Thursday, 5 November 2015

நிலவே என்னிடம் நெருங்காதே...

வாழ்கையில் சில சமயம் நல்ல செயல்கள் என்று சொல்லப்படும் வரன்முறைகள்,சமூகநீதி , நியாயம் இவைகளைக் வரையறுத்துக் கீறிவைத்த கோடுகளை  வேண்டுமென்றே தாண்டுவதில் ஒரு " த்ரில் " இருக்கு. வயசான காலத்தில் இளவயதில் செய்த அட்டகாசங்களை நினைத்துக் கொள்ளவாவது கொஞ்சம் குழப்படி செய்ய வேண்டி இருக்கு. இல்லாட்டி வாழ்க்கை சப் எண்டு ஊசிப்போன உளுந்துவடை போல நரைவிழும் வயதில் இருக்கலாம். 

                                        அப்படி ஒரு சம்பவம்தான் " நிலவே என்னிடம் நெருங்காதே ,நீ நினைக்கும் இடத்தில். நான் இல்லை ," பாடல் கேட்கும் போதெல்லாம் பழைய ஒரு சம்பவம் எனக்கு நினைவுவரும்.  உண்மையில்ப் பழைய பாடல்கள் எப்பவுமே பழைய சம்பவங்களுக்கு உயிர் கொடுக்கும் வல்லமை உள்ளவை ! ஒரு பாடல் நாங்கள் கேட்கும்  சூழ்நிலை, மனதின் நிலையை பொறுத்து அதன் அர்த்தங்கள் வேறுபடும்.

                                         வடக்கு ஐரோப்பாவில் உள்ள  சுவீடன் என்ற நாட்டில் பல வருடங்களின் முன் ,செய்யும் தொழிலே தெய்வம் எண்டு சமையல் வேலை செய்துகொண்டு இருந்த போது , "தலையிடி " எண்ட பெயர் உடைய நண்பர்  ஒருவர் " போர்டர் ஸ்மாக்கிளிங் " என்ற கவுரவமான " எல்லைக் கடத்தல் " தொழில் கொஞ்சநாள் அமோகமா செய்துகொண்டு இருந்தார்.  ஒரு நாள்  தனக்கு உதவியா , அதில வந்து என்னோட பங்களிப்பைச் செய்ய முடியுமா எண்டு கேட்டார் , 


                                           நானும் அதில் இலகுவா பணம் அள்ளிக் கட்டலாம் என்பதால்,அப்போது செய்துகொண்டு  இருந்த ரெஸ்ரோரன்ட் வேலைக்கு லீவு போட்டுட்டு கொஞ்சநாள் ஐரோப்பா நரக வீதிகள், காட்டுப் பாதைகள் முழுவதும் நேரம்,காலம், இல்லாமல் " போர்டர்கள் " தாண்டி, அவரோடு அலைந்தேன்! 


                                       அன்று குடிக்கத் தண்ணி  இல்லாத  அம்பாரி  ஆனைக்மேல ஏறிப்போக  நினைத்து   அடியும் உதையும் வேண்டின கதை   போலவே நிறைய ரிஸ்க் உள்ள விடயம் தான் . எனக்கு அந்த மாதிரி வேலைகள் திட்டமிட்டு செய்யும் திறமை இல்லை . நான் சும்மா அசிஸ்டன்ட் போல தான் இயங்கினேன், தொழில் ரகசியம், நெளிவு,சுளிவு , அதன் மர்மமான நுட்பம் எல்லாம் எனக்கு தெரியாது..

                                              அந்த நண்பர் சுவீடனுக்கு என்னைவிடப் பல வருடம் முன்னர் அரசியல்அகதியாக வந்தவர். என்னைப்போலவே யாழ்பாணத்தவர். பழகுவதுக்கு இனிமையானவர். ஆனால் சிம்பிள் மைன்டட் பெர்சன் . உதவி செய்வதில் கர்ணனை மிஞ்சியவர்.ஆனால் வரவுக்கு மீறிய செலவில் அள்ளி விசுக்குபவர் , யாருக்கு விசுக்கிறவர்  என்று  பார்த்தால் வேற யாருக்கு  பெண்களுக்குத்தான் . 


                                                  அவருக்கு  எத்தினை மனைவி  எண்டு எனக்கு தெரியாது. ஆனால் எப்பவும் மனுசியள்  என்று பன்மையில் தான் அவர் வாழ்க்கைத்துணைகளைச் சொல்லுவார்.   அதால் செலவு இயல்பாகவே  கையைக் கடிக்கும் . அதனால்  எப்பவும் 

                                  " இவளுகளோட  தலையிடி , தலையிடி பிடிச்ச வாழ்க்கை,,ஒவ்வொருத்தியும்  என்னைத் திண்டு போட்டுதான் விடுவாளுகள் போல நிக்குராளுகள் ,,நானும் எவளத்துக்கெண்டு அவிச்சு அள்ளிக் கொட்டுறது  சொல்லும் பார்ப்பம் ஐசே   " 

                                                  என்று சலித்துக்கொள்வார் .அதால் அவர் பெயரை  நான் தலையிடி எண்டு தான் எனக்குள் மட்டும் நினைப்பது. மற்றப்படி ஒருவரின் பெர்சனல் வாழ்க்கை பற்றி நான் ஆராய்வதில்லை. ஆனாலும்  கொஞ்சம் கவலையாக இருக்கும் அவர் மனுசியள் எண்டு சொல்லும் போது. ஏன்னென்றால் அந்த நேரம் நான் என் சுவுடிஷ் வெள்ளைக் குதிரையோடு மட்டுமே இருந்தேன்.  எனக்கும் விதம் விதமா வடையோடு  பால்பாயாசம் சாப்பிட்ட  ஆசை  இருக்கும்தானே ,,இல்லையா  சொல்லுங்கோ  பார்ப்பம்  
                                                

                                        தலை இடி என்னை அந்த தொழிலில் " பாட்னரா " இணைத்ததுக்கு , மூன்று காரணம் இருந்தது, முதலாவது ,எனக்கு ஆங்கிலம் நல்லா வைச்சு விளாசுவதோட சில ஐரோப்பிய மொழிகளும் உல்டா பண்ணிக் கதைப்பன் , இரணடாவது மாறி மாறிக்  கார் ஓடிக்கொடுப்பேன். மூன்றாவது எந்த எந்த எல்லைக் காவல் நிலையங்கள், எந்த எந்த நேரம் கடக்க உகந்தது எண்டு மூக்குச் சாத்திரம் பார்த்து சொல்லுவேன்! 


                                     இப்ப போல    " யி பி எஸ் " என்ற " சட்டலைட் நேவிக்கேசன் " போன்ற ஒரு மண்ணும் அப்ப இல்லை. வெறும் " மப் " வைச்சு ஓடுவதால் சில நேரம் எந்த நாட்டில,எந்த ரோடில நிக்கிரம் எண்டே குழப்பமா இருக்கும்,  ஊர் உலகம் சுற்றிப்பார்ப்பது எப்பவுமே எனக்கு விருப்பமான ஒன்றுதான், ஆனால் குதிகாலில் குத்துற பதட்டத்தில் ஐரோப்பாவின் கலாச்சார அழகு நகரங்களைக் கட்டப்பதால் அவற்றை ரசித்துப் பார்க்க முடியாமல் தான் இருந்தது

                                   அவருக்கு சட்டப்படி ஒரு மனைவி இருந்து இருக்கிறா. ஆனால் அந்த அம்மணியுடன் அவருக்கு இப்ப தொடர்பு இல்லை எண்டு வேற நண்பர்கள் சொல்லுவார்கள். முன்னரே சொன்ன மாதிரி  அந்த நண்பருக்கு ,நல்லா சம்பாதிததாலோ என்னவோ சுவிடனில் ஒரு தமிழ் காதலி. இலங்கையில் ஒரு சிங்களக் காதலி,,  வேறு ஒரு சுவுடிஷ் இன  ரகசியக் காதலி என்று  அவர்களின் காதல் சோலிகள்  தலைக்குமேல ஏறி நிண்டு ஆட , அவரே நெடுக ஒவ்வொரு பயணத் திட்டத்திலும்  ,


                                        " என்ன ஐசே தலையிடி வாழ்க்கை, என்ன ஐசே வாழ்கை ,நாயைப் பிடி பிச்சை வேண்டாம் எண்ட வாழ்க்கை, எவளவுதான் உழைச்சாலும் கையில நிக்குதில்லை ,ஒவ்வொருத்திக்கும் சுளையா உருவிக் கொடுக்கவே சம்பாரிப்பு சரியா இருக்கு .. " 


                                            எண்டு கொம்பிளைன் பண்ணிக்கொண்டு இருப்பார், அதலா அவரை " தலையிடி " எண்டு காரணஇடுகுறிப் பெயரில் நான் நினைப்பது  பொருத்தம் போலதான் இருந்தது ! 


                                                   பெண்களின் காதலில் விழுந்தாலே நாயைப் பிடி பிச்சை வேண்டாம் எண்ட வாழ்க்கை தானே எண்டு நான் அவருக்கு விளக்கம் எல்லாம் சொல்லும் அளவுக்கு அப்போது நானும்  அனுபவம் உள்ள ஒரு ஆள் இல்லை ,சும்மா அவர் நேரம் காலம் இல்லாமல் அவர்  பிசத்திறதைக் கேட்பேன். ஆனாலும் அவர் சொல்லுறதுக்கு எல்லாம் ஓம் ,எண்டும் இல்லை எண்டும்,சில நேரம் எதுக்கு தலை ஆட்டுறேன் எண்டு எனக்கே தெரியாமலும், தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு வாய திறந்து ஒண்டுமே சொல்லமாட்டேன் ,அவர் என்னை


                                  " நீர் நல்ல இண்டரெஸ்டிங் ஆன ஆள் ஐசே கதைக்கிரதுக்கு,ஆனால் கதைச்சா அதுக்கு பதில் கதை சொல்லாமல் எப்பவும் இருகிர்ரீர்ர் ,அது  உம்மோட கதைக்க ஆசையா இருக்கு...எண்ட பெண்டுகள் ஒவ்வொருத்தியும் நான்  வாயத்திறக்க முதலே அவளுகள் வாயைத்திறந்து சுளகில புழுங்கல்  அரிசி புடைச்ச மாதிரி  கவிட்டுக் கொட்டுவாளுகள்,,கேட்டுக்  கேட்டுக்கொண்டிருக்க  ஒரு கட்டத்தில காது ரெண்டும் கிழியும்  " 


                         எண்டு கார் ஓடிக்கொண்டு  எனக்கு சொல்லுவார் ,நான் காதுகிழியாமல் வேற என்ன கிழியும்  எண்டு சொல்ல நினைப்பது ,,ஆனால் சொல்வதில்லை ,அவனவனுக்கு ஆயிரம் பிரசினை இருக்கும் அதெல்லாம் எனக்கு தனிப்படப் பிரசினைகள் இல்லையே,

                                         நான் அப்போது சட்டப்படி கலியாணம் கட்டி இருந்தேன். என்னோட ஸ்வீடிஷ் மனைவிக்கு நான் சட்டதை மதிக்காமல், அதைக் காலுக்க போட்டு மிதிக்கும் அந்த "தொழிலில் " விருப்பம் இல்லை, தலையிடியோடு டெலிபோனில் தமிழில் கதைப்பதால் அவளுக்கு என் மாஸ்டர் பிளான் ஒன்றும் விளங்காது. கடவுள் எண்டு ஒருவன் இருக்கிறான் தானே அவன் பல நேரம் நம்மைக் காப்பாற்றுவான்  ,,இல்லையா  சொல்லுங்கோ பார்ப்பம் ,


                                " ஏன் சிவனே எண்டு சோலி இல்லாத சமைக்கிற வேலையை விட்டுப்போட்டு இப்படி கள்ளன் பொலிஸ் விளையாடுற வேலை செய்யுறாய். உன்னோட நன்மைக்குதான் அட்வைஸ் செய்யுறேன், உனக்குத்தான் மண்டைக்கு உள்ளுக்கு ஏறுது இல்லையே  "


                                   எண்டு சில நேரம் என் தர்மபத்தினி  திட்டுவாள். ஒருவேளை ஆசிய நாட்டில் இருந்து நான் வந்ததால் இவங்களுக்கு இதெல்லாம் சாதாரணம் என்று நினைச்சோ  தெரியவில்லை பொறுமையா என்னோட திருகுதாளங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.நானும் புளியடி புளியடி எவடம் எவடம் எண்டு அதை சொரணை இல்லாமல்  கேட்டுக்கொண்டு ஓடுப்பட்டுக்கொண்டு திரிஞ்சேன்  


                                               ஆனால் ஒவ்வொரு முறையும், "அலுவலுக்குப் " போய்ட்டு வெற்றியோட வரும்போது, பிரான்சில இருந்து "சம்பெயின்" வைன் போதில்களும்,பெல்யியத்தில் "கொனியாக்" விஸ்கி போத்தில்களும், ஜெர்மனியில் "Bratwurst" இறைச்சி உருண்டையும்,டென்மார்கில் "கசெல்லோ " சீஸ் கட்டிகளும், வேண்டிக் கொண்டு வந்து கொடுத்து, வின்டருக்கு சுவிஸ்லாந்தில் அல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்க ஹோட்டல் புக் பண்ணி, டிக்கட் போட்டுக் கொடுத்ததால் அவள் ஒண்டுமே சொல்லவில்லை! அவளைத் கையுக்க வைச்சிருக்க ஒரு எமிரல் கல்லு வைச்ச விலை அதிகமான மோதிரம் வேற வேண்டிக்கொடுத்து இருந்தேன் அந்த நேரம் ,

                                  என் சுயபுராணம் அதை டெலிவிசன் சீரியல் போல இழுத்து நீட்டினாலும் அதில ஒரு மண்ணும் இல்லை ,அதை வைச்சு அறுக்காமல் , அந்த தொழில் விட்டத்துக்கு காரணதையும் , கடைசியில டென்மார்கில் "போர்டரில்" மாட்டி ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டு இருந்தது போன்ற  பிரயோசனமான  கதையை தள்ளிக்கொண்டு வாறன் 


                                      ஸ்பெயின் இல் இறங்கி பிரான்ஸ்க்குள் வந்து நின்ற இரண்டு பெடியங்களை ,பரிஸில் இருந்துநோர்வே கொண்டுவருவதுதான் அந்த  கொன்றாக், தமிழ் பொடியன்கள்  அதுவும் தாய்த் திருநாட்டு ரத்த உறவுகள் அவங்களுக்கு உதவாமல் வேற யாருக்கு உதவுறது எண்டு உடனயே சரியெண்டு ஒத்துக் கொண்டோம் 


                                  பரிசில் காருக்க ஏத்தும் போதே  நாங்கள் பொடியன்களுக்கு விளக்காம எப்படி போலிசுக்கு கதைக்க வேண்டும் என்று சொன்னோம். முக்கியாமா எங்காவது மாட்டினால்,  


                               " இடம் வலம் தெரியாமல் தடுமாறிக்கொண்டு ரோட்டில நிண்டம்,இந்த ரெண்டு அண்ணையும் தமிழ் கதைச்சினம் ,  எங்களை இடம் காட்டி சொந்தக்காரரிடம் கொண்டுபோய் விடுறம் எண்டு சொல்லிச்சினம் அதாலதான் இவயிண்ட காருக்க ஏறினணாங்கள்,,வேற இவையைப்பற்றி வேற  ஒண்டுமே எங்களுக்கு தெரியாது "


                                          இதுதான் நாங்க சொல்லிக்கொடுத்த நாடக வசனம்.பொடியளுக்கு திருப்பி திருப்பி சொன்னோம்,,இதைத்தான் திருப்பி திருப்பி போலிசுக்கு பிடிபட்டால் சொல்லவேண்டும் என்று.அவங்களும் ஓம் ஓம் என்று  மண்டையை மண்டையை ஆட்டினாங்கள் 


                                     ஜமகண்ட நேரத்தைத் தவிர்த்து ராகுகாலம் தேர்ந்தெடுத்து ,ரூட்டுக்கு  மூக்குச் சாத்திரம் பார்த்து, பிரான்ஸ் போடரை வடக்குப் பக்கமாக் கடந்து , ஹோலாந்து போடருக்க மேற்க்குப் பக்கமா இறக்கி ,அதன் காட்டு பாதையில் ஓடி கிழக்கு போடரில் ஜெர்மனிக்க இறக்கி ஓட்டோ பாணில தெற்குப் பக்கமா ஓடு ஓடெண்டு ஓடி ,ஸ்பீட்  ட்ராபிக்  கமரா  எல்லாம் சுளிச்சு ,வடக்கால டென்மார் "போர்டர்" வரை கொண்டு வர, அந்த "போர்டரில் தான் சகுனம் பிழைச்சுது .அதில  மோப்ப நாயோட எதிர்பாரா நேரத்தில் ,குறுக்காலபோன போர்டர் பொலிஸ் நிண்டு எங்களை மறித்தான் , 

                               
                           நானும் ,தலையிடியும்  பல வருடம் முன்னமே உலகத்துப் பொய் எல்லாம் சொல்லி ஐரோப்பாவில் அரசியல் அகதி ஆனதால் எங்கள் ஆவணங்களை நோண்டிப் பார்த்து ஓகே என்றார்கள் ! பொடியன்கள்  யார் எண்டு கேட்க 

                                   " எங்களுக்கு தெரியாது,ரோடில நின்றார்கள், பார்க இலங்கை தமிழர் போல இருந்தார்கள்,யாழ்ப்பாணத் தமிழில் கதைத்தார்கள் அதால்  எங்கள் ரத்த உறவுகள் இடம் வலம் தெரியாமல் ஒரு ஐரோப்பிய வீதியில் அநாதைகள் போல வீதியோரம்  நிண்டு தத்தளிப்பதைப் பார்க்க நெஞ்சு வெடிக்கும் போல வந்தது, அதல அவர்கள் கேட்டபடி, உங்களின் போடருக்கு அங்கால விடுறதுக்கு ஏத்திக்கொண்டு வந்தோம் " 


                           எண்டு இதுக்கு மேல கேட்டால் பொல பொல வென்று கண்ணீர் விட்டு அழுவம் என்பதுபோல சொல்ல,பொலிசுக்காரன் முழிச்சு முழிச்சுப் பார்த்துக்கொண்டு இருந்த பையன்கள் இருவரையும் இறக்கிப் போட்டாங்கள். அவங்கள் பதினெட்டு வயசுக்குக் குறைந்த மைனர் போல இருந்ததால்  "பதின்வயது அகதிகளுக்கான  குடிவரவு  "அதிகாரிகளை  இடம் அந்த இடத்துக்கே வரவளைத்துக்  கையில பொறுப்புக் கொடுத்திட்டாங்கள் , 


                             எங்களின்  கார் துறப்பைப்  பிடுங்கி எடுத்த பொலிஸ்காரன்  அதை ஸ்டார்ட் செய்து ரோட்டில் இருந்து விலத்தி ஓரமாக பக்கத்தில் இருந்த ஒரு வெறும் வளவில அதை விட அது வாஸ்து சாஸ்திரப்படி ஈசானு  மூலைக்கு எதிரா அக்கினி மூலையப் பார்த்துக்கொண்டு நிக்கவே விளங்கிட்டுது இனி நெருப்பெடுத்த அலுப்பு வரப்போகுதெண்டு. 


                             என்னையும் தலையிடியையும் புறங்கையைப் பின்னுக்கு மடக்கி விலங்கு போட்டு, அவங்கட காருக்க ஏற்றி அரை மணித்தியாலம் ஒரு நகரத்துக்கு பொலிஸ் காரில் ஓடிக்கொண்டுவந்து ,பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் பெரிய கதவைத்திறந்து அதுக்குள்ளே நடத்திக்கொண்டுபோய்,  வலது காலை எடுத்து வைக்கச்சொல்லி கிராதிக் கம்பிக் கதவைத் திறந்து  உள்ளுக்க தள்ளிட்டாங்கள்!

                                         அந்த சிறையில் இரண்டு நாள்  விசாரிக்காமல் வைத்திருந்தார்கள், மூன்றாம் நாள் 
ஒரு அதிகாரி வந்து அந்த ரெண்டு பொடியன்களும் டென்மார்கில் அசைலம் அடிச்சு இருகிறாங்கள் எண்டும், அவர்களை இளையவர்களின் முகாமில் விட்டுள்ளோம் என்றும் சொன்னார். ஆனால் எங்களுக்கும் அந்தப் பொடியன்களுக்கும் எப்படி சந்திப்பு நடந்தது என்று பொலிஸ் நரிப் புத்தியில் திருவலையில் தேங்காய் திருவிற மாதிரி துருவித் துருவிக் கேட்டார்.  நாங்கள் அவங்களுக்கு சொல்லிக்கொடுத்த அதே வசனத்தை அச்சுப் பிசகாமல் சொன்னோம்.


                               ஆனால் பொடியன்கள்  இதைத்தான் திருப்பி திருப்பி போலிசுக்கு பிடிபட்டால் சொல்லவேண்டும் என்று நாங்க கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொடுத்ததை திருப்பி மற்றப் பக்கமா மாற்றி  " பேச்சுப் பேச்செனினும் பெரும் பூனை வந்தாக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி "  போல  பயத்தில, நாங்கள் காசுக்கு போடர் கடத்துற வேலை செய்யுறவர்கள் எண்டு உண்மை பேசி பொலிசுக்கு விசுவாசிகளா மாறிட்டாங்கள் என்று அந்த அதிகாரியின்  அலட்சியமான சிரிப்பில் தெரிந்தது 


                                  பிறகு ரெண்டுநாள் ஒருவரும் துருவ வரவில்லை   தலையிடி மனைவி கர்பமாக  இருப்பதா எனக்கு சொன்னார் ,ஒரு ஜெயில் காவல்காரனிடம்  அவர் டெலிபோன் பேசவேண்டும் எண்டு கேட்க


                    " தர முடியாது, இன்னும் ஒரு கிழமை நீங்கள் உள்ளே இருக்கவேண்டும்,,இப்பதான் விசாரணையே ஆரம்ப கட்டத்தில் இருக்கு  " 


                         என்று சொன்னான் , அடப்பாவிகளா  ரெண்டு பொடியன்களுக்கு அதுவும் தமிழ் பொடியன்கள் எண்டு உதவி செய்ததுக்கு என்னமோ கொலை செய்த கிரிமினல் கேஸ் போல சொல்லுறாங்களே டென்மார்க் பொலிஸ்காரன் என்று கோபமா வந்தது, 


                                                இதுக்குள்ள தலை தலையிடிக்கு காதலிகள் இருக்கு எண்டுதான் நானே அப்போது எல்லாம் நினைத்து இருந்தேன்,அவர் மனைவி எண்டும் ,அவா பிரக்னன்ட் எண்டு சொல்ல குழப்பமா இருந்தது, எப்படியோ மனிதர்களுக்கு கஷடம் வரும் போது பல உண்மைகள் வெளிய வரும் எண்டதும் உண்மை எண்டு போட்டு  , 

                                    தலையிடியின்   சோக நிலையப் பார்த்து ,நான் அவருக்கு ஒரு அரசியல் ஐடியா கொடுத்தேன்


                               " எங்களை டெலிபோன் கதைக்க விடாவிட்டால் ,சாகும் வரை உண்ணாவிரம் இருப்போம் எண்டு தன்மானத் மறத் தமிழர் போல சொல்லுங்க அண்ணே  என்ன நடக்குது எண்டு பார்ப்பம் ,,ஒண்டு இவங்களா  அல்லது  நாங்களா எண்டு ஒரு முடிவு பார்க்காம விடக்கூடாது அண்ணே "


                                " என்ன ஐசே இப்பிடி சொல்லுறீர் ,சில நேரம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லிப்போட்டு கவனிக்காமல் விட்டாங்கள் என்றா சீவியம் கிழியுமே,,,என்னை நம்பி மனுசியள்  நிக்குதுகள்,,நீர் சிம்பிளா சொல்லுறீர் .."


                                 " அண்ணே,,வெளிநாட்டுப் பொலிஸ்காரன்  நாய் பூனையையே சாப்பாடு இல்லாமல் சாக விடமாட்டன்,,நீங்க  பயப்பிட வேண்டாம்,,நாங்க தமிழர் அண்ணே பயப்பிடக்கூடாது அண்ணே.."


                                " எனக்கென்னவோ  இது  பயங்கரமா இருக்கு,,சிலநேரம்,,,"


                               " என்ன  சில நேரம் ,,,ஒண்டும் வராது,,அப்படி என்னவும் பிசகினால்..ரெண்டுநாள் பார்த்திட்டு பிளானை மாத்துவம்  "


                              "  எனக்கு இது  நடக்குமா எண்டு சந்தேகமா இருக்கு...சிலநேரம் ,,,"


                                  " அதுதான் ஜோகர்சுவாமிகள்   சொல்லி இருக்கிறார் இதெல்லாம் எப்பவோ முடிந்த காரியம் ,நல்லகுருநாதன் அறிய  ஒரு பொல்லாப்பும்  இல்லை "

                                    "  ஆர் அந்தச் சாமியார் ,,சொல்லும் ஐசே "

                              "  அவரும் எங்கட யாழ்பாணத்துச் சாமியார் தான் "

                                   " அவர்  என்ன  சொன்னார்  திருப்பி ஒருக்கா சொல்லும் ஐசே  அவர்  என்ன சொன்னார்  எண்டு "

                            " அவர் ஞானதிருஷ்டியில் முக்காலமும்  அறிந்தவர் "

                             "     அதென்ன ஐசே சொல்லுறீர் "

                              "  அவர் நடந்தது,நடக்கிறது ,நடக்கப்போறது மூன்றையும்  முன்னமே உணரும் முனிவர் "

                              "   நடக்கப்போறதை  முன்னமே சொல்லுவாரோ "

                           "  ஓம்,,சொல்லுவார் "

                              "  அப்ப பின்ன அவரையும் எங்கட பிஸ்னஸ்சில் பாட்னரா சேர்க்கலாமே,,இப்படி அவதிப்படவேண்டியிய  அவசியம்  இல்லையே,,எங்க  எந்த போடரில் வைச்சு மாமா அமத்துவான் என்று முன்னமே சொல்லக்கூடிய ஒருவர் பாட்னரா இருந்தா வலு வசதியா இருக்குமே "

                                      "  அந்தச்  சாமியார் இப்ப இல்லையே,,அவர் செத்துப்போய்  எண்பது  வருஷம்  கடந்து போட்டுதே "

                                 "  அடச்  சே ..எல்லாம்  எங்களுக்கு கஷ்டகாலம்  தான் "

                            " அண்ணே,,இப்பவே  அடிக்கிணதுக்கை நிக்கிறம்,,இதுக்கு மேல  என்ன வரப்போகுது ,,கடவுள் நல்லவர்களை  சோதிப்பான்,,ஆனால் கிணதுக்கையே  எப்பவும் விடமாட்டான் ,"


                               "  நீர்  என்ன ஐசே   சொல்லுறீர் "

                               " ஒரு வழி தான் அவன் காட்ட இல்லாட்டியும்,,வாளியோடு  வாற  கயிறாவது உள்ளுக்க ஒரு நாள் வரும்,,அதைப் பிடிச்சு மேல வரலாம்    அண்ணே,,தைரியமா போய்ச் சொல்லுங்க,,என்ன நடக்குது எண்டு பார்ப்பம்  "

                    எண்டு அந்தநேரம் வந்த தத்துவத்தை கடவுளை வைச்சு அடிச்சு விட்டேன், தலையிடி  தன்மானத் மறத் தமிழன் போல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போய் அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் போல அந்த டென்மார்க் ஜெயில் காவலனுக்கு சொல்ல, டென்மார் பொலிஸ்காரர் முனி அடிச்ச மாதிரிப்  பயந்திட்டாங்கள் ! அடுத்த நாள் டெலிபோன் பேச இருவருக்கும் 10 நிமிஷம் கொடுத்தாங்கள்,


                          நான் என்னோட மனைவிக்கு ஸ்வீடனுக்கு போன் எடுத்து 


                          " நான் டென்மார்க்  ஜெயிலுக்க இருக்குறான்," எண்டு சிரிச்சுக் கொண்டு சொன்னேன் ,அவள் கடுப்பாகி 


                             " ஒ,,அப்படியா சங்கதி,, எனக்கு,தெரியும் ,ஒரு நாள் இல்லை ஒரு நாள்  நீ  கட்டாயம் மாட்டுவாய்,  இது நடக்கும் எண்டு எனக்கு மனதுக்க எப்பவுமே ஒரு குரல் சொல்லிக்கொண்டு இருந்தது,,"


                           " ரெண்டு மூன்று  நாளில் உச்சிக்கொண்டு வெளிய வந்திடுவேன்" 

                               "  நான் சொன்னால் நீ எங்க கேட்கப்போறாய்  என்று சொல்லாமே விட்டு அந்தகுரலே இப்ப பொய்யாகிப் போயிட்டுது "

                          " சும்மா  கலவரம் ஆகாதே  மார்கிட் "

                                 " எனக்குக் கை கால் எல்லாம் பதறுது,,நீ சிம்பிளா சொல்லுறாய்,, போடர்போலிஸ் , இமிகிரேசன்  ஜெயில்  என்று "

                                    "இதெல்லாம்  எனக்கு ஒண்டும் செய்யாது,  " 

                                " சாப்பிடியா  ,,சாப்பாடு தந்தாங்களா  எனக்கு கவலையா இருக்கு நீ பசியோடு இருக்கிறாயோ  என்று "

                              " அதெல்லாம்  ஒரு  மண்ணும்  முக்கியமில்லை ,,போட்ட மாஸ்டர் பிளான் பிசகிட்டுது  அவளவுதான் "

                             "   நீயே ஒரு படு முட்டாள் நீ போட்ட மாஸ்டர் பிளான் உருப்பட்ட மாதிரிதான்  கிழிக்கும் ,,முதல் அதிகாரிகளுடன் அடக்கமாகக் கதை "

                           " இவங்கள் என்ன கொம்பா எனக்கு,,அனாவசியாமாக் கதைச்சால் மூஞ்சை இருக்காது ,,நொறுக்குவேன் "

                         " முதல் ஒரு நாட்டு சட்டத்தை மதித்து அமைதியாக் கதைக்கப் பழகு,,உன் குற்றத்தை ஒப்புக்கொள் "

                             "   இவங்கள் என்னோட முண்டினால்  இந்த ஜெயில் இருக்கிற இடமே இல்லாமல் அடிச்சு நொறுக்கித் தரை மட்டம் ஆக்குவேன் "

                                  "     ஏன்  இப்பிடி  நீயே பிழை செய்துப்போட்டு அவங்களைத் திட்டுறாய் ,,முதல் அமைதியாகப் கதை "

                              "  இதெல்லாம்  ஒண்டுமில்லை  எனக்கு மார்கிட் "

                                "ஆனாலும் ஜெயிலுக்க இருக்கிறதை சந்தோசமாய் சொல்ராயே, வெட்கமாக  இல்லையா ? "  

                       " நெல்சன் மண்டேலாவே 23 வருஷம் ஜெயில்லுக்க இருந்தாரே " 


                      எண்ட அவளுக்கு கோபம் வந்து பொத்துக்கொண்டு வந்திட்டுது 


                                " நான் ,ஒரு சதம் செலவழிக்க மாட்டேன், நீ மாட்டிண மாதிரியே வெளிய வந்து சேரு,


                                                        "ஹ்ம்ம்  "

                                   "   உன்னை லவ் பண்ணினதோட நிற்பாட்டி இருக்க வேண்டும்,"

                                              "ஹ்ம்ம்ம்  "

                                  "    உன்னைப் போய்க் கலியாணம் கட்டினேனே ,அதுவும் வெளிநாட்டுக்காரங்களை  நம்புறது கஷ்டம் எண்டு என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்லியும்  உன்னை இதயம்வரை காதலித்தால்"

                                            "ம்ம்ம்ம்  "

                               "உன்னை  எல்லாம் சுவரோடு சாத்தி  வைச்சு உதைக்க வேணும்.. அப்பவும்  நீ திருந்த மாட்டாய்,,உன் குரங்குப் புத்தியைக் காட்டுவாய்   "

                                    "  ம்  ம் "

                             "  எல்லாம் என்னோட விதி,,ஏனடா  ரெஸ்டாரென்ட் வேலையை விட்டுப்போட்டு  இப்படி அடங்காப்பிடாரி போல  எனக்கு அரியண்டம் தாராய்  "  

                                "  ம் "

                    " என்னத்தச்  சொல்ல  உன்னோட  குளறுபடிகளை , இப்ப நல்லா தலையைக் கொடுத்து   மாட்டி நிக்கிறாய், Life  is a great story, very creative, but sadly just a story...ஹ்ம்ம்.."

                              எண்டு கொஞ்ச நிமிடம் விக்கி விக்கி அழுதாள், அவள் அழுகிரதைக் கேட்க எனக்கே நான் ஓவரா அலுப்புக் கொடுக்கிறேன் என்று மனது இளகிவிட்டது . அவள்  பாவம், அவளுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே பொருத்தம் இல்லைப்போல இருந்தும் அவள் தான் என்னை இதுக்கு முதலும் பல சில்லெடுப்புக்களில் இருந்து என்னை மயிரிழையில்  காப்பாற்றினாள்/  

                            " Bye ,God Bless You  , கடவுளின் ஆசிர்வாதம் உன்னைக்  காப்பாற்றட்டும்"   


                                      எண்டு சொல்லிப்போட்டு படார் எண்டு போனை வைச்சிடாள், நான் ஸ்வீடிஷ் பாசையில் கதைப்பதை ஒரு டென்மார்க் பொலிஸ்காரன் கேட்டுட்டு பக்கத்தில் நின்றான் ,கிட்ட வந்து அது யார் எண்டு கேட்டான்,நான் என்னோட தர்ம பத்தினி எண்டு சொன்னேன்,


                      " நான் நினைச்சேன், " 


                           எண்டு போட்டு அவன் சிரிச்சான்,அவனுக்கும் இப்படி பல பெண்கள் பொறுத்த நேரத்தில கையை விட்டு இருக்கலாம் போல , என்னோட ஆத்துக்காரியுடன் சுவுடிஷ் மொழியில் நடந்த உரையாடலைப் கேட்ட தலை இடி கிட்டவந்து  


                                      " ஏன் ஐசே ,உண்மைய சொன்னனீர் , உமக்கென்ன விசரா,பொஞ்சாதிமாரிட்ட இதெல்லாம் சொன்னால் மதிக்கமாட்டாளுகள்  " 


                                      "    ஹ்ம்ம்,,அதுவும் உண்மைதான் "

                                       "   நான் மனுசிக்கு, டென்மார்கில் கார் அடிபட்டு நிக்குது ,ஹோட்டலில் ரூம் போட்டு நிக்கிறன், இன்சூரன்ஸ் எல்லாம் கிளியர் ஆகி வர ,கொஞ்சம் திருத்த வேலை எல்லாம் முடிஞ்சு வர ஒரு கிழமை எடுக்கும் எண்டு சடைஞ்சு  சொன்னேன், "

                                  " அட அட  பொய்யை  உண்மைபோல சொல்லி இருகுரின்களே "

                                           " பேந்தென்ன  இந்தக் கேவலம் கெட்ட தொழில் இனி செயிறது இல்லை, நீர் ஏன் ஐசே ,உண்மைய சொன்னனீர் ஐசே  ,"

                               "   நெடுகிலும் பொய் சொல்ல முடியாது  அண்ணே "

                                    "  பேந்தென்ன  உமக்கென்ன மண்டைப் பிழையா ,,அதுவும்  அவா சுவுடிஷ் பொம்புளை ,, உமக்கென்ன விசரா, , " 

                                       என்றார். நான் சும்மா அப்பவும் தலையை மட்டும் ஆட்டிப் போட்டு நின்றேன், ஒருவர் உண்மை சொல்வதுக்கும் ,பொய் சொல்வதுக்கும் அவர் அவர் அளவில் காரணங்கள் இருக்கிறது!

                                               ஆனாலும் தலையிடி பொஞ்சாதிமாரிட்ட எண்டு பன்மையில் சொன்னது ஒரு விதத்தில் அவர் சில உண்மைகளை சொல்லுறது மாதிரி இருந்தது, எப்படியோ அது அவரோடதும் அவரோட பொஞ்சாதிமாரோடையும் சொந்தப் பிரசினை, அதால அதை பற்றி நான் ஒண்டும் கதைக்காமல் ,
   

                                       " அண்ணே ,வாங்கண்னே, நான் மேசையில மேளம் அடிக்கிறன் ,நீங்க பாடுங்க ,,ஏதாவது ஒரு பாட்டு பாடுங்க இனி ஜோசித்து ஒண்டும் வரப்போறது இல்லை,,உள்ளுக்கவும் சந்தோசமா இருந்திட்டு வெளிய போவம் "


                                 எண்டு சொல்ல அவர் தனக்கு எப்பவுமே பிடித்த பாட்டு என்றும், டெலிபோனில்  கதைச்சது கொஞ்சம் ஆறுதலா இருக்கு என்றும் சொல்லி 


                                   " நிலவே என்னிடம் நெருங்காதே ,நீ நினைக்கும் இடத்தில்..நான் இல்லை, நிலவே..... என்னிடம் நெருங்காதே ,நீ நினைக்கும் இடத்தில்....நான் இல்லை, " .


                       .என்ற பி பி ஸ்ரீனிவாஸ் பாடின  பழைய பாடலைப் பாடினார், அதைகேட்க எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.


                             " ஏன் ஐசே சிரிக்கிரீர், எண்ட மனுசிய நினைச்சு சீரியஸ்சா பாடுறன்,,அதுக்குள்ள அவள் பிரக்னன்ட், இந்தா அந்தா எண்டு எப்ப குத்து தொடங்குமோ தெரியாது எண்டு டெலிபோனில அழுதாள்  ,நினைக்க  கவலயா இருக்கு,,நீர் முசுப்பாத்தி போல சிரிக்கிரீர்   ?" 


                            எண்டு தலையிடி அப்பாவியாகக்  கேட்டார் 


                                ," இல்லை, இந்தப் பாடில வாறமாதிரி,உங்க மனைவி நினைக்கிற இடதில நீங்க இல்லை, நீங்க  அவாவுக்கு  இருக்கிறதா சொன்ன இடத்தில நீங்க இல்லை, அதை நினக்க்க சிரிப்பு வருகுது அண்ணே 


                              எண்டு  அப்பாவியாக சொன்னேன். அவர் அதுக்கு முதல் முறையா ஹஹஹஹஹஹஹா   என்று ஜெயில் அறையே அதிரும்படி சிரிச்சார், அந்த சத்தம் கேட்டு ஒரு ஜெயில் காவலன் வந்து நாங்கள் இருக்க வேண்டிய இடதிலதானா இருக்கிறம் எண்டு கதவு, அதன் பூட்டு எல்லாத்தையும் செக் பண்ணிப்போட்டுப் போனான் ,பிறகு தலையிடி 



                    " சுத்துமாத்து  ஹஹஹா  சுத்துமாத்து ,,வாழ்கையே சுத்துமாத்து ,"


                      என்று சொல்லி நினைச்சு நினச்சு கொடுப்புக்குள்ள சிரிச்சார் .

                             என் குலதெய்வம் வீராளி அம்மாளாச்சி  கருனையால 10 நாட்களில் தண்டனைக் காசு கட்டுறன் என்று உறுதிகொடுத்து , பாஸ்போட்டிலும் சிவப்பு சீல் ஒண்டு சாதனையாகக் குத்திக்கொண்டு வெளிய வந்த பின், அந்த தொழிலுக்கும் எனக்கும் ராசியில்லாதபடியால அதுக்குப் பிறகு அதைச் செய்ய ஆர்வம் வரவில்லை . நெற்றி வியர்வை நிலத்தில சிந்த பழையபடி அண்டா ,குண்டா,சட்டி,பானையோட மல்லுக்கட்டி பழைய குருடியின் கதவைத்திறந்து ரெஸ்றோரன்ட் குசினியில வேலை செய்ய தொடங்கிட்டேன்.


                                         டென்மார்க் இமிகிரேஷன்  ஜெயிலில் இருந்த போது    என் மனைவி சொன்ன கவலையான  வார்த்தையான ...Life  is a great story, very creative, but sadly just a story.. என்பதை மறக்கவேமுடியவில்லை . அதை எப்போதும் நினைப்பது. இப்பவும் தான். சிலநேரம் இந்தக்கதையை வாசித்து முடிய நீங்களும் அவள் சொன்னது போலவே Life is  a great story, very creative, but sadly just a story.. என்றுதான் சொல்லவேண்டுமென்று நானும் நினைக்கிறேன்
.
.

Wednesday, 4 November 2015

கதைகளின் அவஸ்தை ..

நிஜ வாழ்கையில் சந்திக்கும் மனிதர்களின்  உரையாடல் ஊடாக  மனிதர்கள்,அவர்களுக்கு இருக்கும் வாசிப்பு ஞானத்தை அதிகம் உணர முடிந்த சந்தர்பங்கள் அதிகம் கிடைப்பதில்லை . இதில் முக்கிய குறிப்பு இதை  என் கதை சார்ந்து பேசியதால் புகழ்கிறேன் என்று எண்ண வேண்டாம். என் குணமும் அப்படிப்பட்டது அல்ல.  எழுத்து  பக்கம் புலன் சாய்க்காமல் சிலரில் சிலவற்றை மண்டைக்குள் பதிவு செய்கிறது  சில நேரம் அந்த சம்பவங்கள்  எப்படிக் கிடைத்ததோ அதேபோல முழுக்க முழுக்க ஏமாற்றமாயும் இருக்கலாம் .

                                 கோடை வெய்யில் மஞ்சளாக ஒஸ்லோ நகரத்தின்  சன நெரிசலின் இடையில் புகுந்து  வெளியே வந்து கொஞ்சம் நகரத்தை சூடாக்க , இன்றைய நாளின் அவசரங்களை நமதாக்கிக்கொண்டோம்  என்று மனிதர்கள் வேகமாககக் கடந்து கொண்டிருந்த  குனாரியஸ் சூப்பர் மார்கெட் வாசலில் நடைபாதை ஓரம் வாகனங்கள் உள் நுழையாமல் தடுக்கப் போட்டிருந்த சீமெந்துக் குந்தில் இருந்து  ஒரு சிகரெட்டைப் பத்திக்கொண்டிருந்தேன்.

                                          வெளிச்சமான நாட்களில் எல்லாவிதமான மக்களும் நேரத்தை இழுத்துக்கொண்டு நடைபாதைகளில்  நடை பாதியாக மும்மரமாக கடைகளில் ஓடி நுழைந்து ஓடி வெளியேறி , நெருக்கம் புதுவிதமாக விலாசங்களை மாற்றி எழுத , அரைகுறை மேலாடைகளில் கோடையின் காற்றை விசாரிக்க விட்ட  இடங்களில் வியர்வை வாசம் மட்டும் என்னவோ மந்தமாகத்தான்  இருந்தது.

                                  ஒரு இலங்கைத் தமிழர் என்னை முன்னுக்கு நேருக்கு நேர் சந்தித்த போது எதுக்கு வம்பு என்பது போல  மெதுவாகப் பார்த்துக்கொண்டு , ரெண்டு கைகளிலும் மரக்கறி அள்ளி அடைஞ்ச  நீல நிறப் பிளாஸ்டிக் பையை வேண்டாவெறுப்பாகக்   காவிக்கொண்டு , மறுபடியும் என்னைக் கடந்த நேரம் டக்கென்று என்னவோ நினைவு வந்த மாதிரி ,முழங்கையில் சுண்டினால் கரண்ட் அடிக்குமே அதைப்போல உதறி என் முகத்தைப் பக்கவாட்டில் பார்த்தார். அவர் முகத்தில விடுப்பு அறியும் யாழ்ப்பாணக் குணம் எழுதி ஒட்டி அவர் யாழ்ப்பானதவர் என்பதை அவிட்டுவிட்டுக்கொண்டு இருந்தது.

                                    மட்டுப் பிடிச்சுப் பார்க்க என்னைவிட ஒரு ரெண்டு வயசு அதிகம் போல இருந்தார். என்னை விட உயரம் குறைவு. கொஞ்சம்  நேரான உடம்பு வாக்கில் அதிகம் உடம்பை அசைத்து வேலை செய்யிற மாதிரி தெரியவில்லை அவர்  ஆடிப் பாடி அரக்கி அரக்கி நடந்த விதம் ,பெரிய கொலர் வைச்ச சேட் போட்டு இருந்தார்,அது பின்பக்கம் ஜீன்ஸ்க்கு உள்ளே நிக்காமல் வெளியால அலைந்து கொண்டிருந்தது, அதுக்கு மேலே அடிடாஸ் வார்ம் அப் ஜென்சர் போட்டிருந்தார்.

                                    நான் அவரை  மேலோட்டமாகப்  பார்த்துக்கொண்டு புகையை மேகக்கூட்டம் போல இழுத்து இழுத்து என்னமோ சிகரிட்டில் தான் ஒக்சிசன் லைப் லைன் போட்டு உயிர் ஓடிக்கொண்டு இருப்பது போல அதன் அலாதியான உயிர்ப்பில் உலகத்தின் மற்ற எல்லா அவஸ்தைகளையும் மறந்து கொண்டிருப்பது போல முகத்தை ரோட்டுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டு இருந்தேன்

                                 அவர் கொஞ்சம் கடந்து குனாரிஸ்  சூப்பர் மார்கெட் முடிவில் ரெண்டு நீல பிளாஸ்டிக் பையையும் நடைபாதையில் வைச்சுப்போட்டு ,காட்சட்டைக்க இருந்து மொபைல் போனை எடுத்து ஒரு நம்பருக்கு அடித்தார் ,நான் ஓடித் தப்பிப் போய் விடுவனோ என்பது போல என்னை கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு மொபைல் போனில கதைத்தார் .

                                எனக்குக் கேட்காத தூரத்தை தேர்ந்தெடுத்து அவர் மொபைல் போனில கதைத்தது , முழங்கையில் கரண்ட் அடிச்ச மாதிரி உதறியது, அதைவிட மொபைல் போனை நல்லா காதுக்கு நெருக்கமா வைச்சுக்கொண்டு கொஞ்சம் டென்சனில் கதைப்பது போல இருந்தது எல்லாம் எனக்கு எந்தப் பயத்தையோ , பீதியையோ கொடுக்கவில்லை,நான் விறைச்ச மண்டையன் போல என்பாட்டில் இருந்தேன் .

                                       சில நிமிடங்களில் ,மொபைல் போன் கதைச்சு முடிய ,மறுபடியும் என்னை நோக்கி அந்த ரெண்டு நீல நிறப் பிளாஸ்டிக் பைகளையும் தூக்கிக்கொண்டு வந்தார்,வந்து என் முகத்தையும் என் கையில விரல்களுக்கு நடுவில் இருந்த எரிஞ்சு முடிறிய சிகரட்டையும் பார்த்து நட்பாகச் சிரித்தார் ,நான் ஏற்கனவே இந்தாள் கதைக்க வந்தாலுமென்று  ஒத்திகையில் வைச்சிருந்த வணக்கம் எண்ட தொடக்கத்தை  சொல்லி முடிக்க  முதலே அரைவாசியில்  அவர் அது முக்கியமில்லை என்பது போல

                              " நீர் ,,அவரேல்லோ,, இண்டைக்கு கண்ணாடியையும் வீட்டில மறந்து வைச்சுப்  போட்டு வந்திட்டனே ," எண்டார்

                               " அப்பிடியெண்டா ,,என்ன  சொல்லுரிங்க   " என்றேன்

                              " என்ன  கதை எழுதுவீர் அவர் தானே , நேர்ல பார்க்க வயகெட்டுக் கிழவன் போல இருக்கிரீர் "

                            " ஹ்ம்ம் ,,

                         " உம்மட ஒரு கதை  ,,ஒரு ஜெயிலுக்க நீர் இன்னொரு ஆளோடு இருப்பீர்,,,நினவு இருக்கா"

                         " முழுவதும் இல்லை ,,அரைவாசி  அவர்தான் "
                                     
                             " பேமெண்டில் குந்தி இருந்து சிரகரட்டை விரலைச் சுட்டாலும் பரவாயில்லை எண்டு  கடைசிக் கட்டை வரைக்கும் இழுத்து கொண்டு இருக்கிறீர்,என்ன சீவியமடா  இது   எண்டு  எழுதுவீர் அவரேல்லோ  "

                           எண்டு  சிரிச்சார் ,,நானும் சிரிச்சேன். நான் ஓரளவு ஒஸ்லோ மனிதர்களுக்கு பேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம்,நேரடியாக தெரியாது, அதால் அவர் அப்படி தயங்கி தயங்கி அடையாளம் காண்பது ஆச்சரியாமா இருக்கவில்லை .செலிபிரிட்டி  என்ற  சினிமா உலகப் பிரபலங்களுக்கே  அப்படி நடப்பது, சும்மா நக்குத் தண்ணியில் நாக்கு நனைச்ச மாதிரி  நாலு கதை எழுதிப்போட்டு இருக்கிற எனக்குக்  கவனிப்பு இப்படிதானே இருக்கும் .

                                  " ஹ்ம்ம், நீங்க நினைக்கும் ,அவர் தான்,, நீங்க நான் எழுதுறது எல்லாம் வாசிப்பின்களோ,,சும்மா பொழுதுபோக்க எழுதுறது ,,எங்கே நான் எழுதுறது வாசிப்பிங்க

                                    " நீர் தானே என்னோட பேஸ்புக்கில்  பிரண்டாக இருகிறீரே ,,என்ன ஐசே இப்படி கேள்வி கேட்கிறீர் "

                                        "  ஒ அப்படியா,, எனக்கு உங்கள் முகம் அங்கே கண்டதாக நினைவு இல்லையே ,,எனக்கு கொமென்ட் லைக் போட்டு கொஞ்சம் பழகுபவர்களின் முகம் நினைவு இருக்கும் "

                             " நான் அதொண்டும் போடுரேல்ல , ரெண்டு வருசத்துக்கு மேல  பிரெண்டா இருக்கிறன் ,நீர் ......  .....  எண்டு  பெயர் எழுதி தட்டிப்பாரும் என்னோட பெயர் வரும் "

                              " ஒ பரவாயில்லையே,,நிறையப்பேர் சைலன்ட் ரீடர்ஸ் ,அப்படி இருப்பதை நானும் கவனித்து இருக்கிறேன் ,உங்களை நேரடியா சந்திச்சது சந்தோசம் "

                                 " அதென்ன    சைலன்சர்  டீச்சர் ,,விளங்கேல்ல "

                                 " இல்லை அது சைலன்ட் ரீடர்ஸ் ,அவசரத்தில் ,ஆங்கிலத்தில் சொலிப்போட்டேன் ,,பலர் வாசிப்பார்கள் ,,ஆனால் கருத்து சொல்லமாட்டார்கள் ,,அவர்களை சைலன்ட் ரீடர்ஸ் எண்டு சொல்லுவார்கள் "


                                 " ஒ அதுவே  ,,நான் என்னவோ படிப்பிக்கிற டீச்சர்  என்டு நினைச்சேன் ,, உம்மட ஒரு கதை  அதை வாசிச்சு உம்மை நினைக்க  நல்லா விழுந்து விழுந்து சிரிக்க வைச்சது ,,ஒரு ஜெயிலுக்க நீர் இன்னொரு ஆளோடு இருப்பீர்,,,நினவு இருக்கா "

                                     "  ஹ்ம்ம் ,,கொஞ்சம் நினைவு இருக்கு "

                                   "   நீர் ஐசே அதை  ஒரு ஜெயிலுக்க இருந்த நேரம் நடந்தது   எண்டு எழுதி இருந்தீர் ,,அதென்ன பாட்டு  அந்தப் பழைய பாட்டு ,,இப்ப நினைவு வருகுதில்லை ,,,எங்கயோ ஜெர்மனி  ஜெயிலுக்க இருந்த நேரம் உம்மோட பிரெண்ட் படிச்சார் எண்டு எழுதி இருந்தீரே "

                               "  ஒ  நீங்கள்  நல்லா வாசிப்பிங்க  போல இருக்கே,,அது டென்மார்க்கில் ,,"

                               " இல்லை,,நான்  வாசிக்கிறது  இல்லை,,குறைவு  என்னோட  கூணா வாசிப்பா ,,அவா தான்    நீர்   ஜெயிலுக்க இருந்த    அதை எனக்கும் வாசிக்கச் சொன்னா "

                             " ஒ உங்க மனைவி நல்லா கதைகள் வாசிப்பா போல இருக்கே  "

                         " ஓம்,,அவள்  நல்லா வாசிப்பாள், அனுராதா ரமணனின்  கதைப் புத்தகம் எல்லாமே வைச்சு இருக்கிறாள்,,,நீர்  ஜெயிலுக்க இருந்த அந்தக்  கதை நல்ல முசுப்பாத்தி  எனக்கும்  முந்தி போடர் செய்த  ஆட்களைத் தெரியும்  ,,போடர் மனோ,,போடர் ரவியைத் தெரியுமோ உமக்கு "

                         "  இல்லை  தெரியாது, அது ஒரு கதை ,அவளவுதான் "

                           "   கதையோ ,,என்ன சொல்லுறீர் ,அதை வாசிச்சு நீர் ஜெயிலுக்க  கம்பிக்குப்  பின்னால இருக்கிறதை நினைச்சு பார்க்கவே  அடக்க முடியாம சிரிப்பு வந்தது,,ஒரே சுத்துமாத்து போல ,,உமக்கு சுத்துமாத்து நல்லா கைவரும் போல  "

                         " ஹ்ம்ம் கொஞ்சம் வரும் ,,அதை வைச்சு  மற்றவர்களை சிரிக்க வைக்கிறதே  ஒரு நல்ல விசியம் தானே "

                              " ஓம் ,,எண்ட  கூணா  அனுராதா ரமணனின் ஒரு கதையை நோர்ஸ்கில் ட்ரான்ஸ்லேட்  செய்யப்போறன் எண்டு கொஞ்சநாள் மல்லுக்கட்டிக் கொண்டு நிண்டாள் "

                              " அப்படியா  அதென்ன  கதைப் புத்தகம் "

                             " எனக்கு உதுகள் தெரியாது,,அந்தப் புத்தகத்தை தான் ஒரு படமா எடுத்தவங்களாம்,,சிலநேரம் உமக்கு தெரிஞ்சு இருக்காலம் "

                              " நான் நினைக்கிறன் ,,,சிறை என்ற பேமஸ் படம் அனுராதா ரமணனின் நாவல்,,அதை எடுத்து ஆர் சி சக்தி திரைகதை எழுதி சினிமாவா எடுத்தார் ,சரியா தெரியவில்லை.."

                               " ஓம் ஐசே.  பாத்தீரே ,  நீர்  ஜெயிலுக்க இருந்ததால தான், அந்தப்  படத்தையும்   சிறை  என்று டக்கெண்டு கண்டு  பிடிச்சிட்டீரே "

                                  " இல்லை அந்த சிறை வேற,,நான் இருந்த  ஜெயில் வேற,,சிறை அது  ஒரு அருமையான படம் அந்தப் படத்தின்  தொடக்கத்தில்  எம் எஸ் விஸ்வநாதனும் ஆர் சி சக்தியும் எப்படி அந்தப் படத்துக்கு இசை அமைப்பது என்று நடந்த ரிகர்சலையே  டைட்டில் சோங் ஆக வைத்து புதுமை செய்த படம் "

                                  "   என்ன வேற வேற எண்டு சொல்லுறீர்  ,,சிறை என்றா இங்கிலிசில்  ஜெயில் தானே ,,ரெண்டும் ஒண்டு தானே "

                                " போச்சுடா,,இனி உங்களுக்கு  அந்த சினிமாப் படம் நினைவுக்கு வரும்போதெல்லாம் நான் ஜெயிலுக்க இருந்தது நினைவு வரப்போகுதே "

                           " ஹஹஹஹா  உண்மையும் தானே,,பாத்தீரே   உமக்கே பக்கு பக்கெண்டு எல்லாம் கனெக்ட் ஆகுதே.. "

                               " நான் இப்பிடித்தான் என் வாயக்  கொடுத்தே வாங்கிக் கட்டுறது  ஹ்ம்ம் , ,வேற கதை ஒண்டும் வாசிக்கவில்லையா "

                          " இப்ப நான் அடிக்கடி நீர் எழுதுறது வாசிக்கிறனான் ,,ஆனால் நீர் அந்த ஜெயிலுக்க இருந்த  போல ஏன் இப்ப எழுதுறது இல்லை "

                                  "  ஹ்ம்ம்,,நான்  இப்ப ஜெயிலுக்க இல்லையே அதால எழுதுறது இல்லை "

                                      " மெய்யாத்தான் சொல்லுறீரோ "

                                          " இல்லை  நான்  சும்மா  சைட்  பிசினஸ்  போல  அதை  ஒருகாலத்தில்  தலையிடி  என்ற  நண்பனுடன்  சேர்ந்து  செய்தேன்,,அதுவும்  அந்த நேரம்  சுவீடனில் இருந்தேன் "

                                               " ஓம்,ஓம்,  சைட் பிசினஸ்சோ  ,,அதைத்தான்  பலர்  மெயின் பிசினஸ் போல செய்தவையள்  ,,"

                                                  " ஹ்ம்ம்,, "

                                              " இப்ப  அவைதான்  ஒஸ்லோ முருகன் கோவிலில் நெத்தியில பட்டை அடிச்சுக்கொண்டு  சாமி  காவுகினம் "

                                                      " ஹ்ம்ம் "

                               " இப்ப அவையளைப்  பிட்டிக்க  ஏலாது..அவளவு  எடுப்புச் செடுப்பு ,,செய்தது எல்லாம்  திருகுதாளம் "

                                                                             " ஹ்ம்ம் "

                                           " நீர்  ஜெயிலுக்க இருந்த கதையை சிரியா சிரி  சிரி  எண்டு  சிரிச்சு கூனாவுக்குச்  சொல்ல  அவள்  நம்புறாள்  இல்லை
"

                                               " அவா  என்ன  சொன்னா "

                                             " அவள்  சொல்லுறாள்  இது  சும்மா  த்திரிகிஸ் விடுற  கதையாம்  எண்டு "

                                 " அதுதான்  ,,உண்மை,,அது ஒரு  கதை  மட்டுமே "

                                   " என்ன கதை,,நீர்  ஐசே  அப்பிடியே  கட்டைக்களுசான்  போட்டுட்டுகொண்டு  கம்பி  எண்ணுற மாதிரி  அப்பீடியே  அச்சொட்டா ஜெயில் கைதிபோல  ஜெயிலுக்க நிக்கிறீர்  அவள்  அதைக் கதை  எண்டுறாள் "

                                               " ஹ்ம்ம்,,"

                                       " அதார் சிசிலியா ,,உம்மோட  சரக்கோ "

                                            " இல்லை,,சிசிலியா  என்னோட  ப்ரெண்ட் "

                                     " அட அட அட  அவளை அப்பிடியே அம்மணக் குண்டியா அவிட்டுப் பார்த்தமாதிரி  எழுதுறீர்,,பிரெண்ட்  எண்டுறீர் "

                                             " ஓம்,,கதைக்கு  ஏற்றமாதிரி  அப்படி  எழுதுறது "

                                       " அவள்  நோர்ஸ்கியோ "

                                                         " ஓம் "

                                              " நினைச்சேன் ,,அவள்  கதைகிரதைப் பாக்க  அப்பிடிதான்  தெரியுது, வேலியில  நிக்கிற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்க விட்ட மாதிரி வளவளத்த கதை  "

                                   " கதையில்  அவள்  கதைப்பாள்,,,ஏனென்றால்  அது  கதை "

                                      " கிழிஞ்சுது,,சும்மா  எனக்கு அவிக்காதையும்,,அவள் கதைகிறதே  குத்துது குடையுது என்டுறது  போல  இருக்கே  "

                                                                  " ஹ்ம்ம்,,"
                                                                 

                                     "  ஹஹஹஹா,,நீர் கதைக் கேக்கையும் நல்லா முசுப்பாத்தி விடுவீர் போல ,,அந்தப் பழைய பாட்டு  என்ன  பாட்டு  அது ,,நினைவு வருகுது  இல்லை  "

                                   "  ஹ்ம்ம் ,,நிலவே என்னிடம்  நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை  ,,,அந்தப்  பாட்டுத் தானே  கேட்குறிங்க "

                          " ஓம் ,ஐசே,, சில நேரம் நான் வெளிய பல்கனியில் நிண்டு வானத்தைப் பார்க்க ,அதில சந்திரன்  சாடைமாடையா  தெரிஞ்சாலே ,,உடன  நீர்  ஜெயிலுக்க இருந்த அந்த  நினைவுதான்  வரும்,,உம்மையும் ஜெயிலையும்  நினைச்சு சிரி சிரி  எண்டு சிரிக்கிறது  "

                                 " ஒ  அது ஒரு கதை அவளவுதான் ,,போறபோக்கில அந்தக் கதை உங்களை விட்டுப் போகாது போல தெரியுதே,, "

                                   " இல்லை ,,ஐசே ,,நீர் ஜெயிலுக்க இருந்த விசியத்தை ஒப்பினா சொன்னது  நல்லது,,,ஏன் தெரியுமே,,கன சனம் உம்மைப்போல  குடு கடத்தி பவுடர் வித்தவங்கள் உள்ளுக்க இருந்து வெளிய வந்து இப்ப என்னவோ பெரிய ஆட்கள் போல திரியுரான்கள்"

                              "  ஹ்ம்ம்,,இல்லை  நம்பினால் நம்புங்க  நான் எழுதியது  ஒரு கதை அவளவுதான்,,அதுக்கு மேல அதில ஒண்டும் இல்லை "

                            "  இல்லை,,நீர் அப்பிடி சொல்லக்கூடாது,,நீர் ஜெயிலுக்க இருந்ததை நல்லா வடிவா எழுதி இருகிறீர் ,அதை வாசிக்க அப்பிடியே கண்ணுக்கு முன்னால  நீர் ஜெயிலுக்க இருகிறது மாதிரி இருக்கும் "

                                " இதுதான்  கதைசொல்லிகளின் கனவுக்கும் நினைவுக்கும் இடையில் உள்ள  கால்களை ஊன்ற முடியாத  அவஸ்தை . பாவம் அந்தக்  கதைகளுக்கும்  இதால் அவஸ்தை ."

                                " என்ன சொல்லுறீர் , எனக்குதானா என்னவும் சொல்லுறீர் ,
நீர் நல்லாத் தண்ணியும் அடிப்பீர் போல இருக்கே முகம் டுபாய்ப் பூசணிக்காய் போல வீங்கி இருக்கிறதை பார்க்க "

                                      "   ம் ,,"

                                    " நீர்  வெறியில எழுதுறது போல இருந்தாலும்,,நல்லா இருந்தது நீர் ஜெயிலுக்க நின்டும் ,,அதில நடந்ததை மறக்காமல் எழுதியது "

                                         "    ம் "

                                  " நீர்  அப்படி  உண்மைகளை  எழுதும் ,,பிரசினை இல்லை ,,சனங்கள் வாசிக்கும் , இழுத்து  ஊதி  ஊதித்தள்ளி கன்னம் ரெண்டும் ஜால்ரா போடுற  சப்பளக் கட்டை போல வந்திட்டுதே   ,"

                                      "    ம் "

                                     " நீர் எழுதுற  கூத்தும்  ,,உம்மட படங்களையும் அங்க பார்க்க பெரிய அழகு ராஜா போல,,இங்கே பாக்க  நாலு மயிர்  மட்டும் முன்னுக்கு நிக்குது மிச்ச  மண்டை எல்லாம்  டொல் அடிச்சு  வெளிச்சுக் கிடக்குதே "

                                      "  ம்  "

                                 " வீடு வாசல்ல வேலை இல்லாத மாதிரி நிறையப் பெம்பிளையல் வழிஞ்சு வழிஞ்சு கொமென்ட் அள்ளிப்போடுற மாதிரி இருக்கு,,அதுகள் உண்மையா வாசித்துதான் போடுதுகளோ அல்லது  உம்மை அணைச்சுப் பிடிக்கப் போடுதுகளோ ,,அவையல் எல்லாரையும் நல்லாத் தெரியுமோ "

                                     " ஹ்ம்ம்,,,கொஞ்ச பேரைத் தெரியும் .."

                                " வேற என்ன சொல்லுறது ,,பிறகு இன்னொருநாள் சந்திப்பம்,,உம்மோட கதைக்க நல்ல இன்றேஸ்ட் ஆக இருக்கு ,,ஹஹஹா  உம்மட  முகத்தைப் பார்க்க ஹஹஹாஹ்  நீர்   ஹஹஹஹா    ஜெயிலுக்க இருந்த  ஹாஹஹா ."

                                       "     அய்யோ,,இன்னொரு நாளா..சரி  சந்திச்சா கதைக்கலாம் ,,பொழுதும் போக வேண்டுமே "

                                       " பிறகு,,இப்ப உம்மோட இங்க கதைகிறதை வைச்சும் கதைகிதை விட்டு  என்னவும் எழுதிப் போடாதையும் ,,உம்மை மாதிரி ஆட்களோடு வாயைக் கொடுக்கிறதே பயந்து பயந்துதான் கொடுக்கவேண்டிக் கிடக்கே "

                             "  இல்லை,,எழுத மாட்டேன்,,இதில என்ன இருக்கு கதை எழுத , சாதாரண உரையாடல் தானே "

                                     "   சரி நான் போகப்போறேன் ,,கூணா இப்ப போன் அடிக்கப் போகுது ,எங்க ஆளைக் காணவில்லை எண்டு ,,போட்டு வாறன்  என்ன,,மறக்காமல் தொடந்தும் எழுதும் ,,நாங்கள்  வாசிப்பம் "

                                      " ஹ்ம்,, இதுக்கு பேசாமல் அந்த  ஜெயிலுக்கையே பாதுகாப்பாக  இருந்து நின்மதியாக்   கதை  எழுதிக்கொண்டு இருந்து  இருக்காலம் போல இருக்கு .."

                                     " பேந்தும்பார் ,,அதென்ன  கதை,..வேற கதையும் ஜெயிலுக்க இருந்து  எழுதி இருக்கிரீரோ  "

                             " இல்லை ,அது  ஒண்டும் இல்லை,,நீங்க  போட்டு வாங்கோ ".

                                 நான்  இன்னொமொரு  சிகரட்டை அவர் போறதை   மேலோட்டமாகப்  பார்த்துக்கொண்டு புகையை மேகக்கூட்டம் போல இழுத்து இழுத்து என்னமோ சிகரிட்டில் தான் ஒக்சிசன் லைன் போட்டு உயிர் ஓடிக்கொண்டு இருப்பது போல அதன் அலாதியான உயிர்ப்பில் உலகத்தின் மற்ற எல்லா அவஸ்தைகளையும் மறந்து கொண்டிருப்பது போல முதுகைக் காட்டிக்கொண்டு வேற யாரும் தமிழர்கள் அவடத்தில் உலவுறார்களா என்று பகலிலேயே ஆந்தை போலப்  பார்த்தேன்

                                  நல்ல காலம் யாரும் தென்படவில்லை.
             
.

                              

தேவதைகள் உறைபனியில்...

அகோச்டிக் கிட்டார் இசைக் கலைஞ்சர் ஜோனாஸ் பிஜெல் நோர்வேயின் இயற்கைப் பாடகர். நோர்வேயில் இயற்கை எப்படி இன்னும் இயற்கையாக இருக்கோ அதே போல ஜோனாஸ் பிஜெல் பாடல்களில் இயற்கையைப் பாடாத பாடல்களே இல்லை,," 

                              தேவதைகள் உறைபனியில்,," Engler i sneen (Angels in the Snow), என்ற இந்தப் பாடல் இன்றுவரை நோர்வேயின் உறைபனிக் கால தனிமை மனிதர்களின் இதயத்தை உரசிச் செல்லும் வரிகளில் வந்த ஒரு முக்கியமான பாடல். ஜோனாஸ் பிஜெல் வட துருவ நோர்வேயின் அந்நியமான தனிமை நகரமான பூடோ என்ற கிராமத்தில் பிறந்தவர்,அந்த இயற்கை நகரத்தின் பாதிப்பு அவர் பாடல்கள் முழுவதிலும் இருக்கு ,

                                  நாலு முறை நோர்வேயின் Grammy Award கிரம்மி விருது என்று சொல்லப்படும் Spellemannprisen பெற்ற கிராமியப் பாடகர் . இந்த நோர்வே மொழிப்படலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படித் தொடங்கி

                      Angels in snow - they’ve got their own song
                     When the night is at most dark - they sing about - the rising sun
                          I stood in the shadows - in the rain and wind,

                                  என்று நீண்ட நோர்வேயின் காடுகள்,மலைகள், கடற்கரைகள் ,கழிமுகங்கள் எல்லாம் மென்மையான இதயத்தைப் பிழியும் இசை சுழண்டு அடித்து, நீ கதவுகளைத் திறந்து என்னை உள்ளே அழைக்கும் வரை நான் ஒரு அந்நியன் என்று I was a stranger till you opened up - and let me in,என்ற கெஞ்சலுடன் முடிகிறது " தேவதைகள் உறைபனியில் " பாடல்


https://www.youtube.com/watch?v=_46wnWOECck
.

நிலாக் காய்கிறது ....

பதின் மூன்று வயதில் ஒரு குழந்தைக் குரல் ஒரு பாரம்பரிய தமிழ்ப் பண்பாடு சுற்றியுள்ள குடும்பதை சுற்றி அமைக்கபட்ட திரைகதையுள்ள படத்தில் கர்நாடக இசைக் கருவிகளின் பிண்ணனியில் வந்த நேரமே ஹரிணி நிலவைப்போல பிரகாசமாய் ஒரு புதுக் குரலைப் பதிவு செய்து ஒரே இரவில் இசை உலகைப் பிரட்டிப்போட வைத்த பாடல் நிலாக் காய்கிறது ,,யாரும் ரசிக்கவில்லையா பாடல் .

                                        அதிகம் வெஸ்டர்ன் இசையில், சூபி இஸ்லாமியப் பாதிப்பில் கர்நாடகஇசைக்கருவிகளுடன் கோவித்துக்கொண்டு இருந்த இசை அமைப்பாளர் அல்லா ரக்கா ரஹுமானுக்கும் கீளைதேச பாரம்பரிய இசையில் இருக்கும் அதி திறமையை எளிமையான இந்தப் பாடலில் வெளியே கொண்டுவந்த புகழும் வெளிச்சத்துக்கு வரத் தொடக்கி வைத்த பாடல் ,

                                   இந்தப் பாடல் மாண்ட் என்ற ஹிந்துஸ்தானி ராகப் பாடல்,அந்த ராகத்தில் அதிகம் ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீத வடிவமான தும்மிரி,கஸல் இவைகளில் பாடல்கள் வந்த போதும் புல்லாங்குழலில் வாசிக்க அழகான மாண்ட் ராகத்தை அல்லா ரக்கா ரகுமான் தமிழ் பாடலில் பயன்படுத்தியது ஒரு இசை அதிசயம்.

                                   சந்தோஸ் சிவன் கமராவில் மிச்சக் பாடலின் வரிகளைக் கவிதை ஆக்க, சுகாசினி மணிரத்தினம் இயக்கிய இந்திரா ஒரு மயில்கள் தோகை விரித்து ஆடிய மழைக்கால மாலைப் பொழுதில் வானவில்லின் நிறங்களை மனவெளி எங்க்கும் அள்ளி எறிந்து ஆலாபனை செய்ய வைத்த படம்.,

                                 ஹரிணியயும் ,நிலாக் காய்கிறது நிலாக் காய்கிறது யாரும் ரசிக்கவில்லையா பாடலையும் பிரித்துப் பார்க்க முடியாமல் இந்தக் கூட்டு அணி இனி எப்பவ வரும் என்று ஏங்க வைத்த பாடல்..
.. https://www.youtube.com/watch?v=oqN5HriMAxg
.

நாட்டுப்பாடல்களின் திலகம் கோர்னேர்லிஷ்....

ஸ்வீடன் ABBA,Roxette, Ares of base, போன்ற உலகப்பிரபலமான ஆங்கிலத்தில பாடிய இசைகுழுக்களை உருவாகி இருந்தாலும், உள்ளுரில் ஸ்விடிஷ் மொழியில் பாடி ஸ்வீடனை ரசிக்க செய்தவர் கோர்னேர்லிஷ் வர்ஷவிக் என்ற  சுவீடிஷ் நாட்டுப்பாடல்களின்  திலகம்!

                                               கோர்னேர்லிஷ் வர்ஷவிக்  12 வயதில் ஹொலண்ட் நாட்டில் இருந்து அப்பா,அம்மாவுடன், அகதியாக 2 ம் உலகயுத்தத்தின் பின் ஸ்வீடன் வந்தவர்! ஒரு ஜெர்னலிஸ்ட்ஆக வர படித்து, அது பிடிக்காமல் இசையில் இறங்கியவர்! அவரோட இசை ஸ்டைல் கொஞ்சம் ஸ்வீடிஷ் நாட்டுப்புற இசை வடிவம் என்றாலும், கிறார் இசை கோர்ட்ஸ் அமைப்பில் பல experiment செய்தார்!

                                           1000 க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார்,அவரின் பெரபல்யம் அடைந்த பாடல்கள் பெரும்பாலும் " limerick" என்ற நையாண்டிவகை பாடல்கள்! அவை எல்லாம் வெறும் acoustic guitarஐ வைத்து பாடியவைகள். பழமையான ஸ்வீடிஸ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தவர் அவரின் பாடல்கள் மூலம் ! ஆரம்பத்தில் கோர்னேர்லிஷ் வர்ஷவிக் Troubadour  என்ற 14ம் நுற்றாண்டுகளில் இருந்த  ஒரு அரிதான வகைப் பாடல்களை போல  இசை அமைத்தார்.

                                            பின்னர் கொமினிஸ்ட் கொள்கைகளில் ஈடுபாடு அதிகமாக பல சமூக விழிப்புணர்வு   Protest song என்ற எதிர்ப்பு இசைப் பாடல்களை இசை அமைத்தார்! முக்கியமா கிரிமினல் குற்றவாளிகள் , விபசாரிகளின்  ஏழ்மை , சமூக அடக்குமுறை , வர்க சிந்தனை  பற்றி அவர் பாடிய பல பாடல்களை ஸ்வீடனின் தேசிய வானொலி ஒளிபரப்பாமல் தடை செய்தது !

                                                           70 களில் அவர் மறுபடியும் அவரின் தாய் நாடான ஹோலண்டுக்குப் போன  கோர்னேர்லிஷ் வர்ஷவிக்  அங்கே சின்ன வயசிலேயே மறந்த ஹோலண்டின்  டச் மொழியில் பாடினார் ,அவரின் டச் உச்சரிப்பு சரிவராததால் ," வெரோனிக்க " என்ற ஒரே ஒரு பாடல் மட்டும் ஹிட் ஆனது ,, மற்றப்படி எதுவேமேஅதிகம் கவனிக்கப் படததால், மறுபடியும் ஸ்வீடன் திரும்பி வந்து ஸ்வீடிஷ் மொழியில் பாடினார் ! பேசுவதுக்கு கடினமான ஸ்வீடிஷ் மொழியை, இலகுவாகப் பாடிய அவரை , ஒரு நிருபர் எப்படி ஸ்வீடிஷ் மொழியில் உள்ள"  synonyms " கலை அழகாக உச்சரித்துப் பாட முடிகிறது எண்டு கேட்டதுக்கு 

                                               " Swedish is such a different language. Pure, distinct, beautiful. It has few synonyms. But they're many enough for me." ,

                                  எண்டு சொன்னார்  கோர்னேர்லிஷ் வர்ஷவிக்


                                             கோர்னேர்லிஷ் வர்ஷவிக்  அவர் வாழ்நாளில் ஒரு நாள் தன்னும் எலெக்ட்ரிக் கிடார் வாசித்து இல்லை! இசைவாழ்வை தவிர்த்து , அவரின் அரசியல் கொள்கைகள்,சமுதயா எண்ணங்கள், வாழ்க்கை தத்துவங்கள் ,படு சுவாரசியம் ஆனவை! கொநெர்லிஸ் " don,t care, Never mind " லைப் ஸ்டைல்தான் வாழ்ந்தார் !

                                           அதால பல சிக்கலில் எப்பவுமே மாட்டிக்கொண்டு இருந்தார்! அளவுக்கு அதிகமானா குடி, பெண்களின் நிழலான நட்பு, திட்டமிடாத வாழ்க்கை, இவைகளால இறக்கும் போது நிறைய கடன் பாக்கி அரசாங்கத்துக்கு வைத்து ,அந்த musical genious, 50வயதிலேயே இறந்துபோனார்!

                                               அவரைப்பற்றி 2010 ல் ஒரு படம் ஸ்வீடனில்  எடுத்தார்கள், அந்த படம் மறுபடியும் ஸ்வீடிஷ் மக்களிடம் பெரு வரவேட்புபெற்றது! ! ச்கான்டிநேவியாவில்  கோர்னேர்லிஷ் வர்ஷவிக் புகழ் மறுபடியும் இளையவர்கள் மத்தியில் வர ,பலர் உண்மையில் கவலைப் பட்டார்கள அந்த இசை மேதையின் இசை சகாப்தங்கள் மறக்கடிக்கப்பட்டத்துக்கு ! 

                                     அதனால் அந்த இசை மேதையைக் கவுரவிக்க கோர்னேர்லிஷ் வர்ஷவிக்க்கு    ஸ்வீடன் தலை நகர் , ச்டோகொலமில் அவர் வாழ்ந்த வீட்டை ஒரு இசை முஸியமாக மாற்றியுலார்கள் , அதுக்கு வெளியே அவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

                                                   தனிப்பட கொநெர்லிஸ்சை என்னக்கு பிடிக்கும், காரணம் அவரும் எங்கள் ஊர் காத்தவராஜன் நாடுக்குகூத்துக் கலைஞ்சர் போல ,தன்னுடைய காலாசர வாழ்வியல் அடையாளங்களுடன் கடைசிவரை வாழ்ந்தவர்!அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு கலைஞ்ஞனாகக்  கவனிக்கப்படவில்லை என்பதை  உண்மையில் ஸ்வீடனில் வசிக்கும்  என் நண்பர் சார்ல்ஸ் போர்மன், இந்த இசைக் கலைஞ்சர் பற்றி முன்னர்  சொன்னதுபோல

                                           " பல கலைஞர்கள் தமது படைப்புக்களால் தமது காலத்துக்குப் புரியப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். சமூகம் அவர்களைப் பிறகுதான் அடையாளம் கண்டுகொள்கிறது! "

                                                         என்பது உண்மைதான் போல இருக்கு !.
 ..

Sunday, 1 November 2015

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

ஸ்வீடனில்  வசித்த போது சில வருடங்கள் , வாழ்கை வெறுத்து தனிமையில் இருந்த காலத்தில் , சந்தோசத்தை வெளியே அன்றாட உலகத்தின் இயல்பில்த்  தேடிப்பிடித்துப் போகாமல், குறுக்கு வழியில்த் தேட முயற்சித்து,  மூடிகளைத் திறந்த மதுப்போத்தல்கள்  முடியும் வரை இருந்த சின்ன சந்தோசம்,  அந்தப் போத்தல்களைத் தூர வீசி எறிந்த போது அவைகளுடன் போன அவலத்தில் , மாதன முத்தாவின் மண் பானை ஆட்டிண்ட தலைக்க போன மாதிரி மது  கடைசியில் கழுத்தில கயிறு போட்டு அலங்கோலப்படுத்தியது.

                                       அதனால் உடலும்,மனமும்  பாதிக்கப்பட்டு  தற்காலிக  இன்பத்தின் முடிவில் நிரந்தர  துன்பமாக , இது இனி வேலைக்கு ஆகாது என்று நினைத்து மருத்துவ உதவிக்கு சரணடைந்தேன் . அதனால் கிட்டத்தட்ட  ஒரு வருடம் ," அல்ஹோலிக்ஸ் " என்ற திருந்த முடியாத மடாக்குடியரை திருத்தும் "புனர்வாழ்வு சமூக" அமைப்பில் கவுரவ நோயாளியா /உறுபினரா ,அவர்களுக்கும்   , முடிந்தவரை அவர்கள் தந்த புணர்வாழ்வுகும்  சவாலாக இருந்தேன்!  

                                 அந்த  கவுன்சிலிங்/ குரூப் திரபி என்ற சிக்கிசை கொடுக்க எனக்கு நியமிக்கப்பட்டவள் கத்தரீனா  என்ற ஸ்வீடிஷ் 40 கிலோ தாஜ்மகால் ! அவளை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாலே ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தாறுமாறா எகிறும் . அவள் அசையாமல் நிண்டாலே அபிராமிப் பட்டர் " இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்துவடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு..    " என்ற அந்தாதியை அவளை நினைச்சு எழுதின மாதிரி இருப்பாள்.  அவள் நடந்து திரிந்தால் அதே அபிராமிப்பட்டர் அவளுக்கு பின்னுக்கும் முன்னுக்கும் திரிந்து  "  நடங்கொண்ட கொள்கை நலங் கொண்ட நாயகி , நல் அரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே......."  எண்டு எழுதி முடிச்ச மாதிரி அம்சமா இருப்பாள் .

                                     அதை விட அவளே எங்களைப் போல திருந்த முடியாத மடாக்குடிய நிலையில் இருந்து மீண்டு வந்து "புனர்வாழ்வு சைகொலோயி " மாஸ்டர் டிகிரி படித்தவள் !  அதலா அந்த சமூக நிறுவனத்தில் வேலை செய்தாள்.  அவளை முதல் முதல் சந்தித்தபோது,  நான் இந்திய, இலங்கை  ரெண்டும் கெட்டான் உருளைக்கிளங்கு  நிறத்தில் இருந்ததால் அவள் கொஞ்சம் அதிர்ந்து,

                  " ஓ , இண்டேறேச்டிங் , உன்னை சந்திப்பது, நீ இந்தியாவைச்  சேர்ந்தவனா , என்னோட வாழ்கையை மாற்றிய குருநாதர் சுவாமி பிரபுபாதாவும் இந்தியர் ,அவர் தொடக்கிய ....ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.... அமைப்புதான் என்னை வழி நடத்தி இப்ப இப்படி இருக்கிறேன் "

                         என்றால் ,அப்படி அவள் அதிர்ந்து சொன்னதுக்குக் காரணம்  , அவள் "ஹரே ராம, ஹரே கிருஷ்ணா " அமைப்பில் இருந்து, அந்த அமைப்பின் இணைப்புதான் அவளை "மடாக்குடிய நிலையில்"  இருந்து மீண்டவர உதவியதாக சொன்னது எனக்குக் குழப்பமாக இருந்தது. நான் நினைச்சேன் அவள் என்னைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே எனக்கு கரண்ட் பிடிச்சாதான் மூளை பழைய நிலைக்கு வரும் என்பது போல ஏதும் பிரைன் மெடிக்கல் விசியம் தான் முதலில் சொல்லுவாள் என்று நினைத்தேன் !
                                         
                            " நான் இலங்கையைச் சேர்தவன்,  சுவிடனில் அரசியல் அகதியா  வாழுறேன்,குடியுரிமை கிடைத்த நாளில் இருந்து ,அறம்புறமா குடிக்க உரிமை கிடைத்தால் குடிக்க ஆரம்பித்தேன் ,அந்த குடி உரிமையை கொஞ்சம் அதிகமா பாவித்து இப்ப அல்ககோல் மிஸ்யூஸ் டிஸ்ஓடர் என்ற மெடிக்கல் கொண்டிசன் நிலையில் இருக்கிறேன் ,சில நேரம் உனக்கு குழப்பமாக இருக்கும் இலங்கையை  ஸ்ரீலங்கா என்றுதான் ஆங்கிலத்தில் சொல்லுறார்கள்  " என்று விருப்பம் இல்லாமல் விழுங்கி விழுங்கிச் சொன்னேன் . அதுக்கு அவள்

                               " ஸ்ரீலங்கா,,,இலங்கை ,,,என்கிறாய் அந்த நாடு  எங்க இருக்கு என்று கேள்வியேபட்டதிலேயே " என்றாள்,

                                அதுக்கு நான்  

                 " இலங்கை தான் ஸ்ரீலங்கா, இந்தியாவின் தென் கோடியில் மாம்பழம் போலத் தொங்கிக்கொண்டு இருக்கும்,நாலு பக்கம் கடலால் சூழப்பட்ட  , தமிழர் என்ற ஒரு  சிறுபான்மை இனத்துக்கு நிம்மதி இல்லாத குட்டி தீவு தான் என் தாய்த்திருநாடு " எண்டு சொன்னேன் .

                                    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  அமைப்பு பற்றி படித்து முன்னமே இருக்கிறேன். உங்களுக்கு உண்மையைச் சொன்னாலென்ன சின்னவயசில்,   சைவசமய முறைப்படி மூன்று தீட்சை சைவாசாரிய  குருவிடம் பெற்றேன்,  ஆனால்  வளர்ந்தபின் ஒரு நாளும் அதுகள் செய்ததில்லை, ஆனாலும் ஆன்மிக விசியங்கள் கொஞ்சம் தெரியும்.  என்னிடம் ஆரம்ப விசாரணை முடித்தபின் ,

               "  உனக்கு PTSD , கிளினிகல் டிபிரசன்  இருக்கே,  அதை விட சொல்லபட்ட  அன்டபுஸ் , மருந்தே உதவி செய்யவில்லை போல இருக்கே ! கொஞ்சம் முத்தின கேஸ் போல இருக்குறியே " எண்டு ஜோசிதுப்போட்டு, அமைதியாக 

                               " எங்கள் ஆசிரமத்தில ,போய் சில வாரம் தங்கி இருந்து ...தியம்பகம் ஜெயாமகே சுகந்திம் புஸ்திவச்தனம் உருவாகுக விசி அமுதாத் தயே..... என்ற மந்திரம் சொல்லி மனதை கட்டுப்படுத்து, தியானம்,சத் சங்கம்,பஜன் ,இவைகளை கற்றுக்கொள்,உனக்கு மனதளவில், பொசிடிவ்வாக எண்ணங்கள் உருவாகும்,நான் இப்படி இப்ப இருப்பதுக்கு அதுதான் உதவி செய்தது"

                                      என்று ,அவளோட நண்பிகள் ஆசிரமத்தில் ,பருத்தி சேலை கட்டி, நெற்றியில் நாமம் போட்டு, கோகுலத்து கோபியர் போல ஆடிப்பாடும் குரூப் போட்டோ காடினாள் ! அவர்களுக்கு நடுவில சில வெள்ளை ஆண்களும் மேளம் போல ஒன்றைத் தோளில கொழுவிக்கொண்டு,குடுமி வைச்சு,பஞ்சகச்சம் போல வேட்டியை ஐயங்கார் ஸ்டைலில் கட்டிக்கொண்டு ஆனந்தத்தில்  கோபியரே கோபியரே கோவிந்தன் பெயரைச்சொல்லி ,,,எண்டு ஆடிக் கொண்டு இருந்தார்கள் .

                                          வெள்ளைக்கார  ஸ்வீடிஷ்  பெண்களுக்கு சேலை கட்டினால் , முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும் இருக்கும் , அவர்கள் எப்பவுமே ஒல்லியா வெள்ளையும் சொள்ளையுமா இருப்பது சேலைக்கு நல்லா எடுபடும் , அங்கங்கே பார்காட்டியும், பார்க்காமலே பத்த வைக்கும் அவர்களின் வசீகரம் ஒரு வித ஆன்மிகதை அறிய ஆரம்பிக்கிறவனுக்கு  வைக்கும் முதல் சோதனை போல இருந்தது .அது பார்க்க அழகா மட்டுமில்லை,  நிறய  ஆர்வ கோளாறையும் , கற்பனைகளையும்  கிளப்பிவிடும் ! அதால

                  " இதில உள்ள மாதிரியா,உங்கள் ஆசிரமதிள்ள உள்ள பெண்கள் எல்லாரும் இருப்பார்கள் எண்டு ?"

              கேட்க ,அவள்             

                             "இதில உள்ள மாதிரியா, எண்டு எண்ணத்தைப் பார்த்து சொல்லுறாய்?"

                   எண்டு ,சந்தேகமா என்னோட கண்னுக்குள்ள நேராப் பார்த்துக் கேட்டாள், நான் , சாமாளித்து 

                "படத்தில அவர்கள் முகத்தில ,தெரியுற மாதிரி ,ஆன்மீக  களையுடனையா ,இருப்பார்கள் ?"

                           ,எண்டு கேட்க, சைகொலோயி " மாஸ்டர் டிகிரி" படித்த அவள் சிரிச்சுப்போட்டு,

                          " முதலில்,ஆசிரமம் போ, முதலில் கெட்ட சிந்தனைகள் அறவே வராது !"

                           எண்டு அழுத்தம் கொடுத்து என்னோட மனசாட்சிக்கு சொன்னதுபோல சொன்னாள் !

                    நான் அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் நான் என்னமோ ஆன்மிகம் பற்றி தீவிரமா ஜோசிகுரன் எண்டு நினைச்சு

                                  " நீ எப்பவாது தியானம் செய்ய முயற்சி செய்து இருக்கிறாயா, தியானம் எவளவு முக்கியமான விடயம் எண்டு இந்தியர்கள் தான் ஆயிரம் வருடம் முன்னமே கண்டு பிடித்துள்ளார்கள்,..." 

                                     என்று சொன்னாள், நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு, 

                         " முழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என இந்திய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய் "த்யான நிர்விஷ்யம் மனஹ" என்கிறார்கள், அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும். என்று எங்கள் குரு நாதர் பிரபுபாதா சுவாமிகள் மெடிடேசன் வேய் ஒப் லைப் புத்தகத்தில் எழுதியுள்ளார் " என்றாள்  
                                                  
                                                        நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு, ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன்.  அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு, 

                             " சரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம்? சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய "சாதனா" எனப்படும் "யந்திர,தந்திர,மந்திர" சாஸ்த்திரங்கள்.  இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது நான் சைகொலோயி மாஸ்டர் டிகிரி படிக்க ஒரு புத்தகம் ரிசர்ச்  பண்ணிப் படித்த போது அதில இருந்தது ஒரு ஆச்சரியமான விசியம், இதுக்கு மேல சொன்னால் உனக்கு அறுவையா இருக்கும் என்றால் சொல்லவில்லை " என்றாள் 

                            நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு  இன்னும் கொஞ்சம் சொல்லுவாள் எண்டு நினைக்க அவள்,  

                " கொஞ்சம் பொறு,சில பேப்பர் வேலை இருக்கு, அதெல்லாம் முடிக்க வேண்டும்,நீ கையெழுத்து போட வேண்டும் " 

                           எண்டு சொலிப்போட்டு கொஞ்சம் பேப்பர்களில் குனிந்து எழுத , நான் கோபியப் பெண்கள் போல இருந்த அந்த சேலை கட்டிய ஸ்வீடிஷ் பெண்களின் " குருப் " படத்தை ஆன்மீகம் பித்தம்  தலைக்கு ஏற்றப் பார்த்துக்கொண்டு இருந்தேன் .சொன்ன மாதிரியே ரெண்டு கிழமை என்னை அங்கே  அவளோட காரிலேயே கொண்டுபோய் விட்டாள் கத்தரீனா, நான்    

                           " அந்தப் பெண்கள் எங்கே ஒருவரையும் காணவில்லையே " எண்டு கேள்வி கேட்க தொடங்க முதலே அவள் ,

                          " இதுதான் உனக்கு கடைசி சான்ஸ் ,இதையும் குழப்பினாய் எண்டால் அந்த கிருஷ்ண பரமாத்மாவே  நேர்ல வந்தாலும் உனக்கு விடிவு இல்லை"  எண்டு போட்டுப் போயிட்டாள் !

                             அந்த ஆசிரமம் கொஞ்சம் இந்திய முறைப்படி கட்டியது போல இருக்க ,வெளியே ஒரு கிருஷ்ணர் சிலை கோபியப் பெண்களுக்கு நடுவே ஆடுவதுபோல இருக்க , கோகுலத்து மாடுகள் கிருஷ்ணர் வாசிக்கும் புல்லான் குழகுக்கு மயங்க்கி பார்த்துக்கொண்டு இருக்க ,,ஆரம்பமே கொஞ்சம் அடகாசமா இருக்கும் போல இருந்திச்சு .ஆனால் நான் நினைத்த மணிரத்தினம் படத்தில வாற மங்கலான கனவு ஸீனில கதாநாயகி மிதந்து  நடந்து வருவது போல போல அங்க ஒண்டுமே உற்சாகம் தருவதுபோல இருக்கவில்லை.  

                                      அந்தக்  ஆச்சிரமத்தில " கோகுலம்" என்ற பெயர் உடைய மாடுப்பப்பன்னையில் நிறைய கறவை மாடுகள் ,கன்றுக்குட்டிகளுடன் நிண்டது, அதுக்கு பொறுப்பான ஸ்வீடிஷ்காரர் , நான் மாடுப்பப்பன்னையில் ஒவ்வுருநாளும்  என்னவெல்லாம் செய்யவேண்டும் எண்டு பொறுப்பாக சொன்னார், நான் பொறுப்பில்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தேன்!

                                          உங்களுக்கு  உண்மையை சொன்னா  என்ன,  " அல்ஹோலிக்ஸ் "வியாதியால் அவஸ்தைப் பட்டதால் நான் ஒண்டுமே அங்கே திட்டமிட்டபடி செய்யவில்லை ,24 மணித்தியாலமும் ஓடி ,ஆடி வேலை செய்யும் அதுக்கு பொறுப்பான  சாமியார் போல இருந்த  ஸ்வீடிஷ்காரர்  என்னிடம்  வந்து

                         " மன்னித்துக்கொள்,ஆரம்பமே  என்னோட பிழை , நீ வந்தவுடனே இதைக் கேட்டிருக்க வேண்டும் , பார்க்கும் போது நீ  நல்ல திடகாத்திரமாய்  இருந்ததால் நானும் உன்னை எல்லார் போலவும் நினைத்து பல வேலைகள் செய்யச் சொல்லி உன்னைக் கேட்டேன், உண்மையில்  உனக்கு ஏதாவது உருப்படியான வேலை செய்யத் தெரியுமா அதைச் சொல்லுப்பா ? குறை நினைக்காமல் அதை மட்டும் எனக்கு சொல்லுவியா "

                             எண்டு ஒரு நோயாளியை டாக்டர் கேட்பது போல அன்பாகக் கேட்டார்,

                               நான்  "சமையல்காரனாகதான் வேலை செய்தேன்  , நான் அதுக்காக தான்  பயிறுவிக்கப்பட்டு, அதில் தான் பலவருடம் அண்டா,குண்டா சட்டி பானைகளுடன் மல்லுக்கட்டி வேலை செய்தேன் !"

                                               என்றேன்,அவர் ,நாடிய தடவிக்கொண்டு

                       "அப்ப நீ ,ஸ்டோக்கொலமில் உள்ள எங்களின் "கோவிந்தா" ரேச்டோறேண்டில் போய் மிகுதி நாட்களைஅவர்களின் சமையல் வேலையிலும். அங்கே உள்ள கோவிலில் பயனை பாடி அவர்களுக்கு உன்னால் முடிந்தளவு உதவி செய் ,அங்கெ எங்கள்  பிருந்தாவனம்  கோயிலும் அதோடு உள்ளது"என்றார் 

                       " நான் அது எப்படி இருக்கும் " 

                                                  என்டுகேட்டேன், இப்படி இருக்கும் எண்டு ஒரு DVD செருகி படம் போட்டுக் காட்டினார்!

                                          சும்மா சொல்லவிலை, மாட்டுப்பண்ணையை விட நிறைய இண்றேச்டிங் விசியன்கள் கலர் கலரா தெரிந்ததால், " ஆதிசங்கரர் போல  " கோவிந்தா கோ "  எண்டு அந்த இடைத்தை முதலில் விழுந்து கும்பிடுடு , வலது காலை எடுத்து வைத்து உள்ளுக்குப் போய் " ஆன்மிகம் பாடல்கள் கிடாரில் நல்லா வாசிப்பேன் " எண்டு பொய் சொல்லி அங்கே  ஒரு கிழமை இருந்தேன், அங்கேதான் M .S .V யின் "கிருஷ்ணா காஹனம் "LP ஐ முழுமையாகக் கேட்க சந்தர்பம் கிடைத்தது ! 

                                   அதோட  முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும்  இருந்த ஸ்வீடிஷ் பெண்களிடம் இருந்து எப்படி " கோவேறு வளஞ்சேர் கோவிந்தா " எண்டு வாற  ஆழ்வார் பாடலுக்கு என்ன உண்மையான அர்த்தம் என்பதையும் கண்டு பிடித்தேன் .  

                                 நீட்டி முழக்கி கதை எழுதிப்  போட்டு உங்களை அறுக்க விருப்பமில்லாததால் ,மிகுதிக் கதையை இரண்டாம் பகுதியாக எழுதுறன்,சரிங்களா?.....
.