Friday, 1 January 2016

கதையல்ல நிஜம்

யாழ்பாணத்தில எங்கட வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி வீராளி அம்மன் கோவில் ரோடில ,ஒரு பாரதநாட்டிய டீச்சர் மாடி வீட்டில இருந்தா, அந்த டீச்சர் பார்ப்பதுக்கு நாட்டியப் பேரொளி போல மின்னிக்கொண்டு, அவா சும்மா நடக்கும் போதே  நிருத்தம் நிருத்தியம நாட்டியம் மூன்றும் கால்கள் எடுத்து வைக்கும் அடிக்களில் தாளம் போட , தில்லானாவிற்கு அழகு சேர்க்கும் நீண்ட கூந்தலை அலைபாய விட்டு  சிலப்பதிகார மாதவிபோல  தக தக என்று தக்காளி போல இருந்ததால் எப்போதும்  அவா உதவி கேட்கும்  நேரம் நான்  எடுபிடி உதவிகள் மறுப்பு சொல்ல மனம் வராமல், பரதநாட்டியம் மீது உள்ள அபிமானத்தால் செய்வேன்  என்று சொன்னால் நீங்க " அடி செருப்பால " என்று உடனேயே சொல்லுவிங்க, ஆனால் நான் சொல்லுறதுதான் வீராளி அம்மன் மேல சத்தியமா உண்மை . 

                     என்னோட பள்ளியில் சக வகுப்பில் படித்த , பல விதத்திலும் என் " ரோட் சைட் ரோமியோ " நாடகத்தில் என்னோடு தோளோடு தோள் நின்ற நெருங்கிய  நண்பன் ஒருவன் அந்த வீட்டின் மேல் மாடியில் மாச வாடைக்கு இருந்தான் . அடிக்கடி அவனைப் பார்க்கப் போகும் போதெல்லாம் அழகான இளம்பெண்கள் அந்த டீச்சர் தட்டுக் கழி  மன்னை  என்ற பலகையில் கட்டையால தட்டிக்கொண்டு 

              "  நவரச நாயகி சிவனை மணந்த கதை ,புது ரசமாணதடி  கிளியே ..." 

                                             எண்டு பாட அந்தப் பெண்கள், "தா,  தீ,  தொம் , நம், தரிகிட , திரிகிட" எண்டு ஆட, மேல்வீடு அதிரும். எங்களுக்கு அந்தப் பெண்கள் ஆடுவதைப் பார்க்க விஷுவல் சந்தர்ப்பம் இல்லாததால்,கட்டை தட்டும் சத்தம் கும்மி ,கோலாட்டம்,வசந்தன் பள்ளு நாட்டுப்புற நடனம்  போல தான் அவற்றின் தாள கதி சத்தம் கேட்கும் 

                                      நானும், அவனும் போகும்போதும், வரும்போதும் கடைக்கண்ணால அந்த பெண்களைப் பார்பம் ,டீச்சர்ரும் போகும்போதும், வரும்போதும் கடைக்கண்ணால எங்களைப் பார்ப்பா. டீச்சர் தரையிலதட்டி தாளம்போடுற கட்டையால முதுகில" பளார்" எண்டு போடுவாவோ என்ற பயத்தில நேரடியாகப் பார்க்கப் பயம்,ஆனாலும் அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும்  அலாரிப்பு , ஜதிசுரம், சப்தம், வர்ணம், பதம் ,தில்லானா ,விருத்தம் ,மங்களம் போன்றவற்றுக்கு உதாரண  வரைவிலக்கணம் போல ஜொலிக்க  அந்த  இளம் பிள்ளைகளின் இடுப்பு " எப்படா ஒடிஞ்சி விழுமோம்னு " கெஞ்சுவது போல மெலிந்து இருக்க, அந்தப் பெண்களும் ஏதோ தேவலோகத்தில இந்திரனோட ஆடிக் களைச்சு  மந்திர உலகத்தில் இருந்து குதிச்சு வந்த இந்திரலோகத்து சுந்தரிகள்  மாதிரிதான் நிலத்தில கால்படாமல் நடந்து போவார்கள்...

                                 யாழ்பாணத்தில ஓரளவு வசதியானவர்களின் பெண்பிள்ளைகள்தான் பரதநாடியம் பயில்வார்கள், பயின்று ,மண்டபம் எடுத்து சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் மாதவி அரங்கேறிய மாதிரி ஊருக்கே வெத் திலை  பாக்கு வைச்சு அழைப்பிதழ் கொடுத்து அரங்கேற்றம் செய்வார்கள், அதோட அவர்களின் கலைப்பயணம் முடியும்  . அப்புறம்

                          ‘ அங்கச்  சடச்சி  அக்கா வீட்டுக்குப் போனாளாம்,  அக்கா தூக்கி மச்சான் கிட்டப் போட்டாளாம் ’  

                                      கதை போல அந்தப் பிள்ளைகளை, சங்கீத அறிவே இலாத ஒரு ஞானசூனியதுக்குக் கட்டிவைக்க, அவனும் வந்த முதல் வேலையா  " அவுக்கு அவுக்கு "  எண்டு அஞ்சாறு பிள்ளைப் பாக்கியம் கொடுக்க, அந்த நாட்டிய தாரகைகள், சில வருடங்களில் நாட்டிய நர்த்தகி நளினத்தில் இருந்து இறங்கி வந்து , உடம்பு பெருத்து  பொம்முக் குட்டி அம்மா போல இருப்பார்கள். சிலர் கெட்டித்தனமா நடன ஆசிரியைகள் ஆகி அன்றாட குடும்ப சுமையோடு அதை மற்றவர்களுக்கும்  தொழில் ரீதியாகவும்  சொல்லிக்கொடுப்பார்கள்.

                         பரத நாட்டியம் ஆன்மீக பக்தி உணர்வுள்ள நடனம், மேடையில் ஆடுவதை ரசிகர்கள் பார்க்கும் நடனம். ஆனால் எல்லா வெஸ்டர்ன் டான்சும் மனதுக்கு உற்சாகம் தரும் சோசியல்  நடனம், எல்லா வெஸ்டர்ன் நடனமும் ஜோடி சேர்ந்து ஆடுவதுக்கு வடிவமைக்கப்பட்டது,பரதம் அப்படி இல்லை .ஆனால் இரண்டிலும் ஆபாசம் இருக்கு என்றால்  அது பார்பவரின் மன ஒழுக்கத்தைப் பொருத்தது. ரெண்டிலும் ஆபாசம் இல்லை என்றால்  அதுவும் பார்பவரின் மன ஒழுக்கத்தைப் பொருத்தது..

                      பரதமும், கர்நாடக சங்கீதமும் உயர் குடி இன் அடையாளமா,மிகவும் சாஸ்திரிய வித்தக நுட்பங்களுடன் இருந்தது,,அது இரண்டையும் கீழ இறக்கி எல்லா மக்களும் ரசிக்க வைத்தவர்கள் பரதத்தை பொறுத்தவரை தேவ அடியார்களும், கர்நாடக சங்கீதத்தை பொறுத்தவரை நாதஸ்வரக் கலைஞ்சர்களும் என்பது என் அவதானிப்பு.மற்றப்படி அந்த நடனத்தில் காமம் இருக்கு ,இல்லை என்பது " கல்லு உரலுக்கு மேல கொடியில காஞ்சு கொண்டு இருந்த சேலை தவறிவிழ அந்த கல்லு உரலை ஒருவன் இரவு இரவா ஒருதருக்கும் தெரியாமல் சுமந்துகொண்டு போனானாம் பொம்பிளை எண்டு நினைச்சு " என்ற கதை போல...

                பரதநாட்டியம் அளவுக்கு டான்ஸ் டெக்னிக் உள்ள நடனம் உலகத்தில் வேற இல்லை, காரணம் அவளவு சாஸ்திரிய நுட்பம் அந்த கிளாசிகல் நடனத்தில் இருக்கு. அதை நாட்டுக் கூத்து ரேஞ்சுக்கு எளிமைபடுத்த முடியாது அப்படி இல்லை என்று அதை எல்லாருக்கும் விளங்கிற மாதிரி எளிமைப்படுத்தினால் அதன் " ம்யுசிகல் ரோயல்னஸ் "  என்ற மேன்மைநிலை இல்லாமல் போயிடும்.பரதம் போல வேறு வெஸ்டர்ன் டான்ஸ் இல்லை.  உங்களுக்கு தெரியுமா கர்நாடக சந்கீததில் 35 தாளம் இருக்கு ,வெஸ்டர்ன் டான்சில், அல்லது லத்தின் அமரிக்க டான்சில் ,அந்தளவு  பீட் என்ற டெம்போ தாளம் இல்லை. வேற எந்த டான்சிலுமே அந்தளவு இல்லை ...

                      பரதநாட்டியதை எல்லாரும் உள்வாங்கி முழுமையா ரசிக்க முடியாது ,இதுதான் பரதநாட்டியம் நிறையப்பேரை சென்ற அடையவும் தடையா இருக்கு ,அதன் கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் போன்ற   விடயம் விளங்கினால் தான் சரியா அதன் இம்பிரசன் கிடைக்கும். இப்பெல்லாம் சும்மா தங்கள் காசின் பவர் காட்ட புலம்பெயர் தமிழர் நடன அரங்கேற்றம் செய்வார்கள். அவர்களின் மாமன்,மச்சான்,சித்தப்பன்,பெரியப்பன், போன்ற உறவினர் போய் இருந்து சுரக் கோர்வைகளும் ஜதிக்கோர்வைகளும் இருக்கும் ஜதிசுரம் என்றா என்ன என்றே விளங்காமல்  தலை ஆட்டுவார்கள். அவர்களில் எத்தின பேருக்கு அடவு, குத்தடவு, முத்திரைகளின் அர்த்தம் தெரியும், சும்மா டி ராஜேந்தர் பட சினிமாவில் பரதநாட்டிய சீன் பார்க்கிற மாதிரி பார்க்கவேண்டியதுதான்..

                      எங்கள் ஊர் வீராளிஅம்மன் கோவில் திருவிழாவில, அம்மனை வெளிவீதிக்கு உலாக் கொண்டு வரும்போது, ஒரு நடுத்தர வயதுள்ள அழகான பெண் , அம்மன் ஊர்வலதிட்கு முன்னால் தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர்,  நாட்டியம் ஆடிக்கொண்டு வருவா, என்னோட அம்மாவிடம்

                     "  ஏன் அம்மா அந்த  அன்ரி , பக்கவாத்தியம் , தடல் புடலான ஆடை அலங்காரம் இல்லாமல் சிம்பிளா அப்படி ஆடுற ?" எண்டு கேட்டதுக்கு,

                      " தெருவில ஆடுறவள் தேவடியாள், என்ன நீயும்போய் அவளோட சேர்ந்து ஆடப்போறியா "

                 எண்டு கோபமாகக் கேட்டா. இதுக்கு மேல விளக்கம் கேட்டா என்னோட அம்மா என்னை அனுமன் ஆட்டம் போட வைப்பா என்ற பயத்தில கேட்கவில்லை.

                       பரதம் பார்க்கும் பொழுது பாலியல் உணர்வு வருவதும் ,வராததும் அதைப் பார்பவர்களின் கண்களிலும்,மனதிலும் இருக்கு. என்னைப்பொருத்தவரை பரதத்தில் கஜுரோகோ சிற்பங்ககளில்,காம சூத்திராவில்,ராமாயணம்,மகாபாரதம் இல் உள்ள அளவு விரசம் இல்லை, ஆனால் அதை கவர்சியா ஆடினால் அது கவர்சியாதான் இருக்கும். சம்பிரதாயமான சாஸ்திரிய மேடைகளில் ஆடும் பரதத்தில் கவர்சி இல்லை, ஆனால் சினிமாவில் ஆடும் நடனத்தில் அது இருக்கு . முதல் சினிமாவில் ஆடுவது பரதமா என்பது வேறு ஒரு குழப்பம்.

