Thursday, 8 October 2015

வெரோனிக்கா... (.01)

வெரோனிக்கா   கொல்லப்பட்டதோடு   இந்தக்  கதை  முடியும்.   அப்பட்டமான உண்மைகள்  வெளியே வராத  பல  சம்பவங்களில்  அதுவும்  ஒன்றாக  ஒரு  உறைபனி மாத  ஒஸ்லோவில்  சந்தடி அதிகம்  இல்லாத  ஒரு  புறநகரப்  பாதையில்  வெரோனிக்காகாவின்  ரத்தம் வெள்ளை உறைபனியில் மெல்ல  மெல்ல  வழிந்தோடி முடிந்தபோது வெரோனிக்கா இந்த உலகத்தைவிட்டுப்  போயே போய்விட்டாள் . அவள் நீண்ட குதிக்கால் சப்பாத்து தாறுமாறாகக்  கால்களில்  பின்னிப்பிணைந்து கிடந்தது .

                                                      வாழ்கையில் அர்த்தம்  இல்லை என்று சொல்லி  , அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை என்றும்  சொல்லி எழுதவேண்டியிருக்கும்  ஒருசில வாக்க்குத்தத்தங்கள் போல .  விரும்பினால்  முடிவில் அட  இவளவுதானா   என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ள வைக்க  முடியாத  ஒரு சம்பவத்தின்  தொடர்ச்சி நடந்தது .  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின், ஒரு காலகட்டத்தில் நடந்த கற்பனைக் கதை போல...

                                                     வார இறுதி நாட்களில் இரவிரவாகக்  கசகச எண்டு மனித நடமாட்டம் உள்ள ஒஸ்லோ நகரத்தின் ஒதுக்கத்தில், நெருக்கமான பழைய சுண்ணாம்புக்கல் கட்டிடங்களின் முடிவில் இருட்டின் நிழலில்  உள்ள, ட்ராம் வண்டி ஓடும் தண்டவாளம் வீதியின் நடுவில் போடப்பட்ட,  குறுகிய நடைபாதையின் இருமருங்கிலும்  கருங்கல்லுப்  பதித்த ,நூற்றாண்டுகளின் முன், உயர் குடிப் பிரபுக்களின் வில் வண்டிகளை இழுத்துக் கொண்டு வந்த குதிரைகள்  அவிழ்த்துக்  கட்டிய  சிற்றன்ன வாசல் போன்ற வீதி, 

                                             அந்த வீதியின் தொடக்க முடுக்கில்    கண்ணைக் கூசும் விளம்பரப் பலகையில் அழகனா இளம் பெண்ணின் சொண்டில நீல நிற நியோன் விளக்கு பத்திப் பத்தி ஓட, வாசலில் ஒரு மொத்தமான சிவப்பு மெழுகுதிரி கொழுத்தி வைச்ச " தெய்வீக சொர்க்க வாசல் " என்ற ஒரு  இரவு துகிலுரி நடன களியாட்ட கிளப்பில் பல வருடங்களின் முன் எடுபிடி போல வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை நாட்களில் பின் இரவில் இருந்து அதிகாலை வரை வேலை செய்தேன். 

                                 நிழலான சில விசியங்கள் நடக்கும் அந்த இடத்தில பணம் வரவாகவும், செலவாகவும் பாதாளம் வரையும் இல்லை அதுக்கு அங்காலை இருபது மையில் தள்ளியும் பாயும் போன்ற இடம் அது. தொல்வுக்காத்தா   என்ற  அந்த  வீதியின்  பெயரைச் சொன்னாலே உடம்பெல்லாம்  கிலேசங்ககள் பற்றிக்கொள்ளும் . விசுவாமித்திரரின்  தவத்தைக் குலைத்து நவீன ஊர்வசிகளும்  ரம்பைகளும்  அந்த  இடமெல்லாம் இரவோடு இரவாக இருட்டு விடியமுன் தங்களையே கொடுக்குமிடம் .

                                         அந்த கிளப்பில் வேலை செய்த  இரவு ராணிகளுக்கு சொந்தத் தாய்மாமன்  போலப் பாதுகாப்பு கொடுப்பது, அளவுக்கு அதிகமான வெறியில பெண்களுடன் அளவுக்கு அதிகமான மன்மத அம்பு விட்டு ,கிடைத்த இடைவெளியில் சந்தனம் தடவி  சேட்டை விடும் பெருங்குடிக் கணவான்களை செத்த எலியைப் போல இழுத்து ரோட்டில போடும் ,சில நேரம் அந்த இளம்  பெண்களைப் பாதுகாப்பாக வீட்டுக்கு கொண்டு போய் விடும் " எஸ்கோர்ட் " போலவும் வேலை செய்தேன்,

                                      அந்த வேலை ஒரு " பார்ட் டைம் " வேலை, நான் வார நாட்களில் குக் ஆக வேலை செய்யும் ரெஸ்ரோரென்ட்  முதலாளி அதை வேறு ஒருவருடன் சேர்ந்து நடத்தினார், அதால அந்த வேலை எனக்கு கிடைத்தது, ரெஸ்ட்ரோறேண்டில் குக் வேலை முடிய ,வெள்ளி,சனி இரவு இப்படிக் கரைச்சல் பிடிச்ச இடத்தில " பாடி காட் " போல வேலை செய்தேன் எண்டவுடன நான் என்னவோ சிங்கத்தை சுழட்டி மடக்கி எறியும்  கிளாடியஸ் போல  பலசாலி எண்டு நீங்க நினைக்க வேண்டாம் .

                                              எனக்கு  ரெஸ்ட்ரோரென்ட் குசினியில்  கரண்டியைப் பிடிச்சு சுழட்டவே பஞ்சி ஆனால் உண்மையில் வெறிகாறரை இழுத்து எறியிறது சுலபம்,சரியான நேரம் சரியான இடத்தில பிடிச்சு தள்ளினா காத்துப்போல எறியலாம். அவளவுதான் தொழில் ரகசியம், மற்றப்படி  அழகான இளம்பெண்களின் அந்தப்புரத்தில் ஊர் உண்டு பிச்சைக்கு குளம் உண்டு தண்ணீருக்கு  என்று வேலைசெய்வது அலாதியாக இருந்தது 

                                                இந்த நடு நிசி இரவுக் கதை அப்படி வேலை செய்த நேரம் சந்தித்த வெரோனிக்கா என்ற துகிலுரி நடன தேவதை எனக்கு அறிமுகமாகிய சில நாட்களில் நடந்த இருட்டு எழுதிய கதை. நானே  முழுவதையும்  சொல்வதைவிடக்  ஒஸ்லோ  நகரம்  கதையை  அதன் போக்கில் உங்களுக்கு விரித்துவைத்து  நிறைய விசியங்களை எடுத்த எடுப்பிலேயே  எள் என்றால் எண்ணையாக நிக்கும்படியாக  இல்லாவிட்டாலும் மெல்லவே  நகரவைத்த நகரத்தில் நடந்தது . 

                              அந்த துகிலுரி நடன கிளப்பில் பல பெண்கள் வேலை செய்வார்கள்,ஆடுவார்கள்,வஞ்சகம் இல்லாமல் மேடையில் ஒரு கம்பியில் சுழண்டு சுழண்டு துகில் உரிந்து ஆடுவார்கள்,அப்படி  ஒரு பெண் ஆடிக்கொண்டு இருப்பதை , காவல் கவனிப்பு வேலை அதிகம் இல்லாததால் ஒரு மூ லையில் இருந்து கோப்பி குடித்துக்கொண்டு ஒரு சின்னப் பேபரில் ஒரு சின்னக் கவிதை எழுதும் ஐடியா வந்ததால் ,அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே 

                     இடையில் 
                    அவள்
                    இறங்கி வர 
                     பார்த்து 
                    ரசித்துக்கொண்டிருந்த  
                     கணவான்களின் 
                    பார்வையும் 
                    இடையிலேயே 
                    நின்றது 

                               எண்டு எழுதிப்போட்டு அதைத் திருப்பி வாசிக்க எனக்கு சிரிப்பு வந்திட்டது, அதை மேடையில் ஆடி மாதக் காற்றில் அசையும் பட்டம் போல ஆடிக்கொண்டு இருந்த அந்தப் பெண் பார்த்தாள்,கொஞ்ச நேரத்தில் அவளும் ஆடுறதை முடித்துக்கொண்டு இறங்கி என்னிடம் வந்து 

                         " இப்ப ஏன் என்னைப் பார்த்து என்னவோ எழுதிப் போட்டு, ஏன் என்னைப்பார்த்து சிரிச்சுக் கொண்டு இருந்தாய் "

                 எண்டு கொஞ்சம் அரைகுறை  ரஷியன் பாசை  கலந்த இங்கிலீஷ் உச்சரிப்பில் பூனை கொட்டாவி விட்ட மாதிரி ஆங்கிலத்தில் நட்பாகக் கேட்டாள்.

                                  நான்   ,"  ஒரு கவிதை போல ஒன்று இங்கே நீ ஆடுறதையும், அதைப் பல ஆண்கள் ஜொள்ளுவிட்டுப் பார்க்கிறதையும்,இடையில் நீ இறங்கிப் போறதையும் வைச்சு எழுதினேன்,,ஆனால் அதை மறுபடியும் வாசிக்க அதில ஒரு சிலேடை இருக்கு என்பது எனக்கே ஆச்சரியாம இருந்தது அதுதான் சிரிச்சேன் "   எண்டேன்.   

                                    " அதென்ன சிலேடை அதை எனக்கும் சொல்லு,நானும் சேர்ந்து சிரிக்கிறேன் " என்றாள் அந்தப் பெண், அவளுக்கு

                              " சிலேடை ஒரே சொல்லு பல அர்த்தம் உள்ள மாதிரி ஒரே இடத்தில ஒரு வசனத்தில் அல்லது வரியாக வருவது, எங்கள் தாய் மொழியில் இடையில் என்றால் ஒரு சம்பவத்தின் இடை நடுவில் எண்டும், அதே நேரம் ஒரு பெண்ணின் இடையையும் குறிக்கும், அது பல விதத்தில் இப்ப நான் எழுதியதுக்கு ரெம்பவே பொருந்துது "

                                     எண்டு சொன்னேன். அவள் அப்படியா,

                         " உன் தாய் மொழி என்ன, உன் நாடு எங்க இருக்கு, இந்தக் கிளப்பில் கன வருடம் வேலை செய்கின்றாயா, நோர்வே உனக்கு பிடிக்குமா, எனக்கு இங்கே குளிர் உயிரை எடுக்குது,ஒத்துவரவில்லை,ஆனால் நல்லா உழைக்கலாம் "

                                          எண்டு கேட்டு தன்னுடைய பெயர் வெரோனிக்கா என்று சொல்லி, அவள் தாய் நாட்டின் பெயரையும் சொல்லி முதல் முதல் எனக்கு அன்று தான் கொஞ்சம் கிட்டத்தில் வந்து சாமந்திப் பூ போன்ற முகத்தை முன்னுக்கு நீட்டி அறிமுகம் ஆனாள். 

                                         நாட்டுச் சர்க்கரை பணியாரம் போல இனிக்க இனிக்கப் பேசும், கிழக்கு ஐரோப்பிய நாட்டான ஹங்கேரியில் பிறந்த வெரோனிக்கா ஒஸ்லோ யூனிவெர்சிட்டி இல் சோசியோலோயி படிக்க வந்ததா தான்  சொன்னாள். எக்ஸ்ட்ராவா செலவுக்கு சம்பாதிக்க, அந்த கிளப்பில் கொஞ்ச நாள் தான் வேலை செய்தாள். 

                                  அவள்தான் ஒருநாள் வந்த புதிதில், கம்பி போல ஒன்றைச் சுற்றி பல்லி போல தொங்கி,சுழண்டு ஒவ்வொரு உடுப்பா கழட்டி எறிஞ்சு,,,எறிஞ்சு,,,எறிஞ்சு,,,,கழட்ட இனி ஒண்டுமே இல்லை போல நடனம் முடியக் களைத்துப்போய் வந்து அந்த  இடைவேளையில்  கோப்பி குடிக்கும் போது அவள் படிக்கும் விசியம், கொஞ்சம் அவள் குடும்பம், அவளின் நாட்டின்  பிண்ணனி பற்றி  நான் கேட்காமலே சொன்னாள். 

                                                அந்த துகிலுரி கிளப்பில் பல பெண்கள் வேலை செய்தார்கள்,நாங்கள் யாரிடமும் அவர்கள் பிண்ணனி கேட்பதில்லை, கேட்டும் ஒண்டும் வரப்போறது இல்லை அதால் " கையில காசு வாயில தோசை " எண்டு நான் நினைப்பது போலத்தான் அவர்களும் நினைத்து வேலை செய்வார்கள். விடை   இல்லாத  கேள்விகளும் விடை இல்லாத  பதில்களும் தேவையற்றதாக  இருந்த  ஒரு வேலைத்தளம் அது .

                                                     வெரோனிக்கா எப்படி இருப்பாள் எண்டு சொல்ல வேண்டும் என்றாள், அதிகம் விவரிக்காமல் நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் சறுக்கி சறுக்கி ஊர்வலம் போன மாதிரி சொல்வது என்றாள் மெல்லிய ஈஸ்டர்ன் யுரோபியன் தேகம் ,  செங்கிஸ்கான் வைச்சு இருந்த மொங்கோலியா வில்லுப் போல வளையும் ஆரோக்கியமான வளர்த்தி , யுரேசியன் மாநிற வாளிப்பு பூசிய அழகான முகம்  ,பூசனிப் பூ பொறாமைப்படும் இளமையான அங்கங்கள்  , தியோப்பிலசின் வாள்போல அறிவான பார்வை , கிழக்கு ஐரோப்பிய பூனை ரோம இமைகளுக்கு கீழே எப்பவும் ஆர்வம் மின்னல் வெட்டும் நீலக் கண்கள் , 

                                          எகிப்தியன்   அதிசயத்தில் கீழ் நோக்கி வளைந்த மெடிடேர்நியன் மூக்கு, அவள் சொண்டுகள் லிப்டிக்ஸ் போடாமலே பீற்றுட் கலரில் இயற்கையா இருக்க ,கொஞ்சம் பின்னால மறைஞ்சு நிண்டு அவளைப் பற்றி இயல்பாக சொல்வது  என்றாள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை கிளுகிளுப்பு. இலக்கியத்தனமா சொல்வது என்றாள் சிலப்பதிகார " கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர்  " மாதவி போல " எறி வளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும் கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர் " எண்டு இளங்கோவடிகள் செய்யுள் மொழியில் சொல்லலாம். 

                               ஒரு நாள், 

                           விண்டர் உறைபனி வழுக்கிக்கொண்டு பஞ்சு போல இறங்கிய  பின் இரவு.ஒஸ்லோ கழிமுகத்தின் புண்ணியத்தில் நகரம்  சூடு ஏறி அதிகாலை தடுமாறி ஆரம்பிக்கும், வடதுருவக் காற்று காதைக் கடிக்கும் வெள்ளிகள் கிழக்கு வானில் மின்னி மின்னி சடுகுடு விளையாடிய   நேரம், வெரோனிக்க அவள் நடனம் முடிய முதலே,இடையில் நிற்பாட்டிப்போட்டு ,நான் கோப்பி குடிப்பதைப் பார்த்துக்கொண்டே என்னிடம் வந்தாள். வந்து சோகமாகா எனக்கு முன்னால இருந்து கொண்டு கைகளைப் பிசைந்துகொண்டு ஒருவித இயலாமையில் இருக்க 

                                    " என்ன ஆச்சு உனக்கு, நல்லாத் தானே ஆடிக்கொண்டு இருந்தாய் "

                                எண்டு கேட்டேன் . அவள் உடன பதில் சொல்லவில்லை,கொஞ்சம் ஜோசிசுப்போட்டு,பெருமூச்சை இழுத்து விட்டுப்போட்டு, 

                                             " எங்கள் நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவாங்க சாட்ச்சிக்காரன் காலில விழுவதை விட சண்டைக்காரன் காலில விழுவது எவளவோ மேல் என்று, கடைசியில் என் நிலைமையும் அப்பிடிதான் ஆகிவிட்டது " என்றாள்.

                               "  என்ன  சொல்லுறாய்,,உனக்கு  என்ன  பிரச்சினை,,,அல்லது  பிரச்சினைகள் ...."

                                "  ஹ்ம்ம் ,,அதுதானே  சொல்லுறேன் சாட்ச்சிக்காரன் காலில விழுவதை விட சண்டைக்காரன் காலில விழுவது எவளவோ மேல் என்று"


                                   "   ஒண்டுமே புரியவில்லை ,,மொட்டைத்தலைக்கும்  முழங்காலுக்கும்  இப்படி  முடிச்சுப்  போடிறியே "


                                  "வேற  எப்படிச் சொல்ல,,அவளவு  பிரச்சினையில்  நிக்குறேன் "

                                        " அப்படியா அந்தப் பழமொழி என்னோட நாட்டிலையும் புழக்கத்தில் இருக்குப்பா, இப்படி பொடிவைச்சு  முடிச்சுப்போட்டா எனக்கு எப்படிப்பா விளங்கும் இப்ப உனக்கு என்ன பிரசினை எண்டு விபரமா சொல்லு, " எண்டு கேட்டேன் .

                                   வெரோனிக்கா அவளோட்ட நாட்டைச்சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் ஒரு சின்ன ஸ்டுடென்ட் அப்பாட்மென்டில் இருந்தாளாம்,அவள் ப்ரென்ட் யாரோடையோ பிரச்சினைப் பட்டு,இப்ப அவளுக்கு ஒஸ்லோ வர உதவி செய்தவர்கள் அவளை அந்த இடத்தைவிட்டுப் போக சொல்லிடாங்க ளாம். ரெண்டு நாளிலில் இவளும் வேற இடம் தேடிப்போக வேண்டுமாம் எண்டு மெல்ல மெல்ல விழுங்கி விழுங்கி சொன்னாள்.நான் 

                             " உன்னோட அந்த ப்ரெண்டுக்கு உதவி செய்த அந்த மனிதர்கள் யார் " 

                         எண்டு கேட்டேன்,அவள் மவுனமா இருந்தாள்.

                               " நீ தான் ஒஸ்லோவில் படிக்க வந்து இருக்கிறாய் எண்டு சொன்னாயே,அப்புறம் உன் யூனிவெர்சிட்டி மாணவர் சமுகப்  பாதுகாப்பால் இருக்க இடம் தரமாட்டாங்களா " 

                           எண்டு கேட்டேன்,அதுக்கும் மவுனமா இருந்து போட்டு, நான் கோப்பி குடிச்சிட்டு எழும்ப வெளிக்கிட,

                          " இன்னும் ரெண்டு நாளில் நான் இருக்கும் இடம் விடவேண்டும், இல்லாட்டி எனக்கு பெரிய  பிரசினை வரும் "

                              எண்டு ஏறக்குறைய கண்ணில கண்ணீர் வர சொன்னாள்.

                              எனக்கு பொதுவாகவே பெண்கள் கண்ணீர் விட்டா இரக்கம் சூறாவளி போல வரும்,அதிலும் அழகான இளம் பெண்கள் அழுதால் அதைப் பார்க்க உதவி செய்யும் மனப்பான்மை சுனாமி போல வரும்,,ஆனால் வெரோனிக்காவுக்கு எப்படி நான் உதவி செய்ய முடியும் எண்டு கொஞ்சமும் ஐடியாவே இல்லாமல்,

                      " உனக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியும் என்று நீ நினைக்கிறாயோ அதைக் கேள் முடிஞ்சா செய்யலாம் "

                        என்றேன்,அவள் சடார் எண்டு  " மாசத்துக்கு முழுகாமல் இருந்த மணியகாரன் பெண்டில் உலக்கையை உடையார் வீட்டில அடைவு வைச்ச " மாதிரி  

                          " நீ தனியாகவா இருக்கிறாய் " 

                       எண்டு முன்னமே ஜோசித்து வைத்த கேள்வி போலக் கேட்டாள்.

                     "ஆமாப்பா நான் தனியா ஒரு சின்ன நெருப்புப்பெட்டி போன்ற ஒரு அப்பார்ட்மெண்டில் கையைக் காலை கதிரை மேசையில் இடிச்சுக்கொண்டு இருக்கிறேன் " 

                               என்றேன், அவள் அதுக்கு மேல ஒன்றும் சொல்லவில்லை, கேட்கவுமில்லை,ஆனால் அவளைப் பார்க்க பாவமாய் இருக்க , சின்ன வயசில் என்னோட பாட்டி எப்பவுமே சொல்லி வளர்த்த " சுயம் நேசி.. சுடர் விடு.. மதம் கட.. மனிதம் வளர்  " என்ற சித்தர் பாடல் சொன்ன வழியில் ஜோசித்துப்போட்டு ,நானாகவே

                                 " உனக்கு போக வேறு இடம் கிடைக்கும் வரை வேண்டும் என்றாள் என்னோட அப்பார்ட்மெண்டில் சமாளித்து இருக்க உன்னால் முடியும் என்றாள் வந்து தங்கு " என்றேன்,  அவள் அதுக்கு 

                          " எனக்கு எல்லாரையும், எல்லா நிலைமைகளையும் நன்றாக  சமாளிக்க தெரியும்,நிலைமைகள்  எல்லாம் எண்ணங்களே என்பதால் எண்ணங்களை சரி செய்தால் எல்லாமே சரியாகி விடும், அமைதி கிடைக்கும் என்று  மார்கஸ் அரேலியஸ் எழுதி இருக்கார் ,நீ பயப்பிடாதை ,உன்னோட டெலிபோன் நம்பரைத் தா " என்றாள்,  

                         " அடக் கடவுளே நீ மார்கஸ் அரேலியஸ் எல்லாம் படிச்சு இருகிறாயே, அவர் அருமையான தத்துவ மேதையே , எப்படியோ எனக்கு இப்ப நேரம் இல்லை நான் பிறகு கதைக்குறேன், " 

                            எண்டு சொல்லிப்போட்டு எழும்பிப் போக,வெரோனிக்கா மறுபடியும் 

                       "  உண்மையாதானே சொல்லுறாய், புனித கல்வாரி மாதா மேல ஆணையாய்ப்  பிராமிஸ் பண்ணு " என்றாள்.

                   " ஆனால் என்னிடம் ஒரே ஒரு கட்டில் தான் படுப்பதுக்கு இருக்கு ,நீ அதில படுக்கலாம்,  என்னிடம் கட்டில் போல விரிக்கக் கூடிய ஒரு சோபா இருக்கு அதை விரிச்சு நான் அட்ஜஸ்ட் பண்ணிப் படுப்பேன் "

                        " அடக் கடவுளே அதெல்லாம் ஒரு பிரசினையா, "

                           "   இதெல்லாம்  உனக்குப் பிரச்சினையே  இல்லையா  வெரோனிக்கா "


                              "  எங்கள் நாட்டில் சொல்லும் குதிரை லாயத்தில் குருட்டுப்  பூனை  குடும்பம் நடத்தின பழமொழி போல இருக்கே நீ சொல்லுறது "


                             "   அதென்ன  ,,எனக்க்குத்   தெரியாதே வெரோனிக்கா  "


                                 "   ஹ ஹ ஹ ஹ ஹ ஹா " 

              " எனக்கு பூனையும் ,குதிரையும் குடும்பம் நடத்தின பழமொழி எல்லாம் தெரியாது,"

                                  "   ஹஹஹாஹ்,,,சிரிப்பு  சிரிப்பா  வருகுது "


                                    " எதுக்கு   சிரிப்பு  வருது   சொல்லு,,வெரோனிக்கா  " 


                              " அட  நீ  இவளவு  அப்பாவியா  இருக்கிறாயே "


                            " என்னவோ நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் முதலிலேயே " என்றேன் 

                                 அதுக்கு அவள் ஒண்டுமே சொல்லவில்லை, படுக்க இடம் இல்லை என்றால்  எனக்கு மேலேயே ஏறிப் படுக்கவும் ரெடி எண்டுறது போல அலட்சியமா பார்த்தாள்,,பிறகு " மிட் நைட் மசாலாவில் " ஷாகீலா  சிரிச்ச மாதிரி சிரிச்சாள். சிரிச்சுப்போட்டு முகத்தைக் கொஞ்சம் கவலை ஆக்கி,

                    " இன்னும் ரெண்டு நாளில் நான் இருக்கும் இடம் விடவேண்டும், இல்லாட்டி எனக்கு பெரிய  பிரசினை வரும்,  எனக்கு பெரிய பிரசினை வரும் " எண்டு பழைய பல்லவியை இழுத்து இன்னொரு முறை சொல்லி முடிய முதலே நான் என்னோட டெலிபோன் நம்பரை ஒரு சின்னப் பேபரில் எழுதிக்கொடுத்தேன்,

                                     இன்னும் ரெண்டு நாளில் அவள்  இருக்கும் இடம் விடவேண்டும், இல்லாட்டி அவளுக்கு பெரிய  பிரசினை வரும் எண்டு  நினைவுபடுத்த வேண்டும் போல எனக்கு திருப்பியும் சொன்னாள், அவளுக்கு  பெரிய  பிரசினை வரும் எண்டு தான் சொன்னாள், முன்னம் பின்னம் தெரியாத ஒரு இளம் பெண்ணுக்கு உதவி செய்யப் போய் " அடியும் பட்டு புளித்த கூழும் குடிக்கவேணுமா " போல  எனக்கு பெரிய  பிரசினை வரும் எண்டு கொஞ்சமும் ஜோசிக்காமல் என்னோட எதையும் தாங்கும் இதயம் கொஞ்சம் தன்னும் என்னை அலேர்ட் பண்ணாமல் விட்டதுக்குப்  பெயர் தான் தலைவிதி எண்டு கொஞ்ச நாளிலேயே எனக்கு தெரிய வந்தது.

                         நான் வசிக்கும் அப்பார்ட்மென்ட் தனிய வசிக்கும் ஆண்கள் பலரோட வாழ்விடம் இருப்பது போல எருமை மாடு சாணி போட்ட மாதிரிதான் இருக்கும்,வெரோனிக்கா வந்தால் என்ன நினைப்பாள் என்ற பயத்தில கொஞ்சம் அதை துடைத்துக்  கழுவி, ஒழுங்கமைத்து ,நிறைய வாசனைத்திரவியம் கலந்த சென்ட் அடிச்சு ,என்னிடம் இருக்கும் ஒரே ஒரு படுக்கையின் பழைய மேல் விரிப்புகளைக் கழட்டிப் போட்டு புது விரிப்புகள்,தலையனை எல்லாம் போட்டு பழைய விரிப்புகள் எல்லாத்தையும் கழட்டிக் குப்பையில் சுருட்டி எறிஞ்சு போட்டு ,கட்டிலைக்  கொஞ்சம் பூப்போட்ட  மஞ்சம்  ஆடட்டும் கொஞ்சம் என்று   அலங்கரித்து வைத்தேன் , 

                               அதுக்குப்பிறகு  ஏறக்குறைய என்னோட அப்பார்ட்மெண்டைப் பார்க்க எனக்கே வடிவா இருந்தது.  ஏகாதசிக்கு சாணி போட்டு முற்றம் மெழுகியது போல பளிச் என்று நிலம் அழகா இருக்க ஒரு சாம்பிராணிக் குச்சி நான் வைச்சு இருக்கிற வேளாங்கண்ணி மாதா படத்துக்கு கொழுத்தி வைச்சேன். எப்பவுமே  எதிர்பாராதவிதமாக  என்ன  நடந்தாலும் அந்த  அற்புத மாதா   என்னை காப்பற்றுவா  என்று  ஒரு  நம்பிகை எப்பவும்  இருக்கும்.

                               சொன்ன மாதிரி ரெண்டாம் நாள் இரவு வெரோனிக்கா டெலிபோன்  அடிச்சாள்  ,நான் ரெஸ்டாரென்ட் குசினியில் வேலையில் நின்றேன், அவள்  வேண்டுமென்றே  குரலை  மாற்றி  காட்டூன்  படங்களில்  வருமே நுனித்தொண்டைக்   கலவரக்குரலில்  கதைத்தாள். குழப்பமாக  இருந்தது   யார்  கதைப்பது  என்று ,

                                        "  ஹலோ,எப்படி இருக்குறாய்,எப்படி சுகம், நான் யார்  கதைக்குறேன் சொல்லு   பார்ப்பம் ,நினைவு இருக்கா, 

                                    "  யார்,,,ஹ்ம்ம்,,சரியா   விளங்கவில்லையே ,,கேட்ட  குரல் போலவும்  இருக்கு "


                                   "   ஹஹஹஹா,,,,அதுக்கு  இடையில்  என்னை  மறந்திட்டியா,,,சொன்ன  உத்தரவாதம்  எல்லாம்  காத்தில  போச்சா "


                               " நான்  என்ன  உத்தரவாதம்  உனக்குச்  சொன்னேன் ,,நீ  யார்  முதலில்  சொல்லு "


                                     "   ஹஹஹா ,,அய்யோ  சாமி  ,நான்  பெயர்  சொல்ல மாட்டேன் ,,,நீயே  கண்டுபிடி "


                                  "  ஹ்ம்ம்,,நீயே  சொல்லுப்பா,,நான்  இங்கே  கையில கரண்டியோடு  நெருப்புக்கு  நடுவிலே  நிக்குறேன் "


                                      " ஓ,,சொறி,,சொறி,,,,,,நான்  பகிடிவிடுறேன்  நீ  சீரியஸ் ஆக  வேலையில்  நிற்பது  தெரியாமல்  சொறி  சொறி  "


                      " பிறகு  சொறியலாம்,,இப்ப உன்  பெயரைச் சொல்லு "


                          "  குதிரை லாயத்தில் குருட்டுப்  பூனை  குடும்பம் நடத்தின  வெரோனிக்கா , ஹஹஹஹா ,சும்மா பகிடிக்கு சொல்லுறேன் , சரி முக்கிய விசியத்துக்கு வாறன் ,இதுதான் விசியம் நாளைக்கு இரவு வரவா ,உனக்கு ஒகே யா,,ஒரு மூன்று நாள் மட்டும் இருக்க உதவி செய்  " 

                           எண்டு கேட்டாள்,

                                 "  சரி ,வாவன்  நாளைக்கு நான் வேலை இல்லை, பின்னேரம் நேரத்தோட வீட்டில நிற்பேன்,

                              "  பரதேசிக்குப்  பரலோகப்  பாதைபோல உன்னோட  அட்ரஸ்  என்னிடம்  இல்லையே எப்படி  வர "


                             " வெரோனிக்கா முதலில்    ....... இக்குப் போற ஆறாம் நம்பர் மெட்ரோ தேபானா  ட்ரைன் ஒஸ்லோ சென்றல் ஸ்டேசனில் இருந்து எடுத்து ஏறு , "


                                   "  சரி  மகா பிரபுவே "


                                    " கடைசி ஸ்டேஷன் ......... தேபாணா இக்கு முதல் வாற ........  தேபாணா ஸ்டேசனில் இல இறங்கு, வெரோனிக்கா ,"


                               "   சரி  இறங்கி,,  ஆவெண்டு  ஆகாசத்தைப்  பார்க்கவா "


                              " நான் ........  மெட்ரோ தேபாணா  ஸ்டேசனின் வெளி வாசலில் நிற்பேன், வெரோனிக்கா  " 


                                   "  அட  நீ அவளவு  அக்கைறையா  பால்குடிக் குழந்தைக்குப்  பாதுகாப்புபோல  நிக்குறியே,,சோ  சுவிட்  சோ  சுவிட் "


                                    "  இதில  என்ன  இருக்கு ,,நானே  காலாற நடக்க  விரும்பும்  ஒருவன்,,மறக்காமல்  ட்ரைன்  ஏறினவுடன  போன்  அடி  வெரோனிக்கா "
                              
                                        " ஹ ஹ  ஹ  ஹா, குருட்டுப்  பூனை இடங்களை ஒருக்கா சொன்னாலே மறக்காது,ஹ  ஹ  ஹா  ஹ்,,நான் மெட்ரோ  சப் வே  ட்ரைன் ஏறின உடனை உனக்கு மொபைல் போனில  ஒரு கால் தாரேன் ஓகே யா " என்றாள்.

                        " ஓகே ,மெட்ரோ ட்ரெயினில் இருந்து இறங்கும் போது கவனம், சறுக்கும், ஆவெண்டு பார்த்து ஏமலாந்தாமல் படியப் பார்த்து இறங்கு   " என்றேன். 

                           சொன்ன மாதிரி அடுத்த நாள் இரவு கால் பண்ணினாள், நேரத்தைக் கணிப்பிட்டு பத்து நிமிடம் நடந்து  கீழே ரெயில்வே ஸ்டேஷன் இல்  போய் நின்றேன் . ஒரு பெரிய ட்ரவலிங் பாக்கை கொழுவிக்கொண்டு ஏமலாந்திக் கொண்டு மீன் கொத்திப் பறவைபோல அங்கேயும், இங்கேயும் பார்த்துக்கொண்டு வந்தாள், வந்து இறங்கின உடனேயே,

               " வாவ்,எவளவு அழகான சோலை போல இருக்கே இந்த இடம், இவளவு மரங்களா இங்கே, ஏறக்குறையா புடாப் பெஸ்ட் போல இருக்கே இந்த சின்ன இடம் " என்றாள்,

                          நான் " அதென்ன புடாப்பெஸ்ட் " என்று கேட்டேன்,

                         அவள்,,,

                       " அதுதான் என்னோட தாய் நாடு ஹங்கேரியின் தலை நகரம், அங்கே தான் நான் பிறந்தேன் ," 

                                     எண்டு சொன்னாள், அவள் பாரமான  ட்ரவலிங் பாக்கை வேண்டி என்னோட தோளில கொழுவிக் கொண்டு,அவளையும் கூடிக்கொண்டு வீட்டுக்குள்ள வந்த உள்ளிட முதல்

           " என்னோட பெயர் முதல் உனக்கு சரியா தெரியுமா ,சொல்லு பார்ப்பம் " எண்டேன்

                                   அவள் வாய்க் கொஞ்சம் சுளிச்சு 

                                " புருஷன் " என்றாள் 

                             நான் பதறி அடிச்சு  " அது இல்லைப்பா,,,என்னோட பெயர் அரசன் ,எங்க சொல்லு பார்ப்பம் அ  ர  ச  ன் ,,," 

                                    எண்டு சொல்லிக்கொடுக்க அவள் மறுபடியும் ,,

                                     "  புருஷன் " என்றாள்,

                 நான்  " அப்படி இல்லை ஒவ்வொரு எழுத்தாய் சொல்லு தாயி உனக்குப் புனித கல்வாரி மாதா மேல ஆணையாய்ப் புண்ணியம் கிடைக்கும் சீமாட்டி " 

                       எண்டு கெஞ்சிக் கேட்க்க கடைசியில் ஒவ்வொரு எழுத்தாய் 

                                                  " பு  ரு  ச  ன்  " என்றாள் ,

                                        இது என்ன சீவியமடா , என்னோட அம்மா எப்பவும் சொல்லுற மாதிரி " காலைச் சுற்றின புடையன் பாம்பு கடிக்காமல் விடாது  " எண்டது போலத்  தான் உத்தரிப்பு கிடைக்கும் போல இருக்கே எண்டு போட்டு,வாறது வரட்டும் எண்டு நினைக்க,வெரோனிக்க அவள் அணிந்து இருந்த கோட் போன்ற மேலாடையைக் கழட்டி,சோபாவில் எறிஞ்சாள் , அவள் வாயில இருந்து ஜின் என்ற குடிவகையும் டோனிக் என்ற உப பானமும் கலந்த வாசம் காற்றில் வர 

                        " லண்டன் கோர்டன் டிறை ஜின்னும் , லெமன் டோனிக்கும் குடிச்சியா "

                          எண்டு கேட்டேன் 


                          " ஆமாப்பா, எப்படி அவளவு நுணுக்கமா  ஒரு பெண்ணின் வாயில் இருந்து சன்னமாக வருவது லண்டன் கோர்டன் டிறை ஜின் எண்டு கண்டு பிடித்தாய்,,,," 

                      எண்டு சந்தேகமாக் கேட்டாள்.

                             " நானே பெரிய குடிகாரன்,அதை விட ஹோட்டல் பார் , நீச்சல்குளப் பப்பில் ,குடிவகையில் கொட்டேயில் செய்யும் வேலைக்கும் உதவியா இருந்து இருக்கேன்பா, நிறைய ஜின் வாசம் தெரியாது ஆனால் எல்லா லண்டன் கோர்டன் டிறை ஜின்வாசமும் தெரியும்  " 

                              என்றேன், " நானே பெரிய குடிகாரன் " எண்டு கொஞ்சம் அவளை அலேர்ட் பண்ணத்தான் சொன்னேன்  அவள் அதுக்கும்  யானையில நுளம்பு கடிச்ச மாதிரி ஒரு சின்ன உணர்ச்சியே இல்லாமல்  கேட்டாள், ஒண்டும் சொல்லவில்லை   

                          " பசிக்குது சாப்பிட ஏதாவது செய்வியா, எனக்கு வயிறு நோகுது, ப்ளிஸ் ஏதாவது சமைப்பியா அல்லது சமைச்ச சாப்பாட்டு ஏதாவது இருக்கா " எண்டு கேட்டாள் .

                           நான் " நீ வருவாய் என்றே ப்றோவேன்சியே பிலோங்கனிஸ் லசானியாவும், சீசர் சலாட்டும் செய்து வைச்சு இருக்கேன் " என்றேன் 

                             " வாவ்.எனக்கு இத்தாலி நாட்டு  ப்றோவேன்சியே முறையில் சமைக்கும் சாப்பாடு எல்லாமே மிகவும் பிடிக்கும்,என்னோட அம்மா இத்தாலியன், அவா இத்தாலியின் கலாச்சார நகரமான  வெரோனா நகரத்தில் பிறந்தவா,அதாலதான் எனக்கு வெரோனிக்கா என்று பெயர் வைச்சவா  "

                        என்று நேர்சறிக் குழந்தைப் பிள்ளைகள் போல  போல சிரிச்சு சிரிச்சு சொன்னாள் 

                       " அப்படியா ,,அப்புறம் ஏன் நீ ஹென்கேரியில் பிறந்தாய்,உன் அப்பா ஹங்கேரியன் நாட்டவரா, " 

                                 எண்டு கேட்டேன் ,அதுக்கு வெரோனிக்கா

                    " அது பெரிய கதை, சாப்பிட்டு முடிய ஆறுதலா சொல்லுறேன் " 

                                   என்றாள் நானும் ஓம் எண்டு தலை ஆட்டிப்போட்டு , அவளுக்கு என்னோட அப்பர்த்மென்ட் சுற்றிக் காட்டி, எங்க எங்க என்ன என்ன இருக்கு எண்டு ஆங்கிலத்தில் விளக்கமா சொன்னேன் ,கடைசியில் நான் படுக்கப்போற சோபாவையும்  அவள் படுக்க ஒதுக்கப்பட்ட கட்டிலையும் காட்டினேன்..வெரோனிக்கா டக் என்று மின்னல் விழுந்த மாதிரி  நின்றாள் , 

                       " இப்ப என்ன சொன்னாய்,கடைசியா "  எண்டு கேட்டாள் ,

                    " நான் படுக்கப்போற சோபாவையும்  நீ  படுக்க ஒதுக்கப்பட்ட கட்டிலையும் சொன்னேன்.என்னாச்சு உனக்கு  இப்படி பேய் அறைஞ்ச மாதிரிப் பார்க்கிறாய் .." 

                அதில தான் நான் எதிர்பார்க்காத திசையில் இருந்து முதல் அதிர்ச்சி என்னோட முகத்தில் அறைஞ்சது..

                             ஒருவரது வாழ் நாளில் சனி திசை நடக்கும் போது, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி பிடித்து வாட்டும் என்று சொல்லுறார்கள், எனக்கு எந்தச்  சனி அந்த நேரம் பிடிச்சுது  எண்டு என்னோட ஜனன சாத்திரத்தை நம்பும் கொள்கையில் நான் இல்லாததால் சரியாச் சொல்லமுடியவில்லை.......


....பாகம் இரண்டில் மிச்சம் எழுதி இருக்கிறேன் ..

.
 .

Monday, 5 October 2015

காமம் வென்றது ....

நித்திடால்  என்ற பள்ளத்தாக்குக்கு மேட்குபக்கம் உள்ள சமவெளியில் இருந்த   ஒரு  குதிரைப்பண்ணைக்கு அருகில்  ஒரு ரெஸ்டாரெண்டில்  வழக்கம்போல  ஆடிக்கு இலை அறுக்கிறேன் அம்மாவாசைக்குக்   குலை அறுக்கிறேன் என்று  வேலைசெய்துகொண்டிருந்தேன் . அந்தப்  பண்ணையில் ஆரோக்கியமான   இளம் பெண்பிள்ளைகள் வேலை செய்வார்கள் .


                                                    ,வேலை முடியக் குதிரைப் பசிபோல   சாப்பிட வருவார்கள் , குதிரைபோலவே வாய் உளையாமல் திண்டுகொண்டு இருப்பார்கள் . அவர்கள் வந்தால் சேறும்  சகதியும் பிசைந்து   குதிரைமயிர் மொச்சக்கொட்டை  எல்லாம் கலந்தடிச்சு சும்மா  வியர்வை  வாசம்  பிரட்டி எடுக்கும் . அப்பிடி  ஒரு   ஈரோடிக் ரொமான்டிக் வாசம்.                 


வாழ்கையில் தெரிந்தும் தெரியாமலும் பல சம்பவங்களில் நாங்கள் சாட்சியாக இருக்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி நடக்காவிட்டாலும் எப்பவாவது நடக்கும் . அதன் நல்லதும் கெட்டதும் ஒரு நேரம் சுவாரசியமா இருக்கும்போது அதன் முழுப் பரிமாணத்தில் மனிதர்களின் குணங்கள் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கி ஹோமோ நியண்ட்தாஸ் என்ற கற்கால சிந்தனைக்குப் போகலாம், 

அல்லது இன்றைய மனித விழுமியங்களில்  அர்த்தமில்லாமல் பின் கதவைத்திறந்து கொண்டு ஓடியும் போகலாம் .

                                          
ஒஸ்லோவில் வியர்த்துக்கொட்டி மிதமான வெய்யில் குளிரோடு போராடி அதிகமான மனிதர்கள் வீடுகளை விட்டு வெளியே இழுத்து எடுத்து நகரத்தின் பாதைகளில் விடுப்புப் பார்க்க வைத்த இந்தக்  வருடத்தின் கோடை காலத்தில் நான் சமையல்காரனாக வேலை செய்யும்  ரெஸ்ட்ரோரிண்டிலும் வெளியே பாதை ஓரம்  மேசைகள் போட்டு அதில் மலர்க்கொத்து வைத்து அலங்கரித்தாள் ரெபேக்கா.

                                           நான் குசினியில் வேலை, முன்னுக்கு ரெபேக்கா கனகாலம் செர்விற்றிஸ் என்ற பரிமாறும் வேலை அவள் தான் ரெஸ்டாரென்ட் நடத்துவது போல முக்கிய பொறுப்புகளில் இருந்தாள். ஹீரோயின் போல திறந்ததில் இருந்து  ஒரு வேலை நாள் முடியும்வரை  அவள்தான் எல்லாக் காட்சியிலும் என்னோட பொஸ் அவளுக்கு அப்படி அதிகாரங்கள் கொடுத்துக் கெடுத்து வைச்சு இருந்தார் .

                                            முன்னுக்கு அவளோடு இன்னுமொரு அவள் வயதை சேர்ந்த இளம் பெண் வேலை செய்வாள். அவள் ஹிரோயின் இல்லை.உப நடிகை போல .ஆனால்  அமைதியானவள் , அதிகம் பேசமாட்டாள். அலங்காரம் போட மாட்டாள். வந்தமா வேலையை முடிச்சமா என்று போய்க்கொண்டு இருப்பாள். வேலைக்கு  பாங்கில் வேலை செய்யும் அவளோட அம்மா கார்ல கொண்டுவந்து இறக்குவா நடு இரவு வேலை முடிய கார்ல ஏத்திக்கொண்டு போவா .

                                 ரெபேக்கா அப்படி இல்லை.வாய் கொடுத்தால் தப்ப ஏலாது. நாய்க்கு வாயில சவ்வு போட்டால் எப்படி கிடந்தது வாயை சுழட்டுமோ அதைப்போல வைச்சு அறுப்பாள். அவளுக்கே தெரியாது என்ன அலட்டுறாள் என்று . ஆனால் அது எங்கள் ரெஸ்டாரென்ட்க்கு நாக்கு நனைக்க வரும் குடிவிரும்பிகள்  பலருக்கு விருப்பம் .

                                                             அதை ஒருவிதமான கவர்ச்சிபோல நினைப்பதாக என்னோட பொஸ் சொல்லுவார்.அதைக் கேட்டால்  பொஸ் இன் காதலி என்றும் சொல்லமுடியாத  மனைவி எண்டும் சொல்லமுடியாத முதலாளி அம்மாவுக்கு விறகு அடுப்பு  பத்தின மாதிரி கோவம் வரும்

                                      எனக்கு வேலை குறைவான பொங்குசனி நேரம், அவளுக்கும் வேலை குறைவான அசதியான  நேரம்  ரெபேக்கா எப்பவும்  என்னோட கதைப்பாள். முக்கியமா எங்கள் வேலை இடத்தில என்னோட பொஸ் அல்லது அவரின் செட் அப் மனைவி எப்பவும் ரெண்டுபேரில் ஒருவர் நிற்பார்கள். 

                                                    சில நேரம் இரண்டு பேரும் நிற்பார்கள். செட் அப் நின்றால் பொஸ் ஏகப்பத்தினி விரதன் போல நடிப்பார். செட் அப் இல்லாட்ட்டி தான் நாமக்கல் ஆஞ்சநேயரின் அட்டகாசம் நடக்கும்

                                  
ரெபேக்கா அழகானவள்.கரீபியன் கடல் போல  அழகான  நிலநிறக் கண்கள் , அதுக்கு மஸ்காரா வால்நீட்டி  இமைகளுக்கு நிரந்தர வாழ்க்கை கொடுத்திருப்பாள்  , கிளாசிக்கல் அளவுகளில் ஸ்கண்டிநேவியக்  கால்களில்  உயரம் , முகம் நாங்கள் பார்க்கும்  பார்வையே ரேக்ஸ்சோனா சோப் போல அதில வழுக்கும்  வழுவழுப்பு .

                                                  ரஷியன் பர்புஸ்கா பொம்மை பொறாமைப்படும் இடுப்பு . அவளோட சிரிப்பு அதுதான் அவளின் மக்னம் பிஸ்டல். கண்ணாலும் சொண்டாளும் கொழுவி இழுத்தாள் எண்டால் ஸ்பானிஸ் பொம்பலோனா அடங்கா மாடுகளே முன்னம் காலில் மண்டியிடும் .

                              அவள் போடுற உடுப்பு...ஹ்ம்ம் அதுதான் அடங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு . அதிலும் அவள் போடுற உள் உடுப்பு.. யப்பா சாமி அலகு குத்திக்கொண்டு தலையில சூடம் பத்தவைச்சுக்கொண்டு சாமியாட வைக்கும்.அதுவும் ஒருவித உற்சாகம் அதன் எல்லைகள் வாழ்கையை வருடப்பிறப்பு வான வேடிக்கை போல கலர் கலரா விந்தை காட்டும் .

                           
நாற்பத்தி ஐந்து வயது கடந்தபின் வரும் காமம் முழுக்க சாதாரணத்துவம் வாய்ந்ததல்ல அதுவும் பாவங்கள் நிறையவே செய்து சேமித்து வைத்துள்ள வாழ்கையில் பாதி கடந்த பின்னும் கூட நிறைய உறவு விசியன்களில் சந்தேகங்கள் இருந்து கொண்டும், அது நிழல் போல வந்த கொண்டும் இருந்ததை நினைத்துக்கொண்டு வேலை தொடங்கமுதல் போட்டுக்கொண்டு போற உடுப்பு மாற்றி சமையல் குக் வேலை உடுப்புப் போட அதுக்கென ஒதுக்கப்பட்ட அறையத் திறந்தேன் . 

                                      ரெபேக்காவும் வந்தாள் , வந்து மாதவி போலவே சிரித்துக்கொண்டே ஹக்கோபா போல பிரில் வைச்ச டொப் மேலாடையைக் கழட்டிட்டி எறிஞ்சாள், பிறகு சிரிச்சுக்கொண்டு கீழே குனிந்து குதியுயர லெதர் சப்பாத்தைக் கழட்டி ஓரமாக வைச்சுப்போட்டு போட்டு இருந்த இறுக்கமான டிம்பர்லான்ட் டெனிம் காற்சட்டையும் மெல்ல கீழே இறக்கி ....


                                   
                         

                                     

                                   



















.















.
























.



Saturday, 3 October 2015

வெங்க பொஸ் நோர்வேயின் இதயரானி

இந்த படத்தில் ,வெண்கல சிலை வடிவில், சந்தோசமாக கைகளை விரித்து, ஒரு தேவதை போல இருக்கும் பெண்மணி, 66 வருடங்கள் ஒபேரா இசைப் பாடகி, நாடகநடிகை, எழுத்தாளர், அரசியல் விமர்சகர், சமூக விழிப்புணர்வு வாதி, மாற்று திறனாளிகளின் சமூகசேவகி, என்று நோர்வ்யியர் இதயங்களை ஒரு அரை நுற்றாண்டு கொள்ளைக்கொண்ட நோர்வேயின் இதயராணி வெங்க பொஸ் !

                                வெங்க பொஸ், மிகவும் கடவுள் நம்பிக்கை உள்ள, பணகாரா என்யினியர் அப்பாவுக்கும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத, மத்தியவர்க்க, கொஞ்சம் படித்த அம்மாவுக்கும் பிறந்ததால், அவாவின் வாழ்நாள் முழுவதும் இந்த முரண்பாடில் வாழவேண்டி வந்ததாலோ என்னவோ பல சமூக விசியன்களில் எப்பவுமே, அவாவின் காலத்துப் பெண்கள் எல்லாரையும் விட ஒரு முன்னோடியாகா இருந்து இருக்கிறா !

                                   " வைகிங்" என்ற கடல் கொள்ளைக்கார்களின் வம்சாவளிகள் இன் வழிதோன்றல்கள் ஒரு சமூக அமைப்பாக வாழும் நோர்வே ஒரு கலை,கலாசாரா பின்னனி சிறப்பாக இருந்த ஒரு நாடு எண்டு சொல்வதில் நிறையக் குழப்பம் இருக்கு!

                                    ஆனாலும் அதன் சென்ற நூற்றாண்டு வரலாறிற்றில் கொஞ்சம் உலக அளவில் சொல்லும்படியா பலரை உருவாகிய, அதன் அன்றய தலைநகர் கிரிஸ்தானியா இல் இருந்த "நேஷனல் தியட்டர் " என்ற இசை ,நாடக கலை நிறுவனம் எவளவு முகியமனதோ அதே அளவு முக்கியமானது வெங்க பொஸ் இன் பங்களிப்பு. அந்த "நேஷனல் தியட்டர் " என்ற நிறுவனத்துக்கு, அதாலதான் அதன் அருகில், இன்றைய தலைநகர் ஒஸ்லோவில் ,வெங்கலத்தில் சிலை வைத்து கவுரவிதுள்ளார்கள் நன்றியுள்ள நோர்வேயிர்கள்!

                                வெங்க பொஸ், " மேஸ்ச்சோ சபரான்னோ " ஒரு அரிதானவகை ஒபேரா பாடகி , பிறக்கும் போதே அந்த அரிதானவகைப் குரலுடன் அவா பிறந்திருக்கிறது ,பிற்காலத்தில் ஒபேரா நாடகங்களில் பாடி ,நடிக்க அவாவுக்கு உதவி இருக்கு.

                                  வெங்க போஸின் ஒபேராப் பாடல்கள், நான் ஒண்டுமே கேட்டது இல்லை ! அந்த வகைப் பாடல்கள் கொஞ்சம் " செத்த வீட்டில ஒப்பாரி வைகிரமாதிரிர் இருக்கும் " என்னைப்போன்ற அதன் டெக்க்னிகல் இசை வடிவம் தெரியாதவர்களுக்கு ! அவா நடித்த ஒரு நாடகம் மட்டும் DVD இல் பார்த்தேன் .

                                        நிறைய முக்கியமான நாடகங்கள் நடித்து பல விருதுகள் வேண்டிக்குவித்த, இதயங்களைக் கொள்ளைகொண்ட, வெங்க பொஸ் இன் முதல் காதல், கலியாணக் ,குடும்ப வாழ்கை சரியாக அமையாமல், அவாவின் முதல்க் குழந்தை "டௌன் சின்றோம் " இல் பிறந்து,சில வருடங்களில் இறக்க, அதே வருடம் கணவர் அவாவை அம்போ எண்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் போக, இது எல்லாம் போதாது எண்டு அவவுக்கு மார்பகப் புற்றுநோயும் வந்திருப்பதாக டாக்டர்கள் சொல்ல இரண்டாகஉடைந்துபோனா வெங்க பொஸ்!

                                         அந்த வாழ்க்கைப் பாடங்களை மறக்காமல், தன்னுடை ஒபேராப் பாடல்களில் பிழிந்து பிழிந்து பாடிய வெங்க பொஸ், பிற்காலத்தில் பிரபலமும், பணபலமும் வந்தபின்னர் ,தன்னோட சொத்தில் பெரும்பகுதியை "டௌன் சின்றோம் " என்ற அந்த பிரவிக் குறைபாட்டு நோயின் விளிபுனர்வுக்கும், ஆராய்ச்சிக்கும் கொடுத்து ,மாற்றுதிரனாளிகளின் சமூக அந்தஸ்து, விஞ்ஞான ரீதியான கடவுள் மறுப்பு , ஒரேபால் இணக் கலியாணத்துக்கு ஆதரவு, போயன்றவற்றுக்கு ஆதரவு தெரிவித்து கட்டுப்பெட்டி, பழமைவாத நோர்வேயிர்களின் மண்டையில மணி அடித்து இருக்கிறா !

                            கடவுள் நம்பிக்கை இலாதபோதும், ஓய்வு பெறும் நிலையில் இருந்த தன்னோட நண்பரான ,ஒஸ்லோ முதன்மைத் தேவாலயதுக் குருவுக்கு போன் பண்ணி

                                  " நீங்கள் ஓய்வு பெறுமுன்னர் , உங்களின் தலைமையில் என்னோட மரணச் சடங்கை நடத்த விரும்புகேறேன் "

                                என்று பகிடியாக சொன்ன சில நாட்களில் மார்பகப் புற்றுநோயுடன் பலவருடம் விடாமல்ப் போராடி, அதை வென்ற, வெங்க பொஸ் கடசியில் இறந்துபோனா!

                                      இன்பத்திலும் துன்பத்திலும் தங்களை பாடி , ஆடி , நடித்து மகிழ்வித்த தங்கள் இதயரானியின் மரணச் சடங்கை 2011 இல் நோர்வேயில் முழு அரச மரியாதையுடன் ,தேசிய துக்க தினமாக கொண்டாடினார்கள் இதயம் முழுவதும் ஈரம் உள்ள நோர்வேயியர்கள்,

                                     இந்த சிலையிட்கு ,"தேசிய துக்க தின" ஒரு கிழமை, அவாவின் ரசிகப் பெருமக்கள் , வயோதிபர்கள், அபிமானிகள் வந்து பூங்கொத்து , மெழுகுதிரி வைத்து மரியாதை செய்தார்கள். நானும் என் சிறிய பங்குக்கு ஒரு பூங்கொத்து வேன்டி வைத்தேன்!
.

.

/// .03.10.2013 ///

Friday, 2 October 2015

ஆனந்தி டீச்சர் ..

வாழ்க்கை  அனுபவத்தில் எனக்குரிய இடம் எங்கே என்று எப்பவும் தேடுவது . அதை நினைக்கும்போதுதான் இளமைக்கால  நினைவுக்குள்  தடம்புரண்டு வந்தவைகளில்  இதுவும் ஒன்று .அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்  என்று சொல்லுவார்களே  எங்களின்  ஊரில்  அதுபோல  நடந்த  ஒரு நிகழ்விது. வெற்றி-தோல்வி மனஸ்தாபம்-நட்பு எழுச்சி-வீழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு ஜீவனுள்ள சந்திப்பு அந்தக்கால மனிதர்களின் ஆச்சரியங்களைப் புரட்டும் போதெல்லாம் வரும் ..

                                      யாழ்பாணத்தில மீசை முளைக்காத இள வயசில எங்கட வீடில மிருதங்கம் இருந்தது, அதை முறையாகப் பயின்ற, தற்சமயம் அமரிக்காவில் சாட்டட் எக்கவுண்டணா இருக்கும் என்னோட கடைசித் தம்பி, அந்த நந்தி தேவரின் வாத்தியத்துக்கு, நார்களை முறுக்கி,ஒரு கொட்டுத் தட்டுக் கட்டையால தட்டி , நாட்டு வைத்தியர் போல பல சேர்வைகள் குழைத்து இதமாகப், பதமாகத் தடவி "சுருதி" ஏற்றி வாசிப்பான்! அது சும்மா நாலு வீட்டுக்கு நாதம் பேசும்! 

                                     அவன் வாசிப்பதை பார்த்து,அவன் வீடில இல்லாத நேரம் அதை ரகசியமாக நான் எடுத்து முழங்குவேன்,அதன் டமால் டுமீல் சத்தம் நாலு வீட்டுக்கு அதிரும் ,என் தம்பி வாசிக்கும் போது மட்டும் நாதம் பேசும் அந்த வாத்தியம் நான் வாசிக்க வாசிக்க அதில இருந்து அதன் நாதம் இறங்கி கல்லெறி வேண்டின நாய் ஊளை இடுவது போல சத்தம் வருவது போல வரும் வரை அதை வைத்து நான் முழங்குவேன்! 

                                   புல்லாங்குழலுக்கும் அடுப்பு ஊதுற இரும்புக் குழலுக்கும் வித்தியாசம் தெரியாத என்னோட அம்மா நான் முழக்குரதை ஆச்சரியமாப் பார்ப்பா. என் கடைசித் தம்பிதான் எப்பவும் எங்க வீட்டுக்கு அருகில் இருந்த, நான் படித்த ஆரம்பப் பாடசாலையில் சங்கீத ஆசிரியையாக இருந்த ஆனந்தி டீச்சருக்கு எப்பவும் பக்க வாத்தியம் வாசிப்பான்.

                                          நான் இனி சொல்லப் போறது செவ்வந்திப்பூப்  போல இருந்த ஆனந்தி டிச்சருக்கு ,அவா கட்டி இருந்த பட்டுசேலை வாசம் தெளிவாக மணக்கும், சூடி இருந்த மல்லிகைப்பூ மனம் கிறங்க வைக்கும் அளவுக்கு அவாவுக்கு பக்கத்தில இருந்து மிருதங்கப் பக்க வாத்தியம் வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்கும் ஒரே ஒரு முறை பூர்வ ஜென்ம புண்ணியத்தில் நான் செய்த நற்பயணால் எனக்குக் கிடைத்ததைப் பற்றி.......

                               ஆனந்தி டீச்சர் , வடிவில் எல்லா டீச்சர் போலவும் தான் இருந்தா, ஆனால்  முகத்தில் அறிவுக் கொழுந்து விட்டு,பிரம்பைச் சுழட்டிக்கொண்டு சூர்ப்பனகை  போல படிப்பை நினைக்க வைத்துப் பயப்பிடுத்தும் எல்லா டீச்சர் போலவும் இல்லாமல் , உசரமான ,மெலிந்த ,விழிகளில் ஆரோகணம் ஆர்வமாக எட்டிப்பார்க்க,கன்னத்தில் அவரோகணம் அடக்கி வாசிக்க, நிரந்தரமாகவே முகத்தில் ஒரு தனி ஆவர்த்தனம் தாளம் போட , கனகாம்பரம் அல்லது மல்லிகைப்பூ ஒற்றைச் சர மாலை நீண்ட அலை பாயும் கூந்தலில் அது பாட்டுக்கு சண்முகப்பிரியா ராகத்தில கமகம் கொடுக்க,..... 

                                 எப்பவும் பருத்திச் சேலை மடிப்புக் கலையாமல்க் கட்டி, இயல்பாக எல்லாருமே ரசிக்கும் சரஸ்வதி கடாட்ச்ச முகத்தோட,சுருள் முடி புசு புசு எண்டு அடக்கிப் படிய வாரித் தலை இழுத்தாலும் கொஞ்சம் அடங்காமல் அட்டகாசம் போட,நெற்றியில் எப்பவும் ஒரு ஆச்சரியக்குறி போல சாந்துப் பொட்டு வைச்சு,காதில அரளிப்பூ போல லோலாக்கு தொங்க விட்டு, கதைக்கும் போதே சங்கீதம் சரி கம ப த நிச சரளி வரிசையில் ஆபேரி ராகம் பாடும். கொஞ்சம் உற்றுக் கவனித்தா ஆனந்தி டீச்சர் வலது மூக்கில கிக்கிலி சம்பா அரிசிபோல ஒரு ஒற்றை வைர மூக்குத்தி போட்டிருப்பா. 

                             சரஸ்வதிப் பூசைக் கடைசி விஜயதசமி நாளுக்கு முதல் நாள் ஆனந்தி டீச்சர் ,எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம்

                   " ....... மாமி நாளைக்கு பிள்ளைகளின் நிகழ்ச்சி இருக்கு ,இன்று கொஞ்சம் ரிகர்சல் பார்த்தால் நல்லம் எண்டு வந்தேன் ,எங்க உங்கட மகன் "

                      எண்டு என்னோட கடைசித் தம்பியை விசாரிக்க,அம்மா

                     " என்ன டீச்சர் பிறத்தி ஆட்கள் போல வாசலில் நிண்டு கதைகுரிங்க உள்ளுக்கு வாங்கோ முதலில் "

                         எண்டு சொல்ல ஆனந்தி டீச்சர் எங்க வீட்டு வெளி விறாந்தையில் போட்டு இருந்த கதிரையில் பருத்திச் சேலை மடிப்புக் கலையாமல் இருக்க,கனகாம்பரப்பூ வாசம் வர நான் படிச்சுக் கொண்டு இருந்த " அடிப்படை சூரியன் சந்திரன் வானியல் வின்வெளி சயன்ஸ் " புத்தகத்தைச் சுழட்டி எறிஞ்சு போட்டு வந்து ஒரு உயிருள்ள சந்திரனை எட்டிப் பார்த்தேன், 

                       அம்மா கொஞ்சம் மெதுவாக ஆனந்தி டீச்சர்க்கு

                   " அவன் எல்லோ டீச்சர் வேற ஒரு இசைக் குழு நிகழ்சிக்கு ஓடுப்பட்டு திரியுறான் ,நான் நினைக்க வில்லை நாளைக்கு வந்து உங்களுக்கு வாசிப்பான் "

                    எண்டு சொல்ல,ஆனந்தி டீச்சர் ஜோசித்தா,

                       " அப்படியே சங்கதி மாமி ,இப்ப என்ன செய்யுறது "

              எண்டு சொல்லி முடிக்க முதல்,அம்மா

                         " என்னோட மற்ற மகனும் மிருதங்கம் வாசிப்பான் "

                             எண்டு சொல்ல நான் கொஞ்சம் ஆனந்தி டீச்சர்க்கு முன்னால வெளிய வந்தேன், ஆனந்தி டீச்சர் என்னைப் பார்த்தா,அம்மா,

                    " இவனும் நல்லா வாசிப்பான் "

                  எண்டு சொல்ல , ஆனந்தி டீச்சர்

                        " அப்படியே மாமி,  அப்ப பிரச்சினை இல்லை "

                          எண்டு சொன்னா,எனக்கு பூர்வ ஜென்ம புண்ணியத்திலஉண்மையா அதுக்கு முதல் நம்பிக்கை இல்லை,ஆனால் அந்த நேரத்தில சடார் எண்டு அது வந்தது. இதுக்கு மேல என்னதான் வேண்டும் ஒரு மீசை முளைக்காத இளம் பொடியனுக்கு, நீங்களே சொல்லுங்க பார்ப்பம்,

                       ஆனந்தி டீச்சர் என்னைப் பார்த்து சிரிச்சுப் போட்டு,

                        " அப்ப பின்ன மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு வாருமேன் வித்துவான் "

                       எண்டு சொல்ல நான் அதைத் தூக்கிக் கொண்டு வந்து வைச்சிட்டு நிலத்தில இருந்து முதல் அதை அடிக்கிற உதைக்கிற பக்கம் சரியாத் தெரியாமல் வைச்சிருக்கிற வளம் சரியா எண்டு கொஞ்சம் குழப்பமாப் பார்த்தேன்,ஆனந்தி டீச்சர் அதை விடக் குழப்பமா என்னைப் பார்த்தா.கர்நாடக சங்கீதத்தை சாம்பாரு போலக் கரைத்துக் குடித்தமாதிரி என்னோட அம்மா என்னையும், ஆனந்தி டீச்சரையும், மிருதங்கத்தையும் , ஒரு குழப்பமே இல்லாமல்ப் பார்த்துக்கொண்டு இருந்தா .......

                    ஆனந்தி டீச்சர் சிக்கனமாகச் சிரிச்சுப் போட்டு ,

                    " நாளைக்கு பொம்பிளைப்பிள்ளைகள் ரெண்டு தில்லானா ஆடிவினம்,அது ஆதி தாளத்தில வரும், அதில இடையில ஒரு அடவும், இன்னொரு குத்தடவும் வரும்,கடைசில ஜதிஸ் ஸ்வரம் தனியா வரும் அதில அலாரிப்பு சேர்ந்து ஒரு உருட்டல் வரும்,நான் நாலு கிர்த்தனை பாடுவேன் அதுகள் முதல் ரெண்டும் ரூபக தாளமும், கடைசி ரெண்டும் ஆதி தாளமும் வருகுது,கடைசியில் இந்தோள ராகத்தில் ஒரு முத்துசாமி தீட்சிதர் உருப்படி வருகுது, நிறைவாக திருப்புகள் ஒண்டும் வருகுது அதுக்கு இடையில கொஞ்சம் தனி ஆவர்த்தனம், திஸ்ர நடையில வாசியும் நல்லா வரும் ...."

                          எண்டு சொல்ல சொல்ல நான் ஆனந்தி டீச்சரரின் பருத்திச் சேலையில் இருந்த மயில் இறகு போடரைப் பார்த்துக்கொண்டு இருந்தேன், ஆனந்தி டீச்சர் கொஞ்சம் சந்தேகமா

                     " நான் சொல்லுறது விளங்குதா "

                        எண்டு கேட்டா,நான் அவா முகத்தைப் பார்த்தேன்,அதில அவா மூக்குக்குக் கீழ கொஞ்சம் பூனை மயிர் போல மிக மிக மெலிதான மீசை இருந்தது.

                                     எனக்கு டீச்சர் சொன்ன பல விசியம் விளங்கவே இல்லை,இருந்தாலும் இந்த நிகழ்வில் ஒரு த்ரில் இக்குகாக கட்டாயம் டீச்சர் அருகில் இருந்து வாசித்தே ஆக வேண்டும் எண்டு நினைக்க நான் எதிர் பார்த்த மாதிரியே டீச்சர்,

                                " பயப்பிட வேண்டாம் ,நான் நிகழ்ச்சியில் பக்கத்தில இருப்பேன், அப்ப எல்லாப் பாடலும் கொஞ்சம் கொஞ்சம் ரிகர்சல் பார்ப்பமா,நான் பாடுறேன்,நீர் வாசியும் "

                                என்று சொல்லிப் பாடத் தொடங்க,அம்மா குசினுக்கு எஸ்கேப் ஆயிட்டா, பாடி முடியவும்

                                டீச்சர்  " பயப்பிட வேண்டாம் நான் நிகழ்ச்சியில் பக்கத்தில இருந்துதான் பாடுவேன் , ஒவ்வொரு பாட்டும் தொடங்க முதல் உமக்கு தாளம் சொல்லுறேன், அப்பத்தான் ராகம்,தாளம்,பல்லவி, மிருதங்கதோட இசைவா வரும் " எண்டு சொன்னா.     

                                நான்  போன உயிர் திரும்பி வந்த மாதிரி ,  " நிகழ்ச்சியில் உங்களுக்கு பக்கத்தில ஒட்டிக்கொண்டு ராகம்,தாளம்,பல்லவி போல இசைவா இருக்கத்தான் நானே இவளவு ரிக்ஸ் எடுத்து உங்களோட மிருதங்கம் வாசிக்கப் போறேன் டீச்சர் "

                                          எண்டு இழுத்து சொல்ல வெளிக்கிட அம்மா டீச்சருக்கு தேத்தண்ணி போட்டுக்கொண்டு வந்திட்டா.............

                           நான் எனக்கு தெரித்த வரையில் அந்த ஒத்திகையில் வாசித்தேன் எண்டு சொன்னால் சாமி கண்ணைக்குத்தும் சும்மா வைச்சு சடைஞ்சேன் , நல்ல காலம் டீச்சர் எல்லாப் பாடல்,கீர்தனை,உருப்படி ,தில்லானா எல்லாத்திலையும் தொடக்கம் மட்டும் வாசித்தா,குழப்பனா விசியங்கள் பாடிப் படிக்கவில்லை,ஆனாலும்

                             " நீர் நல்லா வாசிகுரீர், ஆனாலும் மிருந்தங்கம் நாலு கட்டை சுருதிக்கு   குறைவா இருக்கே , மூன்று கட்டையில் நிக்குது போல இருக்கு நாதம் ,அதை முதல் நாலு கட்டைக்கு ஏற்றி சரி செய்யும்   "

                                எண்டு குண்டை தூக்கிப் போட்டா, எனக்கு சுருதி ஏத்த தெரியாது அடிக்கிற அடியில மிருந்தங்கத்தின் சுருதியை  இறக்கத் தான் தெரியும் , ஏற்றத்  தெரியாது கடைசி தம்பிதான் அதில விண்ணன். ஆனந்தி டீச்சர் கடைசில,

                                                " பயப்பட வேண்டாம் ,நீர் எனக்கு கிட்டவா நெருக்கமா மேடையில் இரும்,அப்ப நான் தாளம் போடுறதைப் பார்த்து வாசிக்கலாம்,நான் தொடங்க முதல் தாள விசியம் சொல்லுறேன் "

                             எண்டா,,இதுதான் சொல்லுறது பூர்வ ஜென்ம புண்ணியத்தில் நான் செய்த நற்பயன் எண்டுறது.

                       இரவு தம்பி வர, அம்மா ஆனந்தி டீச்சர் வந்தது என்னோட ரிகர்சல் பார்த்தது எல்லாம் சொல்லிப் போட்டா, தம்பி

                              " பெரியண்ணே நீங்க தெருக்கூத்து  நாட்டுக் கூத்துக்கே வாசிக்க மாட்டிங்க எப்படி கர்நாடக சங்கீத பரத நாட்டிய கச்சேரிக்கு வாசிக்கப் போறீங்க, அதில நிறைய ஜதிஸ்வரம் எல்லாம் தாறு மாறா வருமே  "  

                           எண்டு சந்தேகமாக் கேட்டான், நான்

                           " சமாளிப்பேன்,  ஆனால் மிருதங்கம் சுருதி இறங்கி இருக்கே " எண்டேன்,

                          தம்பி ஆச்சரியமா  " எப்படி அதெல்லாம் தெரியும் பெரியண்ணே " எண்டு கேட்டான்

                    " ஆனந்தி டீச்சர் சொன்னா " எண்டேன்,

                       " பெரியண்ணை, பரத நாட்டியத்துக்கு வாசிக்க சரியான கஷ்டம் , தாளம் பிசகாமல் வாசிக்க வேண்டும் ,நீங்க அப்படி வாசிப்பின்களா எண்டு எனக்கு சந்தேகமா இருக்கு "

                             " அடே டீச்சரே ரிகர்சலில் நான் நல்லா வாசிக்கிறேன் என்று சொன்னா , உனக்கு இப்ப என்னத்துக்கு சந்தேகம் "

                            " இல்லை,,சும்மா கேட்க ஓகே போல இருக்கும் ஆனால் சங்கீதம் தெரிஞ்ச ஆட்கள் வந்து இருப்பினம்  அவை பிழை பிடிப்பினம் பெரியண்ணை, "

                         " அடே டீச்சரே அதைப்பற்றி ஒண்டுமே சொல்லவில்லை, நீ ஏண்டா இப்ப என்னைக் குழப்புறாய்,,,முதல் மிருதங்கத்தை நாலு கட்டை சுருதிக்கு ஏற்றித் தா நான் ,,மிச்சம்  பார்க்கிறேன்"

                        " இல்லை,,நீங்க  வாசிக்க மாடிங்க ,, டீச்சர் வேற ஆட்கள் வாசிக்க  இல்லாததால் சும்மா சொல்லி இருப்பா பெரியண்ணை,   "

                            " அடே என்னை வாசிக்க  விடடா    இப்ப உனக்கு என்ன பிரசினை ,டீச்சரே ரிகர்சலில் நான் நல்லா வாசிக்கிறேன் என்று சொன்ன,
நீ ஒண்டும் செய்ய வேண்டாம் மிருதங்கத்தை மட்டும்  நாலு கட்டை சுருதிக்கு ஏற்றித் தா நான் ,,மிச்சம்  பார்க்கிறேன் "

                         அவன் என்னை சந்தேகமாப் பார்த்தான்.நான் போட்டு வைச்சு இருக்கிற பிளான் என்னோட முகத்தில தெரியிற மாதிரி அவனுக்கே இருந்தது போல இருந்தது. என்னைப் பாவம் போலப் பார்த்திட்டு ,மிருதங்கத்தை எடுத்து வைச்சு தாகிட தரி கிட திரி கிட தொம் கிட நம் கிட எண்டு தட்டிப் பார்த்திட்டு

                       " உண்மைதான்  பெரியண்ணை,  சுருதி இறங்கி இருக்கே " 

                          எண்டு போட்டு குசினியில போய் ரவைமாவைக் கிண்டிக்கொண்டு அதை ஒரு சின்னக் கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு வந்து மிருதங்கதுக்கு  பக்கத்தில வைச்சிட்டு, மிருதங்கத்துக்கு ரெண்டு பக்கமும்  கொஞ்சம் தண்ணி தடவி போட்டு

                     " பெரியண்ணே கொஞ்சம் இருங்கோ நான் தோல் இழக்க நார்களை இழுத்து ,செட் பண்ணுறேன் " எண்டு சொன்னான், 

                                அவன் ஏன் ரவைமாவைக் கிண்டிக்கொண்டு வந்து வைச்சான் எண்டு எனக்கு விளங்கலை ,நான் அதை டேஸ்ட் பண்ணிப்பார்க்க, உப்புமா போல நல்லா இருந்திச்சு,நான் அவளத்தையும் திண்டு முடிச்சிட்டேன்,தம்பி வந்து

                 " ரவை எங்கே பெரியண்ணே " எண்டான்,

                நான் " நல்லா இருந்திச்சு சாபிட்டுட்டேன் " என்றேன்,

                      அவன் " ஐயோ ,பெரியண்ணே அதைப் பூசித்தான் தோல் இழக்க வைச்சு சுருதி ஏத்த வேண்டும் "

                           எண்டு போட்டு அதுக்கு மேல ஒண்டும் சொல்லவில்லை, நெற்றியைத் தடவி ஜோசித்துப் போட்டு மறுபடியும் குசினியில போய் ரவை மாவைக் கிண்டிக்கொண்டு வந்து,கையோட பக்கத்தில இருந்து  சுருதி ஏற்றி சில சமாளிப்பு  டெக்னிக்கும் சொல்லித் தந்தான்.

                                      நான் படித்த ஆரம்பப் பாடசாலை விஜயதசமி நாளுக்கு ஆனந்தி டீச்சர் சரஸ்வதி போல வெள்ளை நிற சேலை கட்டி,கொஞ்சம் எக்ஸ்ராவா மேக் அப் போட்டு புன்னகை அரசிபோல சிரித்துக்கொண்டு வந்து இன்னுமொரு குண்டைப் போட்டா,

                           " ரிகர்சலில் சொல்ல மறந்திட்டேன், பிள்ளைகள் குற்றாலக் குறவஞ்சி டான்ஸ் ஆடப் போகினம்,அதுக்கு தெம்மாங்கு மெட்டில ஜதிஸ் ஸ்வரம் தனியா வரும் அதில அலாரிப்பு சேர்ந்த ஒரு உருட்டல் வாசியும்,என்ன வாசிக்கலாம் தானே "

                                        எண்டு கேட்டா, நான் அப்பவும் பயப்பிடாம தலைக்கு மேல வெள்ளம் வந்த பிறகு நீந்த தெரியாது எண்டு சொல்லி ஒண்டும் வரப்போறது இல்லையே எண்டு போட்டு

                          " நான் நல்லா அந்த தேவாங்கு மெட்டு வாசிப்பேன் டீச்சர் " எண்டு சொன்னேன்,.

