Tuesday 5 January 2016

பஞ்சு அருணாசலம்.

செட்டிநாட்டில்,அதிகம் அறியப்படாத ஒரு கிராமத்தில் அரிசி மில் நடத்திக்கொண்டு இருந்த ,சினிமா, இசை ,பாடல்கள் இன் கவர்சியால் கவரப்பட்டு, சென்னை வந்து கவிஞ்சர் கண்ணதாசனுக்கு உதவியாளராய் இருந்து அவர் சொல்ல சொல்ல பதினைத்து வருடங்கள் பக்கத்தில் இருந்து பாடல்களை எழுதிக் கொடுத்து ,கண்ணதாசனுக்கு எடுபிடிபோல வெத்திலை பாக்கு மடித்துக் கொடுத்து , பாடல் எழுதும் வித்தையைக் கண்டு பிடித்து, ,தற்செயலாக " பொன் எழில் பூத்தது பூஞ்சோலை... " என்ற பாடலை மக்கள் திலகத்துக்கு எழுதி அன்று முதல் பாடலாசிரியர் ஆகி ,

                                                      கவிஞ்சர் வாலி மெல்லிசை மன்னர் சகாப்தம் முடிய பாடல்கள் எழுத வாய்ப்பு அற்று இருந்த நேரம் அவரை அழைத்துவந்து தன்னோட " வைதேகி காத்திருந்தாள் " படத்தில் " ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சம் காற்றாடி போலாடுது " என்று இளையராஜாவுக்கு எழுதவைத்து தமிழ்நாட்டை அந்தப் பாடல் பட்டி தொட்டி எல்லாம் கலக்கவைத்து ,சொந்தமாகவே அவரே நிறையப் பாடல்கள் எழுதிக்குவித்த,

                              கவிஞ்சர் கண்ணதாசனின் மூத்த சகோதரரின் மகன் பஞ்சு அருணாசலம்.
  அவர்தான் காமடி நடிகர் விவேக் என்ற விவேகானந்தனை, விவேக் செய்துகொண்டு இருந்த அரசாங்க வேலையை விட்டு விட்டு முழு நேர நடிகன் ஆகு என்று நம்பிக்கை கொடுத்த...

                               தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை எழுதி,பாடல்கள் எழுதி , யாருமே நம்பிக்கை அற்று இருந்த நேரம் இளையாராஜா என்ற இசை அமைப்பாளரை முதல் முதல் இனம் கண்டு " அன்னக்கிளியில் " அறிமுகம் செய்து கமலஹாசன் ,ரஜனிகாந்து கால் ஊன்ற கதைகள் எழுதி தானே அதை படமாகத் தயாரித்த பஞ்சு அருணாசலம் செட்டியார் ,,,

                                  திரைக்கதை எழுதுவது கடினம்,,கதை,கவிதை,நாவல் எழுதுவது போல அதை எழுத முடியாது,விஷுவலா வெள்ளித்திரையில் வருவது போல சம்பவங்கள் ,திருப்பங்களை வைச்சு பார்பவர்களை தியேட்டர் கதிரையை விட்டு எழும்பிப் போகாமல் எழுதவேண்டும். அவர் எழுதிய " மேலோன்சொளிக் ஸ்டைல் " திரைக்கதை " ஆறில் இருந்து அறுபது வரை,," அதேபோல " மெலோராமிக் ஸ்டைலில் " எழுதிய திரைக்கதை " கல்யாணராமன்" ,இரண்டுமே வெள்ளிவிழாக் கொண்டாடிய படங்கள். இந்த இரண்டு படமும் ஒரு கிழமையில் ஒரே நேரத்தில் திரைகதை எழுதப்பட்டு,ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது என்று சொல்லுறார்கள் .பஞ்சு அருணாசலம் அங்கேயும் இங்கேயும் நடந்து நடந்து கொண்டுதான் திரைக்கதை எழுதுவாராம்

                                     அன்னக்கிளி பாடல்களை இளையராஜா எந்தவித வாய்தியமும் இல்லாமல் மேசையில் தட்டி கிராமத்தில் நெல்லு அறுக்கப் போகும் பெண்களின் தெற்கில் இருந்து வந்த நாடோடித் தென்றல் நின்று நிதானமா அள்ளிக்கொடுத்த " அன்னைக் கிளி உன்னை தேடுது ஆறு மாதம் ஒருவருடம் ஆவாரம்பூ மேனி வாடுது..." என்று தான் போட்ட மெட்டுகளை அவரே பாடிக்காட்டி இருக்கிறார்.அந்தப் பாடல்கள் தந்த தொடக்கம் இன்றுவரை இளையராஜாவை தேட வைக்கும் வரலாற்று சம்பவத்தை தமிழ் சினிமாவின் இசை அத்திவாரக் கற்களின் ஆத்திசூடி ஆக்கிக் காடியவர் பஞ்சு அருணாசலம்.

                              அரிசி வியாபாரம் செய்துகொண்டு இருந்த இந்த சாதாரண மனிதர் மட்டும் இல்லை என்றால் இளையராஜா என்ற ஒரு இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைக்காமலே போயும் இருக்கலாம். ஜோசித்துப் பார்த்தால் சாதாரண மனிதர்களின் அசாதாரண தன்நம்பிக்கையில் தான் வரலாறு பொன் எழுத்துகளைத் தேடி எடுத்து திசை திரும்புகிறது....


.

5 comments :

  1. அரிசி வியாபாரம் செய்துகொண்டு இருந்த இந்த சாதாரண மனிதர் மட்டும் இல்லை என்றால் இளையராஜா என்ற ஒரு இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைக்காமலே போயும் இருக்கலாம். ஜோசித்துப் பார்த்தால் சாதாரண மனிதர்களின் அசாதாரண தன்நம்பிக்கையில் தான் வரலாறு பொன் எழுத்துகளைத் தேடி எடுத்து திசை திரும்புகிறது....

    மிகச்சரி .. நல்லதொரு பதிவு அரசன்

    ReplyDelete
  2. அருமையான சில புதிய தகவல்கள் வாசித்தேன். நன்றி. காலத்துக்கு ஏற்ற பதிவு

    ReplyDelete
  3. ஆழ்ந்த இரங்கல் ..

    எளிமையான ஆழமான மனிதர்.

    ReplyDelete
  4. ஆழ்ந்த இரங்கல் ..

    எளிமையான ஆழமான மனிதர்.

    ReplyDelete