                              நான் கொஞ்சம் தங்கோ,சலசா, பிளமிங்கோ  என்ற லத்தின் அமரிக்க டான்ஸ் பழகி இருக்கிறேன், சுவிடனில் அதை சொல்லித்தந்த  அழகான இளம் ஆசிரியை இடுப்பைக் கட்டிப்பிடிச்சு அதை சொல்லி தந்தாள்,நானும் அவள் இடுப்பை கலை ஆர்வமாக  இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு  அதைப்  பழகினேன். அந்த டீச்சரும் சொன்னா  பரதநாட்டியம் போல கடினமான சங்கதிகள் உள்ள டான்ஸ் உலகத்தில இல்லை என்று. நானும் எல்லாரும் போல " கெட்ட கழுதை ஆத்துக்குப் போச்சாம், அங்க ரெண்டு கழுதை மறைவுக்கு வான்னுச்சாம்  "  என்பத  போல சும்மா பரதநாட்டியம் எல்லாரும் போல பார்ப்பேன்,  மேலோட்டமாய் ரசிப்பேன் அவளவுதான், அதுக்குமேல உள்ளே போய்  ரசிக்கும் அறிவு வீச்சு இல்லை,

                                  யாழ்பாணத்தில கலைகள் பழகுவதயையே பொருளாதாரம்தான் தீர்மானிக்கும், வசதியானவர்களின் பிள்ளைகள்தான் பரதநாடியம், வீணை ,வாய்ப்பாட்டு ,ஓர்கன் ,பியானோ,மிருதங்கம் ,கிட்டார் ,வயலின் பயில்வார்கள். வருமானம் குறைந்த ஏழைகள் அன்றாட வாழ்வே "தரி கிட தத் தம்" போடுவதால், திறமை உள்ளவர்களுக்குகூட சந்தர்பம் கிடைபதில்லை,

                   அப்படி இல்லை என்றால் அவர்கள் வீட்டில வயதான பெரியவர்கள் வாசித்த ஆர்மோனியப் பெட்டியை வைத்து அமுக்கி "நொயிங்ங்  ,நொயிங்ங்  " என்று வாசித்து பழகி கலைஞ்சர் ஆனாலும், அவர்களின் ஆர்மோனியப் பெட்டி, வில்லுப் பாட்டு,  நாடகம், நாடுக்கு கூத்து என்று கிராமிய அடையாளங்களைதான் சுற்றும். அதுக்குமே அவர்கள் கவனிக்கப்படவேமாட்டார்கள்! ஆர்மோனியப்பெட்டியை வாசிபத்தைக் கேவலமாகவும் ,அதை வாசிப்பவனை " பெட்டி வாசிப்பவன் " என்ற சுத்த பட்டிக்காட்டான் எண்டும் நினைத்த மனநிலையும் இருந்தது " யாழ் பாடி " வாசித்து காரணப் பெயர் வந்த யாழ்பாணத்தில!

                     பல மேடை நிகழ்சிகள்,பழைய  ஸ்டுடியோ ஒலிப்பதிவு விடியோக்கள் பார்க்கும் போது  மெல்லிசை மன்னரும் , இசைஞாணியும், திரைஇசைத் திலகமும் ஆதாரமாக ஆர்மோனியப் பெட்டியை வைத்துப் பின்னி எடுத்ததைப் பார்க்கும்போது , யாழ்பாணத்திலும் அப்படி ஒரு உலகத்தரமான இசைமேதை கவனிப்பாரற்று காணாமல்போய் இருக்கலாம்....

.

ஓசிச் சாப்பாடு

வருடத்தில் மார்கழி மாதம் ஒஸ்லோவில் ஓசிச் சாப்பாட்டுக்குக் குறைவு இல்லாத மாதம். ஜுலபோர்ட் என்று சுத்திச் சுத்தி கிறிஸ்மஸ் பாட்டிக்கள் குறைவில்லாமல் நடக்கும். இதுகள் தனிப்பட்ட கிறிஸ்மஸ் பாட்டிகள் அல்ல கும்பலில் கோவிந்தா போல அன்னக்காவடி தூக்கிக்கொண்டு அல்லாடும் மக்களுக்காக நோர்வே மக்கள் தங்கள் தராதரங்களில் இருந்து கொஞ்சம் இறங்கிவந்து எல்லாருக்காகவும் வைக்கும் பாட்டிகள். இவை அதிகம் முன்பு வேலைசெய்த, இப்ப செய்யும் இடங்களில், ரெஸ்டோறேண்டில், பொது இடங்களில்,கப்பலில், நடக்கும்

                            ஒஸ்லோவில் நிறைய உதவும் உள்ளம் உள்ள கிறிஸ்தவ அமைப்புக்கள் உள்ளன. அவர்கள்தான் இந்த நகரத்தின் விளிம்புநிலை மனிதர்களைத் தாங்கிப்பிடித்து வைத்து இருப்பவர்கள். நோர்வே அரசாங்கம் வரிகளில் இருந்து கணிசமான அளவு இந்த அமைப்புகளுக்குக் கொடுத்தாலும் சென்ற தலைமுறையில் வசதியாக இருந்து இப்ப வயதுபோன நிறையப் பணக்கார மனிதர்கள் தான் அந்த கிறிஸ்தவ அமைப்புக்களின் பொருளாதார நாடித்துடிப்பு.

                                  சென்ற நூற்றாண்டில் விவசாயிகளாக இருந்த நேரம் நோர்வே மக்கள் என்ன இயற்கையாகப் பதனிடப்பட்ட இறைச்சி, மீன் உணவை உண்டு வாழ்ந்தார்களோ அந்த உணவுதான் இப்ப நோர்வே கிறிஸ்மஸ் இராப்போசன மேசையில் இருக்கும் அவர்களின் சம்பிரதாய உணவு. மார்கழி மாதம் இங்கே குளிர் அதிகம் அந்த கிறிஸ்மஸ் சம்பிரதாய உணவில் கொழுப்பு அதிகம், குளிரைத் தாங்க கொழுப்புக் கொஞ்சம் தேவை . அதால வேண்டிய மாதிரி சாப்பிடலாம் போல இருக்கும்.

                                  கிறிஸ்மஸ் இரவு 24 ம் திகதியில் இருந்து முதலாம் திகதிவரை நோர்வே மக்கள் தங்களின் குடும்பங்களுடன் தனிப்பட்ட குடும்பப் பாட்டிகள் வைப்பார்கள். அதில் மிகவும் நல்ல நெருக்கம் உள்ள நண்பர்கள் குடும்ப உறுப்பினர், உறவினர் இவர்களுடன் சேர்ந்து அவர்கள் வீட்டுகளில் நடக்கும். கிறிஸ்மஸ் இரவு 24 ம் திகதியில் இருந்து முதலாம் திகதிவரை நோர்வே மக்கள் ஒரு வேலையும் செய்யமாட்டார்கள் .அணுக்குண்டு வெடிச்சாலும் அசையமாட்டார்கள்

                                    கிறிஸ்மஸ் இரவுப் பாட்டிகள் அதுக்கு என்னைப்போல வந்தான் வரத்தான் எல்லாரையும் தங்கள் வீடுகளுக்குள் உள்ளே எடுக்க மாட்டார்கள். அதைவிட நோர்வே நோர்க்ஸ் மக்களுடன் அவர்கள் வீடுகளுக்கு உள்ளே நடக்கும் பாட்டிகளில் நடக்கும் கலந்துரையாடல்களில் அதிகம் சுவாரசியம் இல்லை. கிளியைப் பிடிச்சு வைச்சு அதுக்கு இன்னொருமுறை பச்சைப் பெயின்ட் அடிச்சுக்கொண்டு இருப்பது போல இருக்கும்.

                                    என்னைபோல வந்தேறுகுடி மனிதர்கள் எவளவு கலாச்சார ,மொழி, பண்பாட்டில், பழக்கவழக்கத்தில் வேறுபட்டவர்கள் என்பதை நோர்வே மக்களுடன் அவர்களின் கொண்டாடங்களில் நாக்கு நனைச்சு நெருங்கிப்பழகும் போதுதான் நல்லாத் தெரியும். அவர்களுக்கும் என்னைப்போல தமிழ் அடையாளம் உள்ள ஆட்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு நோர்வே மக்கள் தங்களின் இன மக்களுடன் உண்மையானவர்கள் ,நேர்மையானவர்கள். என்னதான் நாங்கள் தலைகீழாக நிண்டு நல்லவன் எண்டு நிரூபித்தாலும் எங்களில் அதிகம் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.

                                 இரட்சணிய சேனை என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஒரு கிளையின் குசினியில் சில வருடம் வேலை செய்து இருக்கிறேன். அந்த அமைப்பிடம் இருந்து கிடைத்த அழைப்பால் இன்று டென்மார்க்க்கும் ஒஸ்லோவுக்கும் இடையில் ஓடிக்கொண்டு இருக்கும் DFDC என்ற உலாசப்பிரயான கப்பலில் இந்த வருடமும் ஓசியில் சாப்பாடு கிடைத்தது.

                                 அந்த நிறுவனத்தில் வேலை செய்த போது கொஞ்சம் நல்ல பெயர் இருந்தது அதால பல வருடமாக இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்துக்கொண்டு இருக்கு. என்னவோ பெரிய வெள்ளைக்காரன் போல இந்தக் கப்பலுக்குப் போனாலும், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நிலைமையை ஜோசிக்க மனதளவில் உண்மையில் பிச்சைக்காரன் போலத்தான் உணர்ந்தேன்.

                                     இந்த வருடம் கப்பலில் ஏறும் போதே, ISIS தீவிரவாதிகள் புண்ணியத்தில் பிரயாண ஆவணங்கள்உறுதிப்படுத்தல்,ரகசியப் பொலிஸ் கண்காணிப்பு என்று பயங்கரப் பாதுகாப்புக் கெடுபிடி அந்த உல்லாசப்பயணிகள் கப்பல் தரித்து நின்ற இடத்தில. போதாக்குறைக்குக் " கடி நாய் கவனம் " என்று யாழ்பாணத்தில் ஒரு போட் படலையில் தொங்கவிடுவார்களே அதுபோல கழுத்தில ஒரு அடையாள அட்டையையும் கட்டாயம் கொழுவிக்கொண்டே இறங்கும் வரை இருக்கவேண்டும் எண்டு சட்டம் போட்டு இருந்தார்கள்,


                                          வாழ்கையில் பல விசியங்கள் ஏன் " அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம் .." போல திடிர் திடீர் ஆக நடக்குது என்று யாருக்கும் சொல்ல முடிவதில்லை.
                                 அழைப்பிதழில் அந்த நிகழ்வில் " அல்கஹோல் பரிமாறப்படாது " என்று எழுதி இருந்தார்கள், நான் முன்னம் வேலை செய்த நேரமே கொஞ்சம் பிரச்சினையான ஆளா இருந்ததால் ," மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக்கூடாது " என்பது போல பிரச்சினை வரும் என்று தெரியும் .
                                    ஆனாலும் என்ன வெளியேதான் வேண்டிய அளவு அல்கஹோல் வேண்டிய மாதிரி வேண்டலாமே,,அதால வெளியேயே நல்லா நாலு கட்டைக்கு சுருதி ஏத்திக்கொண்டு, சதுஸ்ரசாதி திரிபுடை தாளம் போட்டுக்கொண்டு " குறை ஒன்றும் இல்லை மறை மூர்திக் கண்ணா...." என்று பாடிக்கொண்டு போனேன்...
                                      சில பழைய வேலை நண்பர்களை சந்திக்கவும் ,பல அழகிய இளம் பெண்களை ஜோள்ளுவிடவும் மட்டும் முடிந்தது .ஒரு நோர்வே வாழ் சாதாரணமான மனதுள்ள தமிழ் எழுத்தாள நன்பரையும் அந்த நிகழ்வுக்கு வரச்சொல்லி சந்திக்க நினைத்து இருந்தது சில பிரக்டிகல் காரணங்களால் சாத்தியம் ஆகாமல் போனது கவலையான விடயம்.
                                        மற்றப்படி அதில என்னதைப் பார்த்தேன் என்பதை " வீட்டுக்கு இருந்தால் வெங்கலப் பெண்டாட்டி வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி ..." பழமொழிபோல தான் என் வாழ்கையே இங்கே. இருப்பதால் .நேற்று இரவே வெறுப்பின் விழிம்பில் சில வரிகளில் கவிதை போல எழுதிப்போட்டேன்,
                                        அந்த நிகழ்வை கொஞ்சம் படங்கள் எடுக்க விரும்பி கமரா மொபைல் போனை எடுக்க ,அந்தக் கப்பலில் வேலை செய்யும் ஒரு இளம் டெனிஷ் பெண் வந்து டெனிஷ் பாசையில் ,கொஞ்சம் கடுமையாக " இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை " என்று சொன்னாள்.நான் ஆவலுடன் அவளிடம் அவள் அழகு பற்றிக் கதைத்தேன்,
                                                முக்கியமா அவளுக்கு ஒஸ்லோ பற்றி என்ன தெரியும் என்று கேட்டேன்,,என் நெஞ்சில பாலை வார்க்கிற மாதிரி ஒண்ணுமே தெரியாது என்று சொன்னாள்." மைலங்கி மைலங்கி பூ எங்கே வைத்தாய், வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன் " கதை போல அவளுக்கு கயிறு திரிக்கலாம் போல இருந்தது..

