Sunday 1 March 2015

என்னைப்பற்றி ...

கடந்துபோன
கசப்புக்களை
நான்
கோபிப்பதில்லை
இப்பவும்
நல்ல மனிதர்களை
நேசிக்கவும்
தவறுவதில்லை...

இருட்டுப்போல
இறுக்கமான
மன நிலையில்
காற்று வந்து
காது மடல்களை
வருடிச் செல்ல

அமர்க்களமான 

மனிதர்களின் 
ஆரவாரமான
நகரத்தின்
அமைதியான
தெருக்களின்
வழியாக
அலைந்து திரிந்து

இதயத்தில்
ஆரம்பித்து
இன்று
புதிதாய் பிறந்தேன்
என்று
நம்பிக்கையைக்
கைப் பிடித்து
நாளைய
பொழுதுக்கு மட்டும்
நடை
பழகிக்கொண்டிருக்கிறேன்..

6 comments :

  1. அருமையான படைப்பு - இன்று புத்துயிர் பெற்று புது நடை பழகும் இந்தக் குழந்தை மென்மேலும் வளர்ந்து புகழாரம் சூட்ட என் மானசீக இதய பூர்வ ஆசிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் ! "மின் எறிஞ்சான் வெளி " என்பதும் ஒரு தனித்துவமான யாழ் மண்ணிற்குரிய வாசத்துடன் கூடிய கற்பனை - வாழ்க என்றும் உயர்ந்து ..... அன்புடன் காரைக்கால்

    ReplyDelete
  2. "மின் எறிஞ்சான் வெளி யாழ்பாணத்தில் எங்களின் காணியின் பெயர் பா

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. சிறப்பு நாவுக்கு அரசா!
    எதிர்கால நம்பிக்கையை விரிக்கும் தங்களது வார்த்தைகளும் அதை வடிக்கும் மனமும் இணைந்திருப்பது இதமாக இருக்கிறது.
    தொடருங்கள்...!!
    தேடி வாசிக்கும் வாசகன்
    முகிலன்

    ReplyDelete
  5. நம்பிக்கை வரிகள் ... மிகமிக நல்லாயிருக்கு

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete