுகொண்டிருக்காமல்
அடுத்தகட்ட நகர்வில்
இயற்கையின்
விதி
இயல்பாகி

வரவைச்
சொல்லமுடியாமல்
தவித்துக்
கொண்டிருந்த
உயிர்ப்பு
துணிந்து
வறட்சியை விட்டு
வெளியே வருகிறது ..
மவுனத்தை
இனியும் தாங்க
முடியாமல்
வசந்தகால
வார்த்தைகள் தேடிய
சருகுகள்
பேசத் தொடங்குகின்றன...
சமாளிக்க
சாதகமான
காற்று வீசும்
நேரத்திற்க்காக காத்திருந்து
சிறகை விரிக்கிறது
குருத்து ....
விழுந்த
மழைத்துளியை
முத்தாக மாற்ற
இறுக்கி மூடிக்கொள்கிறது
மண்
எல்லா எல்லைகளையும்
எல்லா தடைகளையும்
தாண்டி
வேர்களையும்
ஒளியையும்
நம்பி
நேரம் நெருங்க
அதன்
ஜெனன ஜாதகத்தை
எழுத
துளிர் விடுகிறது
விதை..


8 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அமைதியாய் இருக்கும் பொழுதே தெரிந்தது ஆக்கங்கள் உருவாகின்றன என்று !
    தொடங்க வேண்டிய
    சரியான
    தருணத்திற்கு
    எல்லாமே
    காத்துக்
    கொண்டிருக்கிறது

    ReplyDelete
  3. தொடக்கத்துக்கு யாவுமே தாயாராகிக் கொண்டுதான் இருக்கின்றன இங்கே.. அழகான ஆழமான வரிகள் ..
    வறட்சி : மரத்தின் அழிவு : புதைந்து கிடக்கும் விதை : சருகுகளின் சலசலப்பில் வசந்தகாலம் : மழைத்துளி :விதையின் மீட்சி ... காலத்தையும், மனித வாழ்வையும் ஒப்புவமைப் படுத்திய விதம் மனம் தொட்டது.
    வார்த்தைகளின் கோர்ப்பில் மூன்றாவதாய் இன்னொரு செய்தியும் சொல்லுது... அப்பப்பா முப்பரிமாண வித்தை.
    வாழ்த்துக்கள் அரசே..

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இந்த கவிவரிகள் என்னால் மறக்க முடியாத அளவுக்கு என்னில் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தியவை ... இடைக்கிடை தேடி திரும்பதிரும்ப வாசித்துப்பார்ப்பேன்..
    அரசனின் தனித்துவம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete