Sunday, 25 October 2015
Vasanthathil Orr Naal Acoustic Guitar Cover
ஞாயிறு விடுமுறை நாள் இசை விருந்து. இசைக்கருவியில் வாசிக்கக் கடினமானஇந்தப் பாடலை அகோஸ்டிக் கிட்டாரில் என்னோட ஸ்டைலில் வாசித்துள்ளேன்.சும்மா பொழுதுபோக்காக வாசித்துள்ளேன் , பிழைகள் இருந்தால் மன்னித் துக்கொள்ளுங்க. வசந்தகாலக் குயிலோசை பி. சுசிலா அம்மாவின் இளமைக்குரலில் " வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாள் " மறைந்தும் மறையாத மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் மறக்க முடியாத மெட்டு. எப்போதுமே உத்தரவாதமாக ஏக்கமான உணர்ச்சியை அடிச்சுப் பிழிந்து தரும் தர்பாரி கானடா இராகத்தில் கர்நாடக ஸ்டைலில் வேகமான ஸ்வரக் கோவையில் வரும் பிருகாக்கள் அதிகம் உள்ள பாடலின் இரண்டு இண்டர்லூட் இடைஇசையிலும் கல்யான உணர்வு கொடுக்கும் நாதஸ்வரம் தவில் இசையுடன் வெஸ்டர்ன் ரிதம் டெம்போவும் கலந்து பொன் வண்ணமாலை வைத்திருக்கும் ஸ்ரீராமனுக்காகக் காத்திருக்கும் வைதேகியின் திருமணம் அந்தப் படத்தில் வரும் மூன்று தெய்வங்களும் வாழ்த்த உள்ளம் கொள்ளை கொள்ளும்பாடல்
Tuesday, 20 October 2015
எனக்கொரு கனவு இருக்கு ,,
தோசைக்கல்லு LP இசைத் தட்டுக்களின் காலம் ஒரு பொற்காலம் . அதில் வந்த இசை மனித உணர்வுகளின் மார்கழி மாத வாசல்க் கோலங்கள் . இரைச்சல் இல்லாத இயற்கையான சங்கமம்.அவைகள் ஒரு காலத்தின் அடையாளம் போல இப்பவும் பல பழைய சாமான்கள் விற்க்கும் கடைகளின் அலுமாரிகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கு. அதன் வரலாற்றுக் கவர்சிக்கும், கலைப் பெறுமதிக்கும் மதிப்புக் கொடுக்கும் மக்கள் தேடித் தேடி அதை வேண்டிச் சேர்ப்பதை பார்த்து இருக்கிறேன்.
யாழ்பாணத்தில " பஸ் ஸ்டாண்டில " 80களில் " நியூ விக்டேர்ஸ் " என்று ஒரு " மூயுசிக் ரோகொரடிங் பார் " இருந்தது, அதன் வெளியே பல இங்கிலிஸ் பாலடகள் பதிந்து வந்த, தோசைக்கல்லு சைசில இருந்த பிளாஸ்டிக் தட்டில பல இசைதட்டுகளை வெளியே எல்லாருக்கும் தெரியிற மாதிரி வைத்திருந்தார்கள் !அதில ஒரு LP அல்பத்தின் கவரை " ஷோ கேசில் " வைத்திருக்க ,அதில இரண்டு வெள்ளைகார ஆண்களும்,இரண்டு வெள்ளைகார பெண்களும் அருகருகே ஒட்டிக்கொண்டு , கைகளைக் கட்டிக்கொண்டு நிண்டு, சிரித்துக்கொண்டு, ஒரு "ஒளி வெள்ளம் பாயும் " வட்டத்தில் நின்று போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
அந்த இரு ஆண்களும் ஸ்டார் வார் படத்தில வார "வேற்றுகிரக வாசிகள் " போல இறுக்கமாக உடை அணிந்துகொண்டு இருக்க, அந்த இரு பெண்களும் அதைவிட இறுக்கமாக உடைஅணிந்து, மார்புப் பகுதிய வஞ்சகம் இல்லாமல் தாராளமாக காட்டிக்கொண்டு இருக்க, அந்த இரு பெண்களும் அணிந்திருந்த குட்டைப் பாவாடை அவர்கள் குனிந்தால் எல்லாம் தெரியும்போல இருக்க, சொக்கநாதரே சொக்கிப்பிவிடுவார்போல இருக்க , அவர்களை சும்மா விரலால சுண்டினாலே சரி கம ப த நி ச நாதம் பேசும்போல அவர்களின் உடலமைப்பு வில்லா வளைஞ்சு நிக்க , இசை மீது இருந்த தீராத தாகத்தால் , அவர்களே பாடினால் எப்படி இருக்கும் என்பதை அறிய அந்த" ரோகொரடிங் பார் " இக்குள்ள துணிந்து போய்

"இந்த அல்பத்தின் கவரில் இருபவர்கள் யார்? "
எண்டு அங்கே தலையில "ஹெட் போனை" கொழுவி வேலை செய்தவரிடம் கேட்டேன் "
அவர் இவர்கள்தான் உலகப் புகழ் பெற்ற ABBA என்ற இசைக் கோஸ்டி " என்றார். அவரிடம்
அவர் இவர்கள்தான் உலகப் புகழ் பெற்ற ABBA என்ற இசைக் கோஸ்டி " என்றார். அவரிடம்
" இசை என்றால் எனக்கு உசிர், இந்த அல்பத்தை கொஞ்சம் கிட்டத்தில பார்க்க தரமுடியுமா?"
என்றேன், அவர் எடுத்து தந்தார்,தெரிந்த தற்குறி இங்கிலீசை வைச்சு நோண்ட அதில் அவர்கள் ஸ்வீடன் என்ற நாடில இருக்குறார்கள் எண்டு எழுதிக்கிடந்தது ,
" ஸ்வீடன் என்ற நாடு எங்க இருக்குது ?" அவரிடம் அவரிடம் கேட்டேன் , அவர் "ஹெட் போனை" கழட்டி,தலையை சொரிஞ்சுபோட்டு,
" ஐரோப்பாவில் இருக்குது எண்டு நினைக்குறேன் , அதுக்கு முதல் உமக்கு இப்ப என்ன வேணும்?"
எண்டு கோபமாகாக் கேட்டார் , நான் கோவிக்கவில்லை , நானே பிட்காலதில ஒரு புகழ் பெற்ற கிடாரிச்ச்டா வருவேன் எண்டு எனக்கே அப்போது தெரியாது , பிறகு அவர்க்கு எப்படி என்னோட அருமை தெரியப்போகுது எண்டு போட்டு !
" இவர்களின் பாடல்கள் கேசட் வடிவில் உள்ளதா?" எண்டு கேட்டேன் ? அவர் ,அதுக்கு
" இல்லை , LP வடிவிலதான் உள்ளது"
என்றார் , இதுக்குமேல கேட்டால் மூன்சியில அறை விழும் என்பதுபோல என்னை சுவாரசியம் இல்லாமல் பார்க்க , நான் படு சுவாரசியமகா அந்த இரு பெண்களையும் பார்த்துகொண்டு, இனி அவரிடம் என்னத்தை கேட்கிறது எண்டுபோட்டு,
" இதை கேசட்டில ரெகார்ட் பண்ணி தருவீர்களா ?" என்றேன், அவர்
" பேந்தும்பார் , இந்தப் பெடி நேரம் காலம் தெரியாமல் முசுப்பாத்தி செய்யுறதை, ரேகொர்ட் செய்யத் தானே ரேகொர்டிங் பார் வச்சிருக்கிரம்,வேற என்னதுக்கு தலைமயிர் வெட்டுரதுக்கே இதை வைச்சிருக்கிறம் "
என்றார், அவரை பார்த்து நட்பாக சிரிச்சுப்போட்டு , அந்த அல்பத்தை கடைசியா கொஞ்சம் முகத்துக்கு கிட்ட வைச்சுப் பார்த்தன்.
இனி பொய் சொல்லி என்ன வரப்போகுது ,எல்லாத்தையும் இழுத்து மூடிக்கொண்டு இருக்கிற யாழ்ப்பாணக் கலாசார சூழலில் இருந்ததால் , கிட்டத்தில பார்க்க அந்த இரு பெண்களும் சொக்க தங்கம் போல இருக்க, அவர்களின்கண்களில் ஒருவித வசியம் இருந்தது, அப்பவே மனதளவில் அந்த நேரம் சபதம் எடுத்தேன், வளர்ந்து கலியாணம் கட்டினால் ,இப்படி ஒரு வெள்ளைக்கார .பொன்னிற கூந்தல் சடைச்ச சொப்பன சுந்தரியத் தான் கட்டவேண்டும் எண்டு. சொல்லி வைச்ச மாதிரி விதி ஆரைத்தான் விட்டு வைக்குது, நாசாமாப் போன அந்த யாழ்ப்பான சபதம் என்னோட வாழ்கையில் நடந்தது, அதுவும் ஸ்வீடனிலயே நடந்தது!
அவர் அப்படி ரேகொட் பண்ணிதந்த அந்த கேசட்டை வீட்டில இருந்த ஒரு லொட்டு லொடக்கு "டேப் ரெகார்டரில் " போட்டுக் அடிக்கடி கேட்பேன், என்னோட அம்மாவே வியந்து பார்த்து ,
" இங்க பாரடா இவனை, இங்கிலிஸ் பாடத்துக்கு 26 மார்க்ஸ் இக்கு மேல ஒருநாளும் போகாத இவன், இங்கிலீசு பாட்டுக் கேட்கிறதை"
எண்டு கிண்டல் அடிச்சா ! அவர்கள் பாடிய அந்த ஆங்கிலப் பாடல்களின் கருத்து விளங்கவில்லை,, ஆனால் அவர்கக்ளின் அந்த இசை அந்த இரு பெண்களைப் போலக் கவர்சியாதான் இருந்தது !
வீட்டுக்கு கொண்டுவந்த கெசட்டில் இருந்த "DANCING QUEEN" பாடல் , அது தான் ABBA இன் முதல் பாடலாம் , இதை அவர்கள் ஐரோப்பா அளவில் நடக்கும் EURO SONG பாட்டுப் போடியில் பாட, அது முதலாவதா வர, இதுதான் அவர்களை உலகம் அறியச் செய்தது, உலகை கலக்கிய ABBAஇன் பாடல்கள் டெக்னிகலா MUSICALLY GENIOUS வகையில் இல்லை,வெறும் POWER CHORDS ஐ வைத்து "மைல்ட் பொப் " மெலடிகள், அவர்களின் பெரும்பாலனா "Lyrics " பாடல்வரிகளும் " உன்னை நினைத்தன், காதல் வந்தது,கவிதை எழுதினன்,அதை பாட்டப்படிச்சன்" டைபில வெறும் மேம்போகானவை, ஆனால் அவர்களின் இசை அந்த வரிகளுக்கு உலகளவு உயிர் கொடுத்தது உண்மை!

ABBA வின், நான் ஜொள்ளுவிட்ட அந்த இரு பெண்களும், இரு ஆண்களும் ," Take A Chance On Me " எண்டு மனம் விரும்பி , அவர்களுக்குள்ளையே " Gimme! Gimme! Gimme! " என்று பாடி, "DANCING QUEEN " என்று ஆடி ," Honey Honey" என்று கட்டிப் பிடிசுக் காதலர்கள் போல வாழ்ந்து , " I Do, I Do, I Do, I Do, I Do " எண்டு அடுத்தடுத்துப் பிள்ளைகள் பெற்று , கொஞ்சம் அலுத்துப் போக " Knowing Me Knowing You " என்று சொலிப் பின்னர் பிரிந்தார்கள், பிரிந்து அந்த காதலையும், காதலின் பிரிவையும் " " The Winner Takes It All " என்று உருக்கமாக , ஆளை ஆள் மாறி மாறிப் பழியப்போட்டு , ஆற்றாமையில் " The Day Before You Came " எண்டு பாடலாக பாடினார்கள்! அப்படி வேற எந்த ஒரு இசைக்குழுவும் செய்யவில்லை!
நான்கு இசைக்கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய இசைக்குழு, அதில் அக்னிதா என்ற பாடகி சின்ன வயசிலேயே தனிப் பாடகியா கொஞ்சம் புகழ்பெற்ற ஒருவர் , பெனி என்ற கிட்டாரிஸ் , அக்கொர்டியன் வாசித்துக்கொண்டு இருந்த பிஜோர்ன் என்ற பின்நாட்களில் பியானோ வாசிப்பவர் இவர்கள் மூவரும் சுவிடிஷ் இனத்தவர்கள்.சுவிடனில் பிறந்தவர்கள். அந்தக் குழுவில் இருந்த நாலாவது பெண் பாடகியான பிரிடா நோர்வேயில்ஜெர்மன் நாசி இராணுவ அப்பாவுக்கும்,வட மத்திய நோர்வே நாட்டு பெண்மணிக்கும் பிறந்தவா.
மிகச் சிறிய வயசில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிடாவின் அப்பா ,மனைவியையும்,பிள்ளையையும் கைவிட்டுப்போட்டு மறுபடியம் ஜெர்மனிக்கு போக பிரிடாவை அவாவின் பாட்டி சுவிடன் கொண்டுவந்து வளர்த்த . தான்னோட முப்பது சொச்சம் வயசில் தான் தன்னோட ஜெர்மன் நாசி ராணுவ அப்பாவைக் கண்டு பிடித்தா பிரிடா. தற்போது பிரிடா ஜெர்மனியில் வசிக்கிறா. தன் அப்பாவழியில் ஒரு பிரபுக்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தவர்.பணக்காரி .
உலகின் முக்கிய நட்ச்சத்திரன்ங்களாய் ABBA ஜொலித்த போது அவர்களின் இசைக் குழுவின் LIVE நிகழ்ச்சி 1979: இல் Wembley Arena London இல் நடந்தபோது இசை படிக்கும் பாடசாலை மாணவிகள் " I Have A Dream " என்ற பாடலை தாங்கள் மேடையில் படிக்கப்போவதாக கேட்க அவர்களுடன் சேர்ந்து மேடையில் பாடிப் படித்தார்கள். சுவுடிஷ் மக்கள் பந்தா போடமாட்டார்கள் ,அதைவிட குழந்தைகளை நேசிப்பவர்கள்.
இன் இசை வெற்றிக்கு முக்கியமான் ஒரு காரணம் அவர்களின் இசை ஒலிப்பது டெக்னிக். சுவிடன் அந்த நாட்களில் உலகின் முக்கிய டெக்னிகல் வளர்ச்சியுள்ள நாடாக இருந்தது.அதனால் அவர்கள் ஸ்டாக்ஹோலம் போலர் ஸ்டுடியோவில் மிகத் தரமான தெளிவான ஒலிப்பது மற்ற எல்லா இசைக்குழுக்களையும் விட முன்னோடி டெக்னிக்கில் கொஞ்சம் புதுமையாக செய்தார்கள்.
இன் பாடல்களை அதிகம் எழுதியது ஸ்டிக் அன்டர்சன் என்ற பாடலாசிரியர். ஒரு சுவிடன் நாட்டவர் சுவிடிஷ் தாய் மொழியாகக் கொண்டவர் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதி அசத்தியது இன்னுமொரு ஆச்சரியம் . அதைவிட அவர்களின் ஆங்கில உச்சரிப்பு இங்கிலிஸ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் பாடல் கேட்கும் போது மூக்கில விரலை வைச்சு ஜோசிக்க வைத்திருக்கு
என்பதுக்களின் இறுதியில் ABBA மிகவும் அடக்கமான , பப்ளிசிட்டி விரும்பாத " I Have A Dream " எண்டு தன்கள் இசை வாழ்வை அடக்கமாகத் தொடங்கிய அவர்கள் ,அவர்களின் இசைவாழ்வு முடிந்தபின், " thanks you for the music " எண்டு பாடிப்போட்டு, பொது மேடைகளில தோன்றுவதை பெரும்பாலும் தவித்தார்கள் ! இன்றைவரை ஸ்வீடன் எண்ட நாட்டை உலக அளவில் பிரபலம் ஆக்கிய பெருமை எனக்கும் ...கொஞ்சம் ABBA என்ற இசை குழுவுக்கு இருக்கிறது!
.
.
Sunday, 18 October 2015
M.G.R
யாழ்பாணத்தில எங்களின் ஊரில M.G.R என்ற " மக்கள் திலகம் "என்ற ,இலங்கை கண்டியில் பிறந்த, மருதர் கோபாலன் ராமச்சந்திரனுக்கு அதி தீவிர ரசிகர்களா இருந்தவர்கள், தொழிளால வர்க்க ,உடலால் கடுமையாக உழைப்பவர்கள். அவர்கள்ர்தான் M .N ,நம்பியாருக்கும் அதிதீவிர எதிரியாகவும் இருந்தார்கள் !
தியடரில் M.G.R படம் வந்தால் அதை முதல் ஷோவில பார்க்க தியட்டர் வாசலில் முதல் நாளே போய் படுத்து இருந்து அடுத்தநாள் முதல் ஷோவில பார்த்து ஜென்மசாபல்யம் அடைவார்கள்! அவர்கள் வசிக்கும் குறுச்சியில் அவர்களின் இதய தெய்வத்துக்கு சிலை வைத்து அதுக்கு கீழே " பெண் மனச் செம்மல் " எண்டு அவரைப் பற்றி நன்றாக அறிந்ததாலோ , அல்லது தமிழ் மொழி தெரியாததாலோ பிழையாக தமிழில் எழுதி இருந்தார்கள்!
தமிழ் நாட்டில் ஒரிஜினல் M.G.R இறந்தபோது ,அவர் ஈழ விடுதலைக்கு ஆதரவா இருந்ததால்,யாழ்பாணத்தில அனுதாப அலை கொஞ்சம் "ஓவராக" அடித்தது ! இயக்க ஆதரவாளர்கள் வாழை ,தோரணம் கட்ட,எங்கள் ஊர் M.G.R அதிதீவிர ரசிகர்கள் , பெரிய தென்னை மரத்தையே புடுங்கிக்கொண்டு வந்து சந்தியில் நட்டுப்போட்டு,சந்தியில் இருந்த பாரதியார் சிலையை தூக்கிப் போட்டு அதில அவர்களின் "இதயக் கனி " சிலையை வைக்கப் போவதாகப் பயமுறுத்தநிலைமை கொஞ்சம் மக்கள் திலகம் படங்களில் வரும் வாள் சண்டை, குஸ்தி , கைகலப்பு , சீலடி சிலம்படி போல நடக்கப் போகுதுபோல இருந்தது
சவுகார் ஜானகி வந்து காலில் விழுந்து, கிளிசரின் வழிய அழுது ,குளறிக் சண்டையை நிப்பாட்டிய மாதிரி இல்லாமல் , அந்த நேரம் எங்கள் உரில இருந்த கவிஞ்சர் கந்தப்பு வெகுண்டு எழும்பி "சினிமா நடிகனுக்கு சிலை வைக்கும் ,சிற்றுனர்வுள்ள சிற் எறும்புகளை......" எண்டு கவிதை எழுதி,"மகா கவி பாரதி சிலையில் கை வைத்தால் ,சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தடுப்பேன் " எண்டு பீதியக்கிளப்ப ,அந்தக் களேபரம் அதோட அமுங்கிவிட்டது!
உலகம் முழுவதும் தங்களின் அபிமான நடிகர் ,பாடகர் போல மானரிசம் பண்ணி வாழ்பவர்கள் நிறையப் பேர் இருக்குறார்கள் ! அவர்களின் நடை உடை பாவனை மற்றவர்களுக்கு கோமாளித்தனம் போல இருக்கும் .ஆனால் அவர்களுக்கு ஒருவித சந்தோசம் கிடைக்கும் , அல்லது அவர்களின் நிறைவேறாத கனவுகளுக்கு ஒரு வடிகால் அப்படிக் கிடைக்கும் என்கிறார்கள் சைகொலோயிட்டுகள்!
எங்கள் ஊரில M.G.R எண்டு ஒருவர் வெள்ளையா, உசரமா ,வெள்ளடியான் சேவல் போல கையை விசிக்கி விசிக்கி நடப்பவர் இருந்தார். அவர் ஜப்னா முனிசிபால்டியில் குப்பை டக்டர் ஓடும் டிரைவர் ஆக வேலை செய்தாலும் , வேலை முடிய M.G.R போலவே,தோளில சால்வைத் துண்டு, மழை பெய்யும் நேரம்களிலும் கறுப்புகண்ணாடி, பலூன் விக்றவன் போல ஒரு வெள்ளை தொப்பி போடுக்கொண்டு, அவரோட குரலையே மாற்றி கொடுப்புக்குள்ள M.G.R போலவே கொன்னையாகக் கதைப்பார், எப்ப யாரைப் பார்த்தாலும் "v " போல விரலைக் காட்டி "நாளை நமதே ,எந்த நாளும் நமதே " எண்டு சொல்லுவார்! அவரை பார்த்து சிரிபவர்களை " அங்கே சிரிபவர்கள் சிரிக்கட்டும் ,அது ஆணவச்சிரிப்பு எண்டு " கம்பிரமா சொல்லுவார்!
ஒரிஜினல் M.G.R போலவே அவர் இருந்ததாலோ என்னவோ அவருக்கும் வீட்டில இரண்டு பெண்சாதி! அதுவும் அவர்கள் அக்காவையும் ,தங்கசியும் எண்டு வேற ஊருக்குள்ள பேசுவார்கள்! அவருக்கு M.G.ர இக்கு ஜெ..... ஜெயராம் இருந்ததுபோல , ஒரு செட்டப் இருந்தது எண்டு பெடிசம் பாலசிங்கம் என்ட எங்கள் ஊர் சிவாயியின் தீவிர ரசிகர் எப்படியோ கண்டுபிடித்து சொல்லிருகிறார் ! மற்றப்படி M.G.R பெண்களை நிமிர்ந்தும் பார்க்கமாட்டார், தாய்க்குலத்தின் மீது அவளவு மரியாதை அவருக்கு!
அந்தக் காலத்தில் கிராம வாசிகசாலைதான் பல முற்போக்கு நிகழ்வுகளை ஒழுங்கு செய்வார்கள் , விடுதலை இயக்கங்களின் தொடகப்பப்புள்ளியே ஒரு காலத்தில அதுவாதான் இருந்தது ! அதில சேர்ந்த நட்புவட்டத்தில் இருந்துதான் பலர் எல்லா இய்கதுக்கும் போனார்கள் , பலர் நாசமாணார்கள் ! பலர் வீராதி வீரன் ஆனார்கள் ! M.G.R எங்கள் ஊர் வாசிகசாலையில் TV ,டெக்,படக் கொப்பி வாடகைக்கு எடுத்து ,அதை ஒரு விழாவாக்கி,அதுக்கு அவரே தலைமைதாங்கி , M.G.R படம் போடுவார் .
படம் தொடங்கமுதல் அவர் M.G.R படம் ஏன் எல்லாரும் பார்க்கவேண்டும் எண்டு, "இறுதியாக ஒண்டு மட்டும் சொல்ல விரும்புகிறேன்" எண்டு பத்துத் தரம்,சொன்ன ஒரே விசியத்தையே பத்துத் தரம் சொல்லி தலைமை உரையாற்றுவார் . "எங்க வீடுப் பிள்ளை " படம் போட்ட ஒரு முறை, அவர் இரண்டு மைக் கையில பிடித்து இரண்டிலையும் மாறி மாறிக் குரலை மாற்றி M.G.R போலவே உரை ஆற்றினார் ,ஆச்சரியமாகி ,மேடைக்கு அருகில் போய் அவர் பேசிமுடிந்து மேடையைவிட்டு இறங்கிவர
" ஏன் இரண்டு மைக் கையில பிடித்து இரண்டிலையும் மாறி மாறிக் குரலை மாற்றி பேசினீர்கள் ?" எண்டு கேட்டேன் ,அதுக்கு அவர்
" எங்க வீடுப் பிள்ளை படத்தில நம்ம தலைவர் " டபுள் அக்டிங் " எல்லா நடிக்குறார் ர்,அதாலதான் இரண்டு மைக் , இரண்டு குரல் "
எண்டு சொல்லி "v " போல விரலைக் காட்டி "நாளை நமதே ,எந்த நாளும் நமதே " எண்டு சொலிப்போட்டு,
" நீ போய் முதலில படத்தைப் பார் , வீட்டில இப்ப ரெண்டுபேரும் சண்டை , நெருப்பு எடுப்பாளுகள் ஒருத்திக்கு ஒருத்தி , இப்ப நான் போய் கெஞ்சி மண்டாடி விலக்கி விடாட்டி , வீடு ரெண்டாப் பிரிஞ்சிடும் "
எண்டு போட்டு தோளில போடிருந்த சால்வையால தலைய மூடிக்கொண்டு ,வாசிகசாலை பின்பக்க வாய்கால்லுக்கால விழுந்து எழும்மி அந்த M.G.R போறதை நான் மட்டும்தான் பார்த்தேன்!
.
Friday, 16 October 2015
மனோன்மணி அம்மன் கோவிலில்
தேவதைகள் எங்கள் ஊரில் இருந்தார்களா என்று இப்ப சொல்ல முடியவில்லை. அந்த வயசில் எல்லா இளம் பெண்களுமே சுந்தரிகள் போலத்தான் இருந்தார்கள். அவர்களின் சின்னச் சிரிப்பே பெரும் காப்பியங்களை எழுதிய நேரத்தில் விடுதலைப் போராட்டம் வா வென்று அழைத்தது . ஒரு காலம் அதன் நினைவுகளில் கனகாம்பரப் பூக்களின் வாசத்தையும், அந்த ரம்மிய மனதிலிருந்து வெளிவர முடியவில்லையே என்று இரவெல்லாம் நினைக்க வைத்த வயசுக்கோளாறை எப்படிக் கடந்து வந்தோம் என்று அடிக்கடி நினைக்க வைக்கும் பழைய நினைவுகள்
யாழ்பானத்தில நல்லூர் கோவிலுக்கு அருகில் பிறந்து ,வளர்ந்ததால் , சங்கீதமும் ஏதோ ஒரு விதத்தில கூடவே சேர்ந்து வளர்ந்தது ,என்னோட அப்பா " சைவசமய ஞாணப்பழம் " அதால தேவார திருமுறைகளை பண்ணிசையில் படிக்கவேண்டும் எண்டு அதைப் படிக்க ஒரு "சங்கீத பூசனம் " ஐயாவிடமும் , ஒரு பண்ணிசைத் திலகம் மாஸ்டர்டமும் ஏற்பாடு செய்திருநதார் ,அதால சில வருடங்கள் படித்த சங்கீதம் கொஞ்சமும் என்னோட கூடவெ சங்கீதம் படித்த பெண்களின் முகம்கள் அதிகமாகவும் நினைவு இருக்கு,
நல்லூர் கோவிலுக்கு அருகில் இருந்த நாவலர் மணி மண்டபத்தில் ஒவ்வொரு ஞயிற்றுக் கிழமையும் பண்ணிசை வகுப்பு நடக்கும் ,அதை பண்டிதர் கார்த்திகேசு அவர்கள் நடத்துவார்கள். பண்ணிசை என்றால் தேவார திருமுறைகளை தமிழிசைப் பண்ணில் பாடுவது . அதில நான் படித்தத பண்ணில் மாயாமாளவகௌளை, இந்தோளம் , இந்த ரெண்டின் ஆரோகணம் அவரோகணம் இரண்டும் தான் இப்பவும் நினைவு இருக்கு . அதைச் சொல்லித் தந்த பண்டிதர் கார்த்திகேசு வேறு பல பண்கள் சொல்லி தந்தார் ,ஆனால் நினைவில் இல்லை .
மற்றபடி எனக்கு கர்நாடக சங்கீதம் முழுமையா தெரியாது. ஒரு சில ராகமும் அதுவும் , கல்யாணி,ஆரபி ,சிவரஞ்சனி ,சண்முகப் பிரியா, சாருமதி ,நீலாம்பரி போன்ற அழகான பெண்களின் பெயரில் உள்ள ராகங்கள் மட்டும் நினைவிருக்கு,அதுகள் அழகான பெண்களின் பெயரில் இருந்தபடியால் மட்டும் இன்னும் நினைவுருக்கு மறக்கவே முடியவில்லை!
இவ்வளவுதான் அதற்குத் தேவையான வார்த்தைகளும்
இவ்வளவு தான் வாழ்க்கை என்று வாய்விட்டு சொல்ல முடியாத அந்த வயதில் சங்கீதம் மன்மத அம்புகள் தைத்த இடங்கள் எல்லாம் கோபுர சந்தனம் தடவியது . ஆனாலும் அதை முறைப்படி படிக்க சந்தர்ப்பம் இருந்தும் குழப்படித்தனத்தில் படிக்கவில்லை என்பது ஒரு குறையாகவே இப்பவும் இருக்கு .
நல்லூர் கோவிலை சுற்றி, நல்லை ஆதினத்தில், தெற்கு வீதியில்,கம்பன் கழகத்தில், மனோன்மணி அம்மன்கோவிலில் நிறைய சங்கீதக்கச்சேரி எப்பவுமே நடக்கும்! அண்ணாமலை இசை தமிழ் மன்றம் ஒவ்வொரு வருடமும் இசைவிழா நல்லை ஆதினத்தில நடத்துவார்கள், அதில "சங்கீத பூசனம் " பொன் சுந்தரலிங்கம், "சங்கீத பூசனம் " திலகநாயகம் போல், பாடினால் அரங்கு நிரம்பி வழிந்து வெளியே ரோட்டை வழிமறித்துக்கொண்டு நிண்டு கேட்பார்கள் ,அவளவு பேமஸ் அவர்கள் இருவரும்.
நல்லூர் கோவிலின் வடக்கு வீதியில் , நல்லைக் கந்தனின் அலங்கார அட்டகாச,பிரபலங்களில் இருந்து விலத்தி , " நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ ...." என்று அமைதி நாடும் சாதாரண மனிதர்களின்,சாமான்ய இசை அறிவின் விளிம்பில் அடக்கமாக ,அமைதியாக ,ஆர்ப்பாடம் போடாமல் இருந்த மனோன்மணி அம்மன்கோவிலில்தான் அழகான இளம் பெண்கள் ஒவ்வொரு ப்வுர்ணமி தினத்திலும் பாடுவார்கள். வெளியே மணலில் படுத்து கிடந்து கேட்கலாம் !
இளம் பெங்கள் பாடும் சங்கீதம் அவர்கள் போலவே இளமையா இருக்கும். பட்டுச்சீலை, மல்லிகைப்பூ மாலை, காதில லோலாக்கு , நெற்றியில் சாந்துப்பொட்டு ,என்று அவர்களே மனோன்மணி அம்மன் சிலைபோல , "நிலவின் ஒளியில் தெரிவது தேவதையா " என்பதுபோல சம்மானம் கட்டி இருந்து ,தேன் வழியப் பாட கோவிலை சுற்றியே சந்தன மல்லிகை வாசம் வரும்!
பெரிய கிழட்டு "சங்கீத பூசனம் " வித்துவான்கள் காட்டும் "ஆலாபனை வித்தை" எல்லாம் காட்டா மல் இயலப்பாக அவர்கள் இளமை குரலில் அந்த தெலுங்கு மொழிக் கீர்த்தனைகளை பாடுவது நிறைய " பீலிங்க் " கொடுக்கும் , "எந்தரோ பா மகானுபாவ " தியாகராஜா கீர்த்தனை தொடங்க முளந்தண்டு குளிரும், "நகுமோமு கனலேனே நாசாலி தெளிசே " கீர்த்தனை ஆரம்பிக்க நாக்கில தண்ணி வத்திப்போகும் , "ஜகதானந்தா தரா " பஞ்ச கீர்த்தனை தொடங்க வயித்துக்குள்ள பட்டம் பூச்சி பறக்கும்,ஆரபி ராகத்தில " சாடிஞ்சனே " தொடங்கி ,அதன் சரணத்தில "சமயாகி ரிக்கி தகு மாடலாகு" எண்டு கொஞ்சம் வேகமான தாளத்தில பாய நாடி ,நரம்பெல்லாம் அதிரும்.
தியாகப்பிரம்மம் தியாகராஜா சுவாமிகளின் " பஞ்ச இரத்தின கீர்த்தனைகளையே" அதிகம் ஆலாபனை, அலாரிப்பு , தனியாவர்த்தனம் எண்டு வில்லங்கமாப் போட்டு அதிரவைகாமல், அழகான அந்த இளம் பிள்ளைகள் பஞ்சுபோலப் பாடுவார்கள்! என் நண்பன் கிருபாவையும் இழுத்துக்கொண்டு போய் தான் மணலில் படுத்துக் கிடந்தது அந்த சங்கீதத்தைக் கேட்டு இருக்கிறேன். அவனுக்கு சங்கீதம் தெரியாது ஆனால் நிலவின் ஒளியில் ரம்மியமான இரவை நன்றாகவே ரசிக்கத் தெரியும் . அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிதான ஒரு நிகழ்வு .
எங்களின் உரையாடல்கள் எப்போதும் அதிகாலைக் கனவு போல இருந்தது.
" கேசி அவள் கொஞ்சம் மசியிறால்டா , இன்னும் கொஞ்சம் இறுக்கி சுழட்டினாள்,காய் விழுத்தலாம் , சூட்டி கட்டாயம் மடங்குவாள், கம்பஸில் படிக்கிற அவளோட அக்கா தான் பிரசினை மற்றப்படி வெட்டியாடலாம் , கொஞ்சம் பொறு மச்சான் அவளுக்கு நான் அலுவலைக் கொடுக்கப் போறேன்,,நீ பார் மச்சான் "
என்று கிருபா மணலில் மல்லாந்து படுத்துக்கொண்டு சொல்லுவான். சங்கீதக் கச்சேரி பின்னணியில் ஆயிரம் தாமரை மொட்டுகளே ஆனந்தக் கும்மி கொட்டுங்களே போல அலாதியாக இருக்கும் ஆனால் உண்மையில் அதெல்லாம் பாரதிராஜா படத்தில வார காதல் சீன் போல சோளம் விதைக்கையிலே சொல்லிபோட்டுப் போன மச்சான் போல முடியவில்லை, பதிலாக பாலச்சந்தர் படங்கள் போல அபத்தமாகத்தான் ரியாளிடியில் முடிந்தது

கடைசியில் எப்பவும் ஆனந்த பைரவி தாய் ராகத்தில், அதன் மூன்று ஜென்ம ராகங்கள் அசத்தும் " கற்பக வல்லி நின் பொற் பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா ..." பாடல் எப்பவுமே மனோன்மணி அம்மனின் தனிப்பட்ட விருப்பம் போல பாடி முடியும் அந்த நிகழ்சியில் பாடி முடிய பவுர்ணமி முழு நிலவு நடு உச்சிக்கு மேல அடிச்சுப் பிடிச்சுப் பிரகாசமாக வழிய, அதன் பால் ஒளி கோவிலிக்கு அருகில் இருந்த நெல்லிமரம் எங்கும் சிதறி , கோவில் சுவரில நடனமாட, கடைசி இரவுக் குருவியும் சோம்பலாகப் பறந்து செல்ல, அந்தக் கச்சேரி முடிய, அம்மனுக்கு ஆலாத்திகாட்டி. முடிவில, சுவையான அவல், கடலை,சுண்டல்லும் தருவார்கள் , சங்கீதம் விளங்குதோ இல்லையோ அவல், கடலை,சுண்டல்லுக்காகவே கச்சேரி முடியும் வரை இருக்கலாம்!.
சாத்திரிய சங்கீதத்தின் பலவீனம் அதை முழுமயாக படித்தவர்கள்தான் அதன் சுவையை பிரிச்சு மேய்ந்து முழுமையா அனுபவிக்கலாம் என்கிறார்கள். என்னைப் போன்ற சராசரி ரசிகர்களுக்கு அதன் முழு வீச்சு விளங்காது ,அது ஒரு பலவீனம் , சரி, அப்ப அதன் பலம் என்ன என்று கேட்பிங்க , சொல்லுறன்....
சுவிடனில் இருந்த போது என்னோட ஒரு நல்ல ப்ரென்ட் ஸ்வீடிஷ் வெள்ளை இனத்தவா ,பிறந்து வளர்ந்து முதல் ஸ்வீடனை தவிர வேறு உலகம் தெரியாத அப்பாவி , கிளாஸிக்கல் வெஸ்டேர்ன் முயூசிக் முறைப்படி படித்தவா. Pichoda. Beethoven, Mozart, Ennio Morricone என்ற மேலைத்தேய இசை மேதைகளின் சிம்பொனி ஒர்கேஸ்ரா எல்லாம் விரல் நுனியில் பியானோவில் விளையாடும் மேதாவி .
ஒருநாள் ஒரு பரிசோதனை போல அவளுக்கு "அலை பாயுதே கண்ணா,........." என்ற Dr. மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா உருகி உருகிப் பாடிய பக்திப் பாடலை கிடாரில் வாசித்து காட்டி,
"இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க் வருகிறது? "
எண்டு கேட்டேன், நான் கிடாரில வைச்சு நோன்டியத்தை ,என்னோட நட்பாக இருக்கும் ஒரே ஒரு குற்றத்துக்காக பொறுமையாகக் கேட்டுப் போட்டு, அந்தப் பாடலின் அடி நாதமாக இருந்த ராகம் , அதன் உணர்ச்சிப் பிரவாகம் , சாஸ்திரிய இசை வடிவம், அவளை மயக்க கொஞ்ச நேரம் பொறுமையாக் கேட்டாள்..
" இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க் வருகிறது "
எண்டு மறுபடியும் கெஞ்சிக் கேட்டேன் , அவள் உண்மையாகவே சீரியஸ் ஆக என்னைப் பார்த்து நம்பமுடியாத மாதிரி சொன்னது,
" music is a kind of spritul dimension ,,i red that many years back,,but feel that now,,,உருகி உருகி அடி மனதில் அமைதியான, எளிமையான அர்த்தமுள்ள , தெய்வீகமான , கடவுளுக்கு நெருக்கமான ஒரு பக்தி உணர்வு வருகிறது,அதை வார்த்தைகளில் மொழி பெயர்த்து சொல்ல முடியவில்லை " என்றாள்.
..ஒரு ஐரோபியப் பெண் "அலை பாயுதே கண்ணா,........." பாடலை சிலை போலவே நின்று ரசித்துக் கேட்டு அதைக் " கடவுளுக்கு நெருக்கமான ஒரு பக்தி உணர்வு " என்று சொன்னாள் பாருங்க ,..அதுதான் கீளைத்தேய கர்நாடக சாத்திரிய சங்கீதத்தின் பலம்!
.
Wednesday, 14 October 2015
சிலையும் இல்லை, ஒரு மயிரும் இல்லை..
காலம் எவளவு வேகமாக ஓடிப்போய்விட்டது என்று ஒரு வாழ்க்கை முறையின் பிறழ்வுகளில் முன்னேறிய ஒரு மேலைநாட்டில் இருந்துகொண்டு நடுமண்டையச் சொறிஞ்சுகொண்டு நாட்களைக் கடத்திக்கொண்டிருக்க அப்பப்ப வரும் சமய நிகழ்வுகள் சில சம்பவங்களை உயிர்ப்பித்து விடுகிறது. அதிலொன்று இப்போது இதுவுமாகிப் போய்விட்டது, மற்றப்படி யாருக்கும் நெஞ்சறிய விரோதமில்லை......!
ஊரில முன் ஒரு காலத்தில் இருந்த எங்களின் வீட்டில நடு ஹோலில ஒரு " பிளாஸ்டர் அவ் பரிஸ்" என்ற வெண் சீமேந்தில் செய்த பிள்ளையார் சிலை சுவரில் கட்டப்பட்ட ஒரு உப்பரிகை போன்ற சீமேந்துத் தட்டில் இருந்தது . எங்கள் வீட்டுக் ஹோலில் இருந்த கவர்சியான ஒரே ஒரு கவனிப்புப் பொருளே பல வண்ணக் கலரில் இருந்த அந்த பிள்ளையார் தான் . வேறு சொல்லும்படியாக எதுவுமே அந்தளவு பிரகாசமாக இருந்ததில்லை .
அதை என்னோட மூத்த அண்ணன் நல்லூர் கோவில் திருவிழாவில, பிள்ளையார் அழகா "கொழுக்கு மொழுக்கு" எண்டு கொழுக்கட்டை போல இருந்ததால் ஆசைப்பட்டு வேண்டிக் கொண்டு வந்து வைத்தார்! வேழமுகமும் விளங்குசிந்தூரமும் அஞ்சு கரமும் அங்குசபாசமும் நெஞ்சிற்குடிகொண்ட நீலமேனியும் நான்றவாயும் நாலிருபுயமும் மூன்றுகண்ணும் மும்மதச்சுவடோடு அந்த வாதாபி விநாயகர் இருந்தார்.

அந்தப் பிள்ளையார் வந்த நேரம் வீடே கோவில் போல இருந்தது. ஆனால் சில நாட்களில் அந்த ஆனைமுகன் எவளவு அலுப்பு பின்நாட்களில் கொடுக்கப் போறார் என்று அவர் வந்த நேரம் தெரியாது.
ஆனைமுகன் அம்பலவன் அருள் பொழிவது போல இருந்த அந்த சிலையைப் பார்த்த அப்பா ,ஒவ்வொரு நாள் காலையிலும் , மாலையிலும் சாப்பிட முதல் அந்த பிள்ளையாருக்கு சூடாமணி விளக்கு கொளுத்தி, சாம்பிராணி பத்த வைத்து , பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறையில் உள்ள " வேயுறுதோழி பங்கன் விடமுண்ட கண்டன்..." என்ற கோளறு திருப்பதிகதில் உள்ள ஒன்பது படலையும் பாடமாகச் சொல்லி ,அதைப் பாடும் படியும் , அதைப் படித்தால் வீட்டில் " பிணி,துன்பம், கோளாறு " நீங்கி நன்மை உண்டாகும் என்று அன்பாக சொல்ல ,

" அந்த இந்தக் கதை தேவையில்லை, பிள்ளையார் வந்ததே இவங்களைத் திருத்தி எடுக்கத்தான், அதால ஒழுங்கா கடவுள் பக்தியோட அதைப் படித்தால்தான் காலையும்,,மாலையும் சாப்பாடே தருவேன் "
எண்டு அம்மா கண்டிப்பாக கட்டளைபோட, பல வருடம் காலையிலும் , மாலையிலும் சாப்பிட முதல்,கை கால் முகம் கழுவி ,நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு பிள்ளையார் சிலைக்கு முன்னுக்கு நின்று " ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்லஅடியாரவர்க்கு மிகவே..." என்று அதைப் படித்தோம்!
வெள்ளிக்கிழமைகளில் காலையில் பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டுபோய் கிணத்தடியில் வைச்சு துலாக் கயிறில தண்ணி இழுத்து வாளி வாளியா தலையில அள்ளி ஊற்றிக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து வைச்சா பிள்ளையார் பொன்ஸ்பவுடர் அடிச்ச பண்டிக்குட்டி போல பளிச் என்று இருப்பார். கிணத்துக் கட்டில சந்தனம் அரைக்கிற கல்லு இருந்தது அதில உரசி எடுத்த வாச கோபுர சந்தனத்தில் பொட்டும் வைச்சு விடுவோம் .
நான் விருப்பம் இல்லாமல் பக்தியைத் தூக்கி பக்கிஸ் பெட்டிக்க எறிஞ்சு போட்டு ,பசிதாங்க முடியாமல் , வேற வழி இல்லாமல்தான் படித்தேன் .என் சகோதரங்கள் எப்படிப் படித்தார்கள் என்று எனக்கு இன்றுவரை தெரியாது. குமுத சகாயன் குணத்தையும் கூறிஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் நன்றாகவே அறிந்த அந்த விநாயகக்கடவுளுக்கு என்னோட நிலைமை தெரிந்து இருக்கலாம். ஆனால் அவரும் ஒரு அக்சனும் பிராக்டிகலா எடுக்கவில்லை .

பசியோட பிள்ளையாருக்கு அந்தப் தேவராப் பாடல்களைப் பாட எனக்கு கோபம் கோபமா வரும்! நெற்றியில திருநீறு பூசிக்கொண்டு , மனதுக்குள் பிள்ளையாரை திட்டிக்கொண்டுதான், அவரோட காலுக்க மிதிபட்டுக் கொண்டு இருக்கும் சின்னஞ் சிறு மூஞ்சூறுக்காக இரக்கப்பட்டுக் கொண்டு, அவருக்கு அருகில் அடுக்கி வைத்திருக்கும் மோதகத்துக்காக ஏங்கிக் கொண்டு
".மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிசனிபாம் பிரண்டும் உடனே.."
எண்டு ஒரு கிழமையில் ஒரு நாள் தன்னும் லீவு இல்லாமல் " ரன்னிங் கொமன்றி " போல அது காலையிலும் மாலையிலும் ஓடிக்கொண்டு இருந்தது.

பிள்ளையார் சிலை இருந்த ஹோல் மூலைக்கு அருகில் இருந்த பெரிய கண்ணாடி யன்னலுக்கால் வெளிய பார்க்க வாய்க்காலோடு வளர்ந்து சைடைச்சு நின்ற மஞ்ச வண்ணா மரம் தெரியும், அதில காலையில் குயில்கள் வந்திருந்து பாடும் . " மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்,," என்று நாங்க பாடிக்கொண்டு இருக்க, ஆண் குயில் " ஏலேலங் குயிலே என்னைத் தாலாட்டும் இசையே உன்னைப் பார்க்காத நாள் இல்லையே ..." என்று பெண் குயிலை நினைத்துப் பாடிக்கொண்டு இருக்கும். உண்மையில் நாங்கள் பாடுவதை விடக் குயில் பாடுவதைக் கேட்க நல்லா இருக்கும் .
கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்று சைவசமயத்தாருக்கு ஞானசம்பந்தரால் உறுதி கொடுத்து சொல்லப்பட்ட அதை உருகி உருகி பசியோட வீட்டில் "கோளறு திருப்பதிகம்" படித்தும் " பிணி,துன்பம்,கோளாறு " பல வருடம் உடம்பில ஊத்தை போல ஒட்டிக்கொண்டு இருக்க , கோளாறு போன மாதிரி இல்லாமல் ,கடைசில கோதாரி வந்தது போல , சில வருடங்களில் அப்பா இறந்து விட்டார்!
அவரோட சடலத்தை, தலை மாட்டில குத்துவிளக்கு ஏற்றிவைத்து , அந்தப் பிள்ளையார் சிலைக்கு முன்னால ஹோலில் வைத்தோம், பிள்ளையார் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார் ஒண்டுமே செய்யவில்லை. அப்பா அகாலமான அதுக்குப் பிறகு நிறைய " பிணி,துன்பம், கோளாறு " அதிகமாகிய நேரம் ஏனோ தேவாரம் படிக்கிரத்தை கொஞ்சம் கொஞ்சமா மறந்துவிட்டோம்!
அப்பா அகாலமாக இறந்ததால் அம்மாவும் கடவுள்களில் நன்பிக்கை இழந்தோ,அல்லது வளர்ந்த நாங்கள் சொல்வழி கேட்கமாட்டம் என்றோ ஒண்டுமே சொல்லவில்லை.முக்கியமா நான் சொல்வழி கேட்கும் நிலையில் அப்போது இருக்கவில்லை. முண்டினால் பிள்ளையார் சிலையே உடையும் போல கோவத்திலயும் ,கொமினிஸ்ட் சோஷலிசக் கொள்கைகளில் தீவிரமாக இருந்தேன் .
ஆனாலும் பிள்ளையாருக்கு விநாஜக சதுர்த்தி,சரஸ்வதிப் பூசை, நவராத்திரி,சிவராத்திரி நாட்களில் பூ, புனஸ்காரம், படையல் எல்லாம் வைத்து எங்கள் " பிணி,துன்பம்,கோளாறு " நீக்க சொல்லி மன்றாடி கேட்டும், அப்பவும் பிள்ளையார் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார் ஒண்டுமே செய்யவில்லை. ஆனால் அப்படியான விசேட நாட்களில் அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி போல பிள்ளையார் அலாதியாக என்ஜாய் செய்துகொண்டு இருந்திருக்கலாம்
அதுக்குப் பிறகு அந்தப் பிள்ளையார் பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல வீட்டு ஹோலில அவர் பாட்டுக்கு கவனிப்பார் அற்று இருந்தார் ! அம்மா மட்டும் தவறாமல் நித்திய கல்யாணி பூ புடுங்கி காலையில் ஒவ்வொரு நாளும் வைப்பா! சொல்லும்படியாக எந்தவிதமான அதிசயங்களும் நடக்கவில்லை .

வீட்டு நிலவரம் இப்படி இருக்க, அந்த நாட்களில் ஒரு "குண்டக்க மண்டக்க " இசைக் குழுவில் நான் கிட்டார் வாசித்தபோது, எங்களின் எல்லா நிகழ்ச்சியிலும் தொடக்கமா " உச்சிப் பிள்ளையார் கோவில் கொண்ட இடம் ...." பாடல் பாடும் போதெல்லாம் எங்களின் வீட்டில் இருந்த பிள்ளையாரை நினைத்துதான் நான் கிட்டாரை வாசிக்கத் தொடங்குவேன்! எனக்கு அப்பெல்லாம் சரியாக கிட்டார் வாசிக்கத் தெரியாததால் சும்மா சடைஞ்சு வாசிக்க அந்த "பிளாஸ்டர் பரிஸ் பிள்ளையார் " செய்த உதவிதான் காரணம் என்று நினைக்கிறேன். அவர் இல்லாவிட்டால் என்னால் சமாளித்து இருக்கேவே முடியாது.
என்னோட அம்மாவே "உச்சிப் பிள்ளையார் கோவில் " பாடல்,நல்ல ஆசீர்வாதமான பாடல், அதைப் பாடினால் வீட்டில "அருள்,பொருள்,ஆனந்தம் "பெருகும் " எண்டு நம்பிக்கையில் சொன்னா, அவா சொன்னமாதிரி உச்சிப்பில்ளையா கூரையைப் பிச்சுக்கொண்டு வந்து எங்களுக்கு " அருள்,பொருள்,ஆனந்தம் "ஒண்டுமே கொடுக்கவில்லை! அதன் பின் சில வருடங்களில் என்னோட சகோதரியின் சாமத்திய வீடு நடந்தது,அது ஒண்டுதான் எங்க ள் வீட்டில நடந்த ஒரு நல்ல மங்களகரமான விசியம், பிள்ளையார் அதை சந்தோசமா சிரித்துக் கொண்டு பார்த்துக்கொண்டு இருந்த மாதிரி இருந்தது அவரின் முகம் !
கொஞ்ச வருடங்களின் பின் என்னோட பாட்டி இறந்தா, அவாவின் சடலத்தை , பாட்டி ஆசைப்பட்டபடியே அவாவின் தலை மாட்டில, தூண்டாமணி விளக்கு விளக்கு ஏற்றிவைத்து,அந்தப் பிள்ளையார் சிலைக்கு முன்னால ஹோலில் வைத்தோம், மறுபடியும் பிள்ளையார் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார் , " செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ இருநிதியம், வையத்து அறும்-பாவம் என அறிந்து அன்றிடார்க்கு இன்றுவெறும்பானை பொங்குமோ " என்பது போல அந்தப் பிள்ளையார் ஒண்டுமே செய்யவில்லை!
அதுக்குப் பிறகு என்னோட உடன்பிறப்புகள் ஒவொன்றாக எட்டு திசை எங்க்கும் பிரிந்து போக, கடசியா சூரிய கதிர் ராணுவ நடவடிக்கையில் யாழ்பாணத்தை விட்டு வெளியேறிய பின் எனக்கும் அந்த வீட்டுக்கும் தொடர்பு இல்லாமல் போய் ,சில வருடங்களில் அதை என்னோட சகோதரிக்கு அம்மா சீதனமா கொடுக்க ,வெளிநாடில் இருந்த அந்த சகோதரி ,நாங்கள் அரை குறையாக வாழ்ந்து, பின் நாட்களில் ,சிறப்பாக வாழ வழி இருந்தும், அதைப் பராமரிக்க யாரும் இல்லாமல், சொல்லாமல் கொள்ளாமல் அதை அறவிலைக்கு வித்துப் போட்டா!
ஒரு காலத்தில் நடந்து இன்னொரு காலத்தில் இன்னொரு விதமான நினைவுகளின் அனுபவம் கொடுக்கும் என்பது உண்மை . புலம்பெயர்ந்து கலாச்சார வெற்றிடம் உள்ள ஒரு நாட்டில் வாழ்வதால், பழசையெல்லாம் நினைக்கும்போது , ஒரு காலத்தில் பிடிக்காமல் இருந்த பிள்ளையார் ,எப்படியோ குழப்பத்திலும் எனக்கு ஒருவிதமான அனுசரணையுடன் தான் இருந்து இருக்கிறார் . அதனால் அந்தப் பிள்ளையாரில் கோபம் இல்லை.
சமைக்கத்தெரியாதவன் சட்டிபானை சரியில்லை என்று சொன்னதுபோல சொல்லுறேன் என்று நினைக்க வேண்டாம். வாழ்கையில் பலவிசியங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களின் பார்வையில் புரிவதில்லை. அதை எல்லாம் புரிந்துகொண்டு என்ன வெட்டிக் கிழிக்கவா போகிறோம் என்று நினைச்சாலும் நெஞ்சாங்கூட்டில் சில சம்பவங்கள் கிரீஸ் கத்தியால குத்துவது போல நடக்கும்.

அதுக்கு இன்னுமொரு முக்கிய காரணம் நாங்கள் வளர்ந்துகொண்டு இருந்த போது எங்களின் வீட்டில் நடந்த எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த ஒரே ஒரு ஐ விட்னஸ் சாட்சி அந்த " பிளாஸ்டர் அவ் பரிஸ் " பிள்ளையார். அதனால் அந்தப் பிள்ளையார் சிலையை எப்படியும் எடுப்பது என்று நினைத்தேன் . அதைக் கடல் கடந்து வாழும் என் சகோதரங்கள் இருவருக்கு டெலிபோனில் சொன்னேன். அவர்கள் இருவரும் என்னை
" என்ன இவனுக்கு இந்த வயசிலையே மண்டைப் பிழை வந்திட்டுதே,,,"
என்பது போல சந்தேகமாகக் கதைத்தார்கள்.என் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் விக்கிரமாதித்தன் போல சில வருடம் முன் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் என்னோட " பிசினஸ் மக்னட் " தம்பி நல்லூர் திருவிழாவுக்கு யாழ்பாணம் போனபோது, அவனுக்கு சொல்லி ,
" அந்தப் பிள்ளையார் சிலை அந்த வீட்டில் இருந்தால் , அந்த வீட்டை வேண்டியவர்களுக்குப் பணம் கொடுத்து , சிலையை எடுத்துக்கொண்டு வரமுடியுமா "
எண்டு கேட்டேன் , அதுக்கு யாழ்பாணம் போய் வந்த அவன்,
" அந்தப் பிள்ளையார் சிலை அந்த வீட்டில் இருந்தால் , அந்த வீட்டை வேண்டியவர்களுக்குப் பணம் கொடுத்து , சிலையை எடுத்துக்கொண்டு வரமுடியுமா "
எண்டு கேட்டேன் , அதுக்கு யாழ்பாணம் போய் வந்த அவன்,
" அண்ணே , நான் போய் விசாரிச்சன் அண்ணே , அந்த வீட்டை வேண்டினவன் என்னோட கதைக்க விரும்பவில்லை அண்ணே "
" நீ என்ன அவன்ட வீட்டில சம்பந்தம் பேசிக் கலியாணம் முடிக்கிறதா கேக்கப் போனனி ,,,பழைய சாமான் என்னவும் இருந்தால் தரச்சொல்லி தானே "
" ஓம்,,ஓம்,,,அதுதான் அண்ணே ,,ஆனால் அவன் ஒரு விடாக்கொண்டன் மடாக்கொண்டன் போல திமிறிக்கொண்டு நிண்டான் "
" என்ன மண்டை விறாசா இருந்தாலும் உனக்கு என்ன "
" ஓம்,,ஓம்,,அவன் படலைக்கு வெளியால ரோடில வைச்சே என்னோட கதைச்சான் , உள்ளுக்க சும்மாவும் வீட்டை வெளியால பார்க்கவும் விடமாட்டான் என்டுட்டான் "
" சரி,,படலைக்கு வெளியே நின்றே கேட்டு இருக்கலாமேடா "
" ஓம் , ஓம்,, அதுதான் ,,நானும் செய்தனான் அண்ணே"
" சரி,,நீ என்ன கேட்டாய்,,,என்னண்டு கேட்டாய் "
" ஓம்நா,,ஓம் ,நான் பார்த்துப்போட்டு எங்களின் பிள்ளையார் சிலை ஒன்று ஹோல் மூலையில் வைச்சுக் கும்பிட்டணாங்கள் ,அந்த சிலையை மட்டும் தரமுடியுமா, வெளிநாடில் இருக்கிற அண்ணன் ஒருவர் கேட்டார், அதுதான் கேட்குறன் எண்டு கேட்டேன் "
" அதுக்கு அவன் என்ன சொன்னான் "
" ஓம்,,ஓம்,,அவன் ஒண்டுக்கும் காது கொடுத்துக் கேட்கவில்லை.."
" ஹ்ம்ம்,, காசு தாரன் எண்டு சொல்லிப் பார்த்தியே,,நான் காசு அனுப்பி இருப்பேன் எண்டு தானே சொன்னேன் "
" ஓம்,,ஓம் ...காசு தாறம் எண்டு கடைசியா கேட்டுப் பார்த்தேன் அண்ணே "
" வாவ்,,என்ன சொன்னான்,,காசு என்டவுடன சவண்டு குத்துக்கரணம் அடிச்சு விழுந்து இருப்பானே "
" இல்லை,,அண்ணே , அவன் இங்க ஒரு சிலையும் இல்லை, ஒரு மயிரும் இல்லை,, இந்த விசர்க் கதைகளோடு இனி இங்கே படலைப் பக்கம் வந்தா போலிசுக்கு அடிச்சு சொல்லுவானம் எண்டு பேசி அனுப்பிப்போட்டான் அண்ணே "
" அட,,,ஹ்ம்ம்,,,இனி ஒண்டும் செய்ய ஏலாது "
" ஓம்,,ஓம் ,, பிள்ளையாரை எங்கயும் ஒரு மூலையில் தூக்கி எறிஞ்சு இருப்பான் போல ...நான் அதுக்கு மேலே ஒண்டும் கேட்க்கவில்லை, "
" சரி,,விடு "
" ஓம்,,ஓம்,,அண்ணே இங்க சாமிப்படம் விக்கிற கடையில வேண்டிய மாதிரி ,வேண்டிய சைசில் , வேண்டிய கலர்ல பிள்ளையார் சிலை விக்குறாங்கள்."
" இல்லைப்பா,,,எனக்கு அந்தப் பிள்ளையார்தான் வேணும்..இல்லாட்டி எந்தப் பிள்ளையாரும் தேவை இல்லைப்பா "
" ஏன் அண்ணே,,அப்படி சொல்லுறியள் "
" இல்லைப்பா...ஏன் என்று சொல்லதெரியவில்லை "
" நீங்க இப்ப சொல்லுங்கோ..உடன கையோட ஒரு சிலை வேண்டி டி எச் எல் இல அனுப்பவா "
" இல்லைப்பா,,தேவை இல்லை, அதுகள் வேற நான் தேடுறது வேற "
" சரி,,நான் என்னால முடிஞ்ச வரை முண்டுகொடுத்துப் பார்த்திட்டேன்,,உங்களுக்கு அந்தப் பழைய பிள்ளையார் தான் வேணும் எண்டுகொண்டு நிண்டா நான் என்ன செய்ய,
" சரி விடு,,எல்லாம் காலக்கொடுமை ,வேற என்ன "
" இப்ப வேணுமென்றால் ஒரு பத்துப் பதினஞ்சு பிளையார் சிலை வேண்டி அனுப்பலாம்,,கோவிலே கட்டிக் கோபுரமும் கட்டி கும்பாவிஷேகமே செய்யலாம் "
" அதில ஒண்டுமே இல்லை, நானே இங்கே வேண்டலாம் ,,அது ஒரு பிரச்சினையே இல்லை "
" நான் என்னவோ சொல்லுறதை சொல்லிபோட்டேன் அண்ணே "
" அதுதான் இதை இனிக் கதைக்கவேண்டாம் எண்டு சொல்லுறேன் "
" அண்ணே,,நான் இப்ப வைச்சு ஓடுற வானுக்கு ஏசி போடால் நல்லம் போல இருக்கு,,இப்ப எங்கட வெளிநாட்டு தமிழ்பாட்டிகள் அறம்பிறமா வருகுதுகள், ஏசி வான் தான் வேணும் எண்டு கேட்கினம் "
" ஹ்ம்ம்,,"
" சும்மா ஒரு பிள்ளையார் சிலையை இவளவு காசு செலவழித்து பாசல் செய்து எடுக்கிறன் எண்டு அழுங்குப் பிடியா நிக்குரிங்க,,பிள்ளையார் சிலை என்ன அள்ளிக்கொட்டப் போகுதே "
" ஹ்ம்ம் "
" அண்ணே,,நான் என்ன சொல்லவாறன் எண்டு விளங்குதே "
" ஓம் ஓம் நல்லா விளங்குதுப்பா "
" அப்ப பின்ன டக்கெண்டு அதுக்கு அலுவலைப்பாருங்கோவன்,,எக்கவுண்ட் நம்பர் இருக்குதானே,,பழைய பாங் நம்பர்தான் ,,அண்ணே , "
இதுதான் வாழ்க்கை !