                                " அது தேவாங்கு மெட்டு இல்லை,,தெம்மாங்கு மெட்டு, தகிட தகிட தன் தானே தகிட தகிட தன் தானே எண்டு வரும் . ..." , எண்டு சொன்னா 

                              சொல்லி வைச்ச மாதிரி அந்த விஜயதசமி நிகழ்சியில் ஆனந்தி டீச்சர் எனக்கு மிக அருகில் இருந்து பாடினா,நான் அவா கூந்தலில் இருந்து வந்த மல்லிகைப் பூ வாசத்தில், ஆனந்தி டீச்சர் முகத்தைப் பார்த்துக்கொண்டு ,அவா தாளம் போட்ட கைகளைப் பார்க்க மனம் இல்லாமல் நல்லா பூர்வ ஜென்ம புண்ணியத்தில் நான் செய்த நற்பயன் அதன் உச்சக் கட்ட பலனைத் தர மிருதங்கம் வாசித்தேன், சொதப்பாமல் வாசித்தேன் எண்டு தான் ஆனந்தி டீச்சரே சொன்னா , அந்த நிகழ்வின் முடிவில் அந்த பாடசாலை பிரிஞ்சுபல் வந்து நன்றி சொல்லும் போது

                                           " மிருந்தங்கம் வாசித்த வித்துவான் இந்த பாடசாலை பழைய மாணவன் " எண்டு சொன்னா, எனக்கு  வித்துவான் என்று  சொன்னதைக் கேக்க தலை  சுத்தியது, பிறகு  சிரிப்பு வந்தது , ஆனந்தி டீச்சர் அதைக்  கவனிச்சுப் போட்டுக்  கிட்ட வந்து 

                           "  என்னத்துக்கு  சிரிக்கிரீர்,,என்ன  விசியம்  சொல்லும் "

                           " இல்லை  டீச்சர்,  பிரிஞ்சுபல்  நன்றி சொல்லும் போது
மிருந்தங்கம் வாசித்த வித்துவான் இந்த பாடசாலை பழைய மாணவன்  என்றதைக்  கேட்க சிரிப்பு  வந்தது  " 

                            " ஹ்ம்ம்,,சில  இடங்களில் சரியா  நீர் வாசிக்கவில்லை,,ஆனால்  இது  ஒரு ஸ்கூல்  பிள்ளைகளின்  நிகழ்வு தானே  அதால  நீர்  ஒரு  மாதிரி ஒப்பேற்றிப்போட்டீர் "

                                "  அதுதான்  உண்மை  டீச்சர் "

                   "  இல்லை  உமக்குள்ளே  நல்ல  சங்கீத ஞானம்  இருக்கு  முறைப்படி  படியும்  பெரிய ஆளா வருவீர் "

                          "   நன்றி  டீச்சர் "

                                    அதோட  நான் சத்தம் இல்லாமல் திரும்பியும் பார்க்காமல் மேடையில் இருந்து நழுவி வந்திட்டேன்.  அவளவுதான். ஆனந்தி டீச்சர் சொன்ன மாதிரி  நான்  ஒன்றும் சங்கீத  சம்பந்தமான  விசியங்களில்  ஈடுபடவே  இல்லை. வாழ்க்கை வேற வேற அஞ்சு சத்தத்துக்குப் பிரயோசனம்  இல்லாத பல விசியங்களில்  என்னை  இழுத்தடிச்சது தான் நடந்தது .

                                    இதெல்லாம் நடந்து கிட்டதட்ட இருவத்தி ஐந்து வருடங்களின் பின், " தலை இடி " என்ற ஒரு தமிழ் நண்பருடன்,அவருக்கு உதவியா கொஞ்ச நாள் ஐரோப்பா வீதிகள் ,எல்லைகள் எல்லாம் அலஞ்சேன். தெற்கு  பிரான்ஸ்  ஐ தளமாக வைத்து  " தலை இடி "  அப்போது ஸ்பெயின் இல்  இருந்து மும்மரமா இழுத்து எடுத்து அனுப்பி வைத்து செய்துகொண்டு இருந்த வேலையில் ஒருநாள் ஒரு தமிழ்க் குடும்பம்,தங்கள் சொந்தக்காரப் பொடியனை .........இல இருந்து .......இக்கு கொண்டு போய் விட முடியுமா எண்டு ஒரு " கொன்றாக் " வந்தது.  

                                                 நானும் ,  தலை இடியும் அந்தப் பையனை,  ......... இல இருந்து ........  இக்கு கொண்டு வரும் வழியில் ஒரு நாள் பரிசில் நிற்க வேண்டி வர ,அந்தப் பையனின் அந்த கொன்றக் தந்த உறவினர் வீட்டிலேயே ஒரு இரவு நின்டோம். அங்கே ஆனந்தி டீச்சர் நிண்டா,,நான் அவா முகத்தை அவா வயசாகி தலை நரைத்த போதும் மறக்கவில்லை, ஆனாலும் ஒரு சந்தேகத்தில் அவா வீட்டு சுவரில மாட்டி இருந்த படங்களைப் பார்க்க, பல படங்கள் சங்கீத அரங்கேற்றம்,இசை நிகழ்வு போல இருக்க,இது டீச்சர் தான் எண்டு  உறுதிப்படுத்திக்கொண்டு ,நான் யார் எண்டு சொன்னேன் அவாவுக்கு, 

                   அவா ஆச்சரியமாகி

                                 " ......இன் அண்ணா எல்லோ, ...... மாமியின் மகன் எல்லோ, சிவ பெருமானே, இதென்ன கோலம், நான் நெனச்சேன் நீர் பெரிய முயூசிக் சம்பந்தமான ஆளாக வந்து இருப்பீர் எண்டு,  இதென்ன இப்படி ஒரு தலை போற வேலை செய்யுரீர்  " 

                                             எண்டு சொல்லி, இரவு முழுவதும்  சின்ன வயது நாட்கள் , ஆரம்பப் பாடசாலை, பிரான்சில் அவா நடாத்தும் பாரத நாட்டியப் பாடசாலை , அதில் படித்து வெளியேறும் பிள்ளைகளின்  அரங்கேற்றம், வேறு பல டீச்சர்மாரின் நினைவுகள் ,என்று நிறைய விசியம் கதைத்தா, அண்மையில் அவா பற்றி ஒரு கலைப் புத்தகத்தில் வந்த ஒரு கட்டுரையைக் காட்டினா,அதில அவாவின் பெயர்  செல்வி ............... என்று அவாவின் அப்பா பெயர் போட்டு  தான் இருந்தது, டீச்சர் ஏன் கலியாணம் கட்டாமல் இருந்தா எண்டு விளங்கவில்லை,,நான் கேட்கவும் இல்லை,,

                            ஆனால் எங்கள் ஆரம்பப் பாடசாலையில் தமிழ் படிப்பிச்ச பவானந்தன் மாஸ்டர்  இறந்து போனதோட, தன்னோட அரைவாசி உயிர் போயிட்டுது எண்டு சொல்லிக்கொண்டு இருந்த நேரம் அவாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது ...

                      அவா மவுனமா இருந்தா,,நான் கதையை மாத்த , 

                           " ஒழுங்காப் படிச்சவங்கள் எல்லாருக்கும் சரஸ்வதி கண்ணைத் திறந்து இப்ப டாக்டர்,எஞ்சினியர்,எக்கவுண்டன்,, நானும் அண்டா குண்டா சட்டி பானையோடு மல்லுக்கட்டும் சமையல் வேலை தான் செய்தேன் டீச்சர் ,,இது என்னோட பிரெண்ட் கொஞ்ச நாள் கேட்டதால் உதவிபோல அவரோட செய்யுறேன் ,  ஒழுங்காப் படிகாததால  இப்பவும் கிடந்தது அல்லாடுறேன்  டீச்சர் , எப்படியோ வாழ்க்கை ஓடுது,  தம்பி இப்ப பெரிய தபேலா வித்துவானா இருக்கிறான், கே,ஜே ,ஜேசுதாஸ் , ராஜேஷ் வைத்தியா எல்லாருக்கும் தபேலா பக்கவாத்தியம்  வாசிக்கிறான் டீச்சர்   "  

                                                   எண்டு சொல்லிப்போட்டு காலையில் எழும்பி அந்தப் பொடியனையும் ,வேறு சில பொடியங்களையும் கார்ல ஏத்திக்கொண்டு , ,,,,,கால ஓடி ...... போர்டர் தாண்டி ஒரு இனிய மாலை வானம் மஞ்சள் பூசிக்கு குளித்த பெண்போல டென்மார்க் போடரில் வெளுக்க, அந்த நேரம் கார்ல எனக்கு அருகில் முன் சீட்டில இருந்து  அடுத்த இலுவைக்குப் பிளான் போட்டுக்கொண்டு இருந்த என்னோட பிசினஸ் பாட்னர் தலை இடி,

                               " அந்த பொம்பிளையை உமக்கு முதலே தெரியுமா , "

                              "   ஹ்ம்ம் ,,தெரியும்  அவா டான்ஸ் டீச்சர் ஆக  இருந்தா   ."

                             " டீச்சர்  இப்பவும்  நல்ல  வடிவா  இருக்கிறா,,அந்த  நேரம்  சும்மா  கலக்கி  இருப்பாவே "

                                  "   ஓம்,,அந்தநேரம்  டீச்சர் ஊர்வசி ரம்பை  மேனகை திலோத்தமை  எல்லாம் பிச்சை வேண்ட வேணும்,,அவளவு  வடிவு "

                                     " பவானந்தன் மாஸ்டர்  இறந்து போனதோட, தன்னோட அரைவாசி உயிர் போயிட்டுது எண்டு சொல்லிக்கொண்டு இருந்த நேரம் அவவுக்கு அடக்க முடியாமல் அழுகை வந்ததே கவனிச்ச  நீரோ "

                                  "    ஓம்  கவனிச்சேன் "

                          "   அப்ப    பவானந்தன்  மாஸ்டர்   என்ன  முயூசிக்  படிப்பிச்ச  மாஸ்டரோ ஐசே "

                               "  இல்லை  அவர் தமிழ்  படிப்பிப்பார் "

                          "  டீச்சர்  அந்தாளை  லவ்  அடிச்சு இருக்கிறா  போல  இருக்கே ஐசே "

                              " இருக்கலாம்  அப்படிதான்  இப்ப  எனக்கு தெரியுது,,ஆனால் அவர்  மனைவி பிள்ளைகளோடு  வாழ்ந்தார்  என்று  நினைக்கிறன் "

                                "    டீச்சர்  பாவம் தான் ,,வடிவான பொம்புளைகளுக்கு  வாழ்க்கை  சரியா  அமையாது  எண்டு  சொல்லுறது  உண்மைபோலதான்  இருக்கு "

                                "  இருக்காலம் போலதான்  நானும்  நினைக்கிறேன் "

                                  "    ஏன் ஐசே ,சும்மா சொல்லக்கூடாது  டீச்சர்மாரும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை போல இருக்கே , இல்லை எண்டுறீரோ  " 

                        " பவானந்தன் மாஸ்டர் , அவர்கள்  காதல்  அதுபற்றி  எனக்கு  ஒண்டும்  தெரியாது ,,,ஹ்ம்ம் ,,,உண்மையில்  அது பற்றி ஒண்டுமே தெரியாது " 

                                             எண்டு நல்லா தெரிந்த அந்த ''மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,எக் கால் வருவது என்றி;அக் கால் வருவர், எம் காதலோரே....."  விசியத்தை சும்மா " ஹ்ம்ம் " எண்டு சொல்லிச் சமாளிச்சுப் போட்டு,

                                   " தேன் சிந்துதே வானம் உன்னை என்னைத் தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே என் நாளுமே வாழ்க ....... "

                                    எண்டு டென்மார்க் எல்லையில்த்  திரிந்த மேகங்களைப் பார்த்து பாடிக்கொண்டு ஜேர்மன் ஓட்டோ பானில் அவுடி ஆ பீரா டேர்போ எஞ்சின் கார் அக்சிலேடரை இறுக்கி மிதிச்சேன்.... 

.

10.05,14.