                               " என்னோட ஒரு நண்பன் நோர்வேயின் புகழ் பெற்ற போடோகிராபர் அவன் எடுக்கும் பெண்களின் படங்கள் நோர்வேயின் முக்கிய மொடல் மாத சஞ்சிகையில் முதல் பக்கத்தில் வரும் , அவன் நான் என்ன சொன்னாலும், நான் சொல்லும் பெண்களை தலை கீழாக நின்றும் மறு பேச்சு இல்லாமல் படம் எடுப்பான் ,அப்புறம் உன் விருப்பம் " என்றேன்
                  அவள் கொஞ்சம் ஜோசித்துப்போட்டு 
                               " உண்மையாகாவா சொல்லுறாய் , நான் இந்தக் கப்பலில் நாலு வருடம் வேலை செய்யுறேன் , நீ சொல்லும் அந்த நோர்வே மொடல் சஞ்சிகையின் பெயர் என்ன,உன் போடோகிரபி நண்பன் பெயர் என்ன "  

                      என்று கேட்டாள். நான் வாயில வழுக்கி வந்த ஒரு நோர்வே நாட்டவர் பெயரை சொல்லி,வாயில சறுக்கி வந்த ஒரு மொடல் மகசின் பெயரை சொல்லி

                           " அப்புறம் உன் இஸ்டம் ,," 

                என்று ஆர்வம் இல்லாத மாதிரி சொன்னேன் ,அவள் மிகவும் ஆர்வம் ஆகி என்னுடைய மொபைல் போன் நம்பர் கேட்டாள், நான் அஞ்சு வருசம் முன பாவித்து இப்ப பாவனையில் இல்லாத நம்பரைக் கொடுத்தேன்..
                                          " நான் இன்று இரவு இந்தக் கப்பலில் கோபன்ஹேகன் இரவு கப்பலில் போறேன்,,நாளண்டைக்கு ஒஸ்லோ இந்தக் கப்பல் திரும்பி வரும்,வந்தவுடன் உனக்கு டெலிபோன் அடிக்கவா,இதுபற்றி கொஞ்சம் உன்னோடு பேசவேண்டும் " 

                       என்று மிக மிக ஆர்வமாக் கேட்டாள். அவளைப் பார்க்க " ஏற்கனவே மாமி பேய்க்கோலம், அதிலும் மாரி காலம் கொஞ்சம் மாக்கோலம் போல " இருந்தாள். 
                             " அப்புறம் உன் விருப்பம் " 
                                            என்று சொல்லி முடிக்க முதலே ...அவளே என் கமரா போனை வேண்டி சில படங்கள் என்னை எடுத்தாள்,அதில ஒரு படம் தான் இது. புத்திசாலித்தனத்தை குதிரை மேல் ஏற்றி, சட்ட திட்டத்தின் தலையிலே புல்லுக் கட்டை வைத்தடிக்கிற காலத்தில வாயுள்ள பிள்ளை தான் வங்காளம் போகும் ,,இல்லையா ,,சொல்லுங்க பார்ப்பம் .....

..                                        .....என்ன சீவியமடா இது...



Tuesday, 29 December 2015

மனம் ..

வருமா வராதா அல்லது வரமா சாபமா என்று வெண்பனிப் பொழிவுக்குக், காத்திருக்க நேற்று இரவு திருவாதிரை நட்சத்திரத்தில் அது இறங்கி இருக்கு. நோர்வேயில் கிறிஸ்மஸ் விடுமுறை நாட்கள் வெண்பனி இல்லாமல் இருப்பது முதலிரவு இல்லாமல் கலியாணம் போல , அவளவு வாழ்க்கை முக்கியத்தும் அதுக்கு இருக்கு .
                                முக்கிய காரணம் நோர்வே வெண்பனி வெண் இரவுகளில்தான் வளைகாப்புக் பெண்ணின் புது வெட்கம் போல அள்ளி அணிந்து கொண்ட ஜவ்வனங்களுடன் ஜொலிக்கும். அது வந்தாலும் திட்டியும் வராட்டியும் திட்டியும் எப்பவுமே எழுதும் ஒரு மண்டைப்பிழையான ஒரே ஒரு நோர்வேவாழ் இலங்கைத் தமிழன் நானாகத்தான் இருக்க முடியும்.
                                       நான் வசிக்கும் இடத்தில ஸ்கி என்ற பனிச்சறுக்கு தளம் அமைத்து ஓடும் இடமே இருக்கு. ஒரு தமிழ் நண்பர் குடும்பமாக இலண்டனில் இருந்தே நாலு நாள் விடுமுறையில் பிள்ளைகளோடு சில நாட்கள் முன் வந்திருந்தார். அவர் முன்னர் நோர்வேயில் தான் பாஸ்போட் கிடைக்கும் வரை அரசியல் அகதியா வசித்தார்,
                                          பிறகு நோர்ஸ்க் பாஸ்போட் கிடைச்ச கையோடு நோர்வே பிரசை ஆகி இலங்கை போய்க் கலியாணம் கட்டிக்கொண்டு வந்து, பிள்ளைகள் பிறந்து முடிய மனைவியுடன் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிக்க வைக்க வாழ்வு கொடுத்த நோர்வேயை வாயும் வயிறுமாக விட்டுப்போட்டு மான்செஸ்டர் இக்கு எஸ்கேப் ஆகிப் போனவர். நேற்று ட்ரம்மன் என்ற இடத்தில இருந்து போன் எடுத்து ,வெறுப்பாக

                               " ஒரே கடுப்பா இருக்கு, இன்னும் சினோ விழவில்லையே,போன வருஷம் நல்ல என்ஜாய், இந்த வருடம் என்ன இப்படி அல்லைப்பிட்டி தரவை போலக்கிடக்கு , உம்மோட பக்கம் வரவே அலுப்பா இருக்கு, வரேக்க கேட்விக் ஏர்போட்டில் ரெண்டு புறா வேண்டிக் கொண்டு வந்தனான் "
                               
                                                 என்று சொன்னார். எனக்கும் கவலையாக இருந்தது அவர் என்னோட பக்கம் வந்தால் எப்பவுமே போத்தல் கொண்டு வருவார் .லண்டனில் போத்தல் நல்ல மலிவு .புறா என்பது புறாப் படம் போட்ட போத்தலில் நிரப்பி வரும் பேமஸ்குருஸ் என்ற ஸ்கொட்லாந்து விஸ்கி. பல வருடம் முன்னர் ஒன்றாக ஒரு இடத்தில இருந்தோம் அதை நினைவுகொள்ள எப்பவுமே நடக்கும் கிறிஸ்மஸ் பாட்டியில் புறா ரெம்பவே அனுசரணையாக இருக்கும்

                                          " சில நேரம் இரவு இறங்கலாம் என்று வானிலையில் சொன்னார்கள், இறங்கத்தான் வேண்டும் இல்லாட்டி எனக்கும் வாழ்க்கை வெறுக்கும். மான்செஸ்டர் இல இருந்து ஒஸ்லோ வந்ததே சினோவில உருண்டு  பிரள ."

                                  " அதெண்டா உண்மைதான் போல இருக்கு "

                                 " சினோ இல்லாட்டியும் என்ன நாலு பெக் அடிச்சுப்போட்டு பழைய கதைகள் கதைப்பம்..அதுக்கும்  சான்ஸ்  இருக்கும்  தானே  "

                                "பிரசினை  இல்லை,,வாங்கோ ,  கதைகளுக்கு  என்ன  குறைச்சல்,,அதுவும் போத்தில் மூடி திறக்கவே கதையள் அவிழுமே  " 

                                  " பழைய ஆட்கள் எல்லாம் இப்ப எங்க இருக்கினம் கொண்டக் இருக்கோ "

                                          " பழைய ஆட்கள் எல்லாம் இப்ப பழசாகிப் போனார்கள்,,ஒருவரோடும் தொடர்பு இல்லை,,,சும்மா கண்டா காதுக்க விரலை விட்டுக்கொண்டு கதைக்கிறது "

                                   "   என்ன நடந்தது "

                                 " என்ன நடக்க வேணுமோ அதுகள் தான்  நடந்தது,, எல்லாரும்  இப்ப தனித் தனியா குடும்பம் வாழ்க்கை  எண்டு போட்டாங்கள் "

                                  "   ஹ்ம்ம்,, அது  உண்மைதான்,,நல்லா  இருகுரான்களோ "

                                  "   அது  தெரியாது,,உண்மையில் வெளிய தெரியாது,,துண்டைக் காணோம் துணியைக் காணோம்  எண்டு ஓடிக்கொண்டு இருக்கலாம் "

                        "மோகனுக்கு  அக்செப் பண்ணி பேப்பர் கிடைசிட்டுதோ    "

                                 "  எந்த மோகன்  " 

                              "  அலவாங்கு  மோகன்,,வன்னிப் பொடியன்  " 

                               "அவனைப்  பிடிச்சு  திருப்பி அனுப்பிப்போடான்கள்     " 

                             "  எண்ட  கடவுளே,,அவன்  இயக்கத்தில  இருந்தவன்  எல்லோ "

                            " ஹ்ம்ம்,,,இங்கே  உண்மையான அரசியல் அகதிக்கு வதிவிட  அந்தஸ்து  பேப்பர்  கொடுக்க மாட்டாங்களே,,ஹ்ம்ம்,,,இதைக்  கதைச்சால்  கொதி  வரும்  "

                            "  படிச்ச மனோவும் ,மொக்கு மனோவும் இப்பவும் ஒன்டாவே இழுபடுராங்கள்.. ரெண்டு பேரோடும் கதைச்சே  பலவருடம் "

                             "  படிச்ச  மனோ  கழுவல் துடையல் கொம்பனி பிர்மா வைச்சு நடத்துறான்,,மொக்கு மனோ ஒஸ்லோ கொமுயுன் இல டெக்னிகல் அட்வைசர் வேலை  செய்யுறான் "

                             "  என்னது  நம்பவே முடியவில்லையே,,ரெண்டு  பேரும்  செய்யிற  வேலையே  சம்பந்தா சம்பந்தம் இல்லாமலிருக்கே "

                           "  நம்ப முடியாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சம்பவங்கள் நடக்கிரதுக்குப் பெயர்தான்  வாழ்க்கை "

                                    "   ஹஹஹஹா "

                           "    ஹ்ம்ம்,, ஆனால் ரெண்டு மனோவும்  இப்ப ஒஸ்லோவுக்கு வெளிய சொந்த வீடு வேண்டி இருகிறாங்கள் "

                                        " சாம்பாரு மணியோடும் கொண்டக் இல்லையா அவன் உன்னை விட்டுப் போக மாட்டனே, ரெண்டு பேரும் நல்ல ஓட்டே எப்பவும் , ரெண்டு பேரும் நேரம் காலம் இல்லாத தண்ணிச் சாமிகளே "

                                                 " ஹஹஹ்ஹா,,,சாம்பாரு மணி இப்ப திருந்திட்டான்,,குடிக்கிறது இல்லை,,இப்ப சாமியார் போல ஒஸ்லோ முருகன் கோவில்ல தேவாரம் பாடுறது , சாமி தூக்கிறது , மண்டக்கப்படியில சுண்டல் குடுக்கிறது எல்லாம் அவன்தான் "

                                         " என்ன ,பழைய பம்பல் ஒண்டும் இல்லைப்போல இருக்கே,,என்ன நடந்தது "

                                      " ஒன்டும் வித்தியாசமா நடக்கவில்லை,முன்னம் தனிக் கட்டைகள் எலிகள் போல ஓடித் திரிந்தோம் இப்ப அவர் அவர் வாழ்க்கை அவர் அவர் பாதையில் குடும்பமாகிப் பெருத்து பெருஞ்சாளிகள் ஆகி சுமைகள் அதிகமாகி விட்டது "

                                     " போன வருஷம் ஹோவ்செத்ரா இருந்திச்சே அமல்ராச் இன் பிச்சா கடை அதிலயா இப்பவும் வேலை "

                                             " இல்லை,,அது போன வருசமே நாமம் போட்டு இழுத்து மூடியாச்சு "

                                     "   நீர்  வேலை  செய்த சாப்பாட்டுக் கடைகள் ஒரு வருஷத்தில் இழுத்து மூட  வேண்டிவரும்  என்று  மொட்டை மனோ எப்பவும் சொல்லுவானே "

                                           " ஹஹஹ்ஹா,,உண்மைதான்,,,ஆனால் அமல்ராஜ்  நடத்தின  பிட்சா கடையில் வேற பிரசனை  வந்தது "

                               " என்ன பிரசினை,,,,சொல்லுமன்,,எனக்கும் அமல்ராஜ் போஸ்ட்குருன் இல இருந்த நேரம்   நல்ல பழக்கம் முன்னம் "

                                  "  ஹ்ம்ம்,,அவர்  ஒரு சப்பட்டை  வியட்நாம்காரியை  பெட்சிளிங் ஓடர் டெலிபோனில எடுக்க கொண்டு வந்து வைச்சு இருந்தார் "

                          "   அட,,,பிறகு,,சொல்லும்  சொல்லும் ,,இளம்  பெட்டையோ "

                         " ஓம்...அவள்  படிக்கிற பெட்டை,,பாட் டைமா  பின்னேரம் வருவாள் வேலைக்கு "

                           " பிறகு  சொல்லும்  சொல்லும்  என்ன நடந்தது,,,"

                          " பிறகு  என்ன நடக்கும்,,,தெரியும்தானே,,அமல்ராஜ்  அவளுக்கு  கீழ வேலைக்கு  நிக்கிற மாதிரியும்,,அவள் முதலாளி போலவும் நிலைமை வந்திட்டுது "

                                "   பிறகு  என்ன நடந்தது "

                                "  பிறகுதான்  பிரசினை வந்தது,  ஒருநாள் இசகு பிசகா அவள் அமல்ராஜ் மடியில் இருந்து கொண்டு ஹம்பெக்கர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் "

                         "  அட அட...அதில  என்ன பிரசினை,,கதிரை மேசை  இல்லையோ  என்னத்துக்கு  மடியில  இருந்து சாப்பிட்டாள்  "

                             "  கதிரை  மேலை  வேண்டிய மட்டும்  இருந்தது,,,நல்லகாலம்  கட்டில்  தான்  இல்லை "

                               "  ஹஹஹஹா,,,சொல்லும்  சொல்லும்  மிச்சத்தை "

                         " அந்த நேரம் அமல்ராஜ் மனுசி வந்திட்டா ,,வந்து அதைப்  பார்திட்டா ..."

                                       "     அட,  ரீட்டா  அக்கா தானே ,,இதென்ன குளறுபடி,,பிறகு  சொல்லும்  சொல்லும்  என்ன நடந்தது  எண்டு "

                                  " ஓம்  அவாதான்,  பிறகென்ன மொப்  அடிக்கிற தடியால எடுத்து விளாசி விளாசி   அவியல்  பூசை  புனஸ்காரம்  மண்டகப்படி அகோரம்  தான்,,,எனக்கும்  நல்ல  பேச்சு தந்தா, அதோடு  அதை நடத்திரத்தை அமல்ராஜ் மனுசி விரும்பவில்லை  

                                           " என்னது,,அமல்ராஜ்ச் எப்படி இருக்க வேண்டிய ஆள்,,இப்ப ஆள் எங்க இருக்கு "

                           " இப்ப அமல்ராஜ்ச் பஸ் முன் சீட்டில இருக்கிறார்  "

                                               " என்னது "

                                   " ஹ்ம்ம், ஆள் பஸ் ஓடுது, பஸ் டிரைவர் , இப்பத்தான் ஆள் இருக்க வேண்டிய இடத்தில இருக்கிறார்,,அவருக்கு ரெஸ்டாரென்ட் சரி வராது எண்டு சொல்லச்சொல்ல கேட்கவில்லையே,,இப்ப நல்ல முன்னேற்றம் "

                                  " ஒ அப்பிடியியே அப்ப தாங்கள் ,,இப்ப என்ன மாதிரி,,வாலை அடக்கி சுருட்டி வைச்சுக்கொண்டு இருகிறியா,,அல்லது இப்பவும் ஹக்கடால் இல் இருந்த மாதிரி... டேய் தம்பி யோக்கியன் வர்றாண்டா சொம்ப தூக்கி உள்ள வைடா போலவா ...இருகிறாயா "

                                      " ஹிஹிஹிஹி நானும் இப்ப கொஞ்சம் நல்லவன் போல வெள்ளைப் பெயின்ட் அடிச்சுக்கொண்டு திரியிறன், தனிமைக்கு மாறிட்டன் "

                                       " ஓம்,,ஓம்,,அப்படியும் சில நேரம் நடக்கலாம் தான் ,ஏன் நானும் இப்ப அப்பிடித்தானே,,ஒரு பழைய தொடசல்கள் ஒண்டும் இல்லை,,மனுசியோட மட்டும் தான் இருக்கிறேன்  "

                                  " சரி விடுங்க ,, போத்தில் இருக்குதானே ,,பிறகென்னதுக்கு அடிக்க முதலே குழம்புரிங்க ,,அடிச்சுப்போட்டு பிறகு குழம்புவம் ஜோசிக்காம வாறதெண்டா காலையில் போன் அடியுங்கோ ,எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு சாமி கும்பிட்டு ரெடியா நிக்கிறன் "
                                   
                                  என்று அவருக்கும் ,எனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னேன். சொன்ன மாதிரி இன்று அள்ளிக்கொட்டி இருக்கு .நண்பர் இன்னும் போன் எடுக்கவில்லை . கோவத்தில கொண்டுவந்த புறாவை நேற்றும், முந்தநாளுமே கொஞ்சம் கொஞ்சமா பறக்க விட்டிருப்பாரோ என்றும் ஜோசிக்கிறேன்.
                                
                               இன்று காலையில் சிசிலியா போன் அடிச்சாள். அவள் என் பிரியமான சகி .    சிசிலியா  சும்மா  ஆள் இல்லை. பெரிய  உடையார் மணியகாரன் போன்ற ரேஞ்சில் உள்ள கொலர் தூக்கி விட்டு சபைசந்தியில் எழும்பிப் பேசிய  நோர்க்ஸ் குடும்பத்தை சேர்ந்தவள், அவளைப் பார்த்தாள் அவள் உயரத்தையும் நடையையும் நீல அக்குவா மரைன் நிறக் கண்களையும்  வைச்சே மிச்ச சாதகம் சொல்லலாம். அவளோட தாத்தா நிலச்சுவான்தார் குடி , கப்பலோடிகள்  கோத்திரம் , அவருக்கு  ஸ்பிலபேர்க்  நகரின்  சந்தியில் வெண்கலச் சிலையே வைச்சு இருக்கிறார்கள் .

                                       " ஹாய் ,என்ன செய்யுறாய்,,  மண்டைப்பிழை ,"

                                       " ஒருமண்ணும் இல்லை சும்மா சூடாகக் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறேன் சிசில் "

                                         " அப்படியா,,சினோவைப்  பார்த்தால்  என்னவும்  எழுதி அறுப்பியே  இண்டைக்கு   என்னமும்  கதை வைச்சு இருக்கிறியா "

                               " ஹஹஹா,,எப்படித்  தெரியும்  சிசில் "

                            "  இவளவு  நாள்  உன்னோடு  இழுபடுறேன்  இது தெரியாமல் இருக்குமா கழுதை ,,நீ கொஞ்சநேரம் எதையாவது  உற்றுப் பார்த்தால்  அதுக்குள்ளே ஒரு கதை  குந்திக்கொண்டு இருக்குமே "

                            " அட அட  இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் தெரியுமா  சிசில்  " 

                         "  அப்படியா,  மோட்டுக்  கழுதை  ,அதை  நீ சொல்லுறாய்  எனக்கு,,நீ சும்மா  காத்தையே  பிடிச்சு வைச்சு அதையும் உருவிக்    கதை எடுத்து விடுறவன்  ஆச்சே  "

                               " ஹஹஹா,,,அதெண்டா  கொஞ்சம் உண்மைதான் ,,நீ என்ன பிளான் போட்டு வைச்சு இருகிறாய்  இண்டைக்கு "

                                    " ஒ, சினோ ஸ்கி ஒடப்போறேன் வாரியா,சொங்க்ஸ்வான் பக்கம் வரவா, எப்படி உன் பக்கம் சினோ கொட்டுதா "

                                       " ஆமாடி,,அள்ளிக்கொண்டு கொட்டுது ஹ்ம்ம்,,வாவேன் ,"

                                       " உனக்கு வேற பிளான் ப்ரோக்ராம் ஒண்டும் இல்லையா இன்று "

                                  " ஒரு மயிரும் இல்லை ,,நீ வாடி கழுதை "

                                   " பசிக்குமே,,சாப்பாடு என்ன செய்வது,,கிறிஸ்மஸ் ஜூலசிங்கே, சிவைன் ரிப்ப இருக்கு அவனில வைச்சு எடுத்துக்கொண்டு வரவா "

                                         " என்ன எல்லாம் மிச்சம் கிடக்கோ எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வா,,கொலைப் பசியில் நிக்குறேன் "

                                          "அப்படியா ,,ஆச்சரியம் ,உனக்கு சாப்பாட்டில் இண்டரஸ்ட் வந்தது,,பொதுவா உனக்கு கணகணப்பா உள்ளுக்கு இறக்க என்னவும் வேண்டுமே சினோவைக் கண்டதால் "

                                                  " ஹ்ம்ம்,,அதுக்கு ஒருவர் வர இருந்தார். புறா வைச்சு இருக்கிறேன் என்று சொன்னார்,,ஆனால் போன் இன்னும் அடிக்கவில்லை "

                                          " அப்படியா,,போன் அடிச்சால் போயிடுவியா "

                                      " இல்லடி,,அந்தாள் ஒரு செம அறுவை,,பழைய பஞ்சாங்கம் போல சிஞ்ச்ச் சக்க சிஞ்ச்ச் சக்க எண்டு சுயபுராணம் பாடிக்கொண்டு இருக்கும் "

                                         " ஒ ,,என்றாலும் உன் நாட்டு மக்களுடன் உன் மொழியில் பேசுவது அலாதிதானே "

                                     " ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை ,அந்தாள் இருக்கிற என்னோட அரைவாசி உயிரைத்தான் எடுக்கும் ,நீ வாடி என் கப்பக்கிழங்கு "

                                            " பரவாயில்லை,,,என்னட்ட மான் இருக்கு ,,டென்மார்க் கப்பலில வேண்டிக்கொண்டு வந்தது,வேற என்னவும் வேணுமா "

                                             " இதுக்கு மேல என்னடி வேணும் "
                                        
                                           மான் என்பது மான் படம் போத்தலில் போட்ட ஜேகமாஸ்டர் என்ற மூலிகைகளில் செய்யப்படும் அல்கஹோல் குடிவகை. டென்மார்கில் அதைப் பாதிரிமார்களின் வடிசாலையில் உற்பத்தி செய்வார்கள். அதன் ரெசிப்பி அந்தப் பாதிரிமாருக்கும் பரமபிதாவையும் தவிர வேற ஒருவருக்குமே தெரியாது .பூச்சிகளுக்கு அடிக்கிற டி டி டி போல வாசம். கஷாயம் போலக் கசக்கும் குடிக்க, குடிச்சு முடிய நுனி நாக்கு அரிநெல்லி போல இனிக்கும் .
                                          
                                           சிசிலியா டெலிபோனைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு தொடர்ந்தாள், எனக்கு அவளின் சொண்டுதான் முன்னுக்கு வந்தது . சிசிலியாவின் சொண்டு அது ஒரு சிதம்பர நடராஜா ரகஸியம் . சும்மாவே அவள் சொண்டு மொங்கன் வாழைப்பழக் கலர். அதுக்கு விக்டோரியா சீ க்கிரெட்  தயாரித்த லிப்ஸ்டிக்  போட்டாள் என்றால் ரெண்டு தென்னம் கிளி நடுவில கொவ்வைப் பழத்தை வைச்சு உறிஞ்சுற மாதிரி அட்டகாசம் போடும். விக்டோரியா சிகிரெட் உலகப்புகழ் பெற்ற பசைன் டிசைன்  உடுப்பு  விக்கும்  கடை , ஒஸ்லோவில் அதுதான் மிக்கப்பிரபலம்  ,அவர்கள் தயாரித்து  வெளியிடும்  லிப்ஸ்டிக் பயங்கர விலை, ஆனால் நம்பர் வன் என்று சிசிலியா அவள் சொண்டை சாட்சிக்கு வைத்துச் சொல்லுவாள் ,,,

                                            " ஒ ,,நல்ல உடுப்பு போடு இது வேட் குளிர்,எலும்பில பிடிக்கும்,கழுத்துக்கு மப்பிளர் சுத்து,,இந்த லேட் வின்டர் நல்லதில்லை . மண்டையில் லூவர் ஸ்கோ கொழுவு,,இல்லாட்டி தலைக்கால தண்ணி இறங்கும் பிறகு உனக்கு சைனஸ் வரும் பா "

                                    " அடியே வீக்கிபீடியாவை விழுங்கினாவளே,,ஜெகமாஸ்டர் போதுமடி,,குளிரை சமாளிக்க "

                                       " சரி,,உனக்கு நான் நன்மைக்கு சொன்னாலும் கிண்டல் போல இருக்கு மாடு ,,ஜெக மாஸ்டர் முக்கால் லீட்டர் கிளாசிகல் பிரீமியம் போத்தல் தான் கொண்டு வாறன் "

                                              " அதைக் கொண்டுவா,,முதல் கதைச்சுக்கொண்டு இருக்காமல் வேலையில் இறங்கடி மவளே "

                                                " விண்டர் புல் கவர் ஓவர் ஒல் போட்டுக்கொண்டு வாறன் ,புது லீமாரோஸ் ஜக்கட் கிறிஸ்மஸ் பரிசில் கிடைததுடா "

                                             " அடியே,,என்னத்தையாவது போட்டுக்கொண்டு வாடி,,இலகுவாக் கழட்டக்கூட்டியதைப் போட்டுக்கொண்டு வாடி என்சைக்கொலோப்பிடியாவுகுப் பிறந்தவளே "

                                                  " அடி செருப்பால ,,மவனே உன்னோட உயரத்துக்கு உனக்கு நினைப்பு அதிகம் பா "

                                          " வாவ்,,வாவ்,,நீதாண்டி எண்ட ராசாத்தி ,, என்னைவிட்டால் யாருமில்லை என் உயிரே உன் கை அணைக்க "

                                                        " டேய் ,,என்னடா ஸ்ரீலன்கிஸ்கா மொழியில் பாட்டு எல்லாம் பாட்டு பாடுறாய் எ ன் னை வி ட்டா ல் யா ரு மில் லை,,இதுக்கு என்னடா அர்த்தம் மோட்டுக் கழுதை "

                                                  " எண்ணை விட்டால் என்னைப் போல கார் ஓட ஒருவரும் இல்லை எண்டு அர்த்தமடி அகராதி பிடிச்சவளே ,முதல் இறங்கு வெளியே "

                                    " ஹஹஹஹா, ஜெகமாஸ்டர் பெயரைக் கேட்டால் உனக்கு நாக்கு வெளிய தொங்குமே "

                                                " ஹ்ம்ம்,,எல்லாம்தான் வெளிய தொங்குது,,முதல் வெளிக்கிட்டு வாடி "

                                              " சரி,,உன் ப்ரென்ட் புறாவோட வந்தால் என்ன செய்வாய்,,அவரோடு போவியா தண்ணி அடிச்சுக் கும்மாளம் போட "

                                                       " அந்தாள் நோர்வேயை விட்டுப்போட்டு லண்டனுக்கு ஓடிப்போன ஒரு ஆள்..அவர் எனக்கு முக்கியமில்லை ,,நீதானே வேணும் என்ற ஏங்குறேன் ,,அன்பே வா அருகிலே குளிர் காதில கிளிப் பேச்சுக் கேட்க வா "

                                                 " என்ன,,இண்டைக்கு நல்ல குஷி மூட்டில நிக்குறாய் போல,,பாட்டு எல்லாம் பறக்குது .."

                                          " நீ வாவேன் மிச்சம் இருக்கு உனக்கு இண்டைக்கு,,ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது ,,ஒரு கொள்ளை நிலா உடல் நனைகின்றது ,"

                                                " அப்புறம் பாடு மிச்சத்தையும்,,நல்லா இருக்கே பாட்டு மெலோடி "

                                            " மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஹஹஹஹா மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஹஹஹஹா "

                                               " எதுக்குப்பா,,ஹஹஹாஹ் ஹஹஹா எண்டு வட துருவக்கரடி போல இழிகிறாய் இதுக்கு என்ன அர்த்தம் சொல்லு "

                                           " ... ............................. "

                                                       " ஒ அடப்பாவி... கசபிளங்கா படத்தில வார சீன் போல சொல்லுராயே , ஆனாலும் நீ சும்மா வெறும் வாயல ஹோலிவுட் படம் ஓட்டுற ஆள் தானே ,,சரி,,இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே ..அப்படியா ,,,பார்க்கலாம்,,,ஹ்ம்ம் ,,வந்து சொல்லுறேன் மோட்டு எருமை மாடு "
                                  
                                     அவள் குரலைக் கேட்க இண்டைக்கு " கட்டிப்பிடி கட்டிபிடி டா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடி டா " கதை போலதான் போகும் போல இருக்கு..
.

.

Saturday, 19 December 2015

நீ ஒரு மடையன் மச்சான்,..

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் அலாதியான ஆடம்பரமாக ஆரம்பிக்கும் இந்த நேரம் என் பள்ளிக்கால நண்பன் சில நாட்கள் முன் கனடாவில் இருந்து அவசரமாகக் கதைக்க வேண்டும் என்று டெலிபோன் செய்தான். பொதுவா அவன் தண்ணி அடிச்சுப்போட்டு நிக்கும் போதுதான் என் நினைவு அவனுக்கு வரும் அந்த நேரம் தான் எப்பவும் போன் செய்து 

                           " நீ ஒரு மடையன் மச்சான்,,உனக்கு உலகத்தில் என்ன நடக்குதே எண்டு தெரியாமல் சும்மா வேலையும் வீடும் எண்டு ஓடிக்கொண்டு இருகிறாய்..வாழ்கையை எப்பவும் என்ஜோய் பண்ண வேணுமடா உனக்கு அது தெரியுதில்லை "

                                என்றுதான் தொடங்குவான். சில நேரம் நானும் தண்ணியில் நீந்திக்கொண்டு நிற்பேன் அப்படி நேரம் அவன் போன் எடுத்தால் ரெண்டு பேரும் பிறகு பழைய நினைவுகளில் நீந்துவோம் .சில வாரம் முன் அவன் கவலையாகப் போன் எடுத்தான் . என்ன நடந்தது என்று கேட்டேன்

" மச்சான் கழுத்தில ஒரு கட்டி வந்து இருக்கடா,அதைக் கொண்டுபோய்க் காட்ட, எம் ஆர் ஐ ஸ்கான் எடுக்க வேண்டும் எண்டு சொன்னாங்கள் டா,,"

" ஹ்ம்ம்,, அது நல்லம் தானே அந்த ஸ்கான் இல் என்ன பிரசினை எண்டு கண்டுபிடிப்பாங்கள் ,நீ ஒண்டும் ஜோசிக்காதை "

" இல்லை மச்சான்,,சிலநேரம் பிசகும் போல இருக்கு "

" என்ன பிசகும் "

" இல்லை மச்சான்,கான்சர் வராதுக்கு முதல் டியூமர் போல என்னவும் வந்து இருக்குமோ என்று ஜோசிக்கிரன் மச்சான் "

" ஒண்டும் ஜோசிக்காதை,,நீயே கருங்காலிக் கட்டை போல இருகிறாய் உனக்கு அதெல்லாம் வராது "

" இல்லை மச்சான்..பிள்ளைகள் வளர்ந்து பெரிதாக வந்திட்டுதுகள் அதால பிரச்சினை இல்லை "

" ஒரு பிரசினையும் இல்லை,,நீ ஜோசிக்காதை "

" இல்லை மச்சான்,எண்ட மனுசி, நான் லவ் பண்ணுறன் எண்டு சொல்ல உடுத்த உடுப்போட எனக்காக ஓடி வந்தவள் டா, அவளை இருவது வருடம் பூப் போல வைச்சுப் பார்கேறேன் டா, நாளைக்கு நான் பொட்டென்று மேல போனால் , அவள் பாவமடா "

" அட அட அட இதுக்க ஜோசிக்கிறாய் ,இதெல்லாம் சின்னப் பிரச்சினை டா,அதெல்லாம் ஒண்டும் நடக்காது "

" அவளுக்கு எண்டு சோசியல் ஹெல்த் இன்சூரன்ஸ் இல் காசு போட்டு வைச்சு இருக்றேன் ,"

" ஒ இது இன்னும் நல்லா இருக்கே, நீ நல்ல தீர்க்கதரிசனம் உள்ளவண்டா "

" ஹ்ம்ம்,,அவள் வாழ்க்கை பாவமாப் போகக்கூடாது எண்டு அப்படி செய்து வைத்தேன் டா ,உண்மையான அன்பு இருந்தா அப்படிதாண்டா செய்வாங்க,உனக்கு எங்க இதெல்லாம் விளங்கப் போகுது "

" ஹ்ம்ம்,உண்மைதான் ஒரு பெண்ணுக்கு பினான்சியல் சப்போட் இல்லை என்றால் அது சைட் டிஷ் இல்லாமல் தண்ணி அடிக்கிற மாதிரி டா,,நானும் ரெம்பவே கவலைப்படுவேன் "

" என்னடா இவளவு பொசிடிவ் ஆக சொல்லுறாய்,,நான் நிறைய ஜோசிகுறேன் டா மச்சான் "

" ஆண்டவன் பூப்போல உள்ள பெண்களை அந்தரிக்க விடமாட்டன் பா ,நீ ஜோசிக்காதை "

" என்னடா சொல்லுறாய்

" ஆமாடா படைச்ச ஆண்டவன் பூப்போல உள்ள பெண்களை அந்தரிக்க விடமாட்டன் பா ஒரு வழி இல்லை இன்னொரு வழி வைச்சு இருப்பான் டா "

" ஆனாலும் கவலையா இருக்குடா "

" இதெல்லாம் சின்னப் பிரசினை டா,மனதை நல்ல திடமா வைச்சுக்கொண்டு போய்க் கழுத்தைக் கொடு "

" உண்மையாவா சொல்லுறாய் டா,,நான் நினைச்சேன் நீ ரெஸ்ட்றோரெண்டுகளில் குக் வேலை செய்து கொண்டு இருப்பதால் ,உனக்கு சமையலை விட்டால் உலகத்தில் ஒரு மண்ணும் தெரியாது எண்டு "

" இல்லைடா,,எனக்குப் பொறுப்பு எண்டு ஏதும் வந்தா அதைப் பொறுப்பா செய்வேண்டா ,இதெல்லாம் சின்னப் பிரசினை "

" என்ன சின்னப் பிரசினை,,,நீயே ஒரு உருப்படாத கழுதை,பேஸ் புக்கில் கதை,கவிதை எண்டு எழுதிக்கொண்டு வீணாப் போற மூதேசி,உனக்கு எங்க உலகம் தெரியும் சொல்லு பார்ப்பம் "

" டேய் இதுக்கு எல்லாம் பெரிசா ஜோசிக்காதை நீ மேல போனால் உன்னோட மனுசியை யாரோ ஒரு நல்லவன் பூப் போல வைச்சுப் பார்ப்பான் டா "

                                   நேற்று இரவு அவன் மறுபடியும் அடிச்சுப் பிடிச்சுப் போன் எடுத்தான்

" மச்சான் அது சும்மா சூட்டில வந்த கட்டி எண்டு டாக்டர் சொன்னார்டா ,அதலா நல்லா தலைக்கு எண்ணை வைச்சுக் குளிச்சேன் , இப்ப ஓகே டா மச்சான் ,நீ ஜோசிக்காதை மச்சான் "

" ஹ்ம்ம் .."

" என்ன சொல்லு பார்ப்பம் மச்சான் நான் பெரிசா பயந்து கொண்டு நினைச்ச மாதிரி கடைசியில ஒண்டுமே நடக்கவில்லை டா "

" ஹ்ம்ம், நானும் தான் பெரிசா நினைச்ச மாதிரி ஒண்டுமே கடைசியில நடக்க வில்லையே .."

.

ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா .

MBS என்று செல்லமாக அழைக்கப்பட்டM.B. ஸ்ரீநிவாசன்,ஆந்திராவில் பிறந்து,மலையாளத்தில் புகழ்பெற்ற இவரை ,தமிழ் சினிமாவில் இசை அமைக்க அப்போது இருந்த ஜாம்பவான்களுக்கு சவாலாக ,. தனது தாய் மொழி மலையாளத்தில் தனக்குப் பிடித்தவரை தமிழ் சினிமாவில் இசைஅமைக்க K .J ஜேசுதாஸ் தமிழுக்கு கொண்டுவந்தார் என்கிறார்கள்!

                                        மலையாளத்தில் மறக்க முடியாத பல மெட்டுப் பாடல்களை அவர் K .J ஜேசுதாஸ் இக்குக் கொடுத்து அவரைப் பிரபலம் ஆகியவர்களில் இவரும் ஒருவர் எண்டு மலையாளிகள் பறைகிறார்கள் ! ஜேசுதாசுக்கு தமிழில் முதன் முதல் சந்தப்பம கொடுத்தவர். ..வீணை.S.பாலச்சந்தர்....பொம்மை திரைப் படத்தில்...1963.இல் இத் திரைப் படத்தில் K.V.மகாதேவனும் நடித்திருந்தார் எண்டு நண்பர் ஆதவன் சொன்னார் ,. அதிகம் தமிழ்படம் இசை அமைக்காத M.B. ஸ்ரீநிவாசன் ஜேசுதாசுக்கு தமிழில் சந்தப்பம கொடுத்தஇசைஅமைத்த சில பாடல்களே "செம ஹிட்" ஆகிஇருக்குது! அருமையான பாடல்களை தந்தவர்.சில பாடல்கள் ஆயினும் நிலைத்து நிற்கிறார்.

                                        ஜான் ஆபிரகாம் என்ற புகழ் பெற்ற மலையாள ஆர்ட் பட இயக்குனரின் "அக்கிறகாரத்தில் கழுதை " என்ற படத்தில அவர் ஹீரோவா நடித்தும் இருக்குறார், அந்தப்படம் தேசிய விருது பெற்றது!70 ல்களின் இறுதியில் சிவகுமார் நடித்து வந்த " மதனனமாளிகை " படத்தில் ,ஹிந்துஸ்தானி சாயல் அதிகம் உள்ள " அமீர் கல்யாணி என்ற ராகத்தில "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா .."என்ற   இந்த ப்பாடல் இசை அமைக்கப்பட்டது!

                                    இசையானி இளையராஜா இவரிடம் உதவியாளரா இசை அமைப்பு பழகப்போன நேரத்தில் ராஜாவுக்கு "வெஸ்டர்ன் நோட்ஸ்" வாசிக்க தெரியாததால் அவரி தனராஜ மாஸ்டரிடம் "வெஸ்டர்ன் கிளசிகள் பியானோ" படிக்க அனுப்பி இருகிரர்ராராம் ஸ்ரீநிவாசன் ,,என்றும் ஒரு நண்பர் சொன்னார் ,,ஸ்ரீனிவாசனும் ராஜாவும் சேர்ந்து பணியாற்றி எதாவது பாடல்கள் வெளிவந்ததா எண்டு எனக்கு தெரியாது ..

                               இந்தப் பாடல் கிடாரில் வெஸ்டர்ன் சுர அமைப்பில் எந்த " scale " இல் வரும் எண்டு எனக்கு சரியா தெரியவில்லை(? ) ! குருடன் பெண்டிலுக்கு அடிச்சா மாதிரி ஒரு குத்து மதிப்பில வாசித்து இருக்கிறேன் ! பின்னணி மிருதங்கம் எனோட கிடாரில மேளம் போல தட்டி வாசித்தால் கொஞ்சம் ஓகே போல இருக்கும் இதே படத்தில "ஒரு சின்னப்பறவை அன்னையை தேடி" என்ற பாடலும் இருக்குறது !

                                    M.B. ஸ்ரீநிவாசன் "மார்படைபால்" திடீர் எண்டு இந்தியாவுக்கு அருகில் உள்ள இலட்ச தீவுகள் என்ற நாடுக்கு சுற்றுலா போனபோது இறந்துவிடார், அவரோட இசையின் ஆன்மாவை நீங்கள் இந்த பாட்டு "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா "கேட்கும் போது உணரமுடியும், K .J .ஜேசுதாஸ் உம் P .சுசிலாவும் பிறந்ததே பாடுறதுக்கு எண்டதுபோல பாடி இருக்குறார்கள்! இதே படத்தில் தான் உஷா உதுப் பாடிய Under the Mango Tree...என்ற ஆங்கிலப் பாடலும் இருக்குதாம் என்று சகோதரி அருந்ததி சொன்னார்கள் ..

                                       M.B. ஸ்ரீநிவாசன் இசையின் Chords Arrangements ல் தெலுங்கு வெங்கடேச தட்சனாமுர்தியின் ஸ்டைல் இவரிடம் இருக்குது! இந்த "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா "பாடலை அழகாக கலை அம்சமாக படம்பிடிக்கவில்லை! சிவகுமார் ஒரு பைத்தியக்காரன்போல தலை மயிரை வளர்த்து கொண்டு,சம்பந்தா,சம்பந்தம் இல்லாமல் நடனம் ஆடுவார் ! இப்படி பல பாடல்களை கவுத்துருகின்றார்கள் தமிழ் சினிமாவில்! " இளமை எனும் பூங்காற்று " பாடலை அப்படிதான் சொதப்பி படம் எடுத்தார்கள்!

                                               சத்தமே இல்லாமல் ,அரிதான ராகங்களில் ,புதுமையாக எதனை முறை கேட்டாலும் அலுக்கதா சில பாடல்ளை அவரின் " ஆன்மா பாடிய சங்கீதம்" போல M.B ஸ்ரீனிவாசனே இதை அவர் பாடலின் மூலம் தெரிவிக்கிறார் .வாழ்க அவர் புகழ்.வாழ்க அவர் சங்கீதம்
...................

Thursday, 10 December 2015

மங்களேஸ்வரி இரண்டாவது சண்டை

மூன்றாம்நாள் மங்களேஸ்வரி நேரத்துக்கு வந்து நான் என்ன சமைக்கிறேன் எண்டு பார்த்தா. சக்சுயுவர் கசுவல் சமர் டீசேட் மேல போட்டு ஒரு வடிவான நீலோட்பவ மலர்கள் நாவல் கலரில் அடுக்கி வைச்ச  ஸ்கார்ப் கழுத்தில சுத்திக்கொண்டு,  டிம்பர்லான்ட் டெனிம் கீழ போட்டு இருந்தா. அந்த டெனிம் ஜீன்ஸ்  அவாவின் குண்டு உடம்புக்கு தமிழ்நாட்டு பொலிஸ் போல இடைவெளிகள் விட்டு இன்னும் ரெண்டுபேரை  உள்ளுக்கு இறக்கலாம் போலப் வண்டிப் பக்கமா பிதுக்கிக் கொண்டு நிண்டது  எனக்கு வாயை ஒழுங்கா வைச்சுக்கொண்டு இருக்க முடியாது,

                           " மங்கல்ஸ் இந்த ஸ்கார்ப் நல்ல வடிவா இருக்கு உங்களுக்கு, பார்பரா ஸ்டைன்பில்ட்  பாடின ஐ  ஆம் எ வுமன் இன் லவ் பாட்டுக்கு அவா பாடுறதைப் பார்த்து இருக்கிறிங்களா , அவாவும் இப்படிதான் நாவல் கலர் ஸ்கார்ப் கழுதைச் சுற்றிக் கட்டிக்கொண்டு பாடுவா"

                        " ஒ அப்படியா நான் இப்ப இதெல்லாம் உன்னட்ட கேட்டனா.."

                       " இல்லை மங்கல்ஸ்,,உங்களுக்கு இந்த ஸ்கார்ப் அட்டகாசமா இருக்கு.."

                        " ஒ அப்படியா,,சரி  நீ வந்தா முதல் வேலையைப் பார், பெண்டுகளின் உடுப்புப் பற்றி சொல்ல நீ என்ன பெரிய பசைன் டிசைனரா,,நீ செய்ய வேண்டிய வேலையே உனக்கு ஒழுங்காத் தெரியாது "

                        " என்னோட கருத்தைச் சொன்னேன் மங்கல்ஸ் "
                 
                         " நீ கருத்தும்,,கிருத்தும் சொல்ல வேண்டாம்,,இதுக்கு உனக்கு நோர்வே அரசாங்கம் சம்பளம் தரவில்லை தெரியுமா,,வந்தமா அண்டா குண்டாவை உருட்டிப் பிரட்டி சமைக்கத் தொடங்கினமா எண்டதை விட்டுப்போட்டு ,பெண்டுகளின் தாவணியில் என்ன முடிஞ்சு இருக்கு எண்டு ஆராய்ச்சி செய்யத் தேவை இல்லை இப்ப, "

                          " தேங்க்ஸ் மங்கல்ஸ்,   வேலைக்கு வந்த முழுவியளத்துக்கு உங்களிடம் திட்டு வேண்டியாச்சு ,,மங்கல்ஸ் ,,இண்டைக்கு வேலை ஆகோ ஓகோ எண்டு பிச்சிக்கொண்டு போகப் போகுது "

                        " அப்ப உன்னில முழிக்கிற எனக்கு என்ன முழுவியளம்,,அதயும் சொல்லு "

                       " தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..."