"பொம்மை வீடு " ஒரு சமூகப் பிறழ்வு
யாழ்பாணத்தில புத்தகங்கள் படித்த காலத்தில, நோர்வே நாட்டு ஹென்றிக் இப்சன் என்ற ஒரு நோர்வேயிய எழுத்தாளரின் நாடகத்தை, எளிய தமிழில் மொழிபெயர்த்து வந்த "பொம்மை வீடு " என்ற சுருக்கிய புத்தகத்தைப் படித்த நினைவு இருக்கு!
அந்தக் காலத்தில் அப்படி நிறைய வெளிநாட்டு எழுத்தாளரின் புத்தகங்கள் சுருக்கிய வடிவில் வந்திருக்கு! உள்ளூர் ஆட்கள் எழுதுதும் ஜீவாவின் " மல்லிகை" , ஜேசுராசாவின் "அலை", போன்ற இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகள் மொழிபெயர்த்து வந்திருக்கு !
ஹென்றிக் இப்சன், நோவேயில் 18ம் நுற்றாண்டில் வசித்த ஒரு நடக்க ஆசியர் ,அவரை ஆங்கில மேடை நாடக இலக்கியத்தின் தந்தை வில்லியம் சேக்ஸ்பியருக்கு அடுத்ததாகச் சொல்லுறார்கள் !
யாழ்பாணத்தில அவரின் "பொம்மை வீடு " படித்த போது உலக இலக்கியம் எல்லாம் பிரித்துமேயும் அளவுக்கு அறிவு இல்லை ,சும்மா வாசித்த நினைவு இருக்கு அதில வாற நோரா என்ற பெண்மணியின் வாழ்கை மட்டும் இன்றுவரை நினைவு இருக்கு !
சில வருடம் முன் நோர்வேயில் அவரின் "பொம்மை வீடு " நாடகத்தை தேட , அது மூன்று பெரிய புத்தகமாக இருக்க , அதை எப்படி யாழ்பாணத்தில சுருக்கிய புத்தகமாக ஒரு நெருப்புப் பெட்டி சைசுக்கு மொழிபெயர்த்தார்கள் எண்டு குழப்பமா இருந்தது !
நோர்வே மொழியில் "பொம்மை வீட்டை " கொஞ்சம் நோன்டிபார்க்க , அது வேற மாதிரி அனுபவம் கொடுத்தது ! யாழ்பாணத்தில வாசித்து நோர்வேயிய மொழியில் இருந்து நேரடியாக மொளிபியர்ததா அல்லது மொழிபெயர்த்ததா என்பதிலேயே குழப்பம் வந்தது !
"பொம்மை வீடு " ஒரு சமூகப் பிறழ்வு நாடகம் ஹென்றிக் இப்சன் எழுதிய எல்லா நடகங் களும், அந்தக்கால , வறிய, ஆண் ஆதிக்க , நோர்வேயின் 18 ம் நுற்றாண்டு சமுக வாழ்கை அவலம் என்கிறார்கள் !
பெண்கள் மீது இரக்கம் உடையவர் இப்பசன்.அதுக்கு காரணம் அவரின் சின்ன வயசில் பெற்றோர்கள் வறுமையில் வாடிய நேரம் ,உயர்குடிப் பிரபுக்களின் வைப்பாடிக்கள் வீட்டில் அவர் எடுபிடியாக வேலை செய்துதான் வளர்ந்தார்.
அந்தப் பெண்கள் அவரோடு அன்போடும் கனிவோடும் அவரை தங்கள் பிள்ளைபோல வளர்த்ததால்,பின்நாட்களில் அவர் ஒரு சிறந்த நாடக ஆசிரியர் ஆனபின் முடிந்தவரை பெண்களின் அவலத்தை, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை எல்லாம் நாடகத்தில் எழுதினார்
பெண்கள் பிறந்ததே கலியாணம் கட்டவும் ,பிள்ளை பெறவும் ,குடும்பத்தைக் காக்கவும் என்பதை உடைத்து நோரா என்ற பெண்மணி ஆண்களைப் போல உலக விசியன்களில் நாட்டம் கொள்ள , அதை சுற்றி நடக்கும் குடும்ப சமுதாய பிரிவினை தான் "பொம்மை வீடு " நாடகம் என்கிறாகள் !
நோரா அப்படி குடும்ப சமூக எல்லைகளை உடைத்தபோது எவளவு விமர்சனம் யதார்த்த வாழ்கையில் வந்திருக்குமோ அவளவு விமர்சனம் ஹென்றிக் இப்சன் எழுதிய "பொம்மை வீடு " நாடகத்துக்கும் பிற்போக்கு , கட்டுப்பெட்டி 18ம் நுற்றாண்டு நோர்வேயில் வந்ததாம் !
ஒரு மொழி என்பது கலாசாரம் ,சமூக ,வாழ்வியல் சம்பனதமானது ! ஒரு மொழியின் ஆளுமை அந்தத் தாய் மொழியில் எழுதிய இலக்கியங்களில் இருக்கு. பிற மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் பலர் வெறும் மொழி வல்லுணரா மட்டும் இருந்தால் பல விசியங்கள் மொளிபெயர்ப்பில் இருட்டு அடி வேண்டின மாதிரி இருக்கும் ,
சரி அப்ப வேறு எப்படி பிறமொழி இலக்கியத்தை தாய் மொழியில் மாற்றுவது என்றால் ? அவர்களே கொஞ்சம் இலக்கிய சம்பந்தப்பட்டவர்களாயின் ,உயிரோடு விளையாடியும் இதயம் கிழிபாடாமல் மூல செய்தி வந்துசேர வாய்ப்பு இருக்கு ! "பொம்மை வீட்டை " வாசிக்க அப்படி நல்லதும் ,கெட்டதும் நடந்திருக்க வாய்ப்பு இருக்குபோல இருக்கு !
இந்தப் படத்தில் பின்னுக்கு உள்ள கட்டிடம் "நேஷனல் தியட்டர் " என்ற ஹென்றிக் இப்சன் நாடகங்கள் அரங்கேறிய இடம் ,இதற்கு அருகில் ,தங்களில் இலக்கியப் பிதா ஹென்றிக் இப்சன்சனுக்கு வெங்கலத்தில் சிலைவைத்து கவுரவிதுள்ளார்கள் நோர்வேயிய மக்கள். இப்சன் எழுதிய நாடகங்கள் இன்றைக்கும் இங்கே நடக்குது ! அவர் மீதும் அவரின் இலக்கியதின் மீதும் மதிப்புள்ள பல வெளிநாட்டினரே வந்து பார்க்கிறார்கள் !
நான் ஒரு நாடகமும் இதுக்குள்ள போய் இன்னும் பார்க்கவில்லை ! ஒருவேளை எனக்கு இன்னும் அந்தளவு இலக்கிய முதிர்ச்சி வரவில்லையோ தெரியவில்லை .பொதுவாக எனக்கு 18ம் நுற்றாண்டு கிளாசிகல் முயூஸிக், ஓவிய ,இலக்கிய விசியங்கள் கேட்க ,படிக்க ,பார்க்கப் பொறுமை இல்லை , அந்த வரலாற்று முக்கிய இடங்களுக்கு முன்னால நிண்டு, எதோ பெரிய அறிவுக்கொழுந்து போலப் படம் எடுக்க மட்டும் நல்ல விருப்பம் !!!
.
Subscribe to:
Posts
(
Atom
)