                            " முதல் இந்தப் பாட்டை நிப்பாட்டு,,கேக்கக் கொதி வருகுது,,,நீ இவளவு நாள் சொல்லியும் திருப்பியும் திருப்பியும் என்ன மங்கல்ஸ் எண்டுதான் சொல்லுறாய்,,அதாவது இருந்திட்டுப் போகட்டும் ,,ஆனால் இந்தப் பாட்டை நிப்பாட்டு,,கேக்கக் கொதி வருகுது "

                               " சரி மங்கல்ஸ் இனி நான் இந்தப் பாட்டைப் பாடவில்லை,,ஓகே தானே "

                                 அன்றைக்கு புதன்கிழமை  மெனுவில் பெப்பர் ஸ்டேக் என்ற நோர்வே உணவு இருந்தது .பிரிச்சைத் திறந்து பார்க்க,அது செய்வதுக்கு மாட்டுத் துடை பீப் இறைச்சி குறைவாக இருந்தது,போன கிழமை நல்ல சூரியா வறுத்த மிளகாய்த்தூள் போட்டு அதில அரைவாசியை நானே பிரட்டல் கறி செய்து சாப்பிட்டது நினைவு வந்தது. .ஆனால் அந்த மெனுவில் சூப் இல்லை .நான் பீப் ஐக்கைக் கவர் பண்ண சூப் ஒன்று போட்டேன் .கொஞ்சம் இந்தியன் ஸ்டைலில் லென்டில் சூப் வேண்டுமென்றே மங்கல்ஸ் பார்க்கட்டும்  என்று போட்டேன்

                                             வயதானவர்கள் என்னோட சூப்புக்கு  எப்பவுமே அடிமை போல எப்ப வருகுது என்று பார்த்தே இருப்பார்கள். அதை செய்து எல்லாருக்கும் பரிமாறினேன். மங்கல்ஸ் சந்தேகமாப்  பார்த்துக்கொண்டு இருந்தா என்ன நடக்குது எண்டு. வயதானவர்கள் ரசித்து கடைசித்துளியையும் கரண்டியால் அள்ளி உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தார்கள் . அது அவாவுக்கும் அவாவின் சத்துணவு சட்டத்துக்கும் பிடிக்கவில்லை

                               "  பெப்பர் ஸ்டேக் தானே மெயின் கோர்ஸ் ஆக இருக்கு  என்னத்துக்கு இப்ப சூப் அதுக்கு முதல் செய்து கொடுக்கிறாய் அது சத்துணவுச் சட்டப்படி கலோரியை அதிகமாக்கும் அது உனக்கு சட்டப்படி பிழை என்று தெரியவில்லையா வயதானவர்கள் கையைக் காலை ஆட்டி எக்ஸ்ரா கொழுப்பை எரிக்க முடியாவிட்டால் இந்த சூப் ரத்த ஓட்டத்தில் உப்பை அதிகாரிக்கும்  அது உனக்குத் தெரியுமா "

                               என்று நான் எதிர்பார்த்த வில்லங்கமான கேள்வியைக்  கேட்டா
                                 
                                " சாப்பாட்டுக்கு முதல்    சூப்    ஒண்டு குடுத்தா,,அது நாக்கைத் திறக்கும் மங்கல்ஸ் "

                                " நாக்கை திறக்கிறதா ,இல்லை நாக்கை நீட்டுறதா எண்டு  நீ டிசைட் பண்ணக்கூடாது,அதை நாங்கள் தான் டிசைட் பண்ணுவம்.அது கட்டாயம் தேவை என்டா நாங்களே அதை இன்றைய மெனுவில் சேர்த்து இருப்பமே."

                              " சரி,,மங்கல்ஸ்,,இனி இப்பிடி செய்யவில்லை "

                               " இப்பிடித்தான் சொல்லுறாய்,,ஆனால் நீ நினைச்சதை செய்துகொண்டு தானே இருக்கிறாய், வியாழகிழமை உனக்கு விசாரணை மூன்று பேர் வருவாங்கள் உன்னை விசாரிக்க,அவங்களுக்கும் எண்ணுக்குக் காட்டுற மாதிரி வாய்க்கு வாய் காட்டாதை "

                                " சரி,,மங்கல்ஸ் ,,உண்மையைக் சொல்லுறேன் "

                                   " வெள்ளிகிழமை எனக்கு,,ஹ்ம்ம் , மங்களேஸ்வரிக்கு இங்கே  கடைசி நாள் ,,ஹ்ம்ம்,,,உணக்கும் கடைசி நாளா இருக்கும் இங்கே வேலை செய்வதுக்கு "

                                  " ஹ்ம்ம்,,சரி மங்கல்ஸ் ,,இதில ஜோசிக்க என்ன இருக்கப்போகுது "

                                    " ஹ்ம்ம்,,இந்த வேலை போனால் பிறகு என்ன வேலை செய்யிற உத்தேசம் .."

                                    " ஹ்ம்ம்,,ஒரு தமிழ் பிரன்ட் ரின்சோரின் பிர்மா வைச்சு இருக்கிறார்,,சன்விக்காவில் ஒரு பெரிய வீடறவன்ச ஸ்கூல் இல்  கழுவ வேலை இருக்கு விரும்பினா வரச்சொன்னார் "

                                     " ஒ ,,அப்படி வேலைதான் உணக்குச் சரிவரும்,,அதையாவது உருப்படியாச் செய்து வாழ்கையில் முன்னேறு,,ஆனால் நான் அடிச்சுச் சொல்லுறேன் நீ அதையும் ஒழுங்கா செய்ய மாட்டாய்,,இருந்து பார் "

                              "   ஹ்ம்ம், அந்த வேலையே இன்னும் தொடங்கவில்லை,,ஆனாலும் உங்கள் மங்களகரமான வாழ்த்துக்கு நன்றி மங்கல்ஸ் "

                          " கழுவல் துடையல் கொம்பனி,,அது உனக்கு ஒத்துவரும்,,மண்டையைப் பாவிக்கத் தேவை இல்லை அந்த வேலைக்கு "

                                  " நன்றி உங்களின் ஆசீர்வாதத்துக்கு மங்கல்ஸ் "

                            "  எனக்கு நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம்,,சிசிலியா யார் உனக்கு ,,அவள் பிறகும் இப்பிடி வேலை எங்கயும் பழசுகளிண்ட மண்டையைக் கழுவுற இடத்தில எடுத்து தருவாளே,,அவள் தானே இந்த வேலை எடுத்து தந்தது என்று பிளான்லாகனிங்  ஒப்பிஸ் இல் கேள்விப்பட்டனே "

                               "  ஒ சிசிலியாவை உங்களுக்கு தெரியுமா மங்கல்ஸ் ,சிசிலியா என்னோட பிரெண்ட்..

                               "  அது  தெரியுது  அந்த  எடுபட்டவள்  உனக்கு  ரெக்கமென்ட்  செய்து  இருக்கிறாள் ..அதுதான்  ஆச்சரியம் "

                                   "  சிசிலியாவை  அப்பிடி  சொல்ல  வேண்டாம் மங்கல்ஸ்   அவள்  நல்லவள் "

                                 "    அட அட  கோபம்  மூக்கில முட்டிச்சிவந்துகொண்டு வருகுதே "

                                 "  என்னைப்பற்றி  என்னவும்  சொல்லுங்கோ   சிசிலியாவை  விடுங்க "

                                    "அட அட  உன்னை  ஒருத்திபோய்  வேலைக்கு  ரெக்கமென்ட்  செய்து  இருந்தால்  அவள்  கட்டாயம்  எடுபட்டவளா தானே  இருக்க  வேண்டும் "

                                    "  அவளுக்கு ஏற்கனவே நிறைய அலுப்புக் கொடுத்திட்டேன்,,இனி அவளா வந்து ஏதும் வேலை எடுத்து தந்தாலும் போக மாட்டேன் "

                       "   பரவாயில்லையே,,குற்றவுணர்வு எல்லாம் இருக்கே உனக்கு , சிசிலியா யாரா இருந்தாலும் எனக்கு ஒண்டும் கொம்பு இல்லை,,நீ அவளை தலையில தூக்கி வைச்சு ஆடு..நான் அவளுக்கு பயமுமில்லை ..மதிக்க வேண்டிய அவசியமும் இல்லை.."

                               " ஹ்ம்ம் சிசிலியா நல்லவள்...அருமையான பெண் ,,என்னோட எல்லா அட்டகாசமும் ரசிப்பாள்...உங்களை மாதிரி ரிப்போட் எல்லாம் எழுத மாட்டாள் "

                                 " ஏனென்றால் அவள் உன்னை நம்புறாள் ,,அதால அவளிண்ட தலையைக் கழுவி நீ உன் வேலையைக் நசுக்கிடாமல் கொண்டு போறாய்..இதுதான் நடக்குது "

                                  "  சரி மங்கல்ஸ் நீங்க சொல்லுறது ,,அப்படிதான் நடக்குது "

                              " வெட்கமாக இல்லையா உனக்கு ஏமாந்த சோணகிரிப் பெண்டுகளின் தலையில இழுத்து இழுத்து சம்பல்அரைக்கிறாயே "

                              "  எனக்கு வெட்கமும் இல்லை ,ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை "

                                " அதெண்டா  உண்மைதான் , ரோச நரம்பு எப்பவோ அறுந்த மாதிரி உன் முகத்தில நல்லாவே எழுதி ஒட்டி இருக்கு "

                                        மங்கல்ஸ்க்கு கரிநாக்கு ,அவா சொன்ன மாதிரித்தான் அந்த சன்விக்காவில் கழுவுற  வேலையில் இருந்தும் ஒருநாள் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த பியானோவில் யாருமில்லாத நேரம்  அந்தப் பள்ளிக் கூடாப் பிரிஞ்சுபல் ரெபெக்காவை  மடியில இருத்தி வைச்சு பாட்டு வாசிக்கப் போய்...வேலைக்குச் சேர்ந்து   மூன்று மாதத்தில் தும்புக்கட்டையால அடிச்சுத் துரத்திப் போட்டாங்கள். மங்கல்ஸ்க்கு கரிநாக்கு ,அவா சொன்ன மாதிரியே தான் அது நடந்தது,,அதைப்  பிறகு ரெபேக்கா கதையில் சொல்லுறேன்...

                                              அந்த எல்டர் சென்டரின் இன்னொரு மூலையில் ஹெல்த் செண்டர் இருந்தது. அதில ஒரு நேர்ஸ் வேலை செய்தாள். வயதானவர்களின் பிளட் சுகர்  , பிரஷர் செக் பண்ணுவாள். பல  உடல்நலக்குறைவுக்கு பரிகாரம் சொல்லி அவர்களை வேண்டுமென்றால் டாக்டரிடம், சிலநேரம் தேவையென்றால் பிசியோதிரபி கொடுக்கும் இடங்களுக்கு அனுப்புவதுக்கு ஒழுங்கு செய்வது அவள் வேலை. முக்கியமாக வயதானவர்கள் அவர்களின் நடையில் , முகத்தில் வைச்சு அவர்களின் ஆரோக்கியத்தைக் கண்டு பிடிப்பாள்.

                                   அவளுக்கு நடுத்தர வயது. இங்கிலிங் பேரிட் சோல்பேர்க் என்று பெயர். ஸ்மார்ட் ஆக குத்திக் காலில  குத்திக் குத்தி மாரித் தவக்கை மண்டுவம் தண்ணியில நீந்துற மாதிரி கையை விசுக்கி நடப்பாள். சில நேரம் அவள் போலவே அவளுக்கு முன்னால நான் நடந்து காட்டுவேன்,ஈஈஈஈஈஈஈஈ எண்டு ருவாண்டா பபூன் குரங்குபோல சிரிப்பாள். சிலநேரம் என் முதுகில டோம் என்று ரெண்டு முஸ்டிக் கையாலும் குத்துவாள். இதை மங்கல்ஸ் ஒருநாள் பார்த்துக்கொண்டு இருந்தா. இதுவும் சத்துணவுச் சட்டப்படி பிழை என்று நினைச்சு இருப்பா.

                                இங்கிலிங் காசு குடுத்தாலும் கதிரையில் இருக்க மாட்டாள் எப்பவுமே என்னவாவது ஓடி ஓடிச் செய்துக்கொண்டு இருப்பாள்  . எல்டர் சென்டரில் வயதானவர்களுக்கு நான் சமைக்கும் சாப்பாடு ஒருநாளும் சாப்பிட மாட்டாள்.வீட்டில இருந்து சாப்பாட்டுப் பெட்டியில் பகல் உணவு கொண்டு வருவாள்.  சில நேரம் நான் என்ன தில்லுமுல்லு  சமையலில் செய்யுறேன் என்று அவளுக்கு நல்லாத் தெரிந்து இருக்கலாம். வந்த முதல் நாளில் இருந்து மங்கல்ஸ் அதையும் கவனித்துக் கொண்டு இருந்தா.

                                         ஒரு அற்ப விசியமும் என்னோட கதைக்காத இங்கிலிங் ஒரு விசியம் மட்டும் என்னோட எப்பவும் அவளாவே வந்து கதைப்பாள்.அவள் ஜெகோவா விட்னஸ் என்ற கிறிஸ்தவ நம்பிக்கை அமைப்பில் தீவிர விசுவாசியாக இருந்தாள்.அதால் அந்த அமைப்பு வெளியிடும் வோச் டவர்  என்ற பத்திரிகையின்  தமிழில் வரும் காவற் கோபுரம் மொழிபெயர்ப்பைக்  கொண்டு வந்து வாசிக்கச் சொல்லி தருவாள். அதில எப்பவுமே ஒரு கட்டுரை மோசமான மனிதர்களாக இருந்து எப்படி ஜெகோவா தங்களை முழுமை மனிதர் ஆக்கினார் என்று விசிவாசிகள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை எழுதி இருப்பார்கள், அதை மட்டும் தான் அதில நான் வாசிப்பேன்.

                                     அன்றைக்கு வெளியால நல்ல வெய்யில் வசமா வடக்கு தெற்கு பக்கமா விழுந்து கொண்டு இருந்தது,மரங்கள் கொஞ்சம் பாசியாக பச்சை நிறத்தை உறிஞ்சிக்கொண்டே மெல்லிய குளிர் காற்றோடு பழங் கதைகள் கதைத்துக்கொண்டு   இருக்க , எல்டர் செண்டர் இக்கு வெளியே மரவாங்கில் இங்கிலிங் கோப்பி குடிச்சுக்கொண்டு இருந்தாள் ,நான் மங்கல்ஸ் ஐத் தேடினேன் அவா கண்ணாடி போட்டுக்கொண்டு,ஒரு மூலையில்  சத்துணவு ரிப்போட் எழுதிக்கொண்டு இருந்தா

                                " மங்கல்ஸ் ஒரு கோப்பி எடுத்துக்கொண்டு வாங்களேன் வெளிய போய் மரவாங்கில் கொஞ்ச நேரம் இருப்பம்."

                                      "  ஒ ,,இப்ப நான் பிஸி,,இப்ப நான் என்ன எழுதிக்கொண்டு இருக்கிறான் தெரியுமா "

                               " என்ன வேற  எழுதப்போரிங்க,,,எனக்கு ஆப்புத்  தானே எழுதுறிங்க,,அதைக் கொஞ்சம் வெளிய போய் முகத்துக்கு வெயில் பிடிச்சுட்டு வந்தா இன்னும் இறுக்கி எழுதலாமே "

                               "  உன்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை ,  உனக்குப் பயம் இல்லையா "

                             "  இல்லை மங்கல்ஸ் ,,பயத்தை எப்பவுமே பத்தடி தள்ளியே வைப்பேன்,பயம் உண்மையில் பிரயோசனம் இல்லை..சும்மா டைம் வேஸ்ட் அது ,நான் அதை மண்டைக்குள் ஏற்றுவதேயில்லை "

                                " ஒ.சும்மா  வாய்தான் ."

                                   " நெல்சன் மண்டேலா இருவத்தி மூன்று வருடம் ஜெயிலில் இருந்தாராம் , அவர் வாழ் நாள் முழுவதும் விரும்பிப் படித்த ஒரே ஒரு கவிதை Invictus ,,,அது  தெரியுமா மங்கல்ஸ் ."

                                   "இது எல்லாம் யார் உனக்கு சொல்லித் தந்தது, சிசிலியா  சொல்லித் தந்தாளா  " 


                                  " இல்லை ,,நானே அதன் தமிழ் மொழிபெயர்ப்பில் படிச்சேன் மங்கல்ஸ் " 


                           

                            " சரி, அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் "

                    

                                " வில்லியம் எர்னெஸ்ட் ஹென்லி என்பவர் எழுதியது அந்தக் கவிதை ,தன்னோட வாழ்கையில் முதலில் பயத்தைஅடியோடு அகற்றியது என்றும் பின் அகிம்சை வழிப் போராடதுக்குத் தன்னை  மாற்றியது என்றும் மண்டேலா எழுதி இருக்கார் "

          

                                 " ஒ,,, அதால இப்ப தாங்கள் சொல்ல வாறது என்னவென்று அறிய முடியாமா , மிஸ்டர் N ... "
     

                                  " அதெல்லாம் எல்லாம் படிச்சிருந்திங்க என்றால் இப்படி கேள்வி எல்லாம் கேட்க மாட்டிங்க மங்கல்ஸ் அதுதான் நான் சொல்ல வந்தது மேடம் " 


                              " பெரிய தத்துவத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை,,சரி கோப்பி மிசினில கோப்பி எடுத்துக்கொண்டு வாறன்,அந்த நேர்ஸ் உடன் எனக்குக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை,,சும்மா வாறன் "

                           "  இங்கிலிங் நல்லவள்,,சும்மா வாங்க ,,வந்து இருங்க ,,அவள் ஒரு தண்ணி தெளிச்சுவிட்ட  பைபிள் கேஸ்..அவள் வாயைத்திறந்து விட்டால் சுவிசேசம் தான் கொட்டும் "

                                       " அந்த  அறுவையை  என்னையும்  கேட்கச்  சொல்லுறியா ,,நான்  சுத்த  சைவம்  தெரியுமா,,வெள்ளிகிழமை   பாம்புப்  பொத்துக்கு  பால்  ஊற்றி விரதம்  இருக்கும்  குடும்பத்தில்  பிறந்த  ஆள்  தெரியுமா  அது  உனக்கு "

                                    "பாம்பு  பால்  குடிக்காது....சயன்சில்  பாம்பு  பால்  குடிக்கும்  என்று  இல்லை,,,அது சும்மா  ஒரு  நம்பிக்கை  " 

                                     " அட  அட    ,,,பாம்பு  பால்  குடிக்காதா ,,உண்மையாவா  சொல்லுறாய் "

                                       " ஓம்...மங்கல்ஸ்  பாம்பு  பால்  குடிக்காது,,,நான்  சொல்லுறது  பொய்  என்றால்  ஒரு  பாம்பு  கொண்டுவாரன்  பால்  வைச்சுப்  பார்ப்பமா "

                                      " அய்யோ,,,ராமா  ஆளைவிடு ,,சரி  கோப்பி  குடிப்பம்..ஆனால்  நான்  அந்த  நேர்ஸ் உடன்  கதைக்க மாட்டேன் "

                                     ".சும்மா கதைப்பம் வாங்க மங்கல்ஸ் ,இப்பிடி ,ரிப்போட் எழுதி எழுதியே உங்களுக்கு ஒயில் இல்லாதா எஞ்சின் போல மண்டை இறுகப்போகுது "

                               "  அடி  செருப்பால ,,முதலில்  மேலதிகாரிக்கு  நக்கல்  நளினம்  நெளிப்புக்  காட்டாதை "

                                        ஹம்..செருப்பால  பிறகு  அடியுங்க,,இப்ப கோப்பி  குடிப்பம்  வாங்க  மங்க்ல்ஸ் 

                                      நான் ஒரு கோப்பிக் கோப்பையில் கோப்பி எடுத்துக்கொண்டு போய் இங்கிலிங்க்கு முன்னால இருந்தேன். மங்கல்ஸ் ஆப்டன் போஸ்டன் நோர்வே நியூஸ் பேப்பர் எடுத்துக்கொண்டு வந்து அந்த மரவாங்கின் தொங்கலில் இருந்தா. இங்கிலிங் மங்கல்சுக்கு ஹைய்  சொன்னாள், மங்கல்ஸ் ஹைய் சொன்னா, நியூஸ் பேப்பரால் முகத்தை மூடிக்கொண்டு அதை ஆர்வமா வாசிப்பது போலப் பாவனை செய்துகொண்டு இருந்தா .

                                            நான் ஒரு பரமுன்ட் கோல்ட் சிகரட்டைப் பெட்டியில் இருந்து உருவி எடுத்தேன்.அதை மேசையில் மூன்றுதரம் பில்டர் பாக்கமாகத் தலை கீழாகத்  தட்டினேன், பிறகு அதை மேலும் கீழும் நீவி விட்டேன், பிறகு அதை முகர்ந்து பார்த்தேன். எரிஞ்சு கரியாகப் போகப் போற சிகரட்டில் தான் வாழ்வின் உன்னதமான விசியங்கள் அடங்கி இருப்பது போல அதை வைச்சு விளையாட்டுக் காட்டினேன். நான் எப்பவுமே அப்படிதான் சிகரட் பத்துறத்தை வளைக்காப்பு போட்ட பெண்கள் நடு இரவில் நடந்த சம்பவங்களை நினைப்பது போல  ஒரு நல்ல சந்தோஷ நிகழ்வாக நினைப்பது


                                       பிறகு நான் இங்கிலிங் உடன் கதைக்கத் தொடங்கினேன். அவள் 

                                 "  புதிதாக நோர்வேயிட்கு வந்துள்ள அரசியல் அகதிகளுக்கு ரோட்டில நிண்டு காசு சேர்கிறோம் உண்டியல் குலுக்க வாறியா " எண்டு கேட்டாள். 

                                      "  நானே  சீவியத்துக்கு  உண்டியல்  குலுக்கிக்கொண்டு  நிக்கிறேன் இங்கிலிங் ,,நீ  வேற முசுப்பாத்தி  விடுறாய் "

                                     "  உனக்கு  என்ன  குறை ,,நல்ல  குக்  வேலை  செய்யுறாய்  தானே "

                                " அதுவும்  சில  நாட்களில் கையை விட்டுப்போயிடும் இங்கிலிங் "

                               "   என்ன  சொல்லுறாய் ,,என்ன  நடக்குதுப்பா  உன்  வாழ்க்கையில்  "

                                    " காலைவார  ஒரு   கூ ட்டம்  இருக்கும்வரை ,,எது  எல்லாம்  நடக்கவேணுமோ  அதெல்லாம்  நடக்கும்  போலதான்  இருக்கு நடப்பு  நிலவரம்  இங்கிலிங் "

                                     "   அது  பெரிய பிரசினை  இல்லை ,,ஆண்டவர்  கைவிட  மாட்டார்  நம்பு  பைபிளில் ஏசயா  தீர்கதரிசி  சொல்லி  இருக்கிறார் தடம்புரளும்   நேரத்திலும்   ஆட்டுக்குட்டி  மான்  போலப்  பாயும்  ஆண்டவர்  உன்  கண்ணீருக்கு பதில்  தருவார்  என்று  பயப்பிடாதை "

                                      "   ஹ்ம்ம்,,ஆனாலும்  பசுத்தோல் போர்த்த  புலிகள்  தானே  நரிகள்  போல  உலாவுதுகள்  நம்மைச்சுற்றி இங்கிலிங் "

                                    "  ஹ்ம்ம்,,நீ  என்னவோ  வெறுப்பில  யாரையோ  குத்திக்காட்டும் நோக்கத்தில்  என்னவோ  சொல்லுறாய்,,ஒழுங்கா சொல்லு "

                                     " சொல்லுறதுக்கு  இதுக்குமேலே  ஒன்றுமில்லை இங்கிலிங் "

                                     "  சரி  விடு  ஜோசிக்காதை  நல்லதே  நடக்கும்  உனக்கு "

                                                 நான் உண்மையில் அவளுடன் அதிகம் பைபிள் பற்றி  கதைக்கவில்லை எண்டுதான் சொல்ல வேணும்  என்னோட கடைசி நரிக்குறவக்  குறளிவித்தையை அவளை நடுவில வைச்சு மங்கல்ஸ்க்குக் அதில காட்டினேன். ரெண்டாவது பொறுத்த சண்டை அந்த மேசையில் உருவாகும் என்று அம்மாவனா என்னோட வீராளி அம்மாளாச்சி சத்தியமா நான் எதிர் பார்க்கவே இல்லை,,,

............தொடரும